என் மலர்
மதுரை
- எடப்பாடி முதல்-அமைச்சராக வேண்டி ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் முன்னாள் எம்.எல்.ஏ. ஜல பிரதட்சனம் செய்தார்.
- தீய சக்தி கூடாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.
மதுரை
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதலமைச்சராக வேண்டி ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் சோழவந்தான் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.வி. கருப்பையா ஜல பிரதட்சணம் செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், கடை கோடி தொண்டனுக்கும் தொண்டு செய்ய வேண்டும் என்பதற்காக உருவான இயக்கம் அ.தி.மு.க. நல்லாட்சி செய்த எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதலமைச்சராக மக்கள் பணி ஆற்ற வேண்டும் என்பதற்காக இந்த வேண்டுதலை நிறைவேற்றினேன்.
மதுரையில் நடைபெற உள்ள அ.தி.மு.க. மாநாடு கட்டுப்படுத்த முடியாத விலைவாசி ஏற்றம், கள்ளச்சாராயம், சாதிக் கலவரம், வழிப்பறி, கொலை, கொள்ளை, சட்ட ஒழுங்கு சீர்கேடு என்று ஒட்டுமொத்த தீய சக்தி கூடாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும். எம்.ஜி.ஆர். அம்மா அருளாசியோடும் மீண்டும் முதலமைச்சராக ஆவார் என்றார்.
- சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
- 60 சி.சி.டி.வி. கேமராக்கள் அமைத்து அனைத்து பகுதிகளும் கண்காணிக்கப் பட்டு வருகிறது.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் சாப்டூர் சதுரகிரி சுந்தரமகா லிங்கம் சுவாமி தரிசனம் செய்ய தாணிப்பாறை அடி வாரத்தில் இருந்து பக்தர்கள் மலையேறி வருகின்றனர். பேரையூர் அடுத்த சாப்டூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள் ளது சதுரகிரி சுந்தரமகாலிங் கம் திருக்கோவில்.
18 சித்தர்கள் வந்து தரிச னம் செய்த இம்மலையில் தற்போது வரையில் இங்கே சித்தர்கள் உலாவி வருகின் றனர். ஒவ்வொரு தமிழ் மாதமும் பிரதோஷம், சிவராத்திரி, அமாவாசை, பௌர்ணமி தினங்களில் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக் கப்படுவர்.
இந்நிலையில் ஆடி அமா வாசை தினமான இன்று காலை முதல் ஏராளமான பக்தர்கள் தாணிப்பறை அடிவாரம் வழியாக அரசின் வழிகாட்டு நெறிமுறை மற்றும் கடுமையான சோத னைகளுக்கு உட்படுத்தப் பட்டு மலையேற அனுமதிக் கப்பட்டு வருகின்றனர். வழக்கமாக ஆடி அமாவாசை தினத்தன்று அதிகம் கூட்டம் இருக்கும் என்பதால் 2,000 போலீசார், 50-க்கும் மேற் பட்ட நக்சல் தடுப்பு பிரிவு பிரிவினர் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டுள்ளனர்.
60 சி.சி.டி.வி. கேமராக்கள் அமைத்து அனைத்து பகுதிகளும் கண்காணிக்கப் பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இருமுறை மலையில் தீ விபத்து ஏற்பட் டதால் பக்தர்கள் கடுமை யான சோதனைக்கு பின் னரே மலைக்கு அனும–திக் கப்பட்டு வருகிறனர். குறிப் பாக எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை மேலே கொண்டு செல்ல பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.
மேலும் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள நீர் நிலைகளில் குளிக்கவும் அனுமதி கிடையாது. முன்ன–தாக நேற்று பிற்பகலை அமாவாசை காலம் தொடங் கிய காரணத்தினா–லும் நேற்று விடுமுறை தினத்தா லும் பக்தர்கள் நேற்று முதலே மலையேறி சுந்தர மாலிங்கம் சுவாமியை தரி சனம் செய்து வருவதால் இன்று எதிர்பார்க்கப்பட்ட கூட்டத்தை விட சற்று குறை வாகவே காணப்பட்டது.
