என் மலர்
மதுரை
- திருமங்கலம் அருகே பள்ளத்தில் தவறி விழுந்த சாலை பணியாளர் பரிதாப இறந்தார்.
- பொக்லைன் வாகனம் ஏறியதில் உடல் நசுங்கியது.
திருமங்கலம்
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருணாச்சலபுரத்தை சேர்ந்தவர் பால்பாண்டி (வயது53). சாலை பணியாளரான இவர் வெவ்வெறு ஊர்களுக்கு சென்று வேலை பார்த்து வந்தார். மதுரை மாவட்டம் திருமங்க லம்-ராஜபாளையம் நான்கு வழிச்சாலை பணிகள் நடந்து வருகிறது. இதில் பால்பாண்டி வேலை பார்த்து வந்தார்.
திருமங்கலம் அருகே ராஜபாளையம் பிரிவுப் பகுதியில் நேற்று இரவு வேலை மும்முரமாக நடந்து கொண்டிருந்தது.
அங்கு பணியில் இருந்த பால்பாண்டி அங்குள்ள பள்ளத்தில் தவறி விழுந்தார்.
இதனை யாரும் கவனிக்கவில்லை. அப்போது அங்கு வந்த பொக்லைன் எந்திரம் பள்ளத்தில் ஏறி இறங்கியது. இதில் பால்பாண்டி உடல் நசுங்கி சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அன்னை பாத்திமா கல்லூரியில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
- கல்லூரி முதல்வர் டாக்டர் அப்துல் காதிர் விழிப்புணர்வு கூட்டத்தை தொடங்கி வைத்தார்.
திருமங்கலம்
ஆண்டுதோறும் அக்டோ பர் 30-ந்தேதி முதல் நவம் பர் 5-ந்தேதி வரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வார மாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி மதுரை மாவட்டம் திருமங்க லம் ஆலம்பட்டியில் அமைந் துள்ள அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு விழிப்புணர்வு கூட்டம் கல் லூரி தாளாளர் எம்.எஸ். ஷா மற்றும் பொருளாளர் சகிலா ஷா ஆகியோரின் வழிகாட்டுதல்படி நடை–பெற்றது.
கல்லூரி முதல்வர் டாக்டர் அப்துல் காதிர் விழிப்புணர்வு கூட்டத்தை துவக்கி வைத்து பேசுகையில், நாட்டின் பொருளாதாரம், அரசியல், சமூக முன்னேற் றத்திற்கு ஊழல் முக்கிய தடையாக உள்ளதாகவும், எதிர்காலத்தில் அரசு ஊழியர்களாக மாறும் வாய்ப் புள்ள மாணவ, மாணவிகள் லஞ்சம் வாங்கவும் மாட் டேன், கொடுக்கவும் மாட்டேன் என்ற உறுதி மொழி ஏற்று நாட்டின் வளர்ச்சிக்கு துணை புரிய வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையின் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஆம்புரோஸ், ஜெயராஜ் மற்றும் சூர்யகலா ஆகியோர் கலந்துகொண்டு லஞ்சம் பெறுவதால் அர சின் திட்டங்கள் எவ்வா றெல்லாம் பாதிக்கப்படுகிறது என்பதையும், குறிப் பிட்ட சில லஞ்ச வழக்கு விபரங்களை எடுத்துரைத்து மாணவ-மாணவிகளிடையே விழிப்புணர்வு உரையாற்றினர்.
முன்னதாக வணிக மேலாண்மை துறை உதவிப் பேராசிரியர் திருப்பதி வரவேற்றார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தடய அறிவி யல் துறை தலைவர் சீனிவா சன் தலைமையில் மாணவ-மாணவிகள் அஸ்வின், கார்த்திகேயன், ஜெனிடா, ஷோபனா, ராபியா, தாருன் னிஸா, ஸ்ரீ ஜெயலட்சுமி ஆகியோரும் அரங்க ஏற்பா டுகளை மனித வள மேலாளர் முகமதுபாசிலும் செய்திருந்தனர்.
