என் மலர்tooltip icon

    கரூர்

    • தீபாவளி பண்டிகை யை பாதுகாப்புடன் கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
    • இதில் பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    வேலாயுதம் பாளையம்

    கரூர் மாவட்டம் புகளூர் தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை சார்பில் தீபாவளி பண்டிகை யை பாதுகாப்புடன் கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

    பயிற்சியில் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு மாணவ ,மாணவிகள் மற்றும் பொது மக்களுக்கு விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி னார்கள். அப்போது சிறுவர்கள் பட்டாசு வெடிக்கும் போது பெற்றோ ர்கள் முன்னிலை யில் வெடிக்க வேண்டும். பட்டாசு மற்றும் புஸ்வா னங்கள் வெடிக்கும் போது காலணி அணிய வேண்டும். பட்டாசுகளை மைதா னங்கள் மற்றும் சமதளத்தில் வைத்து வெடிக்க வேண்டும்.

    பட்டாசு மற்றும் புஸ்வானங்கள் வெடிக்கும் போது அருகில் தண்ணீர் வாளி வைத்திருக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும் போது நீண்ட வத்திக்குச்சிகளை வைத்து பட்டாசுகளின் பக்கவாட்டில் சற்று தொலைவில் நின்று கொண்டு பற்றவைக்க வேண்டும். பட்டாசு மற்றும் புஸ்வா னங்கள் பயன்படுத்து ம் போது இறுக்கமான ஆடைகள் மற்றும் பருத்தி ஆடைகளை அணிந்திருக்க வேண்டும்.

    உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை தெரி வித்து துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதேபோல் பட்டாசு வெடிப்பது குறித்த ஒத்திகை பயிற்சி நடைபெற்ற து. இதில் பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.
    • வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ. 30லட்சத்து38 ஆயிரத்து 150-க்கு விற்பனையானது.

    வேலாயுதம்பாளையம்

    சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.

    இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், க.பரமத்தி சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் தங்களது தோட்டத்தில் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனை செய்வதற்காக கொண்டு செல்கின்றனர். இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பிரபல எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு தங்களுக்கு கட்டுபடியாகும் விலைக்கு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

    தேங்காய்

    இந்த வாரம் நடந்த ஏலத்தில் 57.97 1/2 குவிண்டால் எடை கொண்ட 16ஆயிரத்து 255 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் தேங்காய் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.27.10-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.22.88-க்கும், சராசரி விலையாக ரூ.26.60-க்கும் என மொத்தம் ரூ.1 லட்சத்து 42ஆயிரத்து 479-க்கு விற்பனையானது.

    தேங்காய் பருப்பு

    அதேபோல் 363.49 1/2 குவிண்டால் எடை கொண்ட 765-மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.86.49-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.78.99-க்கும், சராசரி விலையாக ரூ.85.89-க்கும் விற்பனையானது.

    2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.84.36-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.64.68-க்கும், சராசரி விலையாக ரூ.80.89-க்கும் என மொத்தம் ரூ.28 லட்சத்து95ஆயிரத்து671-க்கு விற்பனையானது. சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ. 30லட்சத்து38 ஆயிரத்து 150-க்கு விற்பனையானது.

    • பல்வேறு பகுதிக ளில் இரவு சுமார் 8.30 மணிக்கு மேல் திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.
    • இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    வேலாயுதம்பாளையம்

    கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம், கந்தம்பாளையம், மூர்த்தி பாளையம் ,கடம்பங்குறிச்சி, வாங்கல், நெரூர், நொய்யல், மரவாபாளையம், சேமங்கி ,முத்தனூர், கோம்புப்பா ளையம்,

    பேச்சிப்பாறை, நடையனூர், திருக்காடுதுறை, நத்தமேட்டுப்பாளையம்,கட்டிபாளையம், தவுட்டுப்பா ளையம் பாலத்துறை, நன்செய் புகளூர், கந்தம்பாளையம், ஓலப்பா ளையம் ,ஒரம்புப்பாளையம், நல்லிக்கோயில் ,தளவாபா ளையம், தோட்டக்குறிச்சி ,புகழிமலை, காகிதபுரம், மூர்த்திபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிக ளில் இரவு சுமார் 8.30 மணிக்கு மேல் திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.

