என் மலர்tooltip icon

    கரூர்

    வாகன விபத்தில் விவசாயி காயம்

    வேலாயுதம்பாளையம் 

    கரூர் மாவட்டம் கீழ் ஓரத்தை பகுதியைச் சேர்ந்தவர் பால சுப்பிரமணி (வயது 65).

    இவர் தனது மோட்டார் சைக்கிளில் தளவாபா ளையம் செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டு சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றார்.அப்போது மலையம்பாளையம் பிரிவு அருகே சென்ற போது அங்கிருந்து அதிவேகமாக வந்த கார் நிலை தடுமாறி பாலசுப்ரமணி ஒட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் பாலசுப்பிரமணி நிலைத்தடுமாறி மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வேலாயு தம்பாளையம் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் நந்தகோ பால் விபத்து ஏற்படுத்திய கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பள்ளப்பள்ளி பகுதியை சேர்ந்த மஞ்சு நாதன் (32 ) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசார ணை நடத்தி வருகிறார்கள்.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புகளூர் தீயணைப்பு துறையினர் ஒத்திகை பயிற்சி

    வேலாயுதம்பாளையம் , 

    கரூர் மாவட்டம் புகளூர் தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை சார்பில் தீபாவளி பண்டி கையை பாதுகாப்புடன் கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு ஒத்திகை பயிற்சி புகளூர் செம்பட பாளையத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலையில் நடைபெற்றது.

    பயிற்சியில் தீய ணைப்புத்துறை நிலைய அலுவலர் சரவணன் தலை மையிலான தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்தும் விபத்தில் சிக்கிக் கொண்டவர்க ளை காப்பாற்று வது குறித்தும் விழிப்பு ணர்வு ஏற்படுத்தி னர்.அப்போது சிறுவர்கள் பட்டாசு வெடிக்கும் போது பெற்றோர்கள் முன்னிலை யில் வெடிக்க வேண்டும். பட்டாசு மற்றும் புஸ்வா னங்கள் வெடிக்கும் போது காலணி அணிய வேண்டும். பட்டா சுகளை மைதா னங்கள் மற்றும் சமதளத்தில் வைத்து வெடிக்க வேண்டும். பட்டாசு மற்றும் புஸ்வா னங்கள் வெடிக்கும் போது அருகில் தண்ணீர் வாளி வைத்தி ருக்க வேண்டும். பட்டாசு வெடித்தவுடன் நன்றாக சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும்.

    அதேபோல் விபத்தில் சிக்கிக் கொண்டவர்களை எவ்வாறு காப்பாற்ற வேண்டும் எப்படி அவர்க ளை மீட்க வேண்டும் என்பது குறித்தும் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. மேலும் பல்வேறு ஆலோ சனைகளை தெரிவித்து துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்ப டுத்தினர். அதேபோல் பட்டாசு வெடிப்பது குறித்த ஒத்திகை பயிற்சி நடை பெற்றது.

    • வேலாயுதம்பாளையம் பகுதிகளில் திடீர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி
    • 3 நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக பயிர்கள் துளிர் விடும் நிலை ஏற்பட்டுள்ளது.

    வேலாயுதம்பாளையம் , 

    கரூர் மாவட்டம் வேலாயுதம் பாளையம் ,கந்தம்பாளையம், மூர்த்தி பாளையம்,நொய்யல், மரவாபாளையம், சேமங்கி ,முத்தனூர், கோம்புப்பா ளையம், பேச்சிப்பாறை, நடையனூர், திருக்காடு துறை, நன்செய் புகளூர்,புகழி மலை, காகித புரம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.

    அதனைத் தொடர்ந்து மழை சற்று வேகமாக பெய்ய ஆரம்பித்தது. இதன் காரணமாக சாலை வழி யாக சென்று கொண்டி ருந்த இருசக்கர வாகன ஓட்டிகள் ,பொதுமக்கள் நனைந்து கொண்டு அவ திப்பட்டு சென்றனர். அதே போல் சாலை ஓரங்களில் போடப்பட்டிருந்த கட்டில் கடைகள், சிற்றுண்டி கடைகள், பூக்கடைகள் பழக்கடைகள் ,பலகார கடைகள், துணிக்கடைகள், மண்பாண்டம் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் பல்வேறு கடைக்காரர்கள் மழையின் காரணமாக தீபாவளி வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர்.

