என் மலர்tooltip icon

    மதுரை

    • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைகளுக்கு உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்.
    • விண்ணப்பிக்க செப்டம்பர் 21-ந்தேதி கடைசி நாளாகும்‌.

    மதுரை

    மதுரை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள தகவலில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மாநகர காவல் எல்கைக்குட்பட்ட பகுதிகளில் தற்காலிக பட்டாசு கடைக்கு உரிமம் பெற விண்ணப்பிப்பவர்கள் தமிழ்நாடு வெடிபொருள் சட்டம் 2008-ன் படி வெளியிடப்பட்டுள்ள விதிமுறைகளின்படி படிவம் எண் ஏ.இ.5 என்ற படிவத்தனை பூரத்தி செய்து ரூ.2க்கான நீதிமன்ற அஞ்சல் வில்லையுடன் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட படிவம் (இணையதளத்தில் பதிவிறக்கம்) பாஸ்போர்ட் புகைப்படத்துடன், விண்ணப்பதாரரின் கூடுதல் பாஸ்போர்ட் புகைப்படம்-2 (தனியாக இணைக்கப்பட வேண்டும்), தீயணைப்புத்துறை தடையில்லாச் சான்று, உத்தேசிக்கப்பட்ட கடையின் வரைபடம் (2 வழிகள் இருக்கவேண்டும்) வரைபடத்தில் கடையின் முகவரி முழுமையாக குறிப்பிடப்பட வேண்டும்,

    மனுதாரர் கையொப்பம் இட்டிருக்க வேண்டும், உத்தேசிக்கப்பட்ட கடை அமையவுள்ள இடத்தை சுற்றி 50 மீட்டர் அருகாமையில் உள்ள அமைவிடங்களை குறிக்கும் வரைபடம், பட்டாசு கடை அமையவுள்ள இடம் சொந்த கட்டிடமாக இருப்பின் சொத்து வரி ரசீது, உரிமையாளரின் சம்மதக் கடிதம், பட்டாசு கடை அமையவுள்ள இடம் வாடகைக் கட்டிடமாக இருப்பின் 2023-2024-ம் ஆண்டுக்குரிய முதலாம் அரையாண்டு வரை அதாவது 30.09.2023 வரை செலுத்தப்பட்ட சொத்து வரி ரசீது மற்றும் கட்டிட உரிமையாளரின் சம்மத க்கடிதம் மற்றும் கட்டிட உரிமையாளருடன் விண்ணப்பதாரர் ஏற்படுத்திக்கொண்ட வாடகை முத்திரைத்தாளில் நோட்டரி பப்ளிக் ஒப்புதலு டன்). ஒப்பந்தப்பத்திரம், பட்டாசு கடை அமையவுள்ள இடம் மாநகராட்சி / பொதுப்பணித்துறை / மற்ற துறை கட்டிடமாக இருப்பின் அத்துறை சார்ந்த அலுவலரின் மறுப்பின்மை கடிதம், மாநகராட்சி டி.அண்டு சி. ரசீது,

    ஏற்பு உறுதி ஆவணம் (ரூ.20/- மதிப்புள்ள பத்திரத்தில் நோட்டரி ஒப்புதலுடன்) கடை அமையவுள்ள இடத்தின் புகைப்படம் 2 கோணங்க ளில், விண்ணப்பதாரரின் குடும்ப அட்டை (அல்லது) ஆதார் அட்டை நகல்கள் ரூ.900/- விண்ணப்ப உரிமம் கட்டணம் (திருப்பித்தர இயலாது).

    அசல் விண்ணப் பத்துடன் அனைத்து ஆவணங்களும் 3 நகல் இணைக்கப்படவேண்டும். செப்டம்பர் 21ம் தேதி 1 மணிக்குள் பெறப்படும் முழுமையான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்கப்பட்டு, சம்மந்தப்பட்ட இடங்களை பார்வையிட்டு, விசார ணைக்குப்பின் காவல்துறை கண்ணோக்கில் திருப்தியடையும் பட்சத்தில் மட்டுமே உரிமம் வழங்கப்படும்.

