search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கரூரில் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய 4 இடங்களில் வருமான வரித்துறை சோதனை
    X

    கரூரில் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய 4 இடங்களில் வருமான வரித்துறை சோதனை

    • அமைச்சர் எ.வ. வேலு தொடர்புடைய பல்வேறு இடங்களில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
    • 3 வாகனங்களில் வந்த சுமார் 10 அதிகாரிகள் 4 குழுக்களாக பிரிந்து சென்று துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    கரூர்:

    தமிழக பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தொடர்புடைய பல்வேறு இடங்களில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    அந்த வகையில் அமைச்சருக்கு தொடர்புடைய கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர் பகுதியில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் கரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் வாசுகி முருகேசனின் சகோதரி பத்மா வீட்டில் இன்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    மேலும் காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள அனைத்து அனெக்ஸ் சுரேஷ் என்பவருக்கு சொந்தமான நிதி நிறுவன அலுவலகம், வையாபுரி நகர் பகுதியில் அமைந்துள்ள அவரது வீடு ஆகிய இடங்களிலும், தோட்டக்குறிச்சி பகுதியில் உள்ள தி.மு.க. முன்னாள் சேர்மன் சக்திவேல் என்பவரது வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    3 வாகனங்களில் வந்த சுமார் 10 அதிகாரிகள் 4 குழுக்களாக பிரிந்து சென்று துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர் எ.வ.வேலு கரூரில் நிதிநிறுவனத்தில் முதலீடு செய்தது தொடர்பாக வெளியான தகவலின் பேரில் இந்த சோதனை நடந்ததாக தெரிகிறது.

    இந்த சோதனை கரூர் மாவட்டத்தில் கட்சியினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×