என் மலர்
மதுரை
- வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த 1977 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந்தேதி அறிமுகப்படுத்தப்பட்டது.
- இந்தியாவிலேயே முதன் முறையாக மீட்டர்கேஜில் குளிர்சாதன வசதி அறிமுகப்படுத்தப்பட்டது வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை:
இந்தியா முழுவதும் இன்று 77-வது ஆண்டு சுதந்திர தினத்தை நாட்டு மக்கள் தங்களது வீடுகளில் மூவர்ண தேசியக்கொடி ஏற்றி வைத்து வெகு விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள். இந்தநிலையில், தமிழகத்தின் தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு ஆதரமாக திகழும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலின் 46-வது பிறந்த நாளும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இதையொட்டி ரெயில் என்ஜினுக்கு தீபாராதனை மற்றும் பூஜைகள் செய்து ரெயில் என்ஜினுக்கு வாழை மரம் தோரணம் கட்டி ரெயில் பெட்டிகளுக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்தும், கேக் வெட்டியும், ரெயில் ஓட்டுனர்களுக்கு மரியாதை செய்தும் உற்சாகமாக கொண்டாடினர்.
வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த 1977 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந்தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. சென்னை-மதுரைக்கு இடையே பகல் நேர விரைவு ரெயிலாக உள்ள இந்த ரெயில் தென்மாவட்ட வணிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக உள்ளது.
இந்த ரெயில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டிலேயே மீட்டர் கேஜ் ரெயில் பாதையில் மணிக்கு 105 கி.மீ. வேகத்தில் சென்ற இந்தியாவின் அதிவிரைவு ரெயில் என்ற பெருமையைப் பெற்றது. ஆசியாவிலேயே மீட்டர் கேஜில் அதிவேகமாக இயக்கப்பட்ட ரெயில் என்ற பெருமையும் வைகை எக்ஸ்பிரசுக்கு உண்டு. வைகை எக்ஸ்பிரஸ், பகல் நேரத்தில் சென்னைக்குப் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காக தொடங்கி வைக்கப்பட்டது.
நாள்தோறும் மதுரையிலிருந்து காலை 7.10 மணிக்குப் புறப்பட்டு பிற்பகல் 2.35 மணிக்கு சென்னையை சென்றடையும். மொத்த பயண நேரம் 7 மணி 25 நிமிடங்கள். அதேபோன்று மறுமார்க்கமாக சென்னையிலிருந்து பிற்பகல் 1.40 மணிக்குப் புறப்பட்டு இரவு 9.15 மணியளவில் மதுரை வந்தடையும்.
இதில் மொத்த பயண நேரம் 7 மணி 35 நிமிடங்கள் ஆகும். மதுரை கோட்டத்தில் முதல் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலாக வைகை எக்ஸ்பிரஸ் அறிமுகப்படுத்தப்பட்டு பயணிகளின் ஏகோபித்த ஆதரவை பெற்றுள்ளது. நாள்தோறும் இந்த ரெயிலில் சென்னை-மதுரை, மதுரை-சென்னை மார்க்கமாக 5 ஆயிரம் பேர் பயணம் செய்கின்றனர்.
ஒரு வழிப்பயண தூரம் என்று பார்த்தால் 497 கி.மீ. ஆகும். ஆண்டிற்கு 3 லட்சத்து 65 ஆயிரம் கி.மீ. தூரம் பயணம் செய்கிறது. இந்த 46 ஆண்டுகளில் தோராயமாக 1 கோடியே 77 லட்சத்து 30 ஆயிரம் கி.மீ. தூரம் பயணம் செய்து சாதனை படைத்துள்ளது.
இந்தியாவிலேயே முதன் முறையாக மீட்டர்கேஜில் குளிர்சாதன வசதி அறிமுகப்படுத்தப்பட்டது வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை தொடங்கி 46 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் மதுரை சந்திப்பு ரெயில் நிலையத்தில் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் பயணிகள் அதனை இயக்கும் பைலட்டுகளுக்கு மாலை அணிவித்தும், கேக் வெட்டியும் சக பயணிகளுக்கும் வழங்கினர்.
