என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Collector Flagging"

    • கலெக்டர் சங்கீதா தேசியக் கொடியேற்றி ரூ.1.74 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
    • பசுமையை பாதுகாக்கும் விதமாக மரக்கன்றுகளை மேயர், ஆணையாளர் ஆகியோர் நட்டு வைத்தார்கள்.

    மதுரை

    மதுரை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கலெக்டர் சங்கீதா தேசியக் கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

    விழாவில் பல்வேறு அரசு துறை சார்பில் 39 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 74 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சங்கீதா வழங்கினார். தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் தென்மண்டல காவல்துறை தலைவர் நரேந்திரன் நாயர், நகர் போலீஸ் கமிஷனர் லோகநாதன், போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், மாநகராட்சி கமிஷனர் பிரவீன் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை மாநகராட்சி அண்ணாமாளிகையில் நடந்த சுதந்திர தின விழாவில் மேயர் இந்திராணி தேசியக் கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். கமிஷனர் பிரவீன்குமார் முன்னிலை வகித்தார்.

    இவ்விழாவில் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து தேசிய தரச்சான்றிதழ் பெற்ற நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மஸ்தான்பட்டி மற்றும் முனிச்சாலை மருத்துவ குழுவினருக்கு பாராட்டு தெரிவித்து கௌரவிக்கப்பட்டது. மேலும் மாநகராட்சியில் சிற்பபாக பணியாற்றி பணியாளர்களுக்கும், பள்ளிகளில் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டுச்சான்றிதழும், கலைநிகழ்ச்சிகளின் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை மேயர், ஆணையாளர் ஆகியோர் வழங்கினார்கள்.

    இறுதியாக அண்ணா மாளிகை வளாகத்தில் பசுமையை பாதுகாக்கும் விதமாக மரக்கன்றுகளை மேயர், ஆணையாளர் ஆகியோர் நட்டு வைத்தார்கள்.

    இவ்விழாவில் துணை மேயர் நாகராஜன், துணை ஆணையாளர்கள் சரவணன், தயாநிதி, மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி, வாசுகி, சுவிதா, கல்விக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன், கண்காணிப்பு பொறியாளர் அரசு, நகர்நல அலுவலர் வினோத்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன் பலர் கலந்து கொண்டனர்.

    ×