என் மலர்tooltip icon

    கரூர்

    • மொத்தம் ரூ.1 கோடியே 36 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி பணிகளை அரவக்குறிச்சிஎம்.எல்.ஏ. மொஞ்சனூர் பி.ஆர். இளங்கோ தொடங்கி வைத்தார்.
    • துணைத்தலைவர்கள், மேற் வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர்கள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    கரூர்

    க.பரமத்தி ஒன்றிய பகுதியில் நபார்டு திட்டத்தின் கீழ் தென்னிலை மேற்கு ஊராட்சி சின்ன வாங்கலாம்பாளையம் முதல் சின்னதோட்டம்புதூர் வரை ரூ.46 லட்சத்திலும், கோடந்தூர் ஊராட்சி கோடந்தூரில் இருந்து சின்ன குமாரவலசு வரை ரூ.46 லட்சத்திலும், ஆனந்தகுட்டை முதல் வடகரை வரை ரூ. 39 லட்சத்து 61 ஆயிரத்தில் தார் சாலைகள், துக்காச்சி ஊராட்சியில் ரூ.25 லட்சத்தில் சமுதாய கூடம், மொஞ்சனூர் ஊராட்சி வைரமடையில், ரூ.16 லட்சத்தில் பவர் பிளாக் அமைக்கும் பணிகளுக்கு பூஜை நடைபெற்றது. மொத்தம் ரூ.1 கோடியே 36 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி பணிகளை அரவக்குறிச்சிஎம்.எல்.ஏ. மொஞ்சனூர் பி.ஆர். இளங்கோ தொடங்கி வைத்தார்.

    இதில் மாவட்ட கவுன்சிலர் நெடுங்கூர் கார்த்தி, வட் டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி (ஊராட்சிகள்), தென்னிலை மேற்கு ஊராட்சி மன்றத்த லைவர் சொர்ணலதா கார்த்திகேயன், கோடந்தூர் ஊராட்சி பிளாக் மன்றத்த லைவர் உமாமகேஸ்வரி, துணைத்தலைவர்கள், மேற் வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர்கள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் சிறப்புவாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் முகாம் நடைபெற்றது.
    • சிறப்பு சுருக்க முறை திருத்தம் முகாம் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்றது.

    வேலாயுதம்பாளையம்

    கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் சிறப்புவாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் முகாம் நடைபெற்றது.

    சேமங்கி அரசு தொடக்கப்பள்ளி, குளத்துப்பாளையம் அரசு தொடக்கப்பள்ளி, வேட்டமங்கலம் அரசு தொடக்கப்பள்ளி, குந்தாணி பாளையம் அரசு தொடக்கப்பள்ளி, குறுக்குச்சாலை அண்ணாநகர் அரசு தொடக்கப்பள்ளி, நொய்யல் ஈவேரா பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி, ஓலப்பாளையம் அரசு தொடக்கப்பள்ளி, நடையனூர் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப்பள்ளி, கரைப்பாளையம் அரசு தொடக்கப்பள்ளி, இளங்கோ நகர்

    அரசு உதவி பெறும் ஆரம்பப் பள்ளி, தவுட்டுப்பாளையம் அரசு நடுப்பள்ளி, கூலக்கவுண்டனூர் அரசு தொடக்கப்பள்ளி, நன்செய் புகளூர் அரசு தொடக்கப்பள்ளி, வேளாண்மை அலுவலகம், காந்தியார் நடுநிலைப்பள்ளி, புகளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, புகளூர் சர்க்கரைஆலை பள்ளி, புன்னம் சத்திரம் அரசு ஆரம்பப்பள்ளி மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் 2-வது நாளாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் முகாம் நடைபெற்றது.