- திருமங்கலம் அருகே டாஸ்மாக் கடை, ஓட்டலில் புகுந்து துணிகர கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.
- கூடக்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கூடக்கோவில் பகுதியில் பெட்ரோல் நிலையம் அருகே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இதன் அருகே கருப்பையா என்பவருக்கு சொந்தமான ஓட்டல் உள்ளது. நேற்று இரவு டாஸ்மாக் ஊழியர் மாயாண்டி வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு சென்று விட்டார். சிறிது நேரத்தில் ஓட்டலும் மூடப்பட்டது.
இந்த நிலையில் நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் டாஸ்மாக் ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கிருந்த விலை யுயர்ந்த மதுபாட்டில்கள் மற்றும் வசூல் பணத்தை திருடி சென்றதாக தெரி கிறது. அங்கு கைவரிசை காட்டிய பின்பு அருகில் இருந்த ஓட்டல் கதவை உடைத்து உள்ளே சென்றது.
அங்கு நிதானமாக குளிர்சாதன பெட்டியில் இருந்த பானங்களை குடித்த மர்மநபர்கள் பின்னர் கல்லாபெட்டியில் இருந்த ரூ.7 ஆயிரம் ரொக்கத்தை திருடி சென்றனர். இன்று காலை டாஸ்மாக் கடை-ஓட்டல் கதவு உடைக்கப் பட்டிருப்பதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி யடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த கூடக்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் கொள்ளையர்களின் தடயங்களும் சேகரிக்கப்பட்டது. அடுத்தடுத்து நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கவர்னரை கண்டித்து முதலில் கருப்பு பலூன்களை பறக்கவிட்டனர்.
- மத்திய மோடி அரசு தமிழ்நாடு கவர்னரை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.
மதுரை:
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இன்று 55-வது பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதில் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்குவதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவரை கலெக்டர் சங்கீதா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
இதையடுத்து கவர்னர் ஆர்.என்.ரவி அங்கிருந்து காரில் புறப்பட்டு பல்கலைக்கழகம் நோக்கி சென்றார். முன்னதாக இந்த பட்டமளிப்பு விழாவில் முதுபெரும் சுதந்திரப் போராட்ட வீரரும், நூற்றாண்டை கடந்தவருமான சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கவேண்டும் என்று கடந்த ஆகஸ்டு 18 மற்றும் செப்டம்பர் 20-ந்தேதிகளில் நடந்த பல்கலைக்கழக சிண்டிகேட், செனட் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பப்பட்டது.
அதனை கவர்னர் நிராகரித்தார். இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. கவர்னருக்கு எதிராக நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதேபோல் இன்று மதுரை வரும் அவருக்கு கருப்புக் கொடி காட்ட இருப்பதாகவும் அறிவித்து இருந்தனர்.
முன்னதாக சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க கவர்னர் மறுத்ததால் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சரும், பல்கலைக்கழக இணை வேந்தருமான பொன்முடி அறிவித்துள்ளார். இதனால் மதுரையில் இன்று பரபரப்பான சூழல் நிலவியது. இதையடுத்து கவர்னர் பயணம் செய்யும் பாதையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
விமான நிலையத்தில் இருந்து பல்கலைக்கழகம் செல்லும் வழியில் நாகமலை புதுக்கோட்டையை அடுத்த நான்கு வழிச்சாலையான கீழக்குயில்குடி பகுதியில் திரண்டு நின்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கவர்னரை கண்டித்து முதலில் கருப்பு பலூன்களை பறக்கவிட்டனர். பின்னர் தாங்கள் எடுத்து வந்திருந்த கருப்புக்கொடிகளை உயர்த்திப்பிடித்து எதிர்ப்பை தெரிவித்தனர். அதனை கவர்னரின் வாகனத்திற்கு முன்னால் சென்ற போலீசார் தடுத்தனர். இதில் போலீசாருக்கும், கம்யூனிஸ்டு கட்சியினருக்கும் இடையே மோதல் மற்றும் தள்ளுமுள்ளு உருவானது.
