கராத்தே பயிற்சி

பிராகன் கிங் சிட்டோரியா கராத்தே பயிற்சி மையத்தின் மூலம் பெல்ட் வழங்கும் விழா நடந்தது.நூற்றுக்கும் மேற்பட்ட கராத்தே பயிற்சி மாணவ- மாணவிகள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கராத்தே பயிற்சி
Published on

சோழவந்தான்

சோழவந்தான் சந்திரன் பேலஸ் மஹாலில் பிராகன் கிங் சிட்டோரியா கராத்தே பயிற்சி மையத்தின் மூலம் பெல்ட் வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவிற்கு கவுன்சிலர் ரேகா ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். யோகா மைய ஆசிரியர்கள் சுதா, செல்வி, சிவபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாஸ்டர் சசிகுமார் வர வேற்றார். மாஸ்டர்கள் சின்னத்துரை, அர்ஜுன் ஆகியோர் கராத்தே பயிற்சி அளித்தனர். நிலக்கோட்டை மகளிர் மருத்துவர் ஆர்த்தி ஹரிஷ் மாணவ- மாணவி களுக்கு பயிற்சி பெல்ட் வழங்கினார். இவ்விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட கராத்தே பயிற்சி மாணவ- மாணவிகள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com