என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    தமிழகத்தில் அதிக அளவில் கொய் மலர் உற்பத்தி செய்து வரும் ஓசூரில் 1300 ஏக்கர் நிலப்பரப்பில் பசுமைக்குடில் அமைத்து மலர் சாகுபடி செய்யப்படுகிறது.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதி, நல்ல மண்வளம் சீரான தட்ப வெப்பநிலையை கொண்டுள்ளதால் இங்கு அதிக அளவில் ரோஜாமலர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    பசுமைகுடில்கள் மற்றும் திறந்தவெளி மூலம் சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கு அதிகமான பரப்பளவில் ரோஜா மலர்கள் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் தாஜ்மஹால், நொப்ளஸ், பர்ஸ்ட்ரெட், கிரான்ட் காலா, பிங்க், அவலான்ஜ் உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட வகையான ரோஜா மலர்கள் கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் காதலர் தினம் ஆகிய விழா கொண்டாட்டங்களுக்காக மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, வளைகுடா நாடுகள் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    உலக அளவில் கொரோனா பொது முடக்கம், விமான சேவை பாதிப்பு ஆகியவற்றினால் ரோஜா கொய் மலர் ஏற்றுமதியில் இந்தியா கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனால் மலர் உற்பத்தி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மட்டுமே 10 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர்.

    தமிழகத்தில் அதிக அளவில் கொய் மலர் உற்பத்தி செய்து வரும் ஓசூரில் 1300 ஏக்கர் நிலப்பரப்பில் பசுமைக்குடில் அமைத்து மலர் சாகுபடி செய்யப்படுகிறது.

    ஓசூர் கொய்மலர் விவசாயிகள் கடந்த 10 ஆண்டுகளாக லாபகரமாக தொழில் செய்து வந்தனர். விவசாயிகள் பூக்களைத் தக்க நேரத்தில் கொய்து, அதனை குளிரூட்டப்பட்ட அறையில் ஒரு வாரம் பதப்படுத்தி வைத்து, பின்னர் முறையாக பேக்கிங் செய்து குளிரூட்டப்பட்ட லாரிகளில் பெங்களூரு விமான நிலையத்திற்கு குறிப்பிட்ட கால நேரத்திற்குள் கொண்டு சென்று அங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தனர்.

    கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா தொற்றையொட்டி, இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் இந்தியாவில் இருந்து மற்ற நாடுகளுக்கும், மற்ற நாடுகளில் இருந்து இந்தியாவிற்கும் விமான சேவை நிறுத்தப்பட்டது. ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய் வரை ஏற்றுமதி செய்து வந்த நிலையில், கடந்த நிதி ஆண்டில் முற்றிலுமாக மலர் ஏற்றுமதி நடைபெறவில்லை. விமான சேவை மூலமான ஏற்றுமதியை முழுமையாக நம்பி சாகுபடி செய்து வந்த இந்திய கொய் மலர் விவசாயிகளின் வாழ்க்கையை புரட்டிப் போட்டது கொரோனா பெரும் தொற்று.

    இதுகுறித்து, ஓசூர் பகுதி ரோஜா மலர் சாகுபடி செய்யும் விவசாயிகள் கூறியதாவது:

    கொரோனா முதல் அலையின்போது, அறுவடை செய்து ஏற்றுமதிக்குத் தயாராக இருந்த மலர்கள், செடியில் அறுவடைக்கு இருந்த மலர்கள் உள்பட அனைத்தும் வீணாகின. பல மாதங்களாக உழைத்து பணமாக மாற்றும் நேரத்தில் கொரோனா பொதுமுடக்கம் விவசாயிகளை நிலை குலைய வைத்தது. அதன் பிறகு கொரோனா முதல் அலை குறைந்து வந்தது. இதனால் விவசாயிகள் சற்று நிம்மதி அடைந்து வந்தனர். இயல்பு வாழ்க்கைக்கு மீண்டு வந்துவிடலாம் என்று நினைத்து மீண்டும் ரோஜா கொய் மலர்களை வளர்த்து வந்தனர்.

    இந்த நேரத்தில் கொரோனா தொற்றின் 2-ம் அலை கொய் மலர் தொழிலை மீண்டும் முடக்கியது. மலர் விவசாயத்தில் ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு ஏக்கருக்கு மாதத்திற்கு ரூ.1 லட்சம் வீதம் ஒரு ஆண்டுக்கு ரூ.12 லட்சம் செலவாகிறது ஏற்றுமதி தடைபட்டது மட்டுமல்லாமல், திருமண நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள், பொது நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள், கோவில் விழாக்கள் நடத்த முற்றிலும் தடை என தமிழக அரசு ஊரடங்கு விதிகளை அமல்படுத்தியுள்ளது.