அப்போது இந்திய விடுதலைப் போராட்ட வீரர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த நிர்வாகி சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க தமிழக அரசின் பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்கவேண்டும், தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களில் கையெழுத்திட வேண்டும், மாநிலத்தின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் பேசுவதை கைவிட வேண்டும், மத்திய மோடி அரசு தமிழ்நாடு கவர்னரை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 130 பேரை கைது செய்த போலீசார் அவர்களை 3 பேருந்துகளில் ஏற்றி அழைத்து சென்று அதே பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர். அதன்பின்னர் கவர்னர் அந்த பகுதியை கடந்து பல்கலைக்கழகத்திற்கு சென்று பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார்.
- எலும்புக் கூடுகள் கிடந்த இடத்தில் வேறு ஏதாவது தடயங்கள் உள்ளனவா என்றும் போலீசார் அந்த பகுதி முழுவதும் சல்லடை போட்டு தேடி வருகின்றனர்.
- அலங்காநல்லூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் யாராவது வெளியில் சென்று மாயமாகி இருக்கிறார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அலங்காநல்லூர்:
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே மிகப்பெரிய ஆதனூர் கண்மாய் அமைந்துள்ளது. போதிய மழையின்மை காரணமாக குறைந்த அளவே தற்போது தண்ணீர் இருக்கிறது. இந்த நிலையில் கண்மாய் பகுதிக்கு சென்றவர்கள் அங்கு எரிந்த நிலையில் எலும்புக் கூடுகள் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக இதுபற்றி அவர்கள் அலங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் அந்த இடத்தை ஆய்வு செய்தனர். அப்போது சுமார் 2 அடி நீளத்திற்கு எலும்பு துண்டுகள் ஆங்காங்கே கிடந்தன. ஆனால் அது மனித எலும்புக்கூடா? அல்லது விலங்குகளின் எலும்புக் கூடா? என்று தெரியவில்லை.
அதனை கைப்பற்றிய போலீசார் தடயவியல் சோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். எலும்புக் கூடுகள் கிடந்த இடத்தில் வேறு ஏதாவது தடயங்கள் உள்ளனவா என்றும் போலீசார் அந்த பகுதி முழுவதும் சல்லடை போட்டு தேடி வருகின்றனர்.
அதேநேரத்தில் அலங்காநல்லூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் யாராவது வெளியில் சென்று மாயமாகி இருக்கிறார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் அண்டை மாவட்டங்களை சேர்ந்தவர்களை கடத்தி கொண்டு வந்து இங்கு வைத்து எரித்து கொலை செய்தார்களா, மாந்திரீக வேலைக்காக இது போன்ற சம்பவம் நடந்ததா? என்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கண்மாய்க்குள் எரிந்த நிலையில் எலும்புக்கூடுகள் கிடந்தது அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
- மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
- கூட்டத்திற்கு பகுதி செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமை தாங்கினார்.
மதுரை
மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடை பெற்றது.கூட்டத்திற்கு பகுதி செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் நிலை யூர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் மரக்கடை முரு கேசன் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதா வது:-
அ.தி.மு.க. பொதுச் செய லாளர் எடப்பாடி பழனிச் சாமி வழிகாட்டுதல்படி நாம் பூத் கமிட்டி அமைத்தால் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் நமது கட்சி மாபெரும் வெற்றியை நோக்கி செல்லும். கடந்த சட்டமன்ற தேர்தலில் பூத் கமிட்டியில் அதிகமான பெண்கள் பணியாற்றியதால் 30,000 வாக்கு வித்தியாசத் தில் நான் வெற்றி பெற்றேன்.
தேவர் ஜெயந்தி விழா விற்கு எடப்பாடியார் வர முடியுமா என்று கேட்டார் கள். ஆனால் அங்கு வந்தார். குறிப்பாக அ.தி.மு.க. என்பது எதிர்ப்பு அரசியலை கொண்டுதான் வளர்ந்தது. புரட்சித்தலைவர், புரட் சித்தலைவி அம்மா ஆகி யோரை தொடர்ந்து எடப் பாடியாரும் வெற்றி பெற் றார்.
