search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.6 லட்சம் மதிப்பிலான தாமிர கம்பி திருடிய 5 பேர் கைது
    X

    கைதான 5 பேரை படத்தில் காணலாம்.

        

    ரூ.6 லட்சம் மதிப்பிலான தாமிர கம்பி திருடிய 5 பேர் கைது

    • மின் உற்பத்திக்கு தேவையான மின்சாதன பொருட்கள் அங்கு வைக்கப்பட்டுள்ளன.
    • சிசிடிவி., கேமராக்களை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

    மூலனூர்:

    திருப்பூர் மாவட்டம், மூலனூர் அருகே மூலனூர்-தாராபுரம் சாலை சோமன்கோட்டையில் தனியார் காற்றாலை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு காற்றாலை மின் உற்பத்திக்கு தேவையான மின்சாதன பொருட்கள் அங்கு வைக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் சம்பவத்தன்று காற்றாலை அமைக்க வைத்து இருந்த பொருட்களில் சுமார் ரூ.6 லட்சம் மதிப்பிலான தாமிர கம்பியை யாரோ அடையாளம் தெரியாத நபர்கள் திருடி சென்றுவிட்டனர். இதுகுறித்து தனியார் காற்றாலை நிறுவனம் சார்பில் மூலனூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    இதையடுத்து மூலனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர். இது தொடர்பாக குற்ற சம்பவம் நடைபெற்ற பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவி., கேமராக்களை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

    அப்போது கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் லிங்கதுரை (வயது 28), திருநெல்வேலி நாங்குநேரி பகுதியைச் சேர்ந்த ஆனந்த ஜோதி என்பவரின் மகன் வீரராஜ் (21), வெள்ளகோவில் ஒண்டிபுதூர் பகுதியை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் செந்தில்குமார் (32), பொள்ளாச்சி மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்த பெற்றான் என்பவரின் மகன் பிரபு (23), வெள்ளகோவில் எல்.ஐ.சி நகர் பகுதியை சேர்ந்த குமார் என்பவரின் மகன் செல்வகுமார் (37) ஆகியோர் இந்த குற்ற செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து சுமார் ரூ.6 லட்சம் மதிப்புள்ள தாமிர கம்பிகளை மீட்டு குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஒப்படைத்து தாராபுரம் கிளை சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டனர்.

    Next Story
    ×