    வெடிபொருள் சட்டம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விதிகளின் படி, சாலை ஓரக்கடைகளுக்கு உரிமம் வழங்கப்பட மாட்டாது. மேற்கண்ட தேதிக்கு மேல் விண்ணப்பம் சமர்ப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு செய்யப்பட மாட்டாது. குறித்த கால கெடுவுக்குள் முழுமையாக பெறப்படாத விண்ணப் பங்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி தள்ளுபடி செய்யப்படும். தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற விண்ணப்பிக்க செப்டம்பர் 21-ந்தேதி கடைசி நாளாகும்.

    இவ்வாறு அவர்கள் தெரித்தனர்.

    • வெவ்வேறு சம்பவங்களில் மோட்டார் சைக்கிள்-செல்போன் திருடிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • இவர் வீட்டில் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார்.

    மதுரை

    மதுரை சர்வேயர் காலனி பாண்டியன் நகர் மெயின் ரோட்டை சேர்ந்த வர் சவுந்தரபாண்டியன் (வயது40). இவர் வீட்டில் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார். மர்ம நபர்கள் அதனை திருடிச்சென்று விட்டனர்.

    இதுகுறித்து திருப்பாலை போலீசில் சவுந்தர பாண்டியன் புகார் செய்தார். விசாரணையில் மோட்டார் சைக்கிளை திருடியது உச்சபரம்புமேடு மாமா நகர் முதல் தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் விவேக் ராஜா (27) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

    மேலூர் சத்தியமூர்த்தி தெற்கு தெருவை சேர்ந்தவர் தங்கபாண்டி (41). இவர் மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது ஒரு வாலிபர் அவரிடம் இருந்து செல்போனை பறித்துக் கொண்டு ஓட முயன்றார். அங்கிருந்தவர்கள் அவரை கையும், களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் அண்ணாநகர் யாகப்பாநகர் 3-வதுதெரு மாரி மகன் காளீஸ்வரன் (26) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    • குழந்தையின் உடலை தோண்டி எடுத்தனர்.
    • வீட்டில் இருந்த குழந்தை திடீரென இறந்து விட்டதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

    மதுரை:

    மதுரை வில்லாபுரம் அகஸ்தியர் தெருவை சேர்ந்தவர் காளீஸ்வரன், தொழிலாளி. இவருக்கு கார்த்திகைஜோதி என்ற மனைவியும், 5 வயதில் மகனும் உள்ளனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இந்த தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது.

    இந்த நிலையில் வீட்டில் இருந்த அந்த குழந்தை திடீரென இறந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பெற்றோர் போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் வீட்டின் அருகில் காலி இடத்தில் குழி தோண்டி புதைத்ததாக தெரிகிறது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவனியாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் போலீசார் சம்பவ இடம் வந்து காளீஸ்வரன்-கார்த்திகை ஜோதியிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர்கள் குழந்தை இறந்ததால் புதைத்ததாக தெரிவித்தனர். ஆனாலும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து புதைக்கப்பட்ட இடத்தை தோண்டி குழந்தையின் உடலை எடுத்து பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி இன்று காலை தெற்கு தாசில்தார் முத்துப்பாண்டி, வருவாய் அதிகாரிகள் பிருந்தா, மணிகண்டன் ஆகியோர் முன்னிலையில் ஊழியர்கள் குழந்தையின் உடலை தோண்டி எடுத்தனர். பின்னர் அதனை பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    குழந்தை இறப்பு குறித்து பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்புதான் முழுமையான தகவல் தெரியவரும். குழந்தை கொலை செய்யப்பட்டதா? அல்லது நோய் பாதிப்பு காரணமாக இறந்ததா? என தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள், போலீசார் தெரிவித்தனர்.

