search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அயன்பாப்பாகுடி கண்மாயில் கழிவுநீர்  கலப்பதை தடுத்து தூர்வார வேண்டும்- பொதுமக்கள்
    X

    அயன்பாப்பாகுடி கண்மாயில் கழிவுநீர் கலப்பதை தடுத்து தூர்வார வேண்டும்- பொதுமக்கள்

    • அயன்பாப்பாகுடி கண்மாயில் கழிவுநீர் கலப்பதை தடுத்து தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
    • மாரி, பாக்கியம், செந்தில் ஆகியோர் மனு கொடுத்தனர்.

    மதுரை

    மதுரை அவனியாபுரம் பகுதியில் மிகப்பெரிய கண் மாயாக அயன் பாப்பாக்குடி கண்மாய் விளங்கு–கிறது. இந்த கண்மாயில் தேக்கப்ப–டும் நீர் விவசாயம் மற்றும் இப்பகுதி நிலத்தடி நீர் உயர்வுக்கு காரணமாக விளங்குகிறது.

    இந்த கன்மாய்க்கு திருப்ப ரங்குன்றம் தென்கால் கண்மாயிலிருந்து உபரி நீர் வருவது உண்டு. இந்த நிலையில் தற்போது மதுரை பழங்காநத்தம், முத்துப்பட்டி, ஜெய்ஹிந்த்புரம், எம்.கே.–புரம் ஆகிய பகுதிகளில் இருந்து வரும் கழிவுநீர் இந்த கண்மாயில் கலக்கிறது. மேலும் இந்த கண்மாயின் மடை திறக்கப்பட முடியாத நிலையில் உள்ளது.

    இந்த கண்மாயில் இருந்து நீர் வெளியேறும் கால்வாய் தூர்வாரப்படாமல் புல் புதராக மண்டிக்கிடக்கிறது. இதனால் கண்மாயில் நீர் பெருகி அருகே உள்ள குடி யிருப்பு பகுதிகளில் கழிவு நீர் செல்வதால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் மலேரியா, டெங்கு போன்ற வைரஸ் காய்ச்சல்கள் பரவும் அபாய நிலையும் இருக்கிறது.

    எனவே மதுரை மாவட்ட கலெக்டர் கண்மாயை ஆய்வு செய்து கண்மாய் கரைகளை பலப்படுத்தி நீர் வெளியேறும் கால்வாயை தூர்வாரி தர வேண்டும். மேலும் கண்மாய்க்குள் கலக்கும் கழிவுநீரை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என அவனியாபுரம் பொதுமக்கள் சார்பில் கவுன்சிலர்கள் கருப்புசாமி, அய்யனார் ஆகியோர் தலை மையில் மாரி, பாக்கியம், செந்தில் ஆகியோர் மனு கொடுத்தனர்.

    Next Story
    ×