இன்றைக்கு தலைமை கழகம் சின்னம் ஆகியவற்றை இழந்த ஓ.பி.எஸ். தூண்டுத லால் சிலர் கோஷம் போட்ட னர். அதையெல்லாம் எடப் பாடியார் முறியடித்து உள் ளார். தேவர் ஜெயந்தி விழா வில் குருபூஜையில் ஸ்டா லின் விபூதியை கூட வாங்கா மல் மரியாதை கொடுக்க வில்லை. ஆனால் எடப்பாடி யார் தேவர் காலில் விழுந்து வணங்கி உரிய மரியாதை அளித்தார்.
இவ்வாறு அவர் பேசி னார்.
கூட்டத்தில் அமைப்புச் செயலாளர் காந்தி, பகுதி செயலாளர் பன்னீர்செல்வம், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் மோகன்தாஸ், துணை செயலாளர் செல்வகுமார், பொருளாளர் பாண்டுரங்கன், இளைஞர் அணி வேல்ராஜ், வட்டச் செயலாளர் பொன்முருகன், பாலா, எம்.ஆர்.குமார் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- எடப்பாடி பழனிசாமிக்கு இருந்த வரவேற்பை திட்டமிட்டு மறைக்க முயன்றவர்களுக்கு தோல்வியடைந்து விட்டார்கள்.
- ஆர்.பி.உதயகுமார் பரபரப்பு குற்றம் சாட்டினார்.
மதுரை
மதுரையில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலை வர் ஆர்.பி.உதயகுமார் கூறி யதாவது:-
தேசியமும், தெய்வீகமும் இரு கண்களாகக் கொண்டி ருக்கிற தெய்வீக திரு மகனாரின் குரு பூஜையில், அ.தி.மு.க. பொதுசெயலா ளர் எடப்பாடி பழனிசாமி வருகின்ற போது வரலாறு காணாத வரவேற்போடு, ஒட்டுமொத்த தேவர் தொண்டர்களும், குறிப்பாக தாய்மார்களும் அவரை வரவேற்ற காட்சியை பார்த்து பொறுத்துக் கொள்ள முடியாத விஷமி கள் சிலர், தெய்வீக திருமக னார் தனக்கு மட்டுமே சொந்தம் என்று ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடக்க முயற்சி செய்தனர்.
அந்த சுயநலவாதி களிடம் இருந்து, அவர் ஒரு சுதந்திர போராட்டத் தலைவர், தேசிய தலைவர், சர்வ சமய, சர்வ ஜாதி என அனைத்து பிரிவிற்கும் சொந்தமானவர் என்பதை நிரூபித்துக் காட்டு கின்ற வகையில், அந்த புண்ணிய பூமியில் அஞ்சாத மன உறுதியோடு, உருட்டல் மிரட்டலுக்கு எல்லாம் நான் அஞ்ச மாட்டேன் என தேவருக்கு மரியாதை செலுத்தி னார். எடப்பாடி பழனிசாமி.
மதுரையில் இருந்து பசும்பொன்னுக்கு 80 கிலோ மீட்டர் தூரம் செல்லுகின்ற பாதையில் பொதுமக்கள் எல்லாம் அவரை வரவேற்றதை திட்டமிட்டு மறைத்து விட்டு, சில கயவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட வாங்கிய கூலிக்கு கூவியர்கள் இதில் தோல்வியடைந்து விட்டார்கள்.
தேவர் சில பேருக்கு மட்டுமே சொந்தம் என்று குறுகிய வட்டத்தில், அவரது புகழை ஒரு கூண்டுக்குள்ளே அடக்க நினைக்கிறார்கள், அதையெல்லாம் தகர்த்து எறிந்து அவரின் புகழ், தியாக வரலாறு, சர்வ மதம் சர்வ ஜாதிகளுக்கும் பாடு பட்டவர் என்பதை இன்றைக்கு மீண்டும் நிருபிக்கப்பட்டுள்ளது.
