மோட்டார் சைக்கிள்-செல்போன் திருடிய 2 வாலிபர்கள் கைது

வெவ்வேறு சம்பவங்களில் மோட்டார் சைக்கிள்-செல்போன் திருடிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.இவர் வீட்டில் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார்.
மோட்டார் சைக்கிள்-செல்போன் திருடிய 2 வாலிபர்கள் கைது
Published on

மதுரை

மதுரை சர்வேயர் காலனி பாண்டியன் நகர் மெயின் ரோட்டை சேர்ந்த வர் சவுந்தரபாண்டியன் (வயது40). இவர் வீட்டில் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார். மர்ம நபர்கள் அதனை திருடிச்சென்று விட்டனர்.

இதுகுறித்து திருப்பாலை போலீசில் சவுந்தர பாண்டியன் புகார் செய்தார். விசாரணையில் மோட்டார் சைக்கிளை திருடியது உச்சபரம்புமேடு மாமா நகர் முதல் தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் விவேக் ராஜா (27) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

மேலூர் சத்தியமூர்த்தி தெற்கு தெருவை சேர்ந்தவர் தங்கபாண்டி (41). இவர் மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது ஒரு வாலிபர் அவரிடம் இருந்து செல்போனை பறித்துக் கொண்டு ஓட முயன்றார். அங்கிருந்தவர்கள் அவரை கையும், களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் அண்ணாநகர் யாகப்பாநகர் 3-வதுதெரு மாரி மகன் காளீஸ்வரன் (26) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com