    அதனைத் தொடர்ந்து இடி மின்னலுடன் மழை சற்று வேகமாக பெய்ய ஆரம்பித்து மழை தொ டர்ந்து விடிய விடியபெய்தது .இதன் காரணமாக சாலை வழியாக சென்று கொண்டி ருந்த இருசக்கர வாகன ஓட்டிகள் , பொதுமக்கள் நனைந்து கொண்டு அவ திப்பட்டு சென்றனர் . அதேபோல் சாலையோரம் போடப்பட்டிருந்த அனைத்து கடைக்கா ரர்களும் வியாபாரம் செய்ய முடியா மல் அவதிப்பட்டனர். அதேபோல் தொடர் மழையின் காரணமாக சாலைகளின் ஓரங்களில் மழை நீர் தேங்கி நிற்கிறது.

    இதன் காரணமாக பெரிய வாகனங்கள் வேகமாக செல்லும்போது வாகனத்தின் டயர்கள் மழை நீரில் பட்டு இரு சக்கர வாகன ஓட்டிகள் மீது மழை நீரை தெளித்து வருகிறது. இதனால் வெளியூர்களுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் டயர்களில் இருந்து படும் தண்ணீரால் நனைந்து கொண்டே சென்று அவதிப்பட்டு செல்கின்ற னர்.

    தொடர்ந்து வெயில் வாட்டி வதைத்த நிலையில் பெய்து வரும் மழையின் காரணமாக வெப்ப சீதோசன நிலை மாறி குளிர்ச்சியான சீதோசன நிலை ஏற்பட்டுள்ளது .கடும் வெயிலின் காரணமாக பயிர்கள் வாடிய நிலையில் இருத்தது. பெய்து வரும் மழையின் காரணமாக பயிர்கள் துளிர் விட்டு தழைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மழையின் காரணமாக வாகன ஓட்டிகள், பொது மக்கள், அவதிப்பட்டனர். தொடர் மழையின் காரண மாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே சேமங்கி மாரியம்மன் கோவில் உள்ளது.
    • மங்களநாதர் சிலைகள் வைக்கப்பட்டு அதற்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் பூஜைகள் நடை பெற்றது.

    வேலாயு தம்பாளையம்

    கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே சேமங்கி மாரியம்மன் கோவில் உள்ளது. அதன் அருகே கமலாம்பிகை உடனமர் அருள்நிறை மங்களநாதர் சிலைகள் வைக்கப்பட்டு அதற்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் பூஜைகள் நடை பெற்றது.

    சிறப்பு அபிஷேக ஆராதனையை முன்னிட்டு சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்தக் குடங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக தீர்த்தக்குடங்களுடன் கோவிலை வந்தடைந்தனர். அதனைத் தொடர்ந்து கமலாம்பிகை உடனமர் அருள் நிறை மங்களநாதர் சாமிகளுக்கு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் கமலாம்பிகை உடனமர் மங்களநாதர் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட னர்.

    • இவர், வாட்டர் ஹீட்டர் மூலம் தண்ணீரை சூடுப்படுத்து முயன்றார்.
    • இதில், தூக்கி எறியப்பட்ட, கிருஷ்ணவேணி, ஆபத்தான நிலையில், கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

    கரூர

    கரூர் மாவட்டம் வெள்ளியணை அடுத்துள்ள பெரியவ ரப்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி(வயது 29). இவர், வாட்டர் ஹீட்டர் மூலம் தண்ணீரை சூடுப்படுத்து முயன்றார். அப்போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உள்ளது. இதில், தூக்கி எறியப்பட்ட, கிருஷ்ணவேணி, ஆபத்தான நிலையில், கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து உறவினர்கள் புகாரின் பேரில், வெள்ளியணை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள வை.புதூர் வாய்க்கால் கரையில் சேவல் சண்டை நடப்பதாக குளித்தலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கரூர்

    கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள வை.புதூர் வாய்க்கால் கரையில் சேவல் சண்டை நடப்பதாக குளித்தலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் அந்த பகுதியில் சேவல் சண்டையில் ஈடுபட்ட குளித்தலை எலிமெண்டரி ஸ்கூல் தெருவை சேர்ந்த சிலம்பரசன் (வயது 31), மருதூர் குடித்தெருவை சேர்ந்த லோகேஷ் (30) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    • கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஷியா சுரேஷ் தலைமையில், போலீசார் பாலவிடுதி, வாங்கல் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • 9 பேரை, மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    கரூர்

    கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஷியா சுரேஷ் தலைமையில், போலீசார் பாலவிடுதி, வாங்கல் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சட்ட விரோதமாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த, 58 மது பாட்டில்களை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், மதுபாட்டில்களை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்ததாக மருதாயி (வயது 39), பாஸ்கர் (43), நீலமணி (25), கோவிந்தராஜ் (51), ஹானஸ்ட் ராஜா (23), துரைசாமி (40), திலகவதி (50), ராமச்சந்திரன் (47), குமார் (47) உள்பட 9 பேரை, மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • குளித்தலை அடுத்த, கூடலுார் பஞ்சாயத்து, பேரூர் கடை வீதியில் தனியார் கட்டிடத்தில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது.
    • அதிகாரிகள் பேச்சுவார்த்தையால், டாஸ்மாக் கடை இடமாற்றம் செய்யப்பட்டு, பேரூர் கள்ளை நெடுஞ்சாலையில் புதிய கட்டிடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.

    கரூர்

    குளித்தலை அடுத்த, கூடலுார் பஞ்சாயத்து, பேரூர் கடை வீதியில் தனியார் கட்டிடத்தில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது. இங்கு மதுவாங்கி குடிப்பவர்கள், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு செய்து வந்தனர்.

    இந்நிலையில் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என பொது மக்கள், பா.ஜ., மக்கள் பிரதிநிதிகள் சார்பில் கடை முற்றுகை, கடைஅடைப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தையால், டாஸ்மாக் கடை இடமாற்றம் செய்யப்பட்டு, பேரூர் கள்ளை நெடுஞ்சாலையில் புதிய கட்டிடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. மாவட்ட நிர்வாகத்திற்கு பஞ்., நிர்வாகம் மற்றும் பா.ஜ.,வினர், பொது மக்கள் நன்றி தெரிவித்தனர்.

    • இவர் மேட்டு மருதூரில் துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மருதூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார்.
    • அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் லோகாம்பாள் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை அறுத்து தப்பி சென்று விட்டார்.

    கரூர்

    கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேல தண்ணீர் பள்ளியைச் சேர்ந்தவர் துரைராஜ். இவரது மனைவி லோகாம்பாள் (வயது 60). விவசாயி. இவர் மேட்டு மருதூரில் துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மருதூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அவ்வழியே பைக்கில் பின் தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் லோகாம்பாள் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை அறுத்து தப்பி சென்று விட்டார். இதுகுறித்து லோகாம்பாள் கொடுத்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கரூர் மாவட்டத்தில் நான்கு இடங்களில் வருமான வரி சோதனை தொடங்கின.
    • தொடர்ந்து நள்ளிரவு வரை சுரேஷ் என்பவரின் நிதி நிறுவனம் மற்றும் அவரது வீடு ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்றது.

    கரூர்:

    அமைச்சர் எ.வ.வேலுக்கு தொடர்புடைய இடங்களில் 3-ம் தேதி தொடங்கிய சோதனை பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டத்தில் நான்கு இடங்களில் சோதனை தொடங்கின. கரூர் மாநகராட்சி பகுதியில் தி.மு.க.வை சேர்ந்த மறைந்த முன்னாள் கரூர் மாவட்ட செயலாளர் வாசுகி முருகேசனின் சகோதரி பத்மாவின் வீடு, காந்திபுரம் பகுதியில் உள்ள சுரேஷ் என்பவர் நிதி நிறுவனம், வையாபுரி நகர் பகுதியில் உள்ள அவரது வீடு என தொடர்ந்து 3 இடங்களில் கடந்த 3 நாட்களாக நடைபெற்றது.