எல்லோரும் வரவேற்ற புண்ணிய பூமி இன்றைக்கு சமீபகாலமாக சில கயவர்கள், அரசியலில் முகவரி அற்றவர்கள், அரசியலில் காணாமல் போனவர்கள் தேவரின் கவசத்தை முக மூடியாக அணிந்து கொண்டு தங்களுக்கு பாதுகாப்பு தேடுவது குற்றமல்ல, ஆனால் பிறரை இழிவுபடுத்த வேண்டும், சிலரை அவமானப்படுத்த வேண்டும் என்று நினைத்தால் நடக்காது.
பசும்பொன் பூமிக்கு வருகை தந்து வெற்றி கொடி பறக்க விட்டு, தேவரின் புகழை எட்டுதிக்கும் எடுத்துச் சென்று இருக்கின்ற எடப்பாடி பழனிசாமி இந்திய அரசியலில் கிங் மேக்கராக உருவெடுத்துள் ளார்.
எடப்பாடி பழனிசாமி வருகை ஒரு வரலாற்று வருகையாக தென் மாவட்ட மக்களின் மூலமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறி னார்.
- கணவரை கைது செய்ததால் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- 50-க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திரு மங்கலம் அருகே தங்ளாச் சேரி கிராமத்தில் கடந்த திங்கட்கிழமை நடந்த விழா வின்போது இரு தரப்பை சேர்ந்த இளைஞர்களி டையே மோதல் ஏற்பட்டது. இதில் இருதரப்பினரும் மாறி மாறி கற்களை எடுத்து வீசி உள்ளனர். இதில் 5க்கு-ம் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த நாகையாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் பேரையூர் டிஎஸ்பி இலக்கியா தலைமையிலான போலீசார் கலவரத்தை கட்டுப்படுத்தினர். போலீ சார் வருவதை அறிந்த பகுதி சம்பந்தப்பட்ட குற்ற வாளிகள் தலைமறைவாகி ஆகிவிட்டனர். சம்பவம் தொடர்பாக இரு தரப்பி னரும் காவல்துறையில் அளித்த புகாரின் அடிப் படையில் 30-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதே பகுதியில் வசிக்கும் ஒரு சமுதாயத்தைச் சேர்ந்த சுப்பையன் (வயது 59) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அப்போது மாற்றுத்திறனாளியான அவரது மனைவி பிச்சை யம்மாள் (49) எனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள் ளதால் தன்னால் நடக்க முடியாது எனவும், தனது கணவர் தான் உதவி வரு கிறார். எனவே கணவரை மட்டும் விடுவிக்க கோரி காவல்துறையிடம் பிச்சை யம்மாள் மற்றும் அவரது உறவினர்கள் கூறியுள்ளனர். ஆனால் போலீசார் இதனை கண்டு கொள்ளவில்லை. இதனால் விரக்தியடைந்த பிச்சையம்மாள் சம்பவத் தன்று வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இரு சமுதாயப் பிரச்சி னையில் பெண் ஒருவர் தூக்கிட்டு தற் கொலை செய்து கொண்ட சம்பவத்தால் தங்களாச்சே ரியில் பரபரப்பான சூழல் நிலவியது. இதனால் 50க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், தொடர்ந்து கிராமத்தில் நடந்த மோதல் சம்பவத்தில் காவல்துறையினர் ஒரு சமுதாயத்துக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் பள்ளி -கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் மீதும் போலீ சார் வழக்குப்பதிவு செய் துள்ளதால் போலீசாருக்கு பயந்து அனைவரும் ஊரை விட்டு ஓடிவிட்டனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். தவறும் பட்சத்தில் இறந்த பிச்சை யம்மாள் உடலை வாங்க மாட்டோம் எனவும் தெரிவித்தனர்.
- தாய்மை அடையும் பெண்கள் சர்க்கரை வியாதியை எப்படி கையாள வேண்டும்?
- டாக்டர் நிவேதிதா கார்த்திகா விளக்கமளிக்கிறார்.
