புகளூர் தீயணைப்பு நிலையத்தில் மாவட்ட அதிகாரி ஆய்வு

கரூர் மாவட்டம் புகளூர் தீயணைப்பு நிலையத்தில் மாவட்ட அதிகாரி ஆய்வு வீரர்களின் வருகை பதிவேடு உள்ளிட்ட பல்வேறு கோப்புகளை ஆய்வு செய்தார்.
புகளூர் தீயணைப்பு நிலையத்தில் மாவட்ட அதிகாரி ஆய்வு
Published on

வேலாயதம்பாளையம் 

கரூர் மாவட்டம் புகளூர் தீயணைப்பு நிலையத்தில் கரூர் மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் வடிவேல் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கடந்த ஒரு வருடங்களில் புகளூர் தீயணைப்பு நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட மீட்பு பணிகள், தீயணைப்பு பணிகள், துணை மீட்பு பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்த பதிவுகள் உள்ள கோப்புகளை ஆய்வு செய்தார். அதேபோல் தீயணைப்பு வாகனத்தின் தன்மை, தீயணைப்பதற்கு பயன்படுத்தப்படும் குழாயின் தன்மை, ஒத்திகை பயிற்சியின் போது பயன்படுத்தப்படும் பொருட்களின் தன்மை மற்றும் தீயணைப்பு வீரர்களின் வருகை பதிவேடு உள்ளிட்ட பல்வேறு கோப்புகளை ஆய்வு செய்தார். ஆய்வின் போது தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் சரவணன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com