    முகாமில் பெயர் சேர்த்தல் ,பெயர் நீக்குதல், முகவரி திருத்தம் மற்றும் பல்வேறு திருத்தம் செய்தல் போன்றவை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல் ,முகவரி மாற்றம் மற்றும் பல்வேறு திருத்தங்கள் தொடர்பான படிவங்களை பூர்த்தி செய்து அதனுடன் முகவரி, வயது போன்ற அடையாளத்திற்கான படிப்பு சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், ஆதார் ஆகிய நகல்கள் அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களிடம் வழங்கினார்கள். சிறப்பு சுருக்க முறை திருத்தம் முகாம் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்றது.

    • ஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு காலபைரவர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    வேலாயுதம் பாளையம்

    கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் அருகே நன்செய் புகளூரில் உள்ள பாகவல்லி அம்பிகை சமேத மேகபாலீஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் காலபைரவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காலபைரவர், பாகவல்லி அம்பிகை சமேத மேகபாலீஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    அதேபோல் புன்னம் சத்திரம் அருகே புன்னம் பகுதியில் உள்ள புன்னைவனநாதர் உடனுறை புன்னைவன நாயகி கோவிலில் உள்ள காலபைரவர் ,திருக்காடுதுறை மாதேஸ்வரி அம்பிகை உடனுறை மாதேஸ்வரன் கோவிலில் உள்ள காலபைரவர் ,குந்தாணிபாளையம் நத்தமேடு ஈஸ்வரன் கோவிலில் உள்ள காலபைரவர் மற்றும் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் சிவன் கோவில்களில் ஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது .

    இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு காலபைரவர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • 3வது நாளாக பத்மா, சுரேஷ், சக்திவேல் ஆகியோரது வீடு மற்றும் அலுவலகங்களில் காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
    • சோதனையின் போது துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படை வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    கரூர்:

    தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய 80 இடங்களில் நேற்று முன்தினம் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினர். அந்த வகையில் கரூரில் அமைச்சர் அந்த அமைச்சருக்கு தொடர்புடையதாக கருதப்படும் கரூர் பெரியார் நகர் பகுதியில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் கரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் வாசுகி முருகேசனின் சகோதரி பத்மா வீடு, காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள அனெக்ஸ் சுரேஷ் என்பவரின் நிதி நிறுவனம், மகாத்மா காந்தி சாலையில் உள்ள அவரது வீடு, புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சி முன்னாள் தி.மு.க. கவுன்சிலர் சக்திவேல் வீடு ஆகிய 4 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    இந்த சோதனை நள்ளிரவு வரை நீடித்தது. அதன் பின்னர் நேற்று மீண்டும் மேற்கண்ட 4 இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடந்தது. தொடர்ச்சியாக இன்று (ஞாயிற்றுக்கிழமை)3வது நாளாக பத்மா, சுரேஷ், சக்திவேல் ஆகியோரது வீடு மற்றும் அலுவலகங்களில் காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சோதனையின் போது துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படை வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    • பைக்கை அதிவேகமாக ஒட்டி வந்து பொக்லின் வாகனத்தின் பின்னால் மோதியதில் அவருக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.
    • ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .

    வேலாயுதம் பாளையம்

    கரூர் மாவட்டம் நொய்யல் அருகே குறுக்குச்சாலை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் விவேக்(32). இவர் பொக்லின் டிரைவர் . இந்நிலையில் இவர் தனக்கு சொந்தமான பொக்லின் வாகனத்தை கரூர் -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஓரமாக ஓட்டி சென்று கொண்டிருந்தார். அப்போது மலையம்பாளையம் பிரிவு சுடுகாடு அருகே சென்று கொண்டிருந்தபோது அதே சாலையில் ஜேசிபி இயந்திரத்திற்கு பின்னால் அதிவேகமாக வந்த செம்மடையை சேர்ந்த பேக்கரி உரிமையாளர் விக்னேஷ்(23) என்பவர் மோட்டார் பைக்கை அதிவேகமாக ஒட்டி வந்து பொக்லின் வாகனத்தின் பின்னால் மோதியதில் அவருக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அது பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பொக்லின் வாகனத்தின் டிரைவர் விவேக் வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகோபால் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    • கரூர் மாவட்டம், குளித்தலை தொகுதி, தோகை மலையில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை பாத யாத்திரை நடைபெற்றது.
    • பின்னர் பொதுமக்கள் மத்தியில் திறந்தவெளி வேனில் நின்றவாறு கொட்டும் மழையில் பேசினார்

    கரூர்

    கரூர் மாவட்டம், குளித்தலை தொகுதி, தோகை மலையில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை பாத யாத்திரை நடைபெற்றது.