மதுரை
தாய்மை அடையும் பெண் கள் சர்க்கரை வியா தியை கையாளும் முறைகள் குறித்து மதுரை அன்யா என்டோக்ரின் மற்றும் டையப்பெட்டீஸ் மையத்தைச் சேர்ந்த டாக்டர் டாக்டர் நிவேதிதா கார்த் திகா அளித்துள்ள வழிகாட் டல்கள் வருமாறு:-
வழிகாட்டல்கள்
முழு தானியங்கள், குறை வான கொழுப்பு கொண்ட புரதச்சத்துக்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள் குறைவான கிளைசீமிக் இன்டிசஸ் கொண்டிருக்கிறது. ரத்த சர்க்கரை அதிகரிப்பதை தடுப்பதற்கு அளவுகளை கட்டுப்படுத்துவது மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு கள் மற்றும் சர்க்கரை பானங்களை தவிர்ப்பது அவசியம்.
அத்தியாவசிய ஊட்டச் சத்து அளிக்கையில் ரத்த சர்க்கரை அளவுகளை நிலையாக வைக்கும் தனிப் பட்டதாக்கப்பட்ட உணவு திட்டங்களுக்கு டையட்டீஷி யனுடன் ஒருங்கிணைய வேண்டும். நிலையான ரத்த சர்க்கரை அளவுகளுக்காக சமமாக விநியோகிப்பதற்கு கார்போஹைட்ரேட் கணக் கிடுவதை புரிந்து கொள்ள வேண்டும்.
நிலைத்தன்மை மிக்க சக்தி மற்றும் நிலையான ரத்த சர்க்கரை அளவுகளுக்கு முக்கிய உணவுகளுடன் பயிர்கள், கொழுப்பு இல் லாத இறைச்சி மற்றும் பால் பொருட்கள் போன்ற குறை வான ஜி.ஐ. உணவுகளை சேர்ப்பது, அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களுக்காக அவோகாடோஸ், நட்ஸ் மற்றும் ஆலிவ் ஆயில், தேங்காய் எண்ணெய் மற் றும் நெய் (மிதமான அள வில்) போன்ற ஆதாரங்களை சேர்ப்பது முக்கியம்.
நிலையான ரத்த சர்க் கரை அளவுகளுக்காக நிறைய தண்ணீர் குடிப்பது மற்றும் முழு தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிக ளிலிருந்து உணவில் உள்ள நார்சத்தை சாப்பிடுவது நீர்ச்சத்து, நார்ச்சத்தை அதி கரிக்க உதவும். ரத்த சர்க்கரை அளவுகள் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கி யத்தை நிர்வகிப்பதற்கு சிபா ரிசு செய்யப்பட்ட உடல் ரீதியிலான நடவடிக்கையில் ஈடுபடுவது அவசியம்.
ரத்த சர்க்கரை கட்டுப் பாட்டில் சாதகமான தாக் கத்தை ஏற்படுத்துவதற்கு தியானம், யோகா அல்லது ஆழமாக சுவாசிப்பதன் மூலமாக மன அழுத்தத்தை குறைப்பதற்கு பழகிக் கொள்வது, ரத்த சர்க்கரை அள வுகளில் இடையூறு களைத் தடுப்பதற்கு மற்றும் நலனை ஊக்குவிப்பதற்கு போதியளவு தூக்கத்தை முன்னுரிமைப்படுத்த வேண்டும்.
உரிய நேரத்தில் அட் ஜஸ்ட் செய்வதற்காக வழக்க மாக ரத்த சர்க்கரை அளவு களை கண்காணிப்பது, திறன் வாய்ந்த சிகிச்சைகளுக் காக மருத்துவ தொழில் வல்லுனர்களுக்கு அவ்வப் போதைய தகவலை அளிப் பது, சாத்தியமாக இருந்தால், ரத்த சர்க்கரை ஒழுங்குப டுத்துவது மற்றும் பச்சிளம் குழந்தைக்கான ஊட்டச்சத் திற்காக தாய்ப்பால் ஊட்டு வதை கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு சர்க்கரை வியாதி பயணமும் தனித்தன் மையானது. இந்த வழிகாட் டுதல்கள் அடிப்படையா னவை. ஆனால், தேவைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட ஒரு திட்டத்திற்காக மருத்துவ தொழில் வல்லுனர்களுடன் ஒருங்கிணைவது அவசியமா னது. முன்கூட்டியே செய லாற்றுவது, தகவல் பெற்ற அணுகுமுறைகள் மற்றும் பலம் வாய்ந்த மருத்துவ தொடர்புகள் மூலமாக, தாய்மையின் மகிழ்ச்சியை தழுவிக் கொள்கையில் நீங்கள் மிகச் சரியாக சர்க் கரை வியாதியை நிர்வகிக்க லாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ஐ.ஜே.கே. சார்பில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
- தலைவர் டாக்டர் ரவி பச்சமுத்து கலந்து கொண்டு மாலை அணிவித்தார்.
