search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. ஆலோசனைக் கூட்டம்
    X

    அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசிய காட்சி.

    புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. ஆலோசனைக் கூட்டம்

    • மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
    • கூட்டத்திற்கு பகுதி செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமை தாங்கினார்.

    மதுரை

    மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடை பெற்றது.கூட்டத்திற்கு பகுதி செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் நிலை யூர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் மரக்கடை முரு கேசன் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதா வது:-

    அ.தி.மு.க. பொதுச் செய லாளர் எடப்பாடி பழனிச் சாமி வழிகாட்டுதல்படி நாம் பூத் கமிட்டி அமைத்தால் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் நமது கட்சி மாபெரும் வெற்றியை நோக்கி செல்லும். கடந்த சட்டமன்ற தேர்தலில் பூத் கமிட்டியில் அதிகமான பெண்கள் பணியாற்றியதால் 30,000 வாக்கு வித்தியாசத் தில் நான் வெற்றி பெற்றேன்.

    தேவர் ஜெயந்தி விழா விற்கு எடப்பாடியார் வர முடியுமா என்று கேட்டார் கள். ஆனால் அங்கு வந்தார். குறிப்பாக அ.தி.மு.க. என்பது எதிர்ப்பு அரசியலை கொண்டுதான் வளர்ந்தது. புரட்சித்தலைவர், புரட் சித்தலைவி அம்மா ஆகி யோரை தொடர்ந்து எடப் பாடியாரும் வெற்றி பெற் றார்.

    இன்றைக்கு தலைமை கழகம் சின்னம் ஆகியவற்றை இழந்த ஓ.பி.எஸ். தூண்டுத லால் சிலர் கோஷம் போட்ட னர். அதையெல்லாம் எடப் பாடியார் முறியடித்து உள் ளார். தேவர் ஜெயந்தி விழா வில் குருபூஜையில் ஸ்டா லின் விபூதியை கூட வாங்கா மல் மரியாதை கொடுக்க வில்லை. ஆனால் எடப்பாடி யார் தேவர் காலில் விழுந்து வணங்கி உரிய மரியாதை அளித்தார்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    கூட்டத்தில் அமைப்புச் செயலாளர் காந்தி, பகுதி செயலாளர் பன்னீர்செல்வம், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் மோகன்தாஸ், துணை செயலாளர் செல்வகுமார், பொருளாளர் பாண்டுரங்கன், இளைஞர் அணி வேல்ராஜ், வட்டச் செயலாளர் பொன்முருகன், பாலா, எம்.ஆர்.குமார் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×