இந்த ஆடி மாதத்தில் இரண்டு அமாவாசை தினம் வந்ததால் கூட்டம் பெருவா ரியாக பிரிந்ததற்கு இதுவும் ஒரு காரணமாக உள்ளது. பிற்பகல் 12 வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனும திக்கப்படுவர். ஏற்கனவே வழங்கப்பட்ட அனுமதி நாட் களில் நாளை கடைசி தினம் என்பதால் நாளையும் பக்தர் கள் வருவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது.
- செம்மொழி தமிழாய்வு மையத்தின் குறள்பீட விருது 2012 முதல் எவருக்கும் அறிவிக்கப்படவில்லை
- வேத சமஸ்கிருத வாரியத்தின் பிராந்திய மையம் ராமேசுவரத்தில் அமைக்கப்படும் என மத்திய மந்திரி தகவல்
கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பத்ரிநாத், துவார்கா, ஜெகனாத், ராமேசுவரம் மற்றும் கவுகாத்தி ஆகிய ஐந்து இடங்களில் வேத சமஸ்கிருத வாரியத்தின் பிராந்திய மையம் அமைக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், மதுரை தொகுதி எம்.பி. சு.வெங்கடேசன் தனது டுவிட்டர் பகுதியில் ''செம்மொழி தமிழாய்வு மையத்தின் குறள்பீட விருது 2012 முதல் எவருக்கும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், வேத சமஸ்கிருத வாரியத்தின் பிராந்திய மையம் ராமேசுவரத்தில் அமைக்கப்படும் என ஒன்றிய அரசு அறிவிப்பு'' என தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் பல்வேறு எம்.பி.க்கள் கேட்ட கேள்விக்கு, மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் அளித்த பதிலைத் தொடர்ந்து சு.வெங்கடேசன் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு மதுரையில் இன்று டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
- பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வருகிறார்.
மதுரை:
தமிழ் சினிமா வரலாற்றில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசீகர குரலால் ரசிகர்களின் உள்ளங்களை கவர்ந்த பழம் பெரும் பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 11 மொழிகளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார்.
1922-ம் ஆண்டு மார்ச் 24-ந்தேதி மதுரையில் பிறந்த அவர் காரைக்குடி ராஜாமணி ஐயங்காரிடம் இசை பயிற்சி பெற்று மேடைக்கச்சேரிகளில் பாடி வந்தார். 1950-ம் ஆண்டு சினிமாவில் பாடும் வாய்ப்பு கிடைத்தது.
எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் தொடங்கி 1970-ம் ஆண்டுகளில் டி.ராஜேந்திரன் இயக்கத்தில் வெளியான ஒருதலை ராகம் திரைப்படத்தின் நாயகன் வரை, பல்வேறு தலைமுறையைச் சேர்ந்த நடிகர்களுக்கும் பாடல்கள் பாடியிருக்கிறார். சுமார் 65 ஆண்டுகள் அவர் திரையுலகில் தன்னுடைய இசை பயணத்தை தொடர்ந்து வந்தார்.
தன்னுடைய தனித்துவமான இசைப் பயணத்தில், இவர் செய்த சாதனைக்காக பேரவைச் செம்மல், கலைமாமணி, பத்மஸ்ரீ உள்ளிட்ட ஏராளமான விருதுகள் வழங்கப்பட்டன. இதுதவிர கலா ரத்னம், கான ரத்னம், அருள் இசை சித்தர், நவரச பவ நளின கான வர்ஷினி, ஞானாமிர்த வர்ஷினி, சாதனை சக்கரவர்த்தி, பாரதிய இசை மேகம், கான குரலோன் போன்ற பட்டங்களும் ரசிகர்களால் சூட்டப்பட்டது.
2013-ம் ஆண்டு, தனது 91-வது வயதில் டி.எம். சவுந்தரராஜன் சென்னையில் காலமானார். அவரது நூற்றாண்டு விழாவையொட்டி சென்னையில் அவர் வாழ்ந்த வீடு அமைந்திருக்கும் மந்தவெளி வெளிவட்ட சாலை பகுதிக்கு டி.எம்.சவுந்தரராஜன் சாலை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயர் சூட்டினார். மேலும் அவரது புகழுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி மதுரையில் முழு திருவுருவச்சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
மதுரை தெற்கு வட்டம் முனிச்சாலை சந்திப்பு பகுதியில் உள்ள மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டலம் (பழைய) அலுவலகக் கட்டிட வளாகத்தில் பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் முழு திருவுருவச் சிலை அமைத்திட மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பரிந்துரை செய்யப்பட்டு பொதுப்பணித்துறையின் மூலம் ரூ.50 லட்சம் செலவில் சிலை நிறுவப்பட்டுள்ளது.