    திருமணங்கள் உள்ளிட்ட விழாக்களை நம்பி உள்ள மலர் உற்பத்தி விவசாயிகள் முதல் அலங்கார வளைவு போன்ற வேலைப்பாடு செய்யும் தொழிலாளி, மலர் கொத்து தயாரிக்கும் சிறு வியாபாரிகள் வரை தமிழகத்தில் சுமார் 10 லட்சம் பேர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர், மேலும் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்த மாதத்தில் கொரோனாவுக்கு 3 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், ஒரு போலீஸ் கொரோனாவுக்கு பலியாகி இருப்பது போலீசாரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் ராமமூர்த்தி (வயது 55). கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதியானது. இந்த நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று மாலை அவர் உயிர் இழந்தார்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்த மாதத்தில் கொரோனாவுக்கு 3 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், ஒரு போலீஸ் கொரோனாவுக்கு பலியாகி இருப்பது போலீசாரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 714 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 266 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 23 ஆயிரத்து 655 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 17 ஆயிரத்து 505 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். 5 ஆயிரத்து 991 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

    இதுவரை சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 159 ஆக உள்ளது.

    டிரான்ஸ்பார்மரில் காப்பர் வயர் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குருபரப்பள்ளி:

    குருபரப்பள்ளி அருகே உள்ளது பில்லனகுப்பம் மற்றும் கொத்தூர் பண்டப்பள்ளி. இந்த பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் இருந்த 75 கிலோ காப்பர் வயர் மற்றும் 650 லிட்டர் டிரான்ஸ்பார்மர் ஆயில் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து பையனப்பள்ளி மின்வாரிய உதவி பொறியாளர் இளையராஜா குருபரப்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காணிக்கை சாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    மத்திகிரி அருகே சரக்கு வேன் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மத்திகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா சாரகப்பள்ளியை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 44). சொந்தமாக சரக்கு வேன் வைத்துள்ளார். சம்பவத்தன்று அவர் கொத்தகொண்டப்பள்ளியில் உள்ள தனியார் நிறுவனம் முன்பு தனது சரக்கு வேனை நிறுத்தி இருந்தார். அதை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து ஜெயராமன் மத்திகிரி போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் வேனை திருடியது தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் தாலுகா கரியன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த திவாகர் (23), காரிமங்கலம் தாலுகா பென்னிக்கனூரை சேர்ந்த சுரேஷ் (25) என தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் திருடப்பட்ட சரக்கு வேனும் மீட்கப்பட்டது.
    சூளகிரி அருகே விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சூளகிரி:

    சூளகிரி தாலுகா பெரியமோதுகானப்பள்ளியை சேர்ந்தவர் சசிக்குமார் (வயது 43). கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று இவர் ஸ்கூட்டரில் சூளகிரி- கும்பளம் சாலையில் தொட்டி கிராமம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஸ்கூட்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில் பலத்த காயம் அடைந்த சசிக்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சசிக்குமார் இறந்தார். இதுகுறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில், 712 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெற்று வந்த 319 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்தவர் 55 வயது பெண். இவர் கடந்த 6-ந் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு, கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் 12-ந் தேதி இறந்தார்.

    கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 90 வயது முதியவர், கொரோனா பாதிப்பு காரணமாக 6-ம் தேதி சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் 8-ம் தேதி இறந்து விட்டார். அதே போல கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 62 வயது முதியவர், கொரோனா காரணமாக 9-ம் தேதி ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் 11-ம் தேதி இறந்து விட்டார். அதே போல 77 வயது மூதாட்டி, கொரோனா பாதிப்பு காரணமாக கிண்டியில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனையில் கடந்த 11-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் 12-ம் தேதி இறந்து விட்டார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில், 712 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெற்று வந்த 319 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரையில் 21 ஆயிரத்து 568 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 16 ஆயிரத்து 881 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 4 ஆயிரத்து 531 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 156 ஆக உள்ளது.