    தொடர்ந்து வெயில் வாட்டி வதைத்த நிலையில் 3 நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக வெப்ப சீதோசன நிலை மாறி குளிர்ச்சியான சீதோ சன நிலை ஏற்பட்டுள்ளது . கடும் வெயிலின் காரணமாக பயிர்கள் வாடிய நிலையில் இருத்தது.3 நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக பயிர்கள் துளிர் விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 

    டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க தீவிர பரிசோதனை

    வேலாயுதம் பாளையம்,  

    கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க அதை தடுக்கும் வகையில் சுகாதாரத்துறை சார்பில் மக்களை தேடி மருத்துவம் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.

    முகாமில் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் மற்றும் சுகாதார தன்னார்வ லர்கள் கொண்ட குழுவினர் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் அப்பகுதியில் உள்ள ஒவ்வொரு வீடுக ளுக்கும் நேரடியாகச் சென்றனர். வீடுகளில் உள்ள முதியவர்கள், பா லூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோயாளிகள் மற்றும் பொது மக்களுக்கு ரத்தப் பரிசோதனை செய்தனர்.

    ரத்தத்தில் சர்க்கரை அளவு ,ரத்த அழுத்த அளவு, மற்றும் உடல் பரிசோ தனை,தலைவலி, காய்ச்சல், உடல் வலி, சளி, இருமல் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை செய்து அவர்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகளை வழங்கினர். டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும் .மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காமல் வைத்துக் கொள்ள வேண்டு ம். தண்ணீர் உள்ள பாத்திரங்கள், மண் பாண்டங்களை திறந்து வைக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

    மேலும் மனிதர்களை நோய் தாக்காமல் இருப்ப தற்கு நாம் எவ்வாறு சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும் என்பது குறித்து அவர்களுக்கு விளக்கி கூறினர். மேலும் கீரை காய்கறிகள் போன்ற சத்தானவற்றை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் என்றும் தெரி வித்தனர்.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டுபூக்களின் விலை கிடுகிடு உயர்வு

    வேலாயுதம்பாளையம் 

    கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம் ,சேமங்கி, முத்தனூர், கோம்புப்பாளையம், திருக்காடுதுறை, பேச்சிப்பாறை , வேட்டமங்க லம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குண்டுமல்லி, முல்லைப்பூ, சம்பங்கி, சாமந்திப்பூ, அரளி, ரோஜா, செவ்வந்தி உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது.

    பூக்கள் பறிக்கும் தருவாய்க்கு வரும்போது விவசாயிகள் கூலி ஆட்கள் மூலம் பூக்களை பறிக்கின்ற னர். பின்னர் கோணிப்பை களில் போட்டு உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபா ரிகளுக்கும், அருகில் செயல்பட்டு வரும் பூ ஏல மார்க்கெட்டிற்கும் தினமும் கொண்டு வந்து ஏலத்தில் விற்பனை செய்கின்றனர் . கடந்த சில வாரங்களாக பூக்களின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.

    மேலும் தீபாவளி, கோவில் மற்றும் திருவிழா விசேஷங்கள் போன்ற காரணங்களால் பூ தேவை அதிகரித்து விலை உயர்ந்துள்ளது.

    கடந்த வாரம் 300 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ குண்டு மல்லி தற்போது 500 ரூபாய்க்கும், கடந்த வாரம் 70 ரூபாய்க்கு விற்பனையான சம்பங்கி 160 ரூபாய்க்கும், 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட அரளி தற்போது 120 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

    இதே போல் ஒரு கிலோ 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சாம்பந்தி பூ 150 ரூபாய்க்கும், 350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட முல்லைப்பூ கிலோ 600 ரூபாய்க்கும் விற்பனையானது.

