என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கணவரை கைது செய்ததால் மனைவி தூக்கிட்டு தற்கொலை
    X

    தற்கொலை செய்து கொண்ட பிச்சையம்மாள்.

    கணவரை கைது செய்ததால் மனைவி தூக்கிட்டு தற்கொலை

    • கணவரை கைது செய்ததால் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • 50-க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திரு மங்கலம் அருகே தங்ளாச் சேரி கிராமத்தில் கடந்த திங்கட்கிழமை நடந்த விழா வின்போது இரு தரப்பை சேர்ந்த இளைஞர்களி டையே மோதல் ஏற்பட்டது. இதில் இருதரப்பினரும் மாறி மாறி கற்களை எடுத்து வீசி உள்ளனர். இதில் 5க்கு-ம் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்த நாகையாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் பேரையூர் டிஎஸ்பி இலக்கியா தலைமையிலான போலீசார் கலவரத்தை கட்டுப்படுத்தினர். போலீ சார் வருவதை அறிந்த பகுதி சம்பந்தப்பட்ட குற்ற வாளிகள் தலைமறைவாகி ஆகிவிட்டனர். சம்பவம் தொடர்பாக இரு தரப்பி னரும் காவல்துறையில் அளித்த புகாரின் அடிப் படையில் 30-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

    அதே பகுதியில் வசிக்கும் ஒரு சமுதாயத்தைச் சேர்ந்த சுப்பையன் (வயது 59) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அப்போது மாற்றுத்திறனாளியான அவரது மனைவி பிச்சை யம்மாள் (49) எனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள் ளதால் தன்னால் நடக்க முடியாது எனவும், தனது கணவர் தான் உதவி வரு கிறார். எனவே கணவரை மட்டும் விடுவிக்க கோரி காவல்துறையிடம் பிச்சை யம்மாள் மற்றும் அவரது உறவினர்கள் கூறியுள்ளனர். ஆனால் போலீசார் இதனை கண்டு கொள்ளவில்லை. இதனால் விரக்தியடைந்த பிச்சையம்மாள் சம்பவத் தன்று வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இரு சமுதாயப் பிரச்சி னையில் பெண் ஒருவர் தூக்கிட்டு தற் கொலை செய்து கொண்ட சம்பவத்தால் தங்களாச்சே ரியில் பரபரப்பான சூழல் நிலவியது. இதனால் 50க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், தொடர்ந்து கிராமத்தில் நடந்த மோதல் சம்பவத்தில் காவல்துறையினர் ஒரு சமுதாயத்துக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் பள்ளி -கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் மீதும் போலீ சார் வழக்குப்பதிவு செய் துள்ளதால் போலீசாருக்கு பயந்து அனைவரும் ஊரை விட்டு ஓடிவிட்டனர்.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். தவறும் பட்சத்தில் இறந்த பிச்சை யம்மாள் உடலை வாங்க மாட்டோம் எனவும் தெரிவித்தனர்.

    Next Story
    ×