என் மலர்
உள்ளூர் செய்திகள்

தம்பதியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது
- கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் அருகேதம்பதியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது
- வழக்கு பதிவு செய்து கோபால், லோகநாதன், பூபதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வேலாயுதம்பாளையம்
கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் அருகே பெருமாள் நகர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது36). மனைவி சுசீலா (33). இவர்கள் புன்னம் சத்திரம் ஒரு தனியாருக்கு சொந்தமான காம்ப்ளக்ஸ் முன்பு நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே அஞ்சூர் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்த கோபால்(32), புன்னம் சத்திரம் அருகே பிரேம் நகரை சேர்ந்த லோகநாதன் (50), எம்ஜிஆர் நகரை சேர்ந்த பூபதி (35) ஆகியோர் விஜயகுமாரையும் அவரது மனைவி சுசீலாவையும் தகாத வார்த்தைகளால் பேசியதுடன் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து வந்த புகாரின் பேரில் வேலாயுதம்பாளையம் சப் -இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து கோபால், லோகநாதன், பூபதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story