     தீபாவளியை முன்னிட்டு பூக்களின் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • வேலாயுதம் பாளையம் அருகே60 ஏக்கர் தென்னை மரங்களில் நோய் தாக்குதல்
    • தென்னையில் கருந்தலை புழுக்களின் தாக்கம் காணப்பட்டது .

    வேலாயுதம் பாளையம்,  

    கரூர் வட்டாரம் புஞ்சை புகழுர் தெற்கு வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட கந்தசாமிபாளையம் பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சுமார் 60க்கும் மேற்பட்ட ஏக்கரில் உள்ள தென்னையில் கருந்தலை புழுக்களின் தாக்கம் காணப்பட்டது .

    இதனை அடுத்து கரூர் வட்டார வேளாண்மை துறை வேளாண்மை உதவி இயக்குனர் சண்முகசுந்தரம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பயிர் பாதுகாப்பு இயக்குனர் சாந்தி, பூச்சிகள்துறை பேராசிரியர் மற்றும் தலைவர் முருகன், இணைப்பு பேராசிரியர்( தென்னை) ராஜமாணிக்கம், புழுதேரி வேளாண்மை அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் திரவியம், தொழில்நுட்ப உதவியாளர் தமிழ்ச்செல்வன், புகழூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் துணை மேலாளர் பிரசாத், வனத்தோட்டத்துறை முதுநிலை மேலாளர் செழியன் ஆகியோர் கொண்ட குழுவினர் கள ஆய்வு செய்தனர். பின்னர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழக விஞ்ஞானிகள் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை குறித்து விவசாயிகளுடன் கலநதுரையாடினர்.

    அப்போது முற்றிலும் தாக்கப்பட்ட தென்னை அடிமட்டைகளை வெட்டி அப்புறப்படுத்தி அழிக்க வேண்டும் . அந்து பூச்சிகளை அழிக்க ஒரு ஏக்கருக்கு இரண்டு விளக்கு பொறிகளை இரவு 7 மணி முதல் 11 மணி வரை தென்னந்தோப்புகளில் அமைக்க வேண்டும்.புழுக்களை கட்டுப்படுத்த ஒட்டுண்ணிகளான பிராக்கான் பிரவிகார்னிஷ் ஒரு ஏக்கருக்கு (இரண்டாயிரத்தி நூறு எண்கள்) மரங்களின் மேல் மட்டைகளின் இடுக்குகளில் நான்கு முதல் ஆறு முறை விட வேண்டும்.

    பூச்சிக்கொல்லி வேர் மூலம் செலுத்தி இருப்பின், அதன் எஞ்சிய நச்சு மூன்று அல்லது நான்கு வாரங்கள் கழித்து முழுமையாக நீங்கிய பின் ஒட்டுண்ணிகளை விட வேண்டும்.

    கருந்தலை புழுக்களால் தாக்கப்பட்ட மரங்களை மீண்டும் நல்ல நிலைக்கு கொண்டு மரத்தை சுற்றி ஆறு அடி அளவில் வட்டத்தில் சணப்பை தக்கை பூண்டு கொள்ளு அல்லது கொழுஞ்சி இவற்றில் ஏதாவது ஒன்றை மரத்திற்கு 50 கிராம் வீதம் வட்டப்பாத்தியில் விதைத்து பூக்கும் தருவாயில் மடித்து உழுதிட வேண்டும்.

    பரிந்துரைக்கப்பட்டுள்ள அணைத்து தொழில்நுட்பங்களையும் கருந்தலை புழுக்களால் பாதிக்கப்பட்ட தென்ணை விவசாயிகள் அனைவரும் ஒருங்கிணைந்து கடை பிடிக்க அறிவுறுத்ப்பட்டது.

    விவசாயிகள் ,விஞ்ஞானிகள் கலந்துரையாடலுக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் சதீஷ்குமார் செய்திருந்தார். நடமாடும் மண் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர்கள் ஸ்ரீபிரியா, காஞ்சனா மற்றும் மணிமேகலை ஆகியோரால் விவசாயிகளிடம் மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. 