இந்த சிலை திறப்பு விழா இன்று மாலை நடைபெறுகிறது. இதில் பங்கேற்கவும், நாளை முதல் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வருகிறார்.
விமான நிலையத்தில் அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், பெரியகருப்பன், ராஜகண்ணப்பன், சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மாவட்டச் செயலாளர் மணிமாறன் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறார்கள்.
பின்னர் அங்கிருந்து காரில் புறப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முனிச்சாலையில் மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள பழம்பெரும் பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜனின் முழு உருவச் சிலையை திறந்து வைக்கிறார்.
இதையடுத்து இரவில் தனியார் ஓட்டலில் தங்கும் அவர் நாளை காலை ராமநாதபுரம் புறப்பட்டு செல்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு மதுரையில் இன்று டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- ஒருவரின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது.
- பையில் களிமண் போன்ற பொருளுடன் தங்க துகள்கள் கலந்து கடத்தி வந்தது தெரியவந்தது.
மதுரை:
சிங்கப்பூரில் இருந்து மதுரை வரும் விமானத்தில் கடத்தல் தங்கம் கொண்டு வரப்படுவதாக மதுரை விமான நிலைய சுங்க இலாகா நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
எனவே அந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளிடம் சோதனை நடத்தினர். ஒருவரின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. மேலும், அவர் கொண்டு வந்த உடைமைகளையும் பரிசோதித்தனர்.
அப்போது அவர் கொண்டு வந்த பையில் களிமண் போன்ற பொருளுடன் தங்க துகள்கள் கலந்து கடத்தி வந்தது தெரியவந்தது. களிமண்ணில் இருந்து தங்கத்துகள்களை அதிகாரிகள் பிரித்து எடுத்தபோது, ரூ.59 லட்சத்து 28 ஆயிரத்து 210 மதிப்புள்ள 995 கிராம் எடை கொண்ட கடத்தல் தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த பயணி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கலெக்டர் சங்கீதா தேசியக் கொடியேற்றி ரூ.1.74 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
- பசுமையை பாதுகாக்கும் விதமாக மரக்கன்றுகளை மேயர், ஆணையாளர் ஆகியோர் நட்டு வைத்தார்கள்.
மதுரை
மதுரை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கலெக்டர் சங்கீதா தேசியக் கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
விழாவில் பல்வேறு அரசு துறை சார்பில் 39 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 74 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சங்கீதா வழங்கினார். தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் தென்மண்டல காவல்துறை தலைவர் நரேந்திரன் நாயர், நகர் போலீஸ் கமிஷனர் லோகநாதன், போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், மாநகராட்சி கமிஷனர் பிரவீன் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரை மாநகராட்சி அண்ணாமாளிகையில் நடந்த சுதந்திர தின விழாவில் மேயர் இந்திராணி தேசியக் கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். கமிஷனர் பிரவீன்குமார் முன்னிலை வகித்தார்.
இவ்விழாவில் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து தேசிய தரச்சான்றிதழ் பெற்ற நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மஸ்தான்பட்டி மற்றும் முனிச்சாலை மருத்துவ குழுவினருக்கு பாராட்டு தெரிவித்து கௌரவிக்கப்பட்டது. மேலும் மாநகராட்சியில் சிற்பபாக பணியாற்றி பணியாளர்களுக்கும், பள்ளிகளில் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டுச்சான்றிதழும், கலைநிகழ்ச்சிகளின் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை மேயர், ஆணையாளர் ஆகியோர் வழங்கினார்கள்.
இறுதியாக அண்ணா மாளிகை வளாகத்தில் பசுமையை பாதுகாக்கும் விதமாக மரக்கன்றுகளை மேயர், ஆணையாளர் ஆகியோர் நட்டு வைத்தார்கள்.
