search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Copper wire theft"

    • மின் உற்பத்திக்கு தேவையான மின்சாதன பொருட்கள் அங்கு வைக்கப்பட்டுள்ளன.
    • சிசிடிவி., கேமராக்களை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

     மூலனூர்:

    திருப்பூர் மாவட்டம், மூலனூர் அருகே மூலனூர்-தாராபுரம் சாலை சோமன்கோட்டையில் தனியார் காற்றாலை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு காற்றாலை மின் உற்பத்திக்கு தேவையான மின்சாதன பொருட்கள் அங்கு வைக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் சம்பவத்தன்று காற்றாலை அமைக்க வைத்து இருந்த பொருட்களில் சுமார் ரூ.6 லட்சம் மதிப்பிலான தாமிர கம்பியை யாரோ அடையாளம் தெரியாத நபர்கள் திருடி சென்றுவிட்டனர். இதுகுறித்து தனியார் காற்றாலை நிறுவனம் சார்பில் மூலனூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    இதையடுத்து மூலனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர். இது தொடர்பாக குற்ற சம்பவம் நடைபெற்ற பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவி., கேமராக்களை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

    அப்போது கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் லிங்கதுரை (வயது 28), திருநெல்வேலி நாங்குநேரி பகுதியைச் சேர்ந்த ஆனந்த ஜோதி என்பவரின் மகன் வீரராஜ் (21), வெள்ளகோவில் ஒண்டிபுதூர் பகுதியை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் செந்தில்குமார் (32), பொள்ளாச்சி மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்த பெற்றான் என்பவரின் மகன் பிரபு (23), வெள்ளகோவில் எல்.ஐ.சி நகர் பகுதியை சேர்ந்த குமார் என்பவரின் மகன் செல்வகுமார் (37) ஆகியோர் இந்த குற்ற செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து சுமார் ரூ.6 லட்சம் மதிப்புள்ள தாமிர கம்பிகளை மீட்டு குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஒப்படைத்து தாராபுரம் கிளை சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டனர்.

    • ராதாபுரம் அருகே உள்ள தனக்கர்குளம் கிராமத்தில் ஏராளமான காற்றாலைகள் செயல்பட்டு வருகிறது.
    • தனியாருக்கு சொந்தமான ஒரு காற்றா லையில் மர்மநபர்கள் சிலர் புகுந்து அங்கிருந்த காப்பர் வயர்களை திருடிச்சென்றனர்

    நெல்லை:

    ராதாபுரம் அருகே உள்ள தனக்கர்குளம் கிராமத்தில் ஏராளமான காற்றாலைகள் செயல்பட்டு வருகிறது. இதில் தனியாருக்கு சொந்தமான ஒரு காற்றா லையில் மர்மநபர்கள் சிலர் புகுந்து அங்கிருந்த காப்பர் வயர்களை திருடிச்சென்றனர்.

    இதுதொடர்பாக காற்றாலை நிறுவன மேலாளர் ஆறுமுகம் என்பவர் ராதாபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காற்றாலையில் ெபாருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்து பார்த்தனர். அதில் 3 வாலிபர்கள் இரவு நேரத்தில் காற்றாலைக்குள் புகுந்த காட்சி பதிவாகி உள்ளது. அதனை வைத்து போலீசார் மர்மநபர்களை தேடிவருகின்றனர்.

    நெட்டப்பாக்கம் அருகே தனியார் நிறுவனத்தில் காப்பர் கம்பி திருடிய மேலும் 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர்.
    புதுச்சேரி:

    நெட்டப்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு நெட்டப்பாக்கம் அருகே ஏரிபாக்கம்- நத்தமேடு சாலை சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் சாக்கு மூட்டையுடன் வந்த வாலிபரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் ஏரிப்பாக்கம் பழைய காலனியை சேர்ந்த புகழ் (வயது 19) என்பதும், இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் காப்பர் கம்பிகளை திருடி சாக்கு மூட்டையில் எடுத்து வந்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள அந்த காப்பர் கம்பிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் புகழை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.

    இந்த நிலையில் புகழுடன் சேர்ந்து மேலும் 2 சிறுவர்கள் இந்த காப்பர் கம்பி திருட்டில் ஈடுபட்டது போலீசாருக்கு தெரிய வந்தது.

    இதையடுத்து அதே பகுதியை சேர்ந்த அந்த 2 சிறுவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்களை அரியாங்குப்பம் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.
    ×