    இதற்கிடையில் 6 மாத பெண் குழந்தைக்கு இருதய நோய் பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. பல மருத்து வமனைகளில் சிகிச்சை பார்த்தும் குணமாகவில்லை. கடந்த 20-ந்தேதி வீட்டில் இருந்த குழந்தை திடீரென இறந்து விட்டதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

    • வார்டில் உள்ள சாக்கடை பிரச்சினை, குடிநீர் பிரச்சினைகளை சரி செய்யுமாறு கோரிக்கை வைத்துள்ளார்
    • சாலை மறியல் காரணமாக அந்த பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    மதுரை:

    மதுரை மாநகராட்சியின் 79-வது வார்டு கவுன்சிலராக தி.மு.க.வை சேர்ந்த லக்சிகாஸ்ரீ என்பவர் உள்ளார். ஜீவா நகர், ராமையா தெரு, ஓம்சக்தி கோவில் தெரு, சுந்தராஜ புரம் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளை கொண்ட இந்த வார்டில் கடந்த 6 மாதங்களாக அடிக்கடி சாக்கடை நிரம்பி கழிவுநீர் வெளியேறுவது அடிக்கடி நடந்து வருகிறது.

    இதனால் அந்த பகுதிகளில் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. சில நாட்கள் குடிநீருடன் சாக்கடை நீர் கலந்து வருவதாக பொது மக்கள் கவுன்சிலர் லக்சிகாஸ்ரீயிடம் புகார் தெரிவித்தனர். அவரும் மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு வார்டில் உள்ள சாக்கடை பிரச்சினை, குடிநீர் பிரச்சினைகளை சரி செய்யுமாறு கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் அதனை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

    இந்நிலையில் மீண்டும் ஜீவாநகர் பகுதியில் கழிவுநீர் வெளியேறும் பிரச்சினை தலைதூக்கியது. இதனால் அதிருப்தி அடைந்த பொது மக்கள் கவுன்சிலர் லக்சிகாஸ்ரீயை சந்தித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கூறினர். இந்த முறையும் அதிகாரிகள் அலட்சியமாக இருந்ததாக தெரிகிறது.

    மாநகராட்சி அதிகாரிகளின் இந்த அலட்சிய போக்கை கண்டித்தும், 79-வது வார்டில் பொது மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வலியுறுத்தியும் இன்று காலை ஜீவாநகர் மெயின்ரோடு சந்திப்பில் கவுன்சிலர் லக்சிகாஸ்ரீ தலைமையில் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதில் தி.மு.க. பகுதி செயலாளர் முருகானந்தம் மற்றும் முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷமிட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். சாலை மறியல் காரணமாக அந்த பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    மாநகராட்சி நிர்வாகத்தை ஆளும் கட்சி பெண் கவுன்சிலர் மறியலில் ஈடுபட்ட சம்பவம் அந்த கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து கவுன்சிலர் லக்சிகாஸ்ரீ கூறுகையில், வார்டு பிரச்சினை குறித்து பலமுறை மாநகராட்சி கூட்டத்தில் பேசினேன். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுதொடர்பாக மேயர், கமிஷனர் சந்தித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனது வார்டை புறக்கணிக்கிறார்கள். பொதுமக்கள் நலன் கருதி வார்டு பிரச்சினையை தீர்க்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என்றார்.

    • திருமங்கலம் அருகே நடந்த வெவ்வேறு விபத்துக்களில் தொழிலாளி உள்பட 2 பேர் பலியானார்கள்.
    • டி. கல்லுப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள கள்ளிக்குடியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 42). தொழிலாளியான இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

    சம்பவத்தன்று சரவணன் கள்ளிக்குடி 4 வழிச்சாலையை கடக்க முயன்றார் அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் அவர் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சரவணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து கார் டிரைவர் ஜீவன் ஆகாஷ் என்பவரிடம் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள முதலிப்பட்டியை சேர்ந்தவர் காளி ரத்தினம். சம்பவத் தன்று இவர் தனது மனைவியுடன் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சாப்டூரில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டனர்.

