என் மலர்
மதுரை
- கால்நடைகளுக்கு பின்னியம்மாள் தொட்டியில் தண்ணீர் வைத்து விட்டு சென்று விட்டார்.
- சோதனையில் கால்நடைகள் யூரியா கலந்த தண்ணீர் குடித்து இறந்தது தெரிய வந்தது.
உசிலம்பட்டி:
மதுரை மாவட்டம் அருகே உள்ள உசிலம்பட்டி நல்லுதேவன்பட்டியை சேர்ந்த பாண்டி. இவரது மனைவி பின்னியம்மாள். இவர்கள் தங்கள் வீட்டுக்கு அருகே மாட்டு கொட்டகை ஒன்றை அமைத்து அங்கு பசு மாடுகள் மற்றும் ஆடுகளை வளர்த்து வந்தனர்.
இவைகளை தினமும் மேய்ச்சலுக்கு அழைத்து செல்வது வழக்கம். அதன்படி நேற்று மேய்ச்சலுக்கு சென்றுவிட்டு மாடுகள், ஆடுகள் கொட்டகையில் கட்டப்பட்டன.
இதை தொடர்ந்து கால்நடைகளுக்கு பின்னியம்மாள் தொட்டியில் தண்ணீர் வைத்து விட்டு சென்று விட்டார். இதற்கிடையில் நள்ளிரவில் மாடுகள், ஆடுகள் அலறும் சத்தம் கேட்டது. உடனே பின்னியம்மாள் கொட்டகைக்கு சென்று பார்த்தார். அங்கு 3 மாடுகள், 1 ஆடு இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து பின்னியம்மாள் கதறி அழுதார்.
பின்னர் இதுகுறித்து உசிலம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்று காலை சம்பவ இடத்திற்கு வந்த கால்நடை மருத்துவர்கள் இறந்து கிடந்த 3 பசு மாடுகள், ஆடுகளை சோதனை செய்தனர். இந்த சோதனையில் கால்நடைகள் யூரியா கலந்த தண்ணீர் குடித்து இறந்தது தெரிய வந்தது.
முன்விரோதம் காரணமாக மர்ம நபர்கள் தண்ணீரில் விஷம் கலந்தார்களா ? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இதன் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை.
முத்துராமலிங்க தேவரின் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரின் நினைவிடத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி தனது காரில் ஏறி, அங்கிருந்து கிளம்ப முற்பட்டார்.
அப்போது, அங்கிருந்தவர்களில் சிலர், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷமிட்டனர். மேலும் அவரது காரை நோக்கி கற்கள் மற்றும் காலணிகளை வீசினர். இதன் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பிறகு கற்கள் மற்றும் காலணிகளை வீசியர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓ. பன்னீர்செல்வத்திடம் எடப்பாடி பழனிசாமிக்கு அரங்கேறிய தாக்குதல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஓ. பன்னீர்செல்வம், "நான் எனது சமூக வலைதள பதிவுகளின் மூலம் அறிவுறுத்தி இருந்தேன். பசும்பொன் எனும் புண்ணிய பூமிக்கு வருபவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு தொந்தரவையோ, துயரத்தையோ கொடுக்கக்கூடாது என்பது என் வேண்டுகோளாக உள்ளது என குறிப்பிட்டு இருந்தேன். இது போன்ற சம்பவம் நடந்திருக்கக்கூடாது," என்று தெரிவித்தார்.
- உணவு பொருள் வியாபாரிகள் சங்கத்தினர் அமைச்சர் மூர்த்தியிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
- விற்பனை வரி ஆலோசனைக்குழு அமைத்து 3 மாதத்திற்கு ஒருமுறை கூட்டம் நடத்த வேண்டும்.
