என் மலர்tooltip icon

    கரூர்

    • வாக்கு சாவடி முகவர்களுக்கு வாக்காளர் சேர்த்தல், நீக்கம் பதிவு செய்ய அதற்கான படிவத்தினை வழங்கினார்.
    • நவம்பர் மாதம் வருகிற 4 ,5 மற்றும் 18 ,19 ஆகிய தேதிகளில் புதிய வாக்காளர்களை சேர்த்தல் சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சாவடி மையத்தில் நடைபெற இருக்கிறது

    குளித்தலை 

    கரூர் மாவட்டம், குளித்தலை மேற்கு ஒன்றிய தி.மு.க. வாக்குச்சாவடி முகவர் கூட்டம் ராஜேந்திரம் தனியார் மகாலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு குளித்தலை எம்.எல்.ஏ. மாணிக்கம் தலைமை தாங்கி வாக்கு சாவடி முகவர்களுக்கு வாக்காளர் சேர்த்தல், நீக்கம் பதிவு செய்ய அதற்கான படிவத்தினை வழங்கினார்.

    மாவட்ட அமைத்தலைவர் ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தேன்மொழி தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், மேற்கு ஒன்றிய செயலாளர் பொய்யாமணி தியாகராஜன் அனைவரையும் வரவேற்றார்,

    கூட்டத்தில் தேர்தல் ஆணையத்தால் நவம்பர் மாதம் வருகிற 4 ,5 மற்றும் 18 ,19 ஆகிய தேதிகளில் புதிய வாக்காளர்களை சேர்த்தல் சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சாவடி மையத்தில் நடைபெற இருக்கிறது, பொய்யாமணி, இனுங்கூர், குமாரமங்கலம், வதியம், கே. பேட்டை ஆகிய ஊராட்சிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு சென்று அன்று நடைபெறும் வாக்காளர் சேர்த்தல், நீக்கல் சிறப்பு முகாமில் முனைப்போடு செயல்பட்டு புதிய வாக்காளர்களை அதிக அளவில் சேர்க்க பாடுபட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    இதில் ஒன்றிய கவுன்சிலர் சந்திரமோகன், ஒன்றிய அவை தலைவர் செழியன், பொருளாளர் ரங்கநாதன், மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் ஜெகநாதன், பாஸ்கர், இளம் கதிர் மற்றும் தகவல் தொழில்நுட்பாடிய உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பிரதிநிதி லோகநாதன் நன்றி கூறினார்.

    • மிகவும் பழுதடைந்த சாலைகளை அப்பகுதி மக்கள் சீரமைக்க கோரிக்கை விடுத்தனர்.
    • புதியதாக தார் சாலை அமைப்பதற்கு பூமி பூஜை நடைபெற்றது.

    குளித்தலை

    கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளான பஞ்சப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பஞ்சபட்டியில் மிகவும் பழுதடைந்த சாலைகளை அப்பகுதி மக்கள் சீரமைக்க கோரிக்கை விடுத்தனர்.

    இதை தொடர்ந்து முதல்-அமைச்சர் கிராம சாலை மேம்பாடு திட்டம் 2022-23-ன் கீழ், ரூ.55.91 லட்சம் மதிப்பில் பஞ்சப்பட்டி அரசினர் மேல்நிலைப்பள்ளி முதல் தாதம்பட்டி வரை புதியதாக தார் சாலை அமைப்பதற்கு பூமி பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு குளித்தலை மாணிக்கம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார்.

    விழாவில், கிருஷ்ணராயபுரம் தி.மு.க. தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் கரிகாலன், பஞ்சப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சிவசக்தி சத்தியமூர்த்தி, கிருஷ்ணராயபுரம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கிஊ) சரவணன், குளித்தலை நகர பொருளாளர் தமிழரசன், பஞ்சப்பட்டி சந்திரசேகர், மற்றும் ஒப்பந்தகாரர் கட்சி முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்

    • கரூரில் மது போதை கலாச்சாரம் அதிகரித்துள்ளது.
    • தி.மு.க. அமைச்சர்கள் 35 பேரில் பாதி பேர் ஊழல்வாதிகளாக உள்ளனர்.