    முன்னதாக தோகைமலை மணப்பாறை மெயின் ரோட்டில் பாளையம் பிரிவு சாலையில் இருந்து தோகைமலை பஸ் நிலையம் வரை அண்ணாமலை பாதயாத்திரை வந்தார். அப்போது மேளதாளம் முழங்க, கரகாட்டம், ஒயிலாட்டம் மற்றும் மகளிர் அணி சார்பாக மலர்கள் தூவப்பட்டு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பின்னர் பொதுமக்கள் மத்தியில் திறந்தவெளி வேனில் நின்றவாறு கொட்டும் மழையில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது,

    தி.மு.க. ஆட்சிக்கு வரும் முன்பு 513 வாக்குறுதிகளை அளித்து 20 சதவீத வாக்குறுதி கூட நிறைவேற்றாமல் ஏமாற்றி வருகிறது. கருணாநிதியின் முதல் தொகுதி குளித்தலை. அப்போது, தேர்தல் வாக்குறுதியாக கொடுத்து குடகனாறு மூலமாக தோகைமலை பகுதிக்கு தண்ணீர் கொண்டு வருவேன் என்று கூறினார். தற்போது வரை அதை செய்யவில்லை. அதேபோல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் கொடுத்த வாக்குறுதிகள் 20 சதவீதம் கூட செய்து முடிக்கவில்லை.

    ஏழை மக்களுக்கு எதிராக தி.மு.க. ஆட்சி நடத்தி வருகிறது. மக்கள் பணத்தை தி.மு.க. கொள்ளை அடித்து வருகிறது. இன்று அமைச்சர் எ.வ.வேலு கண்டக்டராக தொடங்கிய வாழ்க்கை தற்போது பல ஆயிரம் கோடிக்கு அதிபதியாக மருத்துவக் கல்லூரி முதற்கொண்டு அனைத்து கல்லூரிகள் நடத்தி வருகிறார். எங்கிருந்து சம்பாதித்தார். தற்போது உள்ள அமைச்சர்கள் அனைவரும் எப்படி இவ்வளவு சொத்துக்களை சேர்த்தார்கள்.

    கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு குளித்தலை தொகுதியில் முதல்-அமைச்சர்மு.க.ஸ்டாலின் செந்தில்பாலாஜி அவரது சகோதரர் ஊழல்வாதிகள் என்று கூறி அவர்கள் விரைவில் சிறைக்கு செல்வார்கள் என்று பேசினார்.தமிழகத்திலே 3-வது பெரிய ஏரி பஞ்சபட்டி ஏரி. சுமார் 1356 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியில், அந்த ஏரியின் மூலமாக 15,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பயனடைவர்.