    எம். சுப்புலாபுரம் எரிச்சநத்தம் நேரக்கோவில் பகுதியில் வந்தபோது சாலையின் குறுக்கே நாய் சென்றது. இதனால் நிலைகுலைந்த மோட்டார் சைக்கிள் தடுமாறி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த காளிரத்தினம் பரிதாபமாக இறந்தார். டி. கல்லுப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சமயநல்லூர், அலங்காநல்லூர் பகுதிகளில் நாளை மின் தடை ஏற்படும்.
    • இந்த தகவலை சமயநல்லூர் மின் வாரிய செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை சமயநல்லூர், மாணிக்கம்பட்டி, அலங்கா நல்லூர், சமயநல்லூர் ஆகிய பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உசிலம்பட்டி, மறவர்பட்டி, சத்திர வெள்ளாளப்பட்டி, வலையப்பட்டி, ராமகவுண்டன்பட்டி, தெத்தூர், T.மேட்டுப்பட்டி, கரடிக்கல், சின்னபாலமேடு, சுக்காம்பட்டி, கோணம்பட்டி, சாத்தையாறு அணை, எர்ரம்பட்டி, தேவ சேரி, மாணிக்கம்பட்டி, வெள்ளையம்பட்டி, சரந் தாங்கி, கோடாங்கிப்பட்டி, பொந்துகம்பட்டி, சேந்த மங்கலம், உசிலம்பட்டி, முடு வார்பட்டி. குறவன்குளம், ஆதனூர், மேட்டுப்பட்டி, அச்சம்பட்டி, மாலைப்பட்டி, பாலமேடுநகர் பகுதிகள்.மாணிக்கம்பட்டி, அலங்காநல்லூர்

    சர்க்கரை ஆலையம் அலங்காநல்லூர் பகுதி முழுவதும், நேஷனல்மில், டி.மேட்டுப்பட்டி, பண்ணைக்குடி, அழகாபுரி, புதுப்பட்டி, சின்னக்கவுண் டம்பட்டி, சிறுவாலை, சின்ன கவுண்டம்பட்டி, சிறுவாலை, அம்பலத்தாடி, பிள்ளையார் நத்தம், குறவன்குளம், மீனாட்சிபுரம், இடையப்பட்டி, அய்யூர், கோவில்பட்டி, வைகாசிப்பட்டி, கீழச்சின்ன னம்பட்டி மற்றும் அலங்காநல்லூர் ஆகிய பகுதிகள். சமயநல்லூர், ஊர் மெச்சிக்குளம், வளர்நகர், பாத்தி மாநகர், தேனூர்ரோடு அகிய பகுதிகளில் மின் தடை ஏற்படும்.இந்த தகவலை சமயநல்லூர் மின் வாரிய செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.

    • மதுரை மாநாட்டில் பங்கேற்ற அ.தி.மு.க. நிர்வாகிகள் பரிதாபமாக இறந்தார்.
    • பெருங்குடி போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் வளை யங்குளத்தில் கடந்த 20-ந் தேதி அ.தி.மு.க. மாநாடு நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பெரிய நெகமம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 56). அ.தி.மு.க. தொண்டரான இவர் மதுரை மாநாட்டில் பங்கேற்று விட்டு அன்று இரவு ஊருக்கு புறப்பட்டார்.

    சம்பக்குளம் பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்த போது பழனிச்சாமி திடீரென மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் பழனிச்சாமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவரது மகன் ஸ்ரீதர் கொடுத்த புகாரின் பேரில் ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பத்தூர் மாவட்டம் பத்ரிகாணு கிராமத்தைச் சேர்ந்தவர் சென்னையன் (65) அ.தி.மு.க. கிளைச் செயலாளரான இவர் கடந்த 20-ந்தேதி கட்சி பொறுப்பாளர் குப்பையன் தலைமையில் மாநாட்டில் பங்கேற் றார்.

    இந்த நிலையில் திடீரென உடல் நலகுறைவு ஏற்பட்டு மாநாட்டு பந்தல் அருகில் சென்னையன் இறந்தார். இதுகுறித்து அவரது மகன் முருகன் கொடுத்த புகாரின் பேரில் பெருங்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • போதுமான அளவில் சமைத்த நிலையிலும் தொண்டர்களுக்கு கிடைக்கவில்லை
    • சாப்பாடு பூசணம் பூத்து வீணாகிய வேதனை

    மதுரையில் நேற்று அதிமுக மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான தொண்டர்கள் மதுரையில் காலையில் இருந்தே குவிந்த வண்ணம் இருந்தனர்.