    • புகழூர் நகர தி.மு.க. சார்பில் கட்சி பொறுப்பாளர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறிய நகராட்சி தலைவர்
    • உறுப்பினர்கள், சார்பு அணி அமைப்பாளர்கள், கழக மூத்த முன்னோடிகள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

    வேலாயுதம்பாளையம், 

    கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 24 வார்டு பகுதிகளுக்கும் புகழூர் நகர கழக செயலாளரும், புகழூர் நகராட்சி தலைவருமான சேகர் என்கிற குணசேகரன் நேரில் சென்று, வார்டு கவுன்சிலர்கள், வார்டு கழக செயலாளர், கழக நிர்வாகிகளுக்கும், கழக மூத்த முன்னோடிகளுக்கும் தீப ஒளி திருநாளை முன்னிட்டு இனிப்புகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில், நகர்மன்ற துணைத் தலைவர் பிரதாபன், நகர கழக அவை தலைவர் வாங்கிலி, மாவட்ட தொமுச தலைவர் அண்ணாவேலு, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் நவாஸ்கான், நகர கழக பொருளாளர் கந்தசாமி, நகர கழக துணைச் செயலாளர் இம்ரான்கான், அனைத்து வார்டு கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், பூத் கமிட்டி முகவர்கள் மற்றும் உறுப்பினர்கள், சார்பு அணி அமைப்பாளர்கள், கழக மூத்த முன்னோடிகள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    • கரூரில் சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்ட 11 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்
    • கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 85 மது பாட்டில்கள் பறிமுதல்

    கரூர்,

    கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஷியா சுரேஷ் உள்ளிட்ட, போலீசார் குளித்தலை, வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சட்ட விரோதமாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த, 85 மது பாட்டில்களை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும், மதுபாட்டில்களை விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்ததாக பொன்னன் (வயது 56), ராஜ்குமார்(69), ரத்தினவேல் (65), கதிர்வேல் (52), பாஸ்கர் (26), தங்கராசு (60) உள்பட, 11 பேரை மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர்.

    • கரூர் ஜவஹர் பஜாரில் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது
    • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போலீசார் நடவடிக்கை

    கரூர்,

    தீபாவளி பண்டி கையை முன்னிட்டு கரூர் மாநகரில் ஒரு வாரத்துக்கு முன்னதாகவே, கரூர் வர்த்தக மையங்களான ஜவஹர் பஜார், கோவை ரோடு, வடக்கு மற்றும் தெற்கு பிரதட்சணம் சாலை ஆகிய பகுதிகளுக்கு தீபா வளி சம்பந்தமான பொருட்கள் வாங்க ஆயிரக்கணக்கான மக்கள் 5 வந்து செல்வார்கள். இதிலும், தீபா வளி பண்டிகைக்கு 3 நாட்களுக்கு

    முன்னரே. வந்து செல்லும் மக்க ளின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும். அதுபோன்ற சமயங்க ளில் கனரக வாகனங்கள் உள்ளே சென்று, போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், காவல்துறை சார்பில் மாநகரின் நுழைவுவாயில் பகுதிகள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5 முதல் 8 மணி வரையி மாநகரின்லும் உள்ளே செல்ல தடை என்ற வாசகங்கள் அடங்கிய பதாதை களை வைத்துள்ளனர். தீபாவளி பண்டிகை நாட்களில் அதிகளவு வாகனங்கள் வரத்து காரணமாக போக்குவரத்து நெருக்கடி ஏற்ப டாதவகையில் போலீசார்கள் இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோவில் வழக்கு
    • சிறுமி தற்போது, 3 மாத கர்ப்பமாக உள்ளார்.

    கரூர்,நவ. 9-

    க.பரமத்தி அருகே, சிறுமியை திருமணம் செய்து கொண்டு, கர்ப்பமாக்கிய வாலிபர் மீது, போக்சோ சட்டத்தின் கீழ், மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    கரூர் மாவட்டம், க.பரமத்தி காருடையாம்பாளையம் பகுதியை சேர்ந்த அழகிரி என்பவரது மகன் மணிகண்டன் (வயது 23). இவர் 17 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அந்த சிறுமி தற்போது, 3 மாத கர்ப்பமாக உள்ளார்.

