தமிழுக்குச் சுண்ணாம்பு, சமஸ்கிருதத்திற்கு வெண்ணெய்: மதுரை எம்.பி. கண்டனம்

செம்மொழி தமிழாய்வு மையத்தின் குறள்பீட விருது 2012 முதல் எவருக்கும் அறிவிக்கப்படவில்லைவேத சமஸ்கிருத வாரியத்தின் பிராந்திய மையம் ராமேசுவரத்தில் அமைக்கப்படும் என மத்திய மந்திரி தகவல்
தமிழுக்குச் சுண்ணாம்பு, சமஸ்கிருதத்திற்கு வெண்ணெய்: மதுரை எம்.பி. கண்டனம்
Published on

கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பத்ரிநாத், துவார்கா, ஜெகனாத், ராமேசுவரம் மற்றும் கவுகாத்தி ஆகிய ஐந்து இடங்களில் வேத சமஸ்கிருத வாரியத்தின் பிராந்திய மையம் அமைக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், மதுரை தொகுதி எம்.பி. சு.வெங்கடேசன் தனது டுவிட்டர் பகுதியில் ''செம்மொழி தமிழாய்வு மையத்தின் குறள்பீட விருது 2012 முதல் எவருக்கும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், வேத சமஸ்கிருத வாரியத்தின் பிராந்திய மையம் ராமேசுவரத்தில் அமைக்கப்படும் என ஒன்றிய அரசு அறிவிப்பு'' என தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் பல்வேறு எம்.பி.க்கள் கேட்ட கேள்விக்கு, மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் அளித்த பதிலைத் தொடர்ந்து சு.வெங்கடேசன் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com