search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீட் தேர்வுக்கு எதிராக மதுரையில் 24-ந்தேதி போராட்டம்: திமுக அறிவிப்பு
    X

    கோப்புப்படம்

    நீட் தேர்வுக்கு எதிராக மதுரையில் 24-ந்தேதி போராட்டம்: திமுக அறிவிப்பு

    • அதிமுக மாநாடு நடைபெற்றால் லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் மதுரையில் கூடினர்
    • மாநாடு உடன் போராட்டம் நடத்தப்பட்டால் பாதுகாப்பு வழங்க முடியாத நிலை ஏற்பட்டதால் தள்ளிவைப்பு

    தி.மு.க. நேற்று நடத்திய போராட்டம் மதுரையில் மட்டும் நடைபெறவில்லை. அ.தி.மு.க. மாநாடு நடைபெற்றதாலும், போலீசார் உரிய பாதுகாப்பு வழங்க முடியாத நிலை ஏற்பட்டதாலும், மதுரையில் மட்டும் போராட்டம் நடைபெறவில்லை.

    இதனால் மதுரையில் வருகிற 23-ந்தேதி (புதன்கிழமை) உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் 24-ந்தேதி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை அண்ணாநகர், அம்பிகா தியேட்டர் அருகில் உள்ள ரவுண்டானாவில் அமைச்சர் மூர்த்தி மற்றும் மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் பேராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக,

    'நீட்' தேர்வை ரத்து செய்ய மறுக்கும் மத்திய பா.ஜ.க. அரசையும், தமிழ்நாடு கவர்னரையும் கண்டித்து தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பில் மதுரையை தவிர்த்து தமிழ்நாடு முழுவதும் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற உண்ணாவிரதத்துக்கு தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

    உண்ணாவிரதத்தை தி.மு.க. பொதுச் செயலாளர், அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். முன்னதாக 'நீட்' தேர்வு காரணமாக தமிழ்நாட்டில் உயிரிழந்த மாணவர்களின் உருவப்படங்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    உண்ணாவிரத போராட்டத்தில், அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், எம்.பி.க்கள் தயாநிதிமாறன், டாக்டர் கனிமொழி என்.வி.என்.சோமு, தமிழச்சி தங்கபாண்டியன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, தி.மு.க. மாவட்ட செயலாளர் சிற்றரசு, மாணவர் அணி செயலாளர் எழிலரசன், மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் எழிலன் நாகராஜன், இளைஞர் அணி துணைச் செயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயல், தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, செயல் தலைவர் டாக்டர் விஷ்ணுபிரசாத் எம்.பி., திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், திராவிட விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    தமிழகம் முழுவதும் மாவட்டம் தோறும் இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    Next Story
    ×