    இதுகுறித்து, க.பரமத்தி பஞ்., யூனியன் பெண்கள் நல அலுவலர் பத்மாதேவி கொடுத்த புகார்படி, கரூர் ரூரல் மகளிர் போலீசார், மணிகண்டன் மீது போக்சோ சட்டத்தின் கீழ், வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

    • நடையனூர் பகுதியில் மிகவும் சிதலமடைந்த நிலையில் நூலகத்தால் புத்தகங்கள் பாழடைகின்றன
    • நூலகத்தை சீரமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை

    வேலாயுதம்பாளையம், 

    கரூர் மாவட்டம் நடையனூரில் அந்த பகுதி மாணவ, மாணவிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி ஊர் புற நூலகம் செயல்பட்டு வருகிறது.

    இந்த கட்டிடம் பழுதடைந்துள்ளது. மழை நீர் தேங்கி நிற்பதால், கட்டிடத்தின் மேல் பகுதி காங்கிரீட் கீழே விழுந்து கம்பிகள் தெரிகிறது. கட்டிடமும் பழுதடைந்து வருகிறது.மழை நீர் கசிவதால் கட்டிடத்திற்குள் உள்ள நூல்கள் நனைந்து வீணாகி வருகிறது. இது குறித்து விரைந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கட்டிடத்தை சீரமைத்து நூல்களை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    நடையனூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் கூறும்போது:-

    எங்கள் பகுதியில் 1995ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நூலகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நூலகத்திற்கு ஏராளமான சென்று பயனடைந்து வருகின்றனர். கஷ்டப்பட்டு பெறப்பட்டு வாங்கி வைத்துள்ள நூல்கள் மழை நீரில் நனைந்து வீணாகி வருவது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு அரசு அதிகாரிகளிடமும் அரசியல்வாதிகளிடமும் புகார் சொல்லியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவே விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

    • கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சி கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
    • நகராட்சி பகுதிகளில் மழை நீர் புகாமல் இருக்க பராமரித்து பணிகள் செய்வதற்கு ரூ.8 லட்சம் பொது நிதியில் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

    வேலாயுதம் பாளையம்

    கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சி கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் சேகர் என்கிற குணசேகரன் தலைமை வகித்தார். துணைத் தலை வர் பிரதாபன் முன்னிலை வகித்தார். ஆணையாளர் பால்ராஜ் வரவேற்றார் . கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்ட நிலையில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கும் பணியில் ஈடுபட்டுவரும் பணியாளர்களை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்து அவர்களுக்கு ரூ.6 லட்சம் பொது நிதியில் சம்பளம் வழங்க வேண்டும். காந்தி கல்யாண மண்டப பராமரிப்பு பணிக்காக ரூ 8.50 லட்சம் செலவிடுதல் வேண்டும். நகராட்சி பகுதிகளில் மழை நீர் புகாமல் இருக்க பராமரித்து பணிகள் செய்வதற்கு ரூ.8 லட்சம் பொது நிதியில் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

    தற்போது புகழூர் நகராட்சியின் ஆணையாள ராக பள்ளபட்டி நகராட்சி ஆணையாளர் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் பள்ளப்பட்டி நகராட்சியில் பணியாற்றி வருவதால் புகழூர் நகராட்சிக்கு அடிக்கடி வர முடியாத சூழ்நிலையில் உள்ளது. இதனால் நகராட்சியின் பணிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே புகழூர் நகராட்சிக்கு நிரந்தரமான ஆணையா ளரை தமிழக அரசு நியமிக்க வேண்டும் என ஒட்டுமொத்த குரலில் நகரமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தெரிவித்தனர்.

    கூட்டத்தில் நகராட்சி உறுப்பினர்கள், நகராட்சி பொறியாளர் மலர்கொடி ,நகராட்சி துப்புரவு ஆய்வாளர் வள்ளிமுத்து, நகராட்சி மேலாளர், நகராட்சி வருவாய் ஆய்வாளர் மற்று ம் நகராட்சி நிர்வாக அலுவ லர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    ×