- சதுரகிரி கோவிலில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
- ஆடி அமாவாசையை முன்னிட்டு மலையடிவாரம் மற்றும் கோவில் பகுதிகளில் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்ன தானம் வழங்கப்பட்டது.
திருமங்கலம்:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 3 ஆயிரம் அடி மேல் உள்ள இந்த கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
வருடந்தோறும் ஆடி, தை, மகாளய அமாவாசை நாளன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்வார்கள்.
இந்த ஆண்டு ஆடி அமாவாசையை முன்னிட்டு கடந்த 12-ந் தேதி முதல் வருகிற 17-ந் தேதி வரை பக்தர்கள் சதுரகிரிக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி முதல் நாளில் இருந்தே சதுரகிரிக்கு சிறுவர்கள், பெண்கள் உள்பட ஏராளமானோர் ஆர்வத்துடன் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதிகாலை 5.30 மணிக்கு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுகிறார்கள்.
கடந்த 3 நாட்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் நாளை (16-ந் தேதி) ஆடி அமாவாசையை முன்னிட்டு வழக்கத்தை விட இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலை அடிவாரத்தில் அதிகளவில் திரண்டனர். அவர்களின் உடைமைகளை சோதனை செய்த வனத்துறையினர் பின்னர் மலையேற அனுமதித்தனர்.
அடிவாரத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தூர மலைப்பாதையில் பக்தர்கள் சாரைசாரையாக சென்று சாமி தரிசனம் செய்தனர். சங்கிலிபாறை, வழுக்கு பாறை, பிலாவடி கருப்ப சாமி கோவில் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சதுரகிரி கோவிலில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பெண்கள் உள்பட ஏராளமானோர் முடி காணிக்கை செலுத்தினர். ஆடி அமாவாசையை முன்னிட்டு மலையடிவாரம் மற்றும் கோவில் பகுதிகளில் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்ன தானம் வழங்கப்பட்டது.
இன்று முதல் 17-ந் தேதி வரை பக்தர்கள் அதிகளவில் வருவார்கள் என்பதால் மதுரை, விருதுநகர், திருமங்கலம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து சதுரகிரிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
- கடலோர பகுதிகளில் சீருடை அணியாத போலீசார் இரவு, பகலாக சுற்றி வந்து தீவிர கண்காணிப்பு பணியை கவனித்துக் கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தருவதையொட்டி தி.மு.க.வினர் உற்சாகத்தில் உள்ளனர்.
மதுரை:
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் சென்று அரசு சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கியும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வரும் தி.மு.க., அதற்கான பணிகளையும் தொடங்கி விட்டது. அதன்படி கடந்த மாதம் திருச்சியில் வாக்குச்சாவடிக்கு உட்பட்ட முகவர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கட்சியினருக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். அடுத்த கூட்டம் ராமநாதபுரத்தில் நடைபெறும் என்றும் அப்போது அவர் அறிவித்தார். அதன்படி வாக்குச்சாவடி முகவர்களுக்கான இரண்டாவது பயிற்சி பாசறை கூட்டம் வருகிற 17-ந்தேதி ராமநாதபுரத்தில் நடைபெறுகிறது.
இதற்காக 3 நாள் பயணமாக நாளை மாலை மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். நாளை மாலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் அவர் வருகை தருகிறார். அங்கு அவருக்கு அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் சார்பில் உற்காக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இதையடுத்து மதுரை முனிச்சாலையில் மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள டி.எம்.சவுந்தரராஜனின் முழு உருவ வெண்கல சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இரவு மதுரையில் உள்ள ஓட்டலில் தங்கும் அவர் மறுநாள் (17-ந்தேதி) காலை மதுரையில் இருந்து கார் மூலம் ராமநாதபுரம் புறப்பட்டு செல்கிறார்.