மதுரை
தமிழ்நாடு உணவு பொருள் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் மதுரையில் இன்று சமா தான் திட்ட விளக்கக் கூட்டம் நடந்தது. அமைச்சர் மூர்த்தி, வணிக வரித்துறை செயலாளர் ஜோதி நிர்மலா சாமி, கலெக்டர் சங்கீதா, வணிக வரித்துறை ஆணை யாளர் ஜெகன் நாதன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதில் உணவு பொருள் வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் வேல் சங்கர், கவுரவ செயலாளர் சாய் சுப்பிரமணியம், ஆலோசகர் ஜெயபிரகாசம், துணை தலைவர் ஜெயகர், செயற்குழு உறுப்பினர் திருமுருகன் ஆகியோர் அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
சமாதான் திட்டத்தில் சேர்வதற்கான கால வரம்பான 31.3.2021 என்பதை மாற்றி 31.10.2023 வரை நிலுவையில் உள்ள ஆணைகளுக்கும் இந்த திட்டத்தில் சேர்க்க வேண்டும். இதன் மூலம் அதிக வணிகர்கள் பயனடை வார்கள். அதிக மேல்முறையீடு வழக்குகள் தீர்வு காணப்படும்.
மதுரை மாவட்டத்தில் கலெக்டர் தலைமையில் மாவட்ட விற்பனை வரி ஆலோசனைக்குழு அமைத்து 3 மாதத்திற்கு ஒருமுறை கூட்டம் நடத்த வேண்டும். அதில் எங்கள் சங்கத்திற்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தில் அப்பளத்திற்கு வரி இல்லை என்ற தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும்.
25 கிலோவிற்கு மேல் பேக் செய்து விற்கப்படும் வெல்லத்திற்கு வரி உண்டா? என்பதை விளக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
- அரசின் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படுகிறது.
- மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத் தின் துணை இயக்குநர் சண்முகசுந்தர் தெரிவித்துள்ளார்.
மதுரை
தமிழக அரசின் வேலை வாய்ப்புத் துறையின் சார்பாக படித்து முடித்து வேலைவாய்ப்பற்ற இளை ஞர்களுக்கான உதவித் தொகை திட்டத்தின் கீழ் பொது பிரிவு பதிவுதாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பதிவுதாரர்களுக்கு உதவித் தொகை மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவசமாக விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி பொதுப்பிரிவு பதிவுரார்கள் கல்வித்தகுதி யினை இவ்வலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு பெற்ற பள்ளியிறுதி வகுப்பில் தேர்ச்சி பெறாத வர்கள் பள்ளியிறுதி வகுப்பு, மேல்நிலைக்கல்வி மற்றும் பட்டதாரி கல்வித் தகுதியை உடைய பதிவு தாரர்களுக்கு தற்போது உதவித்தொகை பெறுவ தற்கான விண்ணப்பங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.72 ஆயிரத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும். பட்டியல் இனத்தவருக்கு 45 வயது, இதர வகுப்பினர் 40 வயது இருக்க வேண்டும். உதவித்தொகை பெறுபவர் தமிழ்நாட்டி லேயே பள்ளி, கல்லூரிக் கல்வியை முடித்தவராக இருத்தல் வேண்டும்.
உதவித்தொகை பெறுபவர் ஊதியம் பெறும் எந்த பணியிலோ அல்லது சுய வேலைவாய்ப்பிலோ இருக்க கூடாது. அரசு மற்றும் பிற முகமைகளின் வாயிலாக எந்த நிதி உதவியையும் பெறுபவராக இருத்தல் கூடாது. அன்றாடம் பள்ளிக்கு, கல்லூரிக்கு சென்று பயில் பவராகவோ இருக்க கூடாது.
மேலும் அனைத் துவகை மாற்றுத்திறனாளி மனுதாரர்களுக்கென சிறப்பான உதவித்தொகை வழங்கும் திட்டமும் நடை முறையில் உள்ளது. மாற்றுத் திறனாளி பதிவுதாரர் இவ்வலுவலகத்தில் பதிவு செய்து குறைந்த பட்சம் ஓராண்டு முடிவுற்ற எழுதப்படிக்கத் தெரிந்த வர்கள் முதல் பட்டதாரிகள் வரை அனைவருக்கும் வருமானம் மற்றும் வயது வரம்பின்றி தற்போது உதவித்தொகை பெறு வதற்கான விண்ணப்பங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பயன்தாரர்கள் நவ.30-ந் தேதி வரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அளித்து பயன்பெறலாம். மேலும், ஏற்கெனவே வேலை வாய்ப்பற்ற இளைஞர் உதவித்தொகை பெற்றுவரும் பயனாளிகள் உதவித்தொகை பெற்று ஓராண்டு முடிவுற்றிருப்பின் தொடர்ந்து உதவித்தொகை பெறுவதற்கு வேலை வாய்ப்பு அடையாள அட்டை, மாற்றுச்சான்றிதழ், சுய உறுதிமொழி ஆவணம் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் உடன் மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத் தினை தொடர்பு கொள்ளு மாறு கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள்.
மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத் தின் துணை இயக்குநர் சண்முகசுந்தர் தெரிவித்துள் ளார்.
- கரும்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- சர்க்கரை ஆலையை திறக்க வலியுறுத்தினர்.
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், கேட்டுக் கடையில் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை அரவை விரைவில் தொடங்கிட வலியுறுத்தியும், ஆலையை இயக்க தேதியை அறிவிப்பு செய்ய வலியுறுத்தியும் தமிழ்நாடு கரும்பு விவசாயி கள் சங்கம் சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது.
கரும்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் வக்கீல் பழனிச்சாமி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் கதிரே சன், மாவட்ட தலைவர் இளங்கோவன், மாவட்ட பொருளாளர் அடக்கி வீரனன், சி.பி.எம். ஒன்றிய செயலாளர் ஆண்டிச்சாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் வேல்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை செயலாளர் ஸ்டாலின் குமார் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதில் ஆலை தொடர்ந்து இயங்க ஆய்வு குழு அறிவித்த ரூ.26 கோடியை தமிழக அரசு உடனடியாக வழங்க கோரியும், அரவை செய்தவுடன் கரும்பு விவசாயிகளுக்கு உடனடி யாக பணம் பட்டுவாடா செய்ய வலியுறுத்தியும், விவசாயிகள் அதிகளவில் கரும்பு பயிரிட்ட போதும் பீல்டு மேன், கேன் ஆபிசர்களுக்கு சம்பளம் போடாத காரணத்தால் கரும்பு பதிவு செய்யாமல் ஆலையை முடக்கியதை கண்டித்தும், தமிழக அரசையும், மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து, கண்டன கோஷங்களை எழுப்பி கரும்பு விவசாயிகள் கைகளில் கரும்புகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முடிவில் ஆலை துணைத் தலைவர் ராமராஜ் நன்றி கூறினார்.
- தேவர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்தப்பட்டது.
- தொடர்ந்து பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அலங்காநல்லூர்
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பஸ் நிலையத்தில் உள்ள அவரது சிலைக்கு தி.மு.க. சார்பில் சோழ வந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் ஒன்றிய செயலா ளர்கள் தன்ராஜ் பரந்தாமன், பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், பேரூராட்சி சேர்மன் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், துணை சேர்மன் சுவாமிநாதன், ஒன்றிய துணை சேர்மன் சங்கீதா மணிமாறன், ஒன் றிய பொருளாளர் சுந்தர், விளையாட்டு மேம்பாட்டு அணி பிரதாப், தகவல் தொழில்நுட்ப அணி தவசதீஷ், ஒன்றிய இளை ஞரணி சந்தனகருப்பு, மாணவரணி யோகேஷ், பொறியாளர் அணி ராகுல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நாம் தமிழர் கட்சி சார்பில் சோழவந்தான் தொகுதி செயலாளர் சக்கரபாணி தலைமையில் தொகுதி தலைவர் சங்கிலி முருகன், ஒன்றிய செய லாளர் கண்ணதாசன், ஒன்றிய தலைவர் திருப்பதி, கல்லணை மூக்கையா, பொருளாளர் சதீஷ் ஆகியோர் முன்னிலையில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
காங்கிரஸ் சார்பில் வட்டார தலைவர் சுப்பா ராயலு தலைமையில் செயற் குழு உறுப்பினர் ஜெயமணி, முன்னாள் வட்டார தலை வர் மலைக்கனி ஆகி யோர் முன்னிலையில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பாரதிய ஜனதா கட்சி சார்ப்பில் மண்டல் தலை வர்கள் சுபாஷ், தங்கதுரை தலைமையில் மாவட்ட பொது செயலாளர் கோவிந்த மூர்த்தி, முன்னி லையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தொடர்ந்து பொது மக்க ளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
- தேவர் ஜெயந்தி குருபூஜை விழா நடந்தது.