    அவர்கள் பட்டினியாக கிடந்து விடக்கூடாது என்பதால் மூன்று கூடங்கள் அமைத்து, சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமையல்காரர்களுடன் சாம்பார் சாதம், புளி சாதம் செய்து தொண்டர்களுக்கு வழங்கிட மேலிடம் அறிவுறுத்தியிருந்தது.

    ஆனால், நிர்வாகிகளின் அலட்சியத்தால் அண்டா, அண்டாவாக உணவு வீணாகியுள்ளது. பல தொண்டர்கள் சாப்பிடுவதற்கு சாப்பாடு கிடைக்காமல் ஒருபுறம் அல்லாட, மறுபுறம் இதுபோன்ற நடந்ததுதான் வேதனையிலும் வேதனை என ஒரு தொண்டர் தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.

    மதியம் கடும்பசியால் சாம்பார், புளிசாதங்கள் பறந்தோட, பல தொண்டர்களை சாம்பாரை மட்டும் குடித்த வேதனையும் நடந்துள்ளது. இதற்கிடையே மூன்று கூடங்களில் ஏராளமான உணவுகள் (சுமார் 40 அண்டா) கொட்டப்பட்டுள்ளன.

    இதுகுறித்து அதிமுக தொண்டர் ஒருவர் மனக்குமுறலுடன் தெரிவிக்கையில் ''மேலிடம் நல்ல சாப்பாடு போடச் சொன்ன பிறகும், மாஸ்டர்கள் சரியில்லாமல் போனதால், சாப்பிடு சரியில்லை. சாப்பாட்டில் பூசணம் பூத்துள்ளது, 100 அண்டா சோறு அப்படியே உள்ளது. யார் சாப்பிடுவார்கள். வாயில் வைத்தால் ஒன்றுமே இல்லை'' என்றார்

    தலைமை சரியாக செயல்பட சொன்ன பிறகும், நிர்வாகிகளின் மோசமான செயல்பாடுகளால், உணவுகள் இருந்தும், தொண்டர்கள் சாப்பிட முடியாது நிலை ஏற்பட்டது.

    • அதிமுக மாநாடு நடைபெற்றால் லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் மதுரையில் கூடினர்
    • மாநாடு உடன் போராட்டம் நடத்தப்பட்டால் பாதுகாப்பு வழங்க முடியாத நிலை ஏற்பட்டதால் தள்ளிவைப்பு

    தி.மு.க. நேற்று நடத்திய போராட்டம் மதுரையில் மட்டும் நடைபெறவில்லை. அ.தி.மு.க. மாநாடு நடைபெற்றதாலும், போலீசார் உரிய பாதுகாப்பு வழங்க முடியாத நிலை ஏற்பட்டதாலும், மதுரையில் மட்டும் போராட்டம் நடைபெறவில்லை.

    இதனால் மதுரையில் வருகிற 23-ந்தேதி (புதன்கிழமை) உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் 24-ந்தேதி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை அண்ணாநகர், அம்பிகா தியேட்டர் அருகில் உள்ள ரவுண்டானாவில் அமைச்சர் மூர்த்தி மற்றும் மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் பேராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக,

    'நீட்' தேர்வை ரத்து செய்ய மறுக்கும் மத்திய பா.ஜ.க. அரசையும், தமிழ்நாடு கவர்னரையும் கண்டித்து தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பில் மதுரையை தவிர்த்து தமிழ்நாடு முழுவதும் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற உண்ணாவிரதத்துக்கு தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

    உண்ணாவிரதத்தை தி.மு.க. பொதுச் செயலாளர், அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். முன்னதாக 'நீட்' தேர்வு காரணமாக தமிழ்நாட்டில் உயிரிழந்த மாணவர்களின் உருவப்படங்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    உண்ணாவிரத போராட்டத்தில், அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், எம்.பி.க்கள் தயாநிதிமாறன், டாக்டர் கனிமொழி என்.வி.என்.சோமு, தமிழச்சி தங்கபாண்டியன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, தி.மு.க. மாவட்ட செயலாளர் சிற்றரசு, மாணவர் அணி செயலாளர் எழிலரசன், மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் எழிலன் நாகராஜன், இளைஞர் அணி துணைச் செயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயல், தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, செயல் தலைவர் டாக்டர் விஷ்ணுபிரசாத் எம்.பி., திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், திராவிட விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    தமிழகம் முழுவதும் மாவட்டம் தோறும் இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    • மதனகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • கும்பாபிஷேக ஏற்பாடுகளை கோவில் அதிகாரி சக்கரை அம்மாள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

