மதுரை கூட்டுறவு மேலாண்மை பயிற்சி கழகம் சார்பில் ஒருநாள் கருத்தரங்கம்

மதுரை கூட்டுறவு மேலாண்மை பயிற்சி கழகம் சார்பில் ஒருநாள் கருத்தரங்கம் நடந்தது. ஐ.சி.எம். விரிவுரையாளர் ஜி.கதிரவன் நன்றி கூறினார்.
கருத்தரங்கில் கலந்துகொண்டவர்களை படத்தில் காணலாம்.
கருத்தரங்கில் கலந்துகொண்டவர்களை படத்தில் காணலாம்.
Published on

மதுரை

மதுரை மாவட்ட கூட்டுற–வுத் துறை சார்பில் நடத்தப் பட்ட 77 ஆவது சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா மற்றும் கலைஞர் நூற் றாண்டு விழாவை முன் னிட்டு கூட்டுறவு மேலாண்மை பயிற்சி கழகம் மதுரை மற்றும் மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இைணந்து நடத்தும் "கூட்டுறவில் இளைஞர்க–ளின் பங்களிப்பை வளர்த் தல்" பற்றிய ஒரு நாள் கருத்த–ரங்கம் நடைபெற்றது.

மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலை–மையகம் அழகப்பன் அரங் கில் நடைபெற்ற இக்கருத்த–ரங்கில் மதுரை மண்டல இணைப்பதிவாளர் சி.குரு–மூர்த்தி தலைமை தாங்கி உரையாற்றினார். மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளரும், செயலாட்சியருமான டாக்டர் அ.ஜீவா சிறப்புரை–யாற்றினார். மேலும், ஐ.சி.எம். இயக்குனர் முனைவர். எஸ்.தர்மராஜ் வாழ்த்துரை வழங்கினார்.

இக்கருத்தரங்கில் மதுரை கல்லூரி பேராசிரியர் முனைவர் ஏ.மயில்முருகன், ஐ.சி.எம். பேராசிரியர்கள் முனைவர் வி.அழகு பாண் டியன், முனைவர் ஜி.ஜெயந்தி, விரிவுரையாளர் எம்.ரேவதி, மதுரை மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் ம.தீனதயாளன்,

பயிற்சி கூட்டுறவு சங்கங் களின் துணைப்பதிவாளர் அவர்கள் மற்றும் மதுரை மாவட்டத்தில் உள்ள பெரு–வாரியான கல்லூரிகளின் பேராசிரியர்கள், விரிவுரை–யாளர்கள் மற்றும் மாணவர் கள் பங்கு பெற்றனர். ஐ.சி.எம். விரிவுரையாளர் ஜி.கதிரவன் நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com