- முடிவில் ஒன்றிய விவசாய அணி செயலாளர் வையாபுரி நன்றி கூறினார்.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி போடிநாயக்கன்பட்டியில் பிரமலைக்கள்ளர்நலசங்கம் சார்பில் தேவர் ஜெயந்தி விழா- குருபூஜை விழா நடந்தது.
சங்கதலைவர் தங்க மலைச்சாமி தலைமை தாங்கினார். தி.மு.க. ஒன்றிய செயலாளர் பால ராஜேந் திரன், பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி முத்துராமன், அ.தி.மு.க.பேரூர் செயலாளர் அசோக்குமார், மாநகராட்சி அதிகாரி பாஸ்கர பாண்டியன், கவுன்சிலர் ஜெயகாந்தன், சங்க துணைத் தலைவர் சந்திரமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தார்.
செயலாளர் பாஸ்கரன் வரவேற்றார். ராமன் கொடியேற்றினார். உருவபடத்திற்கு ஆசிரியர் ஜெயராஜ் மாலை அணி வித்தார். அரண்மனையார் ஞானசேகர பாண்டியன் குருபூஜையை செய்தார். அய்யாவு இருளாண்டி ஆகியோர் அன்னதானம் வழங்கினார். பேரூர் செயலாளர் பால்பாண்டி யன், அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
இதில் விவசாய சங்க தலைவர் கஜேந்திரன் நிர்வாகிகள் செல்வம், உதயாபாலு, பால்பாண்டி, முருகன், வை.பாண்டி, ரூபன்சக்ரவர்த்தி, போஸ், விஜி, விக்னேஷ், கவாஸ்கர், ராமமூர்த்தி, சிரஞ்சிவி, ரமேஷ், பிரபாகரன், உள்பட பலர் கலந்து கொண்டனர். பொருளாளர் செல்வபாண்டியன் நன்றி கூறினார். மதுரை வடக்குமாவட்ட மூவேந்தர் முன்னேற்ற கழகம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் செந்தில் பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கணேசன், ஒன்றிய தலைவர் கருப்பையா ஆகி யோர் முன்னிலை வகித்த னர். ஒன்றிய துணை செயலாளர் கருப்புமணி வண்ணன் வரவேற்றார்.
மாநில பொருளாளர் தேவர் படத்திற்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினார். இதில் கம்பன் இலக்கியமன்ற தலைவர் புலவர் அழகர் சாமி, அ.தி.மு.க.பேரவை பேரூர் செயலாளர் தன சேகரன், தே.மு.தி.க. பேரூர் செயலாளர் பாலாஜி, கிளை செயலாளர் அன்பு, சின்னு கருப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய விவசாய அணி செயலாளர் வையாபுரி நன்றி கூறினார்.
- பிராகன் கிங் சிட்டோரியா கராத்தே பயிற்சி மையத்தின் மூலம் பெல்ட் வழங்கும் விழா நடந்தது.
- நூற்றுக்கும் மேற்பட்ட கராத்தே பயிற்சி மாணவ- மாணவிகள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
சோழவந்தான்
சோழவந்தான் சந்திரன் பேலஸ் மஹாலில் பிராகன் கிங் சிட்டோரியா கராத்தே பயிற்சி மையத்தின் மூலம் பெல்ட் வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவிற்கு கவுன்சிலர் ரேகா ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். யோகா மைய ஆசிரியர்கள் சுதா, செல்வி, சிவபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாஸ்டர் சசிகுமார் வர வேற்றார். மாஸ்டர்கள் சின்னத்துரை, அர்ஜுன் ஆகியோர் கராத்தே பயிற்சி அளித்தனர். நிலக்கோட்டை மகளிர் மருத்துவர் ஆர்த்தி ஹரிஷ் மாணவ- மாணவி களுக்கு பயிற்சி பெல்ட் வழங்கினார். இவ்விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட கராத்தே பயிற்சி மாணவ- மாணவிகள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- சாலையில் திரியும் கால்நடையால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர்.
