வெவ்வேறு விபத்துக்களில் தொழிலாளி உள்பட 2 பேர் பலி

திருமங்கலம் அருகே நடந்த வெவ்வேறு விபத்துக்களில் தொழிலாளி உள்பட 2 பேர் பலியானார்கள்.டி. கல்லுப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெவ்வேறு விபத்துக்களில் தொழிலாளி உள்பட 2 பேர் பலி
Published on

திருமங்கலம்

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள கள்ளிக்குடியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 42). தொழிலாளியான இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

சம்பவத்தன்று சரவணன் கள்ளிக்குடி 4 வழிச்சாலையை கடக்க முயன்றார் அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் அவர் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சரவணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து கார் டிரைவர் ஜீவன் ஆகாஷ் என்பவரிடம் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள முதலிப்பட்டியை சேர்ந்தவர் காளி ரத்தினம். சம்பவத் தன்று இவர் தனது மனைவியுடன் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சாப்டூரில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டனர்.

எம். சுப்புலாபுரம் எரிச்சநத்தம் நேரக்கோவில் பகுதியில் வந்தபோது சாலையின் குறுக்கே நாய் சென்றது. இதனால் நிலைகுலைந்த மோட்டார் சைக்கிள் தடுமாறி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த காளிரத்தினம் பரிதாபமாக இறந்தார். டி. கல்லுப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com