மதுரை
முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மதுரை கோரிப் பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு ஐ.ஜே.கே. கட்சி சார்பில் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தப்பட்டது. தலைவர் டாக்டர் ரவி பச்சமுத்து கலந்து கொண்டு மாலை அணிவித்தார்.
மாநில அமைப்பு செய லாளரும், மதுரை மாநகர் மாவட்ட தலைவ ருமான அன்னை இருதய ராஜ் தலைமை தாங்கினார். இதில் மாநில இளைஞரணி செயலாளர் வரதராஜன், மகளிரணி செயலாளர் அமுதா ராஜேஸ்வரன், மாநில போராட்டக்குழு செயலாளர் சிமியோன் சேவியர் ராஜ், மாநில விளம்பரப்பிரிவு செய லாளர் முத்தமிழ் செல்வன், மாநில துணை தலைவர்கள் நெல்லை ஜீவா, இளவரசி, ஆனந்த முருகன்,
மாநில இளைஞரணி துணை தலைவர் சுரேஷ், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் துரை பாண்டியன், கன்னியாகுமரி மாவட்ட தலைவர் காசின், கரூர் மாவட்ட தலைவர் பிரகாஷ் கண்ணா, திண்டுக் கல் கிழக்கு மாவட்ட தலை வர் ரஞ்சித்குமார், மாநில தகவல் தொழில்நுட்ப ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மதுரை வடக்கு மாவட்ட தலைவர் ஞானசேகரன், மதுரை கிழக்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார், மாநகர் மாவட்ட செயலாளர் செந்தூர் பாண்டி, பொரு ளாளர் முத்துராஜா, மாநில மகளிரணி துணை செயலா ளர் சகிலாபுரோஸ், மாநகர் மாவட்ட முதன்மை அமைப்பு செயலாளர் ஜான்பெனடிக், மாவட் அமைப்பு செயலாளர் அமிர்தகிருஷ்ணன், தென் மண்டல அமைப்பு செய லாளர் வினோத்குமார்,
மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் பிரபுராஜன், மாநில இளைஞரணி இணை செயலாளர் மோகன்குமார், மதுரை கிழக்கு மாவட்ட செயலாளர் நீலமேகம், மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் ராபின்சன், வடக்கு மாவட்ட பொருளாளர் சூசை அமல்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கடந்த 2012-ம் ஆண்டு என்னை மதுரை ஆதீனம் மடத்தின் இளைய பீடாதிபதியாக அருணகிரிநாதர் அறிவித்தார்.
- மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மறைவுக்கு பிறகு, 293-வது மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர தேசிக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை:
மதுரை ஐகோர்ட்டில், நித்தியானந்தா சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறியிருந்ததாவது:-
கடந்த 2012-ம் ஆண்டு என்னை மதுரை ஆதீனம் மடத்தின் இளைய பீடாதிபதியாக அருணகிரிநாதர் அறிவித்தார். இது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் 2019-ம் ஆண்டு இந்த அறிவிப்பை அவர் வாபஸ் பெற்றார். இது தொடர்பான வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், மதுரை ஆதீன மடத்தின் 292-வது மடாதிபதி அருணகிரிநாதர் உடல்நலக்குறைவால் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்டு 12-ம் தேதி காலமானார். முறைப்படி அவருக்கு பின் நான் தான் மதுரை ஆதீனமாக பொறுப்பேற்க வேண்டும்.