    4-வது நாளான நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை முடிவில் மறைந்த முன்னாள் தி.மு.க. மாவட்ட செயலாளர் வாசுகி முருகேசனின் சகோதரி பத்மா என்பவரின் வீட்டில் சோதனை நிறைவடைந்தது.

    தொடர்ந்து நள்ளிரவு வரை சுரேஷ் என்பவரின் நிதி நிறுவனம் மற்றும் அவரது வீடு ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து சிறிய ஓய்வெடுப்பதற்காக தங்கும் விடுதிக்கு சென்ற அதிகாரிகள், 2 இடங்களிலும் மத்திய பாதுகாப்பு படை போலீசாரை பாதுகாப்பில் அமர்த்திவிட்டு சென்றனர்.

    இந்நிலையில் தற்போது மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் 5-வது நாளாக 2 இடங்களிலும் சோதனை நடத்தி வருகின்றனர்.

    • புதிதாக குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.
    • பூமி பூஜைக்கு புகழூர் நகர்மன்ற தலைவரும் புகழூர் நகர செயலாளருமான சேகர் என்கிற குணசேகரன் தலைமை தாங்கி புதிதாக குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்கான பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார்.

    வேலாயுதம்பாளையம்

    கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சி 11-வது வார்டு மற்றும் 20-வது வார்டுக்கு உட்பட்ட அலைமகள் நகர் மற்றும் அண்ணா நகர் பகுதி பொதுமக்களின் குடிநீர் பயன்பாட்டிற்காக, புதிதாக குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.

    பூமி பூஜைக்கு புகழூர் நகர்மன்ற தலைவரும் புகழூர் நகர செயலாளருமான சேகர் என்கிற குணசேகரன் தலைமை தாங்கி புதிதாக குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்கான பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார்.

    பூமி பூஜை விழாவிற்கு நகராட்சி துணைத் தலைவர் பிரதாபன் முன்னிலை வகித்தார். பூமி பூஜை விழாவில் நகர்மன்ற உறுப்பினர்கள் நந்தினி ராஜேஸ் , சுரேஷ் , வார்டு செயலாளர் விஜயகாந்த் ,நகர துணை செயலாளர் இம்ரான்கான் ,11-வது வார்டு அவைத் தலைவர் மணிவேல் , கட்சி நிர்வாகிகள் மனோகரன் , கலைச்செல்வி, நகராட்சி நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • கரூர் மாவட்டம் புகளூர் துணை மின் நிலையத்தில் நாளை 7-ந்தேதி , செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
    • குறிப்பிட்ட பகுதிகளுக்கு மின்சாரம் இருக்காது என கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்

    வேலாயுதம்பாளையம் 

    கரூர் மாவட்டம் புகளூர் துணை மின் நிலையத்தில் நாளை 7-ந்தேதி , செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் மேற்கண்ட துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும் பகுதிகளான ஞானப் பரப்பு, புகலூர், செம்படா பாளையம், தோட்டக்குறிச்சி, முத்துராஜபுரம் ,வீரராஜபுரம், தர்மராஜபுரம் , செந்தூர் நகர் , மேத்யூ நகர், தோட்ட குறிச்சி கிழக்கு, இ.ஐ.டி. பாரி எதிரில்.பூங்காநகர், செந்தூர்நகர், 20.லைன்.தெரு, மாரியப்பிள்ளைதெரு, கக்கன் காலனி கிழக்கு, தவிட்டுப்பாளையம், தளவாபாளையம் , குண்ணிக்காட்டூர், கோவிந்தம் பாளையம், மேட்டுப்பாளையம், தளவாபாளையம் தேசிய நெடுஞ்சாலை, தெற்கு அம்மாபட்டி ஜல்லி மெஷின், பூஜா கோழி பண்ணை, கீழ் ஓரத்தை, மேல் ஒரத்தை, பெரிய புதூர், ஆவரங்காட்டு புதூர்,மூர்த்திபாளையம், பண்டுதகாரன்புதூர், கணபதிபாளையம் புதூர் அய்யம்பாளையம், செங்காட்டனூர், மூணுட்டு பாளையம், மலையம்மன்நகர், பரப்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்சாரம் இருக்காது என கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    ×