    மதுரை

    மதுரை மேலமாசிவீதியில் உள்ள பிரசித்தி பெற்ற மதன கோபால சுவாமி கோவிலில் பாமா, ருக்மணி யுடன் 2 கைகளில் புல்லாங் குழல் ஏந்தியபடி கிருஷ்ணர் பக்தர்களுக்கு அருள ்பாலித்து வருகிறார். இங்கு மாதந்தோறும் பல்வேறு திருவிழாக்கள் விமரிசை யாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    கிருஷ்ண ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, மார்கழி பாவை நோன்பு நிகழ்ச்சிக ளில் திரளான பக்தர்கள் பங்கேற்பார்கள். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப் ்பட்டது. அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலாலய பூைஜகள் நடந்தது. தொடர்ந்து கோவில் கோபுரம், சன்னதி பிரகா ரங்கள் சீரமைக்கப்பட்டு வர்ணம் பூசி புதுப்பொலி வுடன் காட்சி அளித்தது.

    இதனை கும்பாபிஷேக பூஜைகள், ஹோமங்கள் கடந்த 2 நாடகளுக்கு முன்பு தொடங்கியது. கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ள யாகசாலையில் அக்னி வளர்க்கப்பட்டு சிறப்பு பூைஜகள் நடந்தது. இன்று கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

    தொடர்ந்து காலை 9 மணிக்கு வைணவ வழி பாட்டு முறைப்படி வைஷ்ணவ வேத ஆகமங்க ளும், திருப்பல்லாண்டு ஓத பட்டாச்சாரியார்கள் கோவில் கோபுர கலசங்க ளில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். அப்போது அங்கு திரண்டிருந்த பெண் கள் உள்பட ஏராளமானோர் கோவிந்தா... கோபாலா... என பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

    இதேபோல் மூலவர் சன்னதி விமானம், ராஜ கோபுரம், ஆண்டாள் தாயார் சன்னதி விமானத்திலும் கும்பாபிஷே கம் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    கும்பாபிஷேக ஏற்பாடு களை கோவில் அதிகாரி சக்கரை அம்மாள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

    • கடை ஊழியரிடம் 101 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
    • திடீர் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பை ஜவஹர் பஜார் தாதன்ஜி தெருவை சேர்ந்தவர் ஜித்தேந்திர குமார் ரமேஷ் ஜெயின் (வயது36). இவர் மும்பையில் உள்ள பிரபல நகைக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.கடையில் தயாரிக்கும் நகைகளை தமிழகத்தில் கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று வியாபாரிகளிடம் ஜித்தேந்திர குமார் விற்பனை செய்து வருவது வழக்கம்.

    அதன்படி கடந்த சில நாட்களாக முன்பு மும்பை யில் இருந்து மதுரைக்கு வந்த அவர் பெரியார் பஸ் நிலைய பகுதியில் உள்ள பிரபல லாட்ஜில் தங்கியிருந்தார். தான் கொண்டு வந்திருந்த மொத்த நகைகளையும் 43 பவுன் நகைகளை எடுத்து கொண்டு மீதம் 101பவுன் நகைகளை லாட்ஜ் அறையில் வைத்து விட்டு சென்றார்.

    நகையை வியாபாரி களிடம் விற்றுவிட்டு லாட்ஜ்க்கு வந்த ஜித்தேந்திர குமாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது அறையில் வைத்திருந்த 101 பவுன் நகை திருடு போயிருந்தது.