இவ்விழாவில் துணை மேயர் நாகராஜன், துணை ஆணையாளர்கள் சரவணன், தயாநிதி, மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி, வாசுகி, சுவிதா, கல்விக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன், கண்காணிப்பு பொறியாளர் அரசு, நகர்நல அலுவலர் வினோத்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன் பலர் கலந்து கொண்டனர்.
- காங்கிரஸ் கட்சி சார்பில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.
- இதில் வடக்கு மாவட்ட துணை தலைவர் கருப்பாயூரணி வேலு ஆறுமுகம் தலைமை தாங்கினார்.
மதுரை
காங்கிரஸ் கட்சியின் மதுரை வடக்கு மாவட்ட தலைவர் ஆலாத்தூர் ரவி உத்தரவின்பேரில் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. ஒத்தக்கடை வட்டார தலைவர் சவுந்தரபாண்டியன் ஏற்பாட்டில் ஒத்தக்கடை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தேசியகொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் வடக்கு மாவட்ட துணை தலைவர் கருப்பாயூரணி வேலு ஆறுமுகம் தலைமை தாங்கினார். கிராம கமிட்டி தலைவர் ஜெயராஜ் பாண்டியன், வெள்ளையன், கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கலைச்செல்வன், மாயாண்டி முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் நாகேந்திரன், முகமது அலி, சாகுல் அமீது, பாஸ்கரன், யோகேஸ் மற்றும் மகளிரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- சுதந்திர தின விழா கொண்டாட்டப்பட்டது.
- அனைவருக்கும் இனிப்பு வழங்கபட்டது.
மதுரை
மதுரையில் பல்வேறு இடங்களில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடந்த சுதந்திர தின விழாவில் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். விழாவில் சுதந்திர போராட்ட தியாகிகள் சுந்தரமகாலிங்கம், பாக்கியம் செல்லதுரை, ஜோதி, ராஜலெட்சுமி, நச்சம்மாள் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் என திரளானோர் கலந்து கொண்டனர். சத்திரப்பட்டியில் உள்ள கல்லூரியில் கூடுதல் வளாகத்திலும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
மனோகரா நடுநிலைப்பள்ளி
மதுரை மனோகரா நடுநிலைப்பள்ளியில் குறிஞ்சி மலர் அரிமா சங்கம், மதுரை அறம் அரிமா சங்கம் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி செயலர் பால் ஜெயக்குமார் வரவேற்றார். அறம் அரிமா சங்க தலைவர் ஜேசுராஜா தலைமை தாங்கினார். செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றினார். கவுன்சிலர் குமரவேல், முன்னாள் கவுன்சிலர் திலகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் தனபால் நன்றி கூறினார். இதில் தலைவர் காளிதாஸ், செயலர் செந்தில்குமார், பொருளாளர் மகேந்திரன் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
முத்தமிழ் மன்றம்
மதுரை ஹார்விபட்டி முத்தமிழ் மன்றத்தின் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடபட்டது. தேசிய கொடியை மன்றத்தின் நிறுவன தலைவர் முன்னாள் அறங்காவலர் மகா.கணேசன் ஏற்றி வைத்தார். மன்ற நிர்வாகிகள் மாரியப்பன், நாகேந்திரன், கணபதி, மோகன், சங்கர், ஸ்டெல்லா, சுடலை முத்து, குமார், செல்வராஜ், ராஜேஷ், ஹரிகிருஷ்ணன், நாகராஜ், அஞ்சு, நாகராஜ், பாண்டியராஜன், மணிகண்டன், குணசேகரன், தங்கவேலு, சுந்தர்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். அனை வருக்கும் இனிப்பு வழங்கபட்டது.
- குழந்தை இல்லாத ஏக்கத்தில் தம்பதி தூக்கில் தொங்கினர்.
- தெப்பக்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை ஐராவதநல்லூர் யாதவர் தெருவை சேர்ந்த வர் அருண்குமார். இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 26). இவர்களுக்கு 2018-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து 5 ஆண்டுகள் ஆகியும் இவர்களுக்கு குழுந்தை இல்லை. குழந்தை பேருக் காக பல மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்று வந்த னர்.
