என் மலர்
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளியை அடுத்த குந்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது 57). விவசாயி. இவர் கடந்த 4-ந் தேதி மாலை குருபரப்பள்ளி- நடுசாலை சாலையில் பீமாண்டப்பள்ளி அருகே தனது மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ராமசாமி ஓட்டிச்சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து சேலம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக பலியானார். இதுகுறித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி வீரப்பன் நகரை சேர்ந்தவர் புகழேந்தி (வயது 55). இவர் மரவேலை செய்து வந்தார். இவரது மனைவி பப்பி ராணி (45). புகழேந்திக்கும் அவரது அண்ணன் இளங்கோவிற்கும் இடையே சொத்து தகராறு உள்ளது. இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று அதிகாலை இளங்கோவின் மகன் லோகேஷ் (18), அவரது நண்பர் சதீஷ் (18) ஆகிய இருவரும் புகழேந்தி வீட்டிற்குச் சென்றனர். அங்கு புகழேந்தியிடம் தகராறில் ஈடுபட்டனர். அப்போது ஆத்திரமடைந்த லோகேஷ் அவரது நண்பர் சதீஷ் ஆகிய இருவரும், புகழேந்தியை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். தடுக்க வந்த அவரது மனைவி பப்பி ராணிக்கும் வெட்டு விழுந்தது.
இதில் கணவன், மனைவி இருவரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தின்போது புகழேந்திக்கு ஆதரவாக பேசிய பக்கத்து வீட்டுக்காரர் கரிகாலன்(50), அவரது மனைவி சரசு (40)ஆகியோருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கபட்டனர்.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட கணவன், மனைவி உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தம்பதியை கொலை செய்த லோகேஷ், அவரது நண்பர் சதீஷ் ஆகிய இருவரையும் கிருஷ்ணகிரி நகர போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. சொத்து தகராறில் கணவன், மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் கோட்டையூர் மலைக்கிராமத்தை சேர்ந்தவர். ஆனந்தன் (வயது 42). தர்மபுரி மாவட்டம் பருவதனள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அங்கமுத்து (47). இவர்கள் இருவரும் முறையாக மருத்துவம் படிக்காமல் கோட்டையூர் மலைக்கிராமத்தில் கிளினிக் நடத்தி வருவதாக மாவட்ட கலெக்டருக்கு புகார்கள் வந்தன. மேலும் அவர்கள் கிளினிக்கில் கொரோனா மற்றும் பிற நோய்களுக்கும் சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.
இதனையடுத்து கலெக்டரின் உத்தரவின்பேரில் மருத்துவ அதிகாரிகள் மற்றும் போலீசார் கோட்டையூர் மலைக்கிராமத்திற்கு சென்றனர். பின்னர் அவர்கள் நடத்தி வரும் கிளினிக்கிற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது ஆனந்தனும், அங்கமுத்துவும் மருத்துவம் படிக்காமல் கிளினிக்கில் மருந்துகளை வைத்து பொதுமக்களுக்கும், கொரோனா நோயாளிகளுக்கும் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் போலி டாக்டர் ஆனந்தனை கைது செய்தனர்.
மேலும் போலீசார் வருவதை அறிந்ததும் மற்றொரு போலி டாக்டர் அங்கமுத்து அங்கிருந்து தப்பியோடி விட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
| ஊத்தங்கரை (தனி) | |||||
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
| தமிழ்செல்வம் | அதிமுக | 99675 | |||
| ஆறுமுகம் | காங்கிரஸ் | 71288 | |||
| பாக்கியராஜ் | தேமுதிக | 2291 | |||
| முருகேசன் | மநீம | 1254 | |||
| இளங்கோவன் | நாம் தமிழர் | 10424 | |||
| பர்கூர் | |||||
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
| தே.மதியழகன் | திமுக | 97256 | |||
| கிருஷ்ணன் | அதிமுக | 84642 | |||
| கணேசகுமார் | அமமுக | 1064 | |||
| அருண்கவுதம் | இஜக | 345 | |||
| கருணாகரன் | நாம் தமிழர் | 10113 | |||
| கிருஷ்ணகிரி | |||||
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
| கே.அசோக்குமார் | அதிமுக | 96050 | |||
| டி.செங்குட்டுவன் | திமுக | 95256 | |||
| அமீனுல்லா | ஓவைசி | 858 | |||
| ரவிசங்கர் | மநீம | 3455 | |||
| நிரந்தரி | நாம் தமிழர் | 11137 | |||
| வேப்பனஹள்ளி | |||||
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
| கே.பி.முனுசமி | அதிமுக | 94104 | |||
| பி.முருகன் | திமுக | 91050 | |||
| முருகேசன் | தேமுதிக | 3601 | |||
| ஜெயபால் | மநீம | 672 | |||
| சக்திவேல் | நாம் தமிழர் | 8310 | |||
| ஓசூர் | |||||
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
| பிரகாஷ் | திமுக | 118231 | |||
| ஜோதி பால கிருஷ்ண ரெட்டி | அதிமுக | 105864 | |||
| மாரேகவுடா | அமமுக | 806 | |||
| மசூத் | மநீம | 6563 | |||
| கீதாலட்சுமி | நாம் தமிழர் | 11422 | |||
| தளி | |||||
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
| ராமச்சந்திரன் | சிபிஐ | 120641 | |||
| நாகேஷ்குமார் | பாஜக | 64415 | |||
| சேகர் | கோமக | 346 | |||
| அசோக்குமார் | இஜக | 788 | |||
| மேரி செல்வராணி | நாம் தமிழர் | 3776 | |||
தமிழக சட்டசபை தேர்தல் கடந்த மாதம் 6ம் தேதி நடந்தது. இதில் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட கே.பி.முனுசாமியும், தி.மு.க சார்பில் முருகனும் போட்டியிட்டனர்.
இதைத்தொடர்ந்து கடந்த 2-ந் தேதி நடந்த வாக்கு எண்ணிக்கையில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கே.பி.முனுசாமி வெற்றி பெற்றார். இவர் ஏற்கனவே மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வருகிறார். மேலும் கட்சியில் துணை ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறார். கடந்த 2011ம் ஆண்டு கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று உள்ளாட்சித்துறை அமைச்சரான கே.பி.முனுசாமி, 2014ம் ஆண்டு மே மாதம் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
பின்னர் 2016 தேர்தலில் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி தொகுதியில் முதலில் வேட்பாளராக ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டார்.

எப்படியும் அ.தி.மு.க ஆட்சி அமையும். அதன் பிறகு, தான் அமைச்சர் ஆகி விடலாம். பிறகு எம்.பி. பதவியை துறந்து விடலாம் என கே.பி.முனுசாமி திட்டமிட்டிருந்தார்.
ஆனால் தற்போது தி.மு.க ஆட்சி அமைந்திருப்பதால் எதிர்க்கட்சி வரிசையில் அமரும் வாய்ப்பே கே.பி.முனுசாமிக்கு கிடைத்துள்ளது. இதனால் இவர் எம்.பி. பதவியை ராஜினாமா செய்து விட்டு, எம்.எல்.ஏ.வாக பதவியை தொடர்வாரா? அல்லது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு எம்.பி.யாக பதவியை தொடர்வாரா? என்று கேள்வி எழுந்துள்ளது.
இதுபற்றி கே.பி. முனுசாமி எம்.பி.யிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
நாம் எம்.பி.யாக தொடர்வதா? அல்லது எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்பதா? என்று நான் இன்னும் முடிவு செய்யவில்லை. இதுபற்றி கட்சியின் தலைமையுடன்ஆலோசனை செய்து முடிவு செய்து அறிவிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.