    இதுகுறித்து லாட்ஜ் நிர்வாகத்திடம் கேட்டு உரிய பதில் இல்லை. இதையடுத்து ஜித்தேந்திர குமார் திடீர் நகர் போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அறையை பார்வையிட்டு தடயங்களை சேகரித்தனர். மேலும் லாட்ஜ் ஊழியர்கள், தங்கியிருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் லாட்ஜ்க்கு வந்து சென்ற நபர்கள் குறித்தும், நகையை திருடியது யார்? என்பது தொடர்பாகவும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சி.சி.டி.வி. காமிரா பதிவுகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. லாட்ஜில் நகை வியாபாரி யிடம் 101 பவுன் நகை திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • எடப்பாடி பழனிசாமி தி.மு.க.வை சம்ஹாரம் செய்யும் அவதாரம் எடுத்துள்ளார்.
    • மதுரை மாநாட்டில் செல்லூர் ராஜூ பேசினார்.

    மதுரை

    மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. வீர வரலாற்றின் எழுச்சி மாநாடு அ.தி.மு.க. பொது செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல லட்சம் தொண்டர்கள் திரண்டனர். மாநாட்டில் மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:-

    மாபெரும் சபையில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும். ஒரு மாற்றுக் குறையாத மன்னவன் இவன் என்று போற்றி புகழ வேண்டும் என்று நம் புரட்சித் தலைவர் பாடினார் அதுபோல அவர் கழகத் தொண்டர் களை தனது உயிராக நினைத்தார்.

    அவரது புகழும் நிலைத்து வருகிறது. அவரது வழியில் புரட்சித்தலைவி அம்மா ஒன்றரை கோடி தொண்டர் களையும் தனது வாரிசாக நினைத்து செயல்பட்டு கழகத்தையும் ஆட்சியையும் சிறப்பாக நடத்தினார். புரட்சித்தலைவி அம்மா வழியில் பொதுசெயலாளர் எடப்பாடியார் இப்போது தமிழக மக்களின் முதல்வராக, வருங்கால முதல்வராக மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.

    ஏற்கனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூக்கமின்றி தவித்து வருகிறார். மதுரை மாநாட்டை பார்த்த பிறகு இனி அவருக்கு தூக்கமே வராது. முருக பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு இந்த மண்ணாகும் இந்த மண்ணில் இருந்து வெற்றி வாகை சூடிட எடப்பாடி யாருக்கு வைரவேல் கொடுத்துள்ளோம்.

    அந்த வேல் எதற்காக கொடுத்தோம் என்றால் தி.மு.க. ஆட்சியை சம்ஹாரம் பண்ண போகிற ஆறுச் சாமியாக அவதாரம் எடுத்துள்ளார் நமது எடப்பாடி பழனிசாமி. மதுரை மீனாட்சி பட்டி னத்திற்கு பல பெருமை உண்டு. இது ராசியான மண் கடந்த 1973-ம் ஆண்டு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் திருப்பரங்குன் றத்திற்கு வந்தார். அவர் வந்த ரெயில் 10 மணி நேரம் தாமதமானது.

    மகாத்மா காந்தி கூட மதுரை வரும்போது 6 மணி நேரம் தான் தாமதம் ஏற்பட்டது. கடந்த 2010-ம் ஆண்டு மதுரையில் புரட்சித்தலைவி அம்மா நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தி.மு.க.வை சுமார் 10 ஆண்டு காலம் வனவாசம் செல்ல வைத்தது. இன்றைக்கு மதுரையில் எடப்பாடி பழனிசாமி வீர உரை யாற்றியுள்ளார்.

    எனவே இந்த மாநாடு தமிழக அரசியல் வரலாற்றில் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. வருகிற 2024 தேர்தலில் நமது எடப்பாடியார் சுட்டிக்காட்டுகின்ற வேட்பாளர் தான் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறப்போவது உறுதி. அதை ஒவ்வொரு தொண்டனும் லட்சியமாக எடுத்துக்கொள்ள வேண்டும். விரைவில் தமிழகத்தில் எடப்பாடியார் சிறப்பான ஆட்சியை கொடுக்க மக்கள் தயாராகி விட்டனர். அதற்கு மீனாட்சி பட்டணமே சாட்சி.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×