- மாநகராட்சி அதிகாரிகள் மெத்தனம் காட்டாமல் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை
மதுரை அரசரடி சந்திப் பில் இருந்து ஆரப்பாளையம் பேருந்து நிலையத்துக்கு செல்லும் ஏ.ஏ.சாலையில் கால்நடைகள் குறுக்கே திரிவ தால் பொது மக்கள் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து ஆரப்பாளையம் செல்வ தற்கு மையப்புள்ளியாக இருப்பது அரசரடி சந்திப்பு.
இச்சாலையில் மின் வாரிய அலுவலகம், திரைய ரங்கம், தனியார் மருத்துவ மனை, தனியார் வங்கிகள், சர்ச், மெடிக்கல் ஷாப், ஹோட்டல், பெடரோல் பங்க், வணிக வளாகங்கள், ஐ.டி.ஐ, பிரிட்டோ பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங் கள் இருப்பதால் மற்ற சாலைகளை விட இந்த சாலையில் போக்குவரத்து அதிகம் காண்பபடுகிறது.
ஆரப்பாளையத்தில் இருந்து பெரியார், திருமங் கலம், விரகனூர் சுற்றுச் சாலை உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அரசு பேருந்துகள் இந்த சாலை வழியாக செல்கிறது. இதனால் இந்த சாலை எப்போதும் வாகனங் களால் பரபரப்பாக காணப் படும்.
இந்த நிலையில் ஞான ஒளிவுபுரம் சாலைகளில் கேட்பாரற்று திரியும் கால் நடைகளால் பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல் பவர்கள், இருசக்கர வாக னங்களில் போவோர் அவதி யடைந்து வருகின்றனர். சாலையின் குறுக்கே கால் நடைகள் நடப்பதால் சாலை யின் இடது புறம் செலவதா அல்லது வலது புறம் கால் நடைகளை முந்தி செல் வதா? என செய்வதறியாது வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர்.
இதே போன்று மதுரை நகரில் 4 மாசி வீதிகள், காம ராஜர் சாலை, வெளிவீதிகள், ரெயில்நிலையம், தெற்கு கிருஷ்ணன் கோவில் தெரு, அரசரடி, வெள்ளைபிள்ளை யார் கோவில் தெரு, மகபூப் பாளையம், ஆனையூர், கூடல்நகர், கூடல்புதூர், பி.பி. குளம், ஆலங்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் மாடுகள் ரோட்டில் விடப்படுகிறது. அவைகள் சாலையில் அமர்வதால் போக்கு வரத்து பாதிப்பும் ஏற்படுகிறது. சில சமயம் மாடுகளால் பொது மக்கள் பல இன்னல் களை சந்திக் கின்றனர். மேலும் சாணம் உள்ளிட்ட கழிவுகளால் சுகா தார சீர்கேடும் ஏற்டுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னை யில் பள்ளி சென்ற குழந்தை மீது கால் நடைகள் தாக்கியதில் காய மடைந்த மாணவி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற சம்பவம் நடந்தது. அதே போன்று சம்பவம் நடக்கும் முன்னரே மாநக ராட்சி நிர்வாகம் விழித்துக் கொண்டால் பெரும் விபத் தினை தவிர்க்கலாம். எனவே இனியும் மாநக ராட்சி அதிகாரிகள் மெத்த னம் காட்டாமல் ரோட்டில் சுற்றித்திரியும் கால்நடை களை பிடிக்கவும் அவற்றின் உரிமையாளர் களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக் கை விடுத்துள்ளனர்.
- உரிய கல்வி தகுதி, அனுபவம் இருந்தும் 35 ஆண்டுகளாக பதவி உயர்வு இல்லாமல் நகராட்சி தெருவிளக்கு ஊழியர்கள் பரிதவிக்கின்றனர்.
- முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க ஊழியர்கள் வலியுறுத்துகின்றனர்.