    பர்கூர் பொறியியல் கல்லூரி, ஓசூர் பட்டு வளர்ச்சித்துறை மையம் ஆகியவை தற்காலிகமாக கொரோனா சிறப்பு வார்டு மையங்களாக அமைக்கப்பட்டுள்ளன.
    கிருஷ்ணகிரி:

    கொரோனா 2-வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாள்தோறும் 400-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், தனியார் மருத்துவமனைகள் அனைத்தும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. பர்கூர் பொறியியல் கல்லூரி, ஓசூர் பட்டு வளர்ச்சித்துறை மையம் ஆகியவை தற்காலிகமாக கொரோனா சிறப்பு வார்டு மையங்களாக அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தொடர்ந்து நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருவதால் கூடுதலாக கொரோனா சிறப்பு மையங்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

    அதில் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரியில் சென்னை சாலையில் உள்ள அரசு ஆண்கள் கலைக்கல்லூரியில் கொரோனா சிறப்பு மையம் அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்காக கட்டில், மெத்தைகள் போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதைத்தொடர்ந்து அங்கு மருத்துவர்கள், செவிலியர்கள் நியமிக்கப்பட்டு சிறப்பு மையத்தில் நோயாளிகள் அனுமதிக்கப்படுவார்கள் என அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
    கொரோனாவுக்கு தாய் இறந்ததால் அதிர்ச்சியில் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பாகலூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ராயக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலத்தை சேர்ந்தவர் ஜாபர். இவரது மகன் ஆஜம், (வயது 24) இவர், ஓசூர் அடுத்த பாகலூரில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வந்தார். இந்த நிலையில், ஆஜமின் தாய், கொரோனாவால் பாதிக்கப்பட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் நேற்று மாலை இந்தார்.

    இந்த தகவல் அறிந்து ஆஜம் மிகவும் மனவேதனையடைந்தார். பின்னர் சிறிது நேரத்தில், பாகலூர் ஆசிரியர் காலனியில் உள்ள தனது வீட்டில், அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து பாகலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொரோனாவுக்கு தாய் இறந்ததால் அதிர்ச்சியில் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பாகலூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே கைக்குழந்தையுடன் பெண்ணை கடத்திய தருமபுரி வாலிபர் மீது கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

    காவேரிப்பட்டணம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே முலிக்கல் சவுளூர் பகுதியை சேர்ந்தவர் இளவரசன் (வயது 33) கூலித்தொழிலாளி. இவருக்கு பவித்ரா (வயது 22) என்ற மனைவியும், லித்தி கிஷோர் (2½) என்ற கைக்குழந்தையும் உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த மாதம் 13-ந் தேதி பவித்ரா, தனது கைக்குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியில் சென்றவர் பின்னர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவர்கள் 2 பேரும் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் அவர்கள் இருவரையும், தருமபுரியை சேர்ந்த வெங்கசேடன் (வயது 30) என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என காவேரிப்பட்டணம் போலீசில் இளவரசன் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில 478 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டது.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில 478 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டது. 110 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 734 ஆக உள்ளது. இதில் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 225 ஆக உள்ளது. தற்போது 3 ஆயிரத்து 358 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 151 பேர் இறந்துள்ளனர்.
    பணம் வைத்து சூதாடிய 10 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் அம்மனேரி காந்தி மைதானம் அருகில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய செம்படமுத்தூரை சேர்ந்த அப்பு (வயது 26), கந்தசாமி (51) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    ஓசூர் சிப்காட் போலீசார் மூக்கண்டப்பள்ளி என்.டி.ஆர். நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு சூதாடிய மூக்கண்டப்பள்ளி ராமராஜன் (31), தனசேகரன் (32), வெங்கடாசலம் (57), பென்னாகரம் அகிலன் (30), தளி கோவிந்தன் (33) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல பாகலூர் போலீசார் மாரசந்திரம் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு சூதாடிய நல்லூர் முரளி (35), மாரசந்திரம் சிவராமன் (27), அந்திவாடி சுதாகர் (26) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
    சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ள சம்பவம் கிருஷ்ணகிரியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    குருபரப்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது.

    இந்த நிலையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ள சம்பவம் கிருஷ்ணகிரியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கிருஷ்ணகிரி மேல் சோமார்பேட்டையைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 49). போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர். இவரது சொந்த ஊர் கிருஷ்ணகிரி அருகில் உள்ள எம்.சி.பள்ளி. இவர் கடந்த 1993-ல் போலீஸ் பணியில் சேர்ந்த இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தார்.

    கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தேர்தலுக்காக கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு இவருக்கு உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. பரிசோதனை மேற்கொண்டதில் இவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

    இதையடுத்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவமையில் சிகிச்சைப் பெற்று வந்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சைப் பலனின்றி நேற்று இறந்தார்.

    இறந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுரேசுக்கு, ஜோதிலட்சுமி என்ற மனைவியும், பரத் (20), ஹரிராம் (17) என்ற 2 மகன்களும் உள்ளனர்.

    கடந்த 1-ந் தேதி கிருஷ்ணகிரியில் போலீஸ்காரர் சிலம்பரசன் கொரோனாவுக்கு பலியான நிலையில், தற்போது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் கொரோனாவுக்கு பலியான சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்ட போலீசாரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



    ×