பிற்பகலில் ராமநாதபுரத்தை அடுத்த பேராவூரில் ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் கிழக்கு, மேற்கு, தேனி வடக்கு, தெற்கு, விருதுநகர் வடக்கு, தெற்கு, திருநெல்வேலி கிழக்கு, மத்தி, தென்காசி வடக்கு, தெற்கு, தூத்துக்குடி வடக்கு, தெற்கு, கன்னியாகுமரி கிழக்கு, மேற்கு ஆகிய கட்சி சார்ந்த மாவட்டங்களை சேர்ந்த தென்மண்டல அளவிலான வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்குகிறார்.
பின்னர் அங்கிருந்து ராமேசுவரம் செல்லும் அவர் இரவில் அங்கு தங்குகிறார். 18-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை ராமேசுவரத்தை அடுத்த மண்டபம் கலோனியர் பங்களாவில் நடைபெறும் மீனவர் சங்க மாநாட்டில் கலந்துகொண்டு, மீனவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் இலங்கை கடற்படையால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகும் தமிழக மீனவர்களின் வாழ்வாதார பிரச்சனைகள், மீன்பிடி தடை காலத்தில் அவர்களுக்கான நலத்திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ராமநாதபுரம் மாவட்ட நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மீண்டும் மதுரை வரும் அவர் விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் 17, 18 ஆகிய இரண்டு நாட்கள் டிரோன்கள் பறக்க தடை விதித்து கலெக்டர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட்டுள்ளார். அதேபோல் ராமநாதபுரம் மாவட்டம் செல்லும் வழியில் மு.க.ஸ்டாலினுக்கு 54 இடங்களில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட இருப்பதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
மாவட்டம் முழுவதும் 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கடலோர பகுதிகளில் சீருடை அணியாத போலீசார் இரவு, பகலாக சுற்றி வந்து தீவிர கண்காணிப்பு பணியை கவனித்துக் கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தருவதையொட்டி தி.மு.க.வினர் உற்சாகத்தில் உள்ளனர். பல்வேறு இடங்களில் பிளக்ஸ் பேனர்கள், அலங்கார வளைவுகள் வைத்து மாவட்டமே விழாக் கோலம் பூண்டுள்ளது.
- அயன்பாப்பாகுடி கண்மாயில் கழிவுநீர் கலப்பதை தடுத்து தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
- மாரி, பாக்கியம், செந்தில் ஆகியோர் மனு கொடுத்தனர்.
மதுரை
மதுரை அவனியாபுரம் பகுதியில் மிகப்பெரிய கண் மாயாக அயன் பாப்பாக்குடி கண்மாய் விளங்கு–கிறது. இந்த கண்மாயில் தேக்கப்ப–டும் நீர் விவசாயம் மற்றும் இப்பகுதி நிலத்தடி நீர் உயர்வுக்கு காரணமாக விளங்குகிறது.
இந்த கன்மாய்க்கு திருப்ப ரங்குன்றம் தென்கால் கண்மாயிலிருந்து உபரி நீர் வருவது உண்டு. இந்த நிலையில் தற்போது மதுரை பழங்காநத்தம், முத்துப்பட்டி, ஜெய்ஹிந்த்புரம், எம்.கே.–புரம் ஆகிய பகுதிகளில் இருந்து வரும் கழிவுநீர் இந்த கண்மாயில் கலக்கிறது. மேலும் இந்த கண்மாயின் மடை திறக்கப்பட முடியாத நிலையில் உள்ளது.
இந்த கண்மாயில் இருந்து நீர் வெளியேறும் கால்வாய் தூர்வாரப்படாமல் புல் புதராக மண்டிக்கிடக்கிறது. இதனால் கண்மாயில் நீர் பெருகி அருகே உள்ள குடி யிருப்பு பகுதிகளில் கழிவு நீர் செல்வதால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் மலேரியா, டெங்கு போன்ற வைரஸ் காய்ச்சல்கள் பரவும் அபாய நிலையும் இருக்கிறது.
எனவே மதுரை மாவட்ட கலெக்டர் கண்மாயை ஆய்வு செய்து கண்மாய் கரைகளை பலப்படுத்தி நீர் வெளியேறும் கால்வாயை தூர்வாரி தர வேண்டும். மேலும் கண்மாய்க்குள் கலக்கும் கழிவுநீரை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என அவனியாபுரம் பொதுமக்கள் சார்பில் கவுன்சிலர்கள் கருப்புசாமி, அய்யனார் ஆகியோர் தலை மையில் மாரி, பாக்கியம், செந்தில் ஆகியோர் மனு கொடுத்தனர்.