    காவிரியில் இருந்து தண்ணீரை கொண்டு வந்து ஏரியில் நிரப்பி விவசாயிகள் பயனடையும் வகையில் வாக்குறுதி அளித்த தி.மு.க. அரசு செய்யவில்லை. அதற்கு பதிலாக டாஸ்மாக்கில் தண்ணீராக ஓடும் நிலைக்கு திமுக அரசு தள்ளியுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் குடும்பத்திற்காக ஆட்சியை நடத்தி வருகிறார்.பிரதமர் மோடி இந்தியா முழுவதும் உள்ள மக்களே குடும்பம் என அவர்களுக்காக ஆட்சி நடத்தி வருகிறார். அவருக்கு எதிராக தற்போது 26 கட்சிகள் இந்தியா கூட்டணி என அமைத்து குரங்கு கையில் பூமாலை கிடைத்தது போல் அனைத்து கட்சிகளும் அந்த மாலை யாருக்கு விழும் என நினைத்து இருக்கிறார்கள். அப்படி நினைத்தால் ஒவ்வொருத்தரும் பூவை பிச்சி எடுப்பது போல் இந்தியா நாடு ஆகிவிடும். இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் கரூர் மாவட்ட பா.ஜனதா தலைவர் வி.வி.செந்தில்நாதன், மாநில மகளிரணி துணைத்தலைவர் மீனா வினோத்குமார், குளித்தலை நகரத்தலைவர் கணேசன், மாவட்ட செயலாளர்கள் செல்வராஜ், சக்திவேல், மாநில விவசாய அணி செயலாளர் செந்தில்குமார், மாவட்ட துணைச்செயலாளர் செல்வம், தோகைமலை மேற்கு ஒன்றிய பா.ஜனதா தலைவர் ராஜ்குமார், கிழக்கு ஒன்றிய தலைவர் ராஜா பிரதீப், தெற்கு மாநகர தலைவர் ரவி, கவுன்சிலர் சரண்யா, கட்சி நிர்வாகிகள், தொண் டர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய 80 இடங்களில் நேற்று முன்தினம் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினர்
    • இன்று(ஞாயிற்றுக்கிழமை)3வது நாளாக பத்மா,சுரேஷ்,சக்திவேல் ஆகியோரது வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று காலை முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    கரூர்

    தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய 80 இடங்களில் நேற்று முன்தினம் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினர். அந்த வகையில் கரூரில் அமைச்சர் அந்த அமைச்சருக்கு தொடர்புடையதாக கருதப்படும் கரூர் பெரியார் நகர் பகுதியில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் கரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் வாசுகி முருகேசனின் சகோதரி பத்மா வீடு, காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள அனெக்ஸ் சுரேஷ் என்பவரின் நிதி நிறுவனம், மகாத்மா காந்தி சாலையில் உள்ள அவரது வீடு, புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சி முன்னாள் தி.மு.க. கவுன்சிலர் சக்திவேல் வீடு ஆகிய 4 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    இந்த சோதனை நள்ளிரவு வரை நீடித்தது. அதன் பின்னர் நேற்று மீண்டும் மேற்கண்ட 4 இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடந்தது. தொடர்ச்சியாக

    இன்று(ஞாயிற்றுக்கிழமை)3வது நாளாக பத்மா,சுரேஷ்,சக்திவேல் ஆகியோரது வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று காலை முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.இந்த சோதனையின் போது துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படை வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

    • திடீரென 3 கார்களில் 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் திருச்சியில் இருந்து வந்து திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
    • . தொடர்ந்து 2-வது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி விசாரணை நடத்தியது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வேலாயுதம்பாளையம்

    கரூர் மாவட்டம் புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சியில் கடந்த2006-2011 ஆம் ஆண்டில் தி.மு.க. கவுன்சிலராக இருந்தவர் தொழில் அதிபர் சக்திவேல். இவரது வீட்டிற்கு நேற்று முன்தினம் காலை7.30 மணி அளவில் திடீரென 3 கார்களில் 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் திருச்சியில் இருந்து வந்து திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு பாதுகாப்பாக துப்பாக்கி ஏந்திய 3 மத்திய ரிசர்வ் படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இரவு 7 மணி வரை சுமார் 12 மணி நேரம் சோதனை நடைபெற்றது. அதன் பிறகு வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வை முடித்து விட்டு புறப்பட்டனர்.

    நள்ளிரவு 2 மணி அளவில் 3-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சக்திவேலின் வீட்டுக்கு வந்தனர். பின்னர் இரவு முழுவதும் விசாரணை நடத்தினர்.பகல் 11.30 மணியளவில் வெளியில் சென்ற அதிகாரிகள் பகல் 12.30 மணி அளவில் மீண்டும் சோதனை மற்றும் விசாரணை நடத்தினர் .

