தீச்சட்டி, முளைப்பாரி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

தீச்சட்டி, முளைப்பாரி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். .இதில் ஏராளமான பக்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
தீச்சட்டி, முளைப்பாரி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
Published on

மேலூர்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள நொண்டி கோவில்பட்டியில் ஆதிபராசக்தி கோவில் உள்ளது. இதன் 27-ம் ஆண்டு வருடாந்திர ஆடிப்பூர திருவிழா நடைபெற்றது. இதை முன்னிட்டு ஏராளமான பெண்கள் அக்னிச்சட்டி ஏந்தியும், விவசாயம் செழிக்க முளைப்பாரி எடுத்தும், கஞ்சி களையம் சுமந்தும், சில பக்தர்கள் நேர்த்திக்கடனாக அலகு குத்தியும் நொண்டி கோவில் பட்டியில் உள்ள கோவிலில் இருந்து புறப்பட்டு மேலூர் அழகர்கோவில் ரோடு, பெரிய கடை வீதி, செக்கடி பஜார், பஸ் நிலையம், சேனல் ரோடு வழியாக நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து மீண்டும் கோவிலை வந்து அடைந்தனர்.அதனைத் தொடர்ந்து ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் முன்பாக அனைவருக்கும் அன்னதானம் நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com