- மதுரை கூட்டுறவு மேலாண்மை பயிற்சி கழகம் சார்பில் ஒருநாள் கருத்தரங்கம் நடந்தது.
- ஐ.சி.எம். விரிவுரையாளர் ஜி.கதிரவன் நன்றி கூறினார்.
மதுரை
மதுரை மாவட்ட கூட்டுற–வுத் துறை சார்பில் நடத்தப் பட்ட 77 ஆவது சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா மற்றும் கலைஞர் நூற் றாண்டு விழாவை முன் னிட்டு கூட்டுறவு மேலாண்மை பயிற்சி கழகம் மதுரை மற்றும் மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இைணந்து நடத்தும் "கூட்டுறவில் இளைஞர்க–ளின் பங்களிப்பை வளர்த் தல்" பற்றிய ஒரு நாள் கருத்த–ரங்கம் நடைபெற்றது.
மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலை–மையகம் அழகப்பன் அரங் கில் நடைபெற்ற இக்கருத்த–ரங்கில் மதுரை மண்டல இணைப்பதிவாளர் சி.குரு–மூர்த்தி தலைமை தாங்கி உரையாற்றினார். மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளரும், செயலாட்சியருமான டாக்டர் அ.ஜீவா சிறப்புரை–யாற்றினார். மேலும், ஐ.சி.எம். இயக்குனர் முனைவர். எஸ்.தர்மராஜ் வாழ்த்துரை வழங்கினார்.
இக்கருத்தரங்கில் மதுரை கல்லூரி பேராசிரியர் முனைவர் ஏ.மயில்முருகன், ஐ.சி.எம். பேராசிரியர்கள் முனைவர் வி.அழகு பாண் டியன், முனைவர் ஜி.ஜெயந்தி, விரிவுரையாளர் எம்.ரேவதி, மதுரை மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் ம.தீனதயாளன்,
பயிற்சி கூட்டுறவு சங்கங் களின் துணைப்பதிவாளர் அவர்கள் மற்றும் மதுரை மாவட்டத்தில் உள்ள பெரு–வாரியான கல்லூரிகளின் பேராசிரியர்கள், விரிவுரை–யாளர்கள் மற்றும் மாணவர் கள் பங்கு பெற்றனர். ஐ.சி.எம். விரிவுரையாளர் ஜி.கதிரவன் நன்றி கூறினார்.
- 25 லட்சம் பேருக்கு சுடச்சுட உணவு தயாரித்து வழங்கப்படும்.
- ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரை
மதுரை அ.தி.மு.க. மாநாட்டில் பொது மக்களை பங்கேற்க செய்யும் வகையில் அம்மா பேரவையின் சார்பில் மரக்கன்றுகள் வழங்கி விளம்பர லோகோவை இரு சக்கர வாகனங்களில் பொருத்தும் நிகழ்ச்சி அம்மா பேரவை சார்பில் மதுரை புறநகர் (தெற்கு)மேற்கு ஒன்றியம் குமா ரத்தில் நடைபெற்றது. சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் மரக்கன்றுகளை வழங்கி பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.வி. கருப்பையா, எஸ்.எஸ். சரவணன், கே தமிழரசன், மாணிக்கம், மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் இளங்கோவன், மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர்கள் வெற்றிவேல், தனராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-
பொதுச் செயலாளர் எடப்பாடியார் தலைமை யில் வருகிற 20-ந்தேதி நடைபெறும் மாநாடு முதலில் 25 ஏக்கரில் நடந்த திட்டமிடப் பட்டது. அதனை தொடர்ந்து 35 ஏக்கர், அதனைத் தொடர்ந்து 65 ஏக்கரில் விரிவு படுத்தப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் 25 லட்சம் பேர் பங்கேற்கிறார்கள்.