மதுரை
தமிழ்நாட்டில் உள்ள நகராட்சி தெரு விளக்குகளை கடந்த 1989ம் ஆண்டு வரை மின்வாரியம் மூலம் பராமரிப்பு செய்து வந்தது. மின்வாரியத்தில் பணி சுமை அதிகமாக இருப்பதால் நகராட்சி பகுதிகளில் உள்ள அதிக அளவு தெருவிளக்குகள் பராமரிப்பு இல்லாமல் இருள் சூழ்ந்த நிலை இருந்து வந்தது.
இதனால் நகராட்சி மக்கள் பிரதிநிதிகள் அப்போதைய முதல்வர் கருணாநிதியிடம் நகராட்சியே தெருவிளக்குகளை பராமரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர் அதன் அடிப்படையில் நகராட்சி ஊழியர்களை நியமித்து தெருவிளக்குகளை பராமரிக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் கருணாநிதி சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி அதன் அடிப்படையில் நகராட்சிகளில் தெருவிளக்கு பராமரிப்பு செய்ய ஊழியர்கள் நியமித்துக் கொள்ள அனுமதி வழங்கினார்.
நகராட்சிகளில் 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 2 வருட தொழிற்கல்வி பெற்றவர்களை மின்கம்பியாளர்களாகவும். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களை மின்கம்பி உதவியாளர்களாகவும் நகராட்சி நிர்வாக இயக்குனர் உத்தரவுப்படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகராட்சிகளிலும் வேலைவாய்ப்புதுறை மூலம் பணி நியமனம் செய்யப் பட்டனர். ஆனால் பணி விதிகள் ஏதும் உருவாக்கப்படவில்லை. பின்பு நகராட்சி தெருவிளக்கு பராமரிப்பு பணி ஊழியர்கள் பணி விதிகள் மற்றும்பதவி உயர்வு வழங்க பல்வேறு கட்டபோராட்டங்கள் அரசு ஊழியர் சங்கத்துடள் இணைந்து நடத்தினர்.
அதன் விளைவாக கடந்த 2008-ம் ஆண்டு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்குதுறை அரசு ஆணை 113-ல் மின்கம்பியாளர்க ளுக்கு மின்பணியாளர் நிலை மின்கம்பியாளர்களாக வும் 1-ம், மின்கம்பி உதவியாளர்களுக்கு பயிற்சி அளித்து உத்தரவிடப்பட்டது. இந்த விவகாரத்தில் குறிப்பிட்ட பிரச்சினையில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு தடை ஆணை வழங்கப்பட்டு, பின்னர் நீக்கப்பட்டது.
அதன்பிறகும் மின்கம்பியாளர்களுக்கும், மின் பணியாளர் நிலை 2ல் உள்ளவர்களுக்கும் முறை முன்னுரிமை பட்டியல் வெளியிட்டும் பதவி உயர்வு வழங்கவில்லை. இந்நிலையில் சமீபத்தில் வெளியிடப்பட்ட அரசு ஆணை 10ல் மின்கம்பி யாளர் பணியிடம் இல்லாமல் செய்து விட்டனர்.
தற்போது மின்பணியாளர் நிலை 2ல் உள்ளவர்களுக்கு மட்டும் முன்னுரிமை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் மின்கம்பி யாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 1989-ம் ஆண்டு பணியில் சேர்ந்த 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இளநிலை உதவியாளர்கள் இன்று ஆணையாளர் வரை பதவி உயர்வு பெற்றுள்ளனர். ஆனால் 1989-ம் ஆண்டு பணியில் சேர்ந்த மின்கம்பியாளர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 2 வருட தொழில் பயிற்சி முடித்தும் இதுவரை பதவி வழங்கப்படவில்லை.
இதனால் நகராட்சி தெரு விளக்கு பராமரிப்பு ஊழியர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. எனவே தமிழக முதல்வர் நகராட்சி தெரு விளக்கு பராமரிப்பு ஊழியர்கள் மீது கருணை கொண்டும் 35வருட பணியை கருத்தில் கொண்டும் விரைவில் ஒய்வு பெறும் நாட்களை நெருங்கி விட்ட ஊழியர்களுக்கு தற்போது நகராட்சியில் அதிக எண்ணிக்கையில் காலியாக உள்ள பணி மேற்பார்வையாளர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என நகராட்சி மாநகராட்சி பொறியியல் பிரிவு ஊழியர்கள் சங்க தலைவர் ஐவன் மற்றும் பொதுச் செயலாளர் திருமூர்த்தி ஆகியோர் கோரிக்கை வைத்துள்ளனர்.