    கரூர்:

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் "என் மண் என் மக்கள்" என்ற பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் நடந்தது. கரூர் சட்டமன்றத் தொகுதி தான்தோன்றி மலை பகுதியில் நடந்த நடை பயணத்தின்போது அண்ணாமலை பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஊழல் இல்லாத ஒரு தமிழகத்தை உருவாக்குவதற்கு அனைவரும் பாடுபட வேண்டும். கரூர் மாவட்டத்தில் இருந்து நீட் தேர்வு மூலம் மருத்துவ படிப்பிற்கு மாணவர்கள் சென்றிருக்கிறார்கள். அவர்களிடம் அமைச்சர் உதயநிதி உட்கார்ந்து நீட் தேர்வு என்னவென்று கற்றுக்கொண்டால் பிரச்சனை வராது. கர்மவீரர் காமராஜர் மூடியிருந்த 12 ஆயிரம் பள்ளிகளை திறந்தார். புதிதாக 6 ஆயிரம் பள்ளிகளை உருவாக்கினார். 1954-ம் ஆண்டு முதல் 1963 -ம் ஆண்டு வரை 9 ஆண்டுகளில் 18 ஆயிரம் பள்ளிகளை திறந்தார். ஆனால் தி.மு.க. ஆட்சியில் குடிக்க சொல்கிறார்கள்.

    அரசியலுக்கு வரும்போது பூஜ்ஜியமாக இருந்த எ.வ. வேலு தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு இந்த 30 மாதங்களில் 2 மருத்துவக் கல்லூரிகளை திறந்து உள்ளார். இந்த மருத்துவ கல்லூரிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.

    அமைச்சர் செந்தில் பாலாஜி அவர் செய்த தவறுக்காக சிறையில் உள்ளார். கரூரில் மது போதை கலாச்சாரம் அதிகரித்துள்ளது. கரூர் எம்.பி. ஜோதிமணி வேடந்தாங்கல் பறவை போல பாராளுமன்ற தேர்தல் விரைவில் வர உள்ளதால் திடீரென்று சென்று மக்களை சந்தித்து போட்டோ சூட் நடத்துகிறார். 5 ஆண்டுகளில் கரூர் தொகுதிக்கு என்ன செய்தார் என்று ஜோதிமணி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

    தமிழகத்தில் மணல் கொள்ளைக்கு எதிராக செயல்படுபவர்கள் மீது அரிவாள் வெட்டு நடக்கிறது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல்துறை பா.ஜ.க. கொடிக்கம்பத்தை அகற்றுகிறார்கள். தி.மு.க . ஆட்சியில் காவல்துறையை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. அமைச்சர் துரைமுருகன் உட்பட தி.மு.க. அமைச்சர்கள் அனைவரும் அடுத்ததன் மீது ரெய்டு வந்து விடக்கூடாது என்று கோவில் கோவிலாக செல்கிறார்கள். தி.மு.க. அமைச்சர்கள் 35 பேரில் பாதி பேர் ஊழல்வாதிகளாக உள்ளனர். பாராளுமன்ற தேர்தலில் 400 எம்பிக்களுடன் மூன்றாவது முறையாக நரேந்திர மோடி ஆட்சியில் அமருவார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இரண்டாவது நாளாக இன்று சனிக்கிழமை கிருஷ்ணராயபுரம் மற்றும் குளித்தலை சட்டமன்ற தொகுதியில் அண்ணாமலை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    • புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே சாலை விபத்தில ஒருவர் பலி
    • வேன் டிரைவர் செல்வகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கறம்பக்குடி,  

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மலையூரை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 58). இவர் மலையூரில் எலக்ட்ரிகல்ஸ் மற்றும் அழகு சாதன பொருட்கள் விற்பனை நிலையம் நடத்தி வந்தார். இந்நிலையில் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக நடந்து சென்றார். அப்போது எதிரே வந்த சரக்கு வேன் இவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த பால் ராஜை ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பால்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வந்த புகாரின் பேரில் மழையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து வேன் டிரைவர் சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த வேன் டிரைவர் செல்வகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அறந்தாங்கி அருகே ரூ.45 லட்சத்தில் நலத்திட்ட பணிகள் தொடக்க விழா
    • அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு

    அறந்தாங்கி,  

    தமிழக அரசின் சார்பில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பல்வேறு நலத் திட்டப் பணிகள் செயல்ப டுத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ராஜேந்திரபுரம் ஊராட்சி யில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.45 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட பணிகள் தொடக்க விழா நடை பெற்றது.

    விழாவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்து பேசினார்.

    நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், மாவட்டக்குழு உறுப்பினர் சரிதாமேகராஜன், ஒன்றியக்குழு உறுப்பினர் செந்தமிழ்செல்வன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    பள்ளி வளாகத்தில் விஷ கதண்டுகள் அகற்றம்

    வேலாயுதம் பாளையம்,  

    கரூர் மாவட்டம் புகளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்புறம் மற்றும் பின்புறம் பல்வேறு வகையான மரங்கள் உள்ளது . அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பின்புறத்தில் இருந்த ஒரு பெரிய மரத்தில் ஆயிரக்கணக்கான விஷ கதண்டுகள் கூடு கட்டி இருந்தது. அந்த பகுதிக்கு செல்லும் மாணவர்களை தீண்டி அச்சுறுத்தி வந்தது . இது குறித்து தலைமை ஆசிரியை வளர்மதி புகளூர் தீயணைப்பு துறை நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மரத்தில் கூடு கட்டி இருந்த விஷக் கதண்டுகளை தண்ணீரை பீச்சி அடித்து அகற்றினார்.இதனால் பள்ளி மாணவர்கள் நிம்மதி அடைந்தனர்.

    • கரூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் வாக்காளர் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
    • ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

    வேலாயுதம்பாளையம்,  

    கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் முகவரி மாற்றம் குறித்த சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அரசு கல்வி நிறுவனங்களின் தலைவரும், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் துணைக் குழு உறுப்பினருமான நடேசன் தலைமை வகித்தார். தாளாளர் கோதை நடேசன், செயலாளர் என்ஜினீயர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை முதல்வர் ரதிதேவி வரவேற்றார்.முகாமிற்கு சிறப்பு விருந்தினர்களாக மண்மங்கலம் தாலுக்கா அலுவலக தனித்துணை வட்டாட்சியர் விஜயகுமார், தேர்தல் துணை வட்டாட்சியர் மணிவண்ணன், கிராம நிர்வாக அலுவலர் சாந்தி ஆகியோர் கலந்து கொண்டு மாணவிகளுக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் பெயர்நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான விவரங்களை படிவம்-6 -ன் மூலமாக விவரமாக எடுத்து கூறினார்கள். முகாமிற்காண ஏற்பாடுகளை கல்லூரியின் தேர்தல் பொறுப்பாளர் சம்பத்குமார் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

    • கரூர் மாவட்டம் புகளூர் தீயணைப்பு நிலையத்தில் மாவட்ட அதிகாரி ஆய்வு
    • வீரர்களின் வருகை பதிவேடு உள்ளிட்ட பல்வேறு கோப்புகளை ஆய்வு செய்தார்.

    வேலாயதம்பாளையம் 

    கரூர் மாவட்டம் புகளூர் தீயணைப்பு நிலையத்தில் கரூர் மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் வடிவேல் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கடந்த ஒரு வருடங்களில் புகளூர் தீயணைப்பு நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட மீட்பு பணிகள், தீயணைப்பு பணிகள், துணை மீட்பு பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்த பதிவுகள் உள்ள கோப்புகளை ஆய்வு செய்தார். அதேபோல் தீயணைப்பு வாகனத்தின் தன்மை, தீயணைப்பதற்கு பயன்படுத்தப்படும் குழாயின் தன்மை, ஒத்திகை பயிற்சியின் போது பயன்படுத்தப்படும் பொருட்களின் தன்மை மற்றும் தீயணைப்பு வீரர்களின் வருகை பதிவேடு உள்ளிட்ட பல்வேறு கோப்புகளை ஆய்வு செய்தார். ஆய்வின் போது தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் சரவணன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உடன் இருந்தனர்.

    • கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் அருகேதம்பதியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது
    • வழக்கு பதிவு செய்து கோபால், லோகநாதன், பூபதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    வேலாயுதம்பாளையம் 

    கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் அருகே பெருமாள் நகர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது36). மனைவி சுசீலா (33). இவர்கள் புன்னம் சத்திரம் ஒரு தனியாருக்கு சொந்தமான காம்ப்ளக்ஸ் முன்பு நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே அஞ்சூர் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்த கோபால்(32), புன்னம் சத்திரம் அருகே பிரேம் நகரை சேர்ந்த லோகநாதன் (50), எம்ஜிஆர் நகரை சேர்ந்த பூபதி (35) ஆகியோர் விஜயகுமாரையும் அவரது மனைவி சுசீலாவையும் தகாத வார்த்தைகளால் பேசியதுடன் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து வந்த புகாரின் பேரில் வேலாயுதம்பாளையம் சப் -இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து கோபால், லோகநாதன், பூபதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • கருந்தலைப்புழுவால் பாதித்ததென்னை விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரிகள் ஆலோசனை
    • 60-க்கும் மேற்பட்ட ஏக்கரில் தென்னை பயிர் செய்துள்ளனர்.