குழந்தை இல்லாத ஏக்கத்தில் இருவரும் மன அழுத்தத்தில் இருந்து வந்தனர். இதனால் வாழ்யிக் கைல் விரத்தியடைந்த இரு வரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.
சம்பவத்தன்று கணவன்- மனைவி இருவரும் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றனர். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உயிருக்கு போராடிய நிலை யில் இருந்த இருவரையும் மதுரை அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கான கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே ஜெயலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். கணவர் அருண்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. இந்த சம்ப வம் குறித்து ஜெயலட்சுமியின் தாயார் கன்னிசெல்வி தெப்பக்குளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
குழந்தை இல்லாத ஏக்கத்தில் கணவன், மனைவி இருவரும் தற் கொலை முயற்சி செய்தது அப்பகுதில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- மதுரையில் மண்டல ம.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் வைகோ பேசினார்.
- தமிழ்நாட்டில் பா.ஜனதாவை நுழையவிடாமல் தடுக்க திராவிட இயக்கங்களை பாதுகாக்க வேண்டும்.
மதுரை
அண்ணாவின் 115-வது பிறந்தநாள் மாநாடு அடுத்த மாதம் 15-ந்தேதி மதுரையில் நடக்கிறது. இதனையொட்டி, மதுரை மண்டல ம.தி.மு.க. நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று, தெப்பக்கு ளம் நோட்புக் அரங்கில் நடைபெற்றது.
பூமிநாதன் எம்.எல்.ஏ., மாநகர் மாவட்ட செயலாளர் முனியசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். சிறப்பு அழைப்பாளராக ம.தி.மு.க. பொதுச்செயலா ளர் வைகோ எம்.பி. கலந்து கொண்டு பல்வேறு ஆலோச னைகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதா வது:-
கலிங்கப்பட்டி என்ற சிறிய கிராமத்தில் பிறந்த போது நான் ஒரு அரசியல் கட்சி தொடங்குவேன் என்றோ, இத்தனை ஆண்டு கள் இயக்குவேன் என்றோ கனவு கூட கண்டதில்லை. அண்ணா மீது கொண்ட பற்றின் காரணமாக உயிரை யும் கொடுக்க துணிந்துதான் தி.மு.க.வில் பணியாற்றி னேன். பிரிட்டிஷ் காலத்தை போல ஒரு கவர்னரை தமிழகத்திற்கு நியமித்து, திராவிட இயக்கங்களை அழித்துவிட முயற்சிக்கி றார்கள்.
ம.தி.மு.க. தமிழ்நாட்டுக்கு என்ன செய்தது? என்று கேட்கிறார்கள். ஸ்டெல் லைட், நியூட்ரினோ வராமல் தடுத்தோம், முல்லை பெரி யாறு அணையை பாதுகாத் தோம், தஞ்சைக்கு மீத்தேன் வராமல் தடுத்தோம். இப் படி எவ்வளவோ செய்துள் ளோம். 10 ஆண்டுக ளுக்கு முன்னால் பா.ஜ.க. என்றால் யாருக்காவது தெரியுமா?
ஆனால், தற்போது மீண்டும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என மோடி, அமித்ஷா கூறுகி றார்கள். அந்த தைரியம் எப்படி வந்தது? தமிழ் நாட்டை காக்க வேண்டும் என்றால், இந்துத்துவா, சனாதன சக்திகள் ஊடுருவ விடாமல் தடுக்க வேண்டும். அதற்கு தி.மு.க.வுடன் கைகோர்த்து கொள்வோம்.
விமர்சனங்கள் எவ்வ ளவோ வரலாம். அதைப் பற்றி கவலைப்பட வேண்டி யதில்லை. பா.ஜ.க.வை தமிழகத்தில் நுழைய விடாமல் தடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதற்கு திராவிட இயக்கங் களை பாதுகாக்க வேண்டும்.
நான் இதுவரை 7 ஆயிரம் கிலோ மீட்டருக்கு மேல் நடைபயணம் மேற்கொண்டி ருக்கிறேன். கன்னியாகுமரி முதல் சென்னை வரை, தாமிரபரணி முதல் சென்னை வரை என பல முறை நடைபயணம் செய்தி ருக்கிறேன். அன்று நடைபய ணம் செய்த போது ஊடக ஆதரவு கூட கிடையாது. எல்லா இடத்திற்கும் நடந்து தான் செல்வேன். மக்களு டன் மக்களாக இருப்பேன். சாலையோரங்களில் ஓய்வெ டுப்பேன். எங்கும் அறை போட்டு தங்கவில்லை. இதனை யாரையும் ஒப்பிடுவ தற்காக கூறவில்லை.