குறிப்பாக அவர்களுக்கு வழங்கப்படும் உணவு அவசரமாக தயாரிக்க கூடாது, சாதம் குழைவாக இருக்க வேண்டும் என்று ஒரு தாயைப் போல எங்களுக்கு அறிவுறுத்தி யுள்ளார்.
அதேபோல் வருப வர்களுக்கு சுகாதாரம், குடிநீர், கழிப்பறை போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட் டுள்ளது. தற்போது வாகனங்களை நிறுத்த மட்டும் 350 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. மாநாட்டில் பங்கேற்க வருகை தரும் 25 லட்சம் பேருக்கு சுடச்சுட உணவு தயாரிக்கும் பணிகளுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
ஆடி மாதம் என்பதால் காற்று அதிகமாக உள்ளது. அதனால் மைதானத்தில் தூசி ஏற்பட்டு தொண்டர்க ளுக்கு இடையூறு ஏற்படால் இருக்கும் வகையில் மைதானத்தில் 35 ஏக்கரில் தரையில் மேட் அமைக்கப் படுகிறது.
மாநாட்டில் கழகத்திற்காக உழைத்த மூத்த நிர்வாகி களுக்கு பொன்னாடை அணிவித்து எடப்பாடியார் கவுரவிக்கிறார். இந்த மாநாட்டில் காலையில் மாநாட்டு பந்தலில் எடப்பாடியார் கட்சி கொடியினை ஏற்றும்போது தொண்டர் படைகள் ராணுவ சிப்பாய்கள் போல் மரியாதை அளிக்கிறார்கள்.
ஸ்டாலின் நாட்டு மக்களுக்காக எதையும் செய்யவில்லை. ஆனால் தனது தந்தையார் புகழை பரப்புவதற்கும், கல்வெட்டு வைப்பதற்கும், தனது மகன் உதயநிதியை முதலமைச்சர் ஆக்குவதற்கும் தான் உழைத்து வருகிறார்.
தமிழகத்தில் பள்ளிகளில் சாதி தீண்டாமை அதிகரித்து வருகிறது. இது வேதனை தரும் விஷயமாகும். மாமன்னன் படம் எடுத்த இயக்குனரை நேரில் பாராட்டுகிறார். ஆனால் நாங்குநேரி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவர் களையும், அதே போல் டெல்டா பகுதிகளில் பாதிப்படைந்த விவசாயி களை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்ல முதல மைச்சருக்கு நேரமில்லை.
சட்டமன்றத்தில் அம்மா வுக்கு நடந்த கொடுமை குறித்து எடப்பாடியார் விரிவாக வெளியிட்டுள் ளார். ஆனால் ஸ்டாலின் இதில் பச்சை பொய் பேசியிருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ரூ.11 கோடி மதிப்பீட்டில் லட்சுமி தீர்த்தம் சீரமைப்பு பணி தொடங்கியது.
- மாமன்ற உறுப்பினர் சிவசக்தி ரமேஷ், வட்டச் செயலாளர் எம்.ஆர்.பி.ஆறுமுகம், டிப்போ ரவி உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் சுப்பிர–மணியசாமி கோவில் சிதிலம் அடைந்த லட்சுமி தீர்த்தம், புதிய சஷ்டி மண்ட–பம் ரூ.11 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ளது. இதனை வீடியோ கான்பரன்ஸ் மூலம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
அறுபடை வீடுகளுள் முதலாம் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிர–மணிய சவாமி கோவில் வளாகத்தில் லட்சுமி தீர்த்தம் அமைந்துள்ளது. இதில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிதிலமடைந்தது. தீர்த்தக்குளத்தை சுற்றியுள்ள சுற்றுச்சுவர் சரிந்து விழுந்த–ததால் அதனை சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து திருப்பரங் குன்றம் கோவில் நிர்வாகம் சார்பில் அதனை சீரமைக்க முடிவு செய்யப்பட்டு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட் டது. இதேபோல சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்க–ளுக்கு சஷ்டி மண்டபம் கட்டவும் கோவில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட் டது.
இதுதொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.–ஸ்டாலின், கடந்த கூட்டத் தொடரில் சட்டப்பேரவை–யில் சஷ்டி மண்டபம் அமைக்க ரூ.4.50 கோடியும், லட்சுமி சீரமைக்க ரூ.6.50 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்வதாக அறிவிப்பு வெளியிட்டார். அதன் அடிப்படையில் இன்று சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் லட்சுமி தீர்த்தம் சீரமைப்பு பணி மற்றும் சஷ்டி மண்ட–பம் கட்டுமான பணிகளை ரூ.11 கோடி மதிப்பீட்டில் காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து கோவில் திருவாச்சி மண்ட–பத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி–யில் மதுரை வடக்கு சட்ட–மன்ற உறுப்பினர் தளபதி, மேற்கு மண்டல தலைவர் சுவிதா விமல், இந்து சமய அறநிலைத்துறை மதுரை மண்டல இணை ஆணையர் செல்லத்துரை, திருப்பரங் குன்றம் கோவில் துணை ஆணையாளர் சுரேஷ், ஸ்தா–னிகப்பட்டர்கள் சுவாமி–நாதன், ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் பக்தர்கள் அனை–வருக்கும் தி.மு.க. மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான கோ.த–ளபதி லட்டு இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் கிருஷ்ண பாண்டியன், துணைச் செய லாளர் ரமேஷ், மாமன்ற உறுப்பினர் சிவசக்தி ரமேஷ், வட்டச் செயலாளர் எம்.ஆர்.பி.ஆறுமுகம், டிப்போ ரவி உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
- ம.தி.மு.க. நிர்வாகிகள் நேர்காணல் நிகழ்ச்சி நடந்தது.
- மாநில மாணவர் அணி துணை செயலாளர் ஜெ.கவுரி மகேஷ்சங்கர் மற்றும் இளைஞர்கள், மாணவர்கள் நேர்காணலில் கலந்து கொண்டனர்.
மதுரை
மதுரை தெப்பக்குளத்தில் உள்ள நோட்புக் அரங்கில் இன்று ம.தி.மு.க. மதுரை மண்டல இளைஞர் அணி, மாணவர் அணி, பொறியா ளர் அணி, மகளிர் அணி நிர்வாகிகள் நேர்காணல் நிகழ்ச்சி நடந்தது. பொருளாளர் மு.செந்தில திபன், துணை பொதுச்செயலாளர் தி.மு.ராஜேந்திரன், மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன், ஆட்சி மன்ற குழு உறுப்பினர் தி.சுப்பையா, மாநில இளைஞர் அணி செயலாளர் ப.த.ஆசைத்தம்பி, மாநில மாணவர் அணி செயலாளர் பால.சசிகுமார், மாநில மகளிர் அணி செயலாளர் மல்லிகா தயாளன் ஆகியோர் தலைமை தாங்கி நேர்காணல் நடத்தினர்.
இதில் மாவட்ட செயலாளர்கள் எஸ்.முனியசாமி, மார்நாடு, மாநில இளைஞரணி துணை செயலாளர் சி.பூப்பாண்டி, மாநில மாணவர் அணி துணை செயலாளர் ஜெ.கவுரி மகேஷ்சங்கர் மற்றும் இளைஞர்கள், மாணவர்கள் நேர்காணலில் கலந்து கொண்டனர்.
- அ.தி.மு.க. மாநாடு விழிப்புணர்வு பிரசார வாகனத்தை ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
- நிலையூர் முருகன் முன்னிலை வகித்தார்.