- அய்யா அவர்களை இல்லத்திற்கு நேரில் சென்று நலம் விசாரித்தேன்.
- ஒரே பிளாக்கில் இருந்த நாங்கள் பல்வேறு உரையாடல்களில் ஈடுபட்டதை நினைவு கூர்ந்து பகிர்ந்துகொண்டோம்.
மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் முழு உருவ சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் இல்லத்திற்கு நேரில் சென்று, அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார். அவருடன் அமைச்சர்கள் மற்றும் பழ. நெடுமாறனின் குடும்பத்தினர் இருந்தனர்.
அதன் பிறகு தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
மதுரைக்குச் சென்றிருந்தபோது, உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் அய்யா பழ.நெடுமாறன் அவர்கள் உடல்நலிவுற்றிருக்கும் செய்தியறிந்து, அவரது இல்லத்திற்கு நேரில் சென்று நலம் விசாரித்தேன்.
POTA-வில் கைது செய்யப்பட்டு அவர் கடலூர் சிறைச்சாலையில் இருந்தபோது, நான் வேறொரு போராட்ட வழக்கில் அதே சிறைச்சாலையில் அடைக்கப்பட்டேன். அப்போது ஒரே பிளாக்கில் இருந்த நாங்கள் பல்வேறு உரையாடல்களில் ஈடுபட்டதை நினைவுகூர்ந்து பகிர்ந்துகொண்டோம்.
அய்யா பழ.நெடுமாறன் அவர்கள் விரைந்து நலம் பெற விழைகிறேன்.
- பல்வேறு அரசியல் கட்சி சார்பிலும் தேவர் சிலை மற்றும் மருது பாண்டியர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
- பா.ஜ.க. சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மதுரை:
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா இன்று கொண்டாடப்பட்டது. இதற்காக மதுரை கோரிப்பாளையம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவர் நினைவிடங்களில் உள்ள தேவர் சிலையில் முக்கிய அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தேவர் ஜெயந்தி விழா மற்றும் மருதுபாண்டியர் குருபூஜை விழாக்களில் பங்கேற்க அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை விமானத்தில் சென்னையிலிருந்து மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவரை முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் வரவேற்றனர்.
தொண்டர்களின் வரவேற்பு பெற்ற எடப்பாடி பழனிசாமி தெப்பக்குளத்தில் உள்ள மருது சகோதரர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், நத்தம் விஸ்வநாதன், காமராஜ், ராஜேந்திர பாலாஜி, விஜயபாஸ்கர், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து காரில் புறப்பட்ட எடப்பாடி பழனிசாமி கமுதி அருகே பசும்பொன் கிராமத்திற்கு சென்று பசும்பொன் முத்து ராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அ.தி.மு.க. தொண்டர்கள் திரண்டு நின்று எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.
ம.தி.மு.க. சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, மதுரையில் உள்ள மருது சகோதரர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பூமிநாதன் எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர் முனியசாமி, கீரைத்துறை பாண்டியன், அன்ன முகமது உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் கோரிப்பாளையம் தேவர் சிலை மற்றும் தெப்பக்குளம் மருதுபாண்டியர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்பதற்காக மதுரை வந்த சசிகலா இன்று காலை கோரிப்பாளையம் தேவர் சிலை மற்றும் தெப்பக்குளம் மருதுபாண்டியர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அவரது ஆதரவாளர்கள் அவரை வாழ்த்தி கோஷம் எழுப்பினார்கள்.

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கோரிப்பாளையம் தேவர் சிலை, தெப்பக்குளம் மருது பாண்டியர் சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பல்வேறு அரசியல் கட்சி சார்பிலும் தேவர் சிலை மற்றும் மருது பாண்டியர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பா.ஜ.க. சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