ஆனால், தற்போது எந்தவித ஒப்பந்தமோ, உயிலோ இல்லாமல், மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மறைவுக்கு பிறகு, 293-வது மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர தேசிக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் மதுரை மாவட்ட கோர்ட்டில் நிலுவையில் உள்ள மதுரை ஆதீனம் தொடர்பான வழக்கில் அருணகிரி நாதருக்கு பதிலாக, 293-வது மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர தேசிக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியரை எதிர் மனுதாரர் ஆக சேர்க்கப்பட்டு உள்ளார். இதை நீதிபதி ஏற்றுக்கொண்டு உத்தரவு பிறப்பித்து உள்ளார். இது ஏற்புடையதல்ல. மாவட்ட கோர்ட்டு நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி முரளி சங்கர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இது குறித்து, தற்போதைய மதுரை ஆதினம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
- நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்யவோ, வழக்கில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவோ போலீசார் கடந்த 5 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
- பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதாவது தீர்வு கிடைக்க வசதியாக, அப்சல் நிதி நிறுவன மோசடி வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற வேண்டும்.
மதுரை:
கோயம்புத்தூரை சேர்ந்த ரவிச்சந்திரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
மதுரையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்ட அப்சல் இந்தியா லிமிடெட் நிதி நிறுவனத்தினரின் ஆசை வார்த்தையை நம்பி, நான் உள்பட பலர் ரூ.19 லட்சம் வரை முதலீடு செய்திருந்தோம்.
ஆனால் அவர்கள் உறுதியளித்த படி நாங்கள் செலுத்திய முதலீட்டு தொகையை வட்டியுடன் திருப்பி தரவில்லை. இது குறித்து புகார் அளித்ததால் 2017-ம் ஆண்டில் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
வழக்கின் அடிப்படையில் எங்கள் தொகையை திரும்ப பெற்றுத்தர ஓய்வுபெற்ற நீதிபதி சுதந்திரம் தலைமையில் பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர், அப்சல் நிறுவன மேலாளர் ஆகியோர் அடங்கிய குழு அமைத்தனர்.
அந்த குழு, நிதி நிறுவனத்தின் சொத்துகளை மீட்க பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டும் எந்த முன்னேற்றமும் இல்லை. நிதி நிறுவனத்தினர் இதற்கு ஒத்துழைக்கவும் இல்லை. இதற்கிடையே அப்சல் நிறுவன நிர்வாகி செந்தில் வேல் இறந்துவிட்டார்.
ஏற்கனவே கோர்ட்டில் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிதி நிறுவனத்தினர் நிறைவேற்றாமல் 3 ஆண்டுகள் காலம் தாழ்த்தியதால் இந்த விவகாரத்தில் இருந்து ஓய்வுபெற்ற நீதிபதி விலகிக் கொண்டார். மேலும் அவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கவும் புகார் மனு அனுப்பப்பட்டது.
நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்யவோ, வழக்கில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவோ போலீசார் கடந்த 5 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அப்சல் நிதிநிறுவனம், அதன் கிளை நிறுவனங்களால் சுமார் 60 ஆயிரம் முதலீட்டாளர்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்யப்பட்டு உள்ளது. ஆனால் அந்த மோசடி செய்தவர்கள் தப்பிக்க போலீசார் உடந்தையாக உள்ளனர். குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுவதற்கு உதவியாகவும் போலீசார் உள்ளனர். எனவே பாதிக்கப்பட்ட எங்களுக்கு ஏதாவது தீர்வு கிடைக்க வசதியாக, அப்சல் நிதி நிறுவன மோசடி வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் வக்கீல் மாதவன் ஆஜராகி, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பணத்தை மோசடி செய்தவர்களுக்கு போலீசார் உடந்தையாக இருப்பது சட்டவிரோதம். உடனடியாக இந்த நிதி மோசடி வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற வேண்டும் என வாதிட்டார்.
முடிவில், இந்த வழக்கில் மனுதாரரின் குற்றச்சாட்டு குறித்து சம்பந்தப்பட்ட போலீசார் நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தார்.