திருப்பரங்குன்றம்
மதுரை வலையங் குளத்தில் வருகிற 20-ந்தேதி நடைபெற உள்ள அ.தி.மு.க. மாநாட் டிற்கு பொதுமக்களுக்கு அழைப்பிதழ் வழங்கி மாநாடு தொடர்பான பிரசார வாகனத்தை மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. இன்று திருப்பரங் குன்றத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கிரிவலப்பாதையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பகுதி செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் முன்னிலை வகித்தார். இலக்கிய அணி மாவட்ட செயலாளர் கவிஞர் மோகன்தாஸ் வரவேற்றார். மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பிரசார வாகனத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மேலும் திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள பொது மக்களுக்கு மாநாடு தொடர்பான அழைப்பிதழை வழங்கி அவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பகுதி துணை செயலாளர் செல்வ குமார், சிறுபான்மை பிரிவு மாவட்ட பொருளாளர் காத்தூன்பீவி, சிறுபான்மை பிரிவு பகுதி செயலாளர் உசேனா பீவி, வட்டச் செயலாளர்கள் பொன்.முருகன், நாகரத்தினம், பாலா, அவைத் தலைவர் ராசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடந்தது.
- கிராமப்புற செவிலியர் பாண்டீஸ்வரி, வி.ஏ.ஓ. ஜோதிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரை
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியத் திற்கு உட்பட்ட கண்ணனூர் ஊராட்சி அரசு கள்ளர் தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
முகாமை உசிலம்பட்டி தொகுதி எம்.எல்.ஏ. அய்யப் பன், ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி தமிழரசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
முகாமில் கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன், இ.சி.ஜி., எக்கோ, ரத்தம், சிறுநீர் பரிசோதனை, ஊட்டச்சத்து பொருட்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் தயாரிப்பு குறித்த பயிற்சி, தொழு நோய், காசநோய், பல், கண், பொதுமருத்துவம், இருதயம், காது, மூக்கு, தொண்டை தொடர்பான பரிசோத னைகள், எலும்பு மூட்டு, எய்ட்ஸ் பரிசோ தனை, பெண்கள் குழந்தை களுக்கான பொது மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
முகாமில் செல்லம்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் பாண்டியராஜன் தலைமையில் ராமச்சந்தி ரன், சிந்தனா, ஹசைனா, பிரியா, சாந்தினி, பிருந்தா வசந்ந்,அபிநயா, மோனிஷா, சாந்தினி, குழுவினர்கள் நோயாளிகளை பரிசோ தனை செய்தனர். முகாமில்
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட வட்டார அலுவலர் நாகஜோதி, பள்ளி தலைமை ஆசிரியை தேன்மொழி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சேதுராமன், கிராமப்புற செவிலியர் பாண்டீஸ்வரி, வி.ஏ.ஓ. ஜோதிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தெருவிளக்கு வெளிச்சத்தில் படித்த மாணவி வீட்டுக்கு மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தரப்பட்டது.
- ஏழை, எளிய மாணவ, மாணவியின் நிலை பற்றி தகவலறிந்த தனியார் அறக் கட்டளையினர் மின் இணைப்பு வழங்க முடிவு செய்தனர்.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் சமய–நல்லூர் அருகே பரவை பேரூராட்சிக்கு உட்பட்ட ஊர்மெச்சிகுளத்தை சேர்ந்த–வர் சின்னையா (வயது 56), சமையல் உதவியாளர். இவரது மனைவி சுதா (41). தற்காலிக டெங்கு ஒழிப்பு பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.
இவர்களுக்கு ஜனனி (15) என்ற மகளும், கபிலேஷ் (11) என்ற மகனும் உள்ளனர். இதில் ஜனனி அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பும், கபிலேஷ் 7-ம் வகுப்பும் படித்து வரு–கின்றனர். இவர்கள் சொந்த இடத்தில் மண் மதில் வீடு கட்டி ஓடுகளால் மேற்கூரை அமைத்து வசித்து வருகின்ற–னர்.
இவர்களது வீட்டிற்கு நேற்று வரை மின்சார இணைப்பு இல்லை. கார–ணம், இவர்கள் வீட்டின் அருகில் மின்சார லைன்கள் எதுவும் செல்ல வில்லை. அதற்கு தனியாக மின் கம்பம் அமைத்தால்தான் மின் இணைப்பு வழங்கமுடி–யும் என்று மின்வாரியத்தினர் தெரிவித்து விட்டனர். அதற்கு ரூ.20 ஆயிரத்திற்கும் மேல் செலவு ஏற்படும் என்பதாலும், பணவசதி இல்லாததால் மின் இணைப்பு பெற முடியாம–லும் அவதிப்பட்டு வந்த–னர்.