    வேலாயுதம் பாளையம், 

    கரூர் மாவட்டம் புகழூர் பகுதியில் விவசாயிகள் சுமார் 60-க்கும் மேற்பட்ட ஏக்கரில் தென்னை பயிர் செய்துள்ளனர். இந்நிலையில் தேங்காய் காய்த்த நிலையில் இலையில் கருந்தலைப்புழு தாக்கி தென்னை மரங்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. இது குறித்து தகவல் அறிந்து, புழுதேரியில் உள்ள வேளாண்மை அறிவியல் மைய பேராசிரியர் மற்றும் தலைவர் திரவியம், வேளாண் விஞ்ஞானி தமிழ்ச்செல்வன், புகழூர் நகராட்சி தலைவர் சேகர் என்கிற குணசேகரன், கரூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சண்முகசுந்தரம், வட்டார வேளாண்மை அலுவலர் ரேணுகாதேவி மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர் பார்வையிட்டனர். பின்னர் விவசாயிகளிடம் இரவு நேரங்களில் விளக்கு பொறி வைக்கும்படியும், அதேபோல் ஒட்டுண்ணிகளை தென்னை மரங்களில் விட வேண்டும் என்றும் இது போல் தொடர்ந்து செய்து வந்தால் கருத்தலை புழு தாக்குதல் பாதிப்பிலிருந்து தென்னை மரங்களை பாதுகாத்துக் கொள்ளலாம் என்று ஆலோசனைகளை வேளாண் துறை அதிகாரிகள் வழங்கினார்கள்.

    • அமைச்சர் எ.வ. வேலு தொடர்புடைய பல்வேறு இடங்களில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
    • 3 வாகனங்களில் வந்த சுமார் 10 அதிகாரிகள் 4 குழுக்களாக பிரிந்து சென்று துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    கரூர்:

    தமிழக பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தொடர்புடைய பல்வேறு இடங்களில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    அந்த வகையில் அமைச்சருக்கு தொடர்புடைய கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர் பகுதியில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் கரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் வாசுகி முருகேசனின் சகோதரி பத்மா வீட்டில் இன்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    மேலும் காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள அனைத்து அனெக்ஸ் சுரேஷ் என்பவருக்கு சொந்தமான நிதி நிறுவன அலுவலகம், வையாபுரி நகர் பகுதியில் அமைந்துள்ள அவரது வீடு ஆகிய இடங்களிலும், தோட்டக்குறிச்சி பகுதியில் உள்ள தி.மு.க. முன்னாள் சேர்மன் சக்திவேல் என்பவரது வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    3 வாகனங்களில் வந்த சுமார் 10 அதிகாரிகள் 4 குழுக்களாக பிரிந்து சென்று துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர் எ.வ.வேலு கரூரில் நிதிநிறுவனத்தில் முதலீடு செய்தது தொடர்பாக வெளியான தகவலின் பேரில் இந்த சோதனை நடந்ததாக தெரிகிறது.

    இந்த சோதனை கரூர் மாவட்டத்தில் கட்சியினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • வேட்டமங்கலம் வீட்டுக்குள் நல்ல பாம்பு புகுந்தது
    • தீயணைப்பு துறையினர் பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டனர்

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் நொய்யல் அருகே வேட்டமங்கலம் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் ஆனந்தராஜா. இவர் ஓட்டு வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் ஓட்டு வீட்டு விட்டத்தில் நல்ல பாம்பு ஒன்று இருந்து உள்ளது. அதை பார்த்த அனந்தராஜா இது குறித்து வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

    தகவலின் அடிப்படையில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று வீட்டுக்கு மேலே ஏறி பாம்பை தேடி பிடித்தனர். பின்னர் பாம்பு வனப்பகுதிக்குள் விடப்பட்டது.

    ×