ஆனால், இன்று நடை பயணம் மேற்கொள்ளும் சிலருக்கு பக்கம் பக்கமாக விளம்பரம் வருகிறது. தொடர்ந்து தமிழக மக்களின் நலனுக்காக போராடி கொண்டிருக்கிறேன். ம.தி.மு.க. தியாகத்தால் உருவான கட்சி. தொண்டர்களுக்கு ஒருபோதும் துரோகம் செய்ய மாட்டேன். மதுரை யில் நடக்கும் அண்ணா பிறந்தநாள் மாநாட்டில் லட்சக்கணக்கானவர்கள் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாநில தொண்டரணி துணை செயலாளர் பச்சைமுத்து, தணிக்கை குழு உறுப்பினர் பாண்டியன், மதுரை மாநகர் தொண்டரணி துணை செயலாளர் சண்முகவேல், சிம்மக்கல் பகுதி செயலாளர் பாஸ்கர், 44-வது வார்டு திட்டகுழு உறுப்பினர் தமிழ்செல்வி, 100-வது வார்டு உறுப்பினர் முத்து லட்சுமி, சுருதிரமேஷ், அன்னமுகமது, பாஸ்கர சேதுபதி, சுப்பையா, பச்சமுத்து.சண்முகவேல் புகழ்முருகன், வக்கீல்நாக ராஜன், சுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தேச பிரிவினை தினம் அனுசரிக்கப்பட்டது.
- பா.ஜ.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சோழவந்தான்
மதுரை மாவட்டம் சோழவந்தானில் பா.ஜ.க. சார்பில் பாரத தேச பிரிவினை தினம் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட பொதுச் செயலாளர் கோசா பெருமாள் வரவேற்றார். மாவட்டத் தலைவர் ராஜசிம்மன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் முத்துராமன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கார்த்திக் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர் சீனிவாசன், சோழவந்தான் மண்டல் தலைவர் கதிர்வேல் நன்றி கூறினார்.
மண்டல் பொதுச் செயலாளர் அருண், பாண்டியன் மண்டல் பொருளாளர் ராஜ்குமார் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதில் சோழவந்தான் பகுதியை சேர்ந்த மாநில மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தி.மு.க. இளைஞரணி சார்பில் கபடி போட்டி நடந்தது.
- வெங்கடேசன் எம்.எல்.ஏ. பரிசு வழங்கினார்.
சோழவந்தான்
மதுரை புறநகர் தி.மு.க. வடக்கு மாவட்ட இளை ஞரணி, சோழவந்தான் பேரூர் இளைஞர் அணி சார்பாக சோழவந்தானில் 2 நாட்கள் மின்னொளி கபடி போட்டி நடந்தது. இதில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட கபடி அணியினர் கலந்து கொண்டனர்.
வெற்றி பெற்ற அணி யினருக்கு சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் பரிசுகள் வழங்கினார். மதுரை புறநகர் வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜா தலைமை வகித்தார்.
இதில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன், சோழ வந்தான் பேரூராட்சி சேர்மன் ஜெயராமன், பேரூர் செயலாளர் சத்ய பிரகாஷ், பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், பேரூர் துணை செயலாளர்கள் ஸ்டாலின், கொத்தாலம் செந்தில், பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் ஈஸ்வரி, ஸ்டாலின், குருசாமி, செல்வராணி, ஜெயராமச்சந்திரன், நிஷா, கவுதம ராஜா, முத்துச் செல்வி, சதீஷ், அவைத் தலைவர் தீர்த்தம் ராமன், மாவட்ட இளைஞர் அணி துணைச் செயலாளர் வெற்றிச்செல்வன்.
வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் பால் கண்ணன், பேரூர் இளைஞ ரணி செய லாளர் முட்டை கடை காளி, குருவி த்துறை அலெக்ஸ், மில்லர், தவம், மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்ட னர்.