அதனால் தெருவிளக்கு வெளிச்சத்தில் ஜனனி, கபிலேஷ் இருவரும் இரவு நேரங்களில் வீட்டு பாடங் கள் எழுதி, படித்து வந்தனர். இந்த ஏழை, எளிய மாணவ, மாணவியின் நிலை பற்றி தகவலறிந்த தனியார் அறக் கட்டளையினர் தங்களது சொந்த செலவில் மின்கம் பம் அமைத்து மின் இணைப்பு வழங்க முடிவு செய்தனர். அதன்படி நேற்று மின் இணைப்பு வழங்கி மின் விளக்கு வசதி ஏற்ப–டுத்தி தரப்பட்டது.
இந்த மின்இணைப்பு பெற்றுத்தந்த தலைமை நிர்வாக அலுவலர் பால–கிருஷ்ணன், அசோக்குமார், சமூக பொறுப்பு அலுவலர் சுஜின் தர்மராஜ் மற்றும் அறக்கட்டளையினருக்கு சின்னையா, சுதா, ஜனனி, கபிலேஷ் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஜீவானந்தம் மனோகரன், கருணாநிதி பொன்னுத்தாய், உமா மகேஸ்வரன் உறவினர்க–ளும், நண்பர்கள், பொது–மக்களும் நன்றி தெரிவித்த–னர்.
- வருகிற 16-ந்தேதி ஆடி அமாவாசையன்று எதிலும் எச்சரிக்கை தேவை.
- பிரபல ஜோதிடர் கரு.கருப்பையா விளக்கமளிக்கிறார்.
மதுரை
வருகிற 16-ந்தேதி ஆடி அமாவாசையாகும். புதன் கிழமை அன்று நிறைந்த அமாவாசையாக வருகிறது. மேலும் இந்த ஆடி மாதத் திலே இரண்டு அமாவா–சைகள் வருகின்றன. இதில் முதலில் வந்த அம்மாவா–சையை சூனிய அமாவாசை என்று சொன்னார்கள். எனவே இந்த அமாவாசை ஆனது பவர்புல் அமாவா–சையாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
அதனால் எதிலும் எச்ச–ரிக்கையாக இருப்பது நல் லது என்று பிரபல ஜோதி–டர் மடப்புரம் விலக்கு கரு.கருப்பையா விளக்கம் அளித்துள்ளார். எச்சரிக் கையாகவும் கவனமாகவும் இருப்பது நல்லது என்று கரு.கருப்பையா கூறியுள் ளார். பொதுவாக ஒரு மாதத்தில் இரண்டு அமா–வாசையோ அல்லது இரண்டு பவுர்ணமியோ வந்தால் அந்த மாதத்திலே புதிய காரியங்கள் தொடங் கக்கூடாது என்று சொல்லு–வார்கள்.
ஒரு சிலர் அமாவாசையை நிறைந்த நாள் என்று சொல்லி புதிய காரியங்களை தொடங்குவார்கள். ஒரு சிலர் சற்று யோசித்து தொடங்க மாட்டார்கள். மேலும் மறுநாள் பிரதமை என்பதால் சந்திரனின் பலம் குறைந்திருக்கும் என்ற காரணத்தால், அதற்கு அடுத்த நாள் மூன்றாம் பிறை புதிய காரியங்களை தொடங்குவார்கள்.
ஆக மொத்தத்தில் வரு–கின்ற அமாவாசையில் நெருப்பு, மின்சாரம் போன்ற வற்றில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும், வண்டி வாகனங்களை கவ னமாக இயக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அன்றைய தினத்திலே முன் னோர்களுக்கு திதி, தர்ப்ப–ணம் கொடுத்தால், ஓராண் டிற்கு உள்ள பலன் கிடைக் கும் என்றும், குலதெய்வத்தை வணங்கி வந்தால் எல்லா காரியங்களும் வெற்றியாகும் என்றும் பிரபல ஜோதிடர் கரு.கருப்பையா விளக்கம் அளித்துள்ளார்.