    நேற்று நள்ளிரவு வரை சோதனை நீடித்தது. துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து 2-வது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி விசாரணை நடத்தியது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் முகாம் நடைபெற்றது.
    • முகாமில் பெயர் சேர்த்தல் ,பெயர் நீக்குதல், முகவரி திருத்தம் மற்றும் பல்வேறு திருத்தம் செய்தல் போன்றவை நடைபெற்றது.

    வேலாயுதம் பாளையம்

    கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டார பகுதி களில் உள்ள வாக்குச்சாவடிகளில் நேற்று வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் முகாம் நடைபெற்றது. முகாமில் பெயர் சேர்த்தல் ,பெயர் நீக்குதல், முகவரி திருத்தம் மற்றும் பல்வேறு திருத்தம் செய்தல் போன்றவை நடைபெற்றது.

    இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த வாக்காளர்கள் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல் ,முகவரி மாற்றம் மற்றும் பல்வேறு திருத்தங்கள் தொடர்பான படிவங்களை பூர்த்தி செய்து அதனுடன் முகவரி, வயது போன்ற அடையாளத்திற்கான படிப்பு சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், ஆதார் ஆகிய நகல்கள் அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களிடம் வழங்கினார்கள்.

    சிறப்பு சுருக்க முறை திருத்தம் முகாம் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்றது. இன்றும் இந்த முகாம் நடைபெறுகிறது.

    • பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக தண்ணீர் நிறுத்துவது குறித்து விவசாயிகளுடனான ஆலோசனைக் கூட்டம் புகழிமலை அடிவாரத்தில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் நகராட்சி துணைத் தலைவர் பிரதாபன் மற்றும் புகழூர் வாய்க்கால் பாசன விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    வேலாயுதம்பாளையம்

    கரூர் மாவட்ட பொதுப்பணித் துறையின் நீர்வளத் துறை சார்பில் புகளூர் வாய்க்கால் மற்றும் பாபுலர் முதலியார் வாய்க்காலில் பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக தண்ணீர் நிறுத்துவது குறித்து விவசாயிகளுடனான ஆலோசனைக் கூட்டம் வேலாயுதம்பாளையம் புகழிமலை அடிவாரத்தில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு புகழூர் நகராட்சித் தலைவர் சேகர் குணசேகரன் தலைமை வைத்தார். குளித்தலை நீர்வளத்துறையின் ஆற்றுப் பாதுகாப்பு கோட்ட உதவி செயற்பொறியாளர் சிங்காரவேல் முன்னிலை வைத்தார். நீர்வளத்துறை ஆற்றுப் பாதுகாப்பு பிரிவு உதவி பொறியாளர் கார்த்திக் வரவேற்றார்.

    நொய்யல் முதல் வாங்கல் வரை பாயும் விவசாய பாசன வாய்க்கால்களான புகழூர் வாய்க்கால், பாப்புலர் முதலியார் வாய்க்கால்களில் மதகுகள் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக விவசாயிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டது.

    அப்போது நீர்வளத்துறை அதிகாரிகள் தீபாவளி பண்டிகை முடிந்தவுடன் புகழூர் வாய்க்கால் மற்றும் பாபுலர் முதலியார் வாய்க்காலில் பராமரிப்பு பணிக்காக பாசனத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீர் நிறுத்தப்படும். அதன் பின்னர் புகழூர் மற்றும் பாப்புலர் வாய்க்கால்களில் மதகுகள் மற்றும் பல்வேறு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தனர்.

    அதற்கு விவசாயிகள் தற்பொழுது பாசனத்திற்கு விடப்பட்டுள்ள தண்ணீரை நிறுத்தினால் விவசாய பயிர்கள் கருகும் நிலை ஏற்படும் அதனால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்படுவார்கள்.

    எனவே வரும் மே , ஜூன் மாதங்களில் புகழூர் மற்றும் பாபுலர் முதலியார் வாய்க்காலில் தண்ணீரை நிறுத்திவிட்டு பணிகளை மேற்கொள்ளலாம் என்று ஆலோசனைகளை தெரிவித்தனர்.

    கூட்டத்தில் நகராட்சி துணைத் தலைவர் பிரதாபன் மற்றும் புகழூர் வாய்க்கால் பாசன விவசாயிகள் கலந்து கொண்டனர்.


    • மொத்தம் 80 இடங்களில் சோதனை நடந்து வருகிறது.
    • அப்போது அவர்களுக்கு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    நொய்யல்

    தமிழக பொதுப் பணித்துறை அமைச்சராக இருப்பவர் எ.வ.வேலு. இவரது வீடு, கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் நேற்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மொத்தம் 80 இடங்களில் சோதனை நடந்து வருகிறது.

    அந்த வகையில் கரூரிலும் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது புஞ்சை தோட்டக்குறிச்சியில் தி.மு.க. பிரமுகரான முன்னாள் கவுன்சிலர் சக்திவேல் வீட்டிலும் வருமானவரித்துறையினர் இரவு வரை சோதனை நடத்தினர்.

    3 கார்களில் காலை 7.30 மணிக்கு வந்த அதிகாரிகள் சுமார் 12 மணி நேரத்துக்கும் மேலாக சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்களுக்கு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதே போல் கரூர் மாவட்டத்தில் மேலும் 3 இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

    கரூர் மாவட்டத்தில் 4 இடங்களில் நடந்து வந்த வருமான வரித்துறை சோதனை இரவும் நீடித்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கருத்துக் கேட்பு கூட்டம் குப்பம் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்ட பத்தில் நடைபெற்றது.
    • கல் குவாரிக்கான திட்ட அறிக்கையில் சரியான தகவல்களை அதிகாரிகள் தயார் செய்து கொடுக்க வேண்டும் என்றார்.

    வேலாயுதம்பாளையம்

    கரூர் மாவட்டம் நொய் யல் அருகே குப்பம் மற்றும் வேட்டமங்கலம் இடங்களில் கல்குவாரி அமைக்க திட்டமி டப்பட்டு ள்ளது. இதற்கான கருத்துக் கேட்பு கூட்டம் குப்பம் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்ட பத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு தனி துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சைபுதீன் தலைமை வகித்தார். மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அதி காரி ஜெயலட்சுமி முன் னிலை வகித்தார்.

    கூட்டத்தில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப் புத்துறை அதிகாரிகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் முகிலன், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை பதிவு செய்த னர்.

    சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் முகிலன் பேசும் போது,

    கரூர் மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்கு வாரிகள் செயல்பட்டு வரு கிறது. மாவட்டத்தில் செயல் படும் ஒரு சில கல்குவாரி களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 50 மடங்கு கூடுதலாக வெட்டி எடுக்கப் பட்டு வருவதை அதிகா ரிளால் கண்டறியப்பட்டுள் ளது.

    கல்குவாரிகளில் வெடி வெடிப்பதற்கான நேரத்தை பின் பின்பற்றுவது கிடை யாது. கல்குவாரிகளில் போர்டு வைக்க வேண்டும் ஆனால் அவற்றை பல்வேறு கல் குவாரி நிறுவனங்கள் செயல்படுத்துவது இல்லை.

    பரமத்தி ஒன்றியம் முழு வதும் சட்ட விரோ தமாக இயங்கும் கல்கு வாரிகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டிய மாவட்ட நிர்வாகம் வேடிக்கை பார்த்து வருகிறது.

    சுருக்க அறிக்கையில் முழுமையான விபரங்கள் எதுவும் இல்லை. கல் குவாரிக்கான திட்ட அறிக்கையில் சரியான தகவல்களை அதிகாரிகள் தயார் செய்து கொடுக்க வேண்டும் என்றார்.

    ×