search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    60 ஏக்கர் தென்னை மரங்களில் நோய் தாக்குதல்
    X

    60 ஏக்கர் தென்னை மரங்களில் நோய் தாக்குதல்

    • வேலாயுதம் பாளையம் அருகே60 ஏக்கர் தென்னை மரங்களில் நோய் தாக்குதல்
    • தென்னையில் கருந்தலை புழுக்களின் தாக்கம் காணப்பட்டது .

    வேலாயுதம் பாளையம்,

    கரூர் வட்டாரம் புஞ்சை புகழுர் தெற்கு வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட கந்தசாமிபாளையம் பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சுமார் 60க்கும் மேற்பட்ட ஏக்கரில் உள்ள தென்னையில் கருந்தலை புழுக்களின் தாக்கம் காணப்பட்டது .

    இதனை அடுத்து கரூர் வட்டார வேளாண்மை துறை வேளாண்மை உதவி இயக்குனர் சண்முகசுந்தரம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பயிர் பாதுகாப்பு இயக்குனர் சாந்தி, பூச்சிகள்துறை பேராசிரியர் மற்றும் தலைவர் முருகன், இணைப்பு பேராசிரியர்( தென்னை) ராஜமாணிக்கம், புழுதேரி வேளாண்மை அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் திரவியம், தொழில்நுட்ப உதவியாளர் தமிழ்ச்செல்வன், புகழூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் துணை மேலாளர் பிரசாத், வனத்தோட்டத்துறை முதுநிலை மேலாளர் செழியன் ஆகியோர் கொண்ட குழுவினர் கள ஆய்வு செய்தனர். பின்னர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழக விஞ்ஞானிகள் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை குறித்து விவசாயிகளுடன் கலநதுரையாடினர்.

    அப்போது முற்றிலும் தாக்கப்பட்ட தென்னை அடிமட்டைகளை வெட்டி அப்புறப்படுத்தி அழிக்க வேண்டும் . அந்து பூச்சிகளை அழிக்க ஒரு ஏக்கருக்கு இரண்டு விளக்கு பொறிகளை இரவு 7 மணி முதல் 11 மணி வரை தென்னந்தோப்புகளில் அமைக்க வேண்டும்.புழுக்களை கட்டுப்படுத்த ஒட்டுண்ணிகளான பிராக்கான் பிரவிகார்னிஷ் ஒரு ஏக்கருக்கு (இரண்டாயிரத்தி நூறு எண்கள்) மரங்களின் மேல் மட்டைகளின் இடுக்குகளில் நான்கு முதல் ஆறு முறை விட வேண்டும்.

    பூச்சிக்கொல்லி வேர் மூலம் செலுத்தி இருப்பின், அதன் எஞ்சிய நச்சு மூன்று அல்லது நான்கு வாரங்கள் கழித்து முழுமையாக நீங்கிய பின் ஒட்டுண்ணிகளை விட வேண்டும்.

    கருந்தலை புழுக்களால் தாக்கப்பட்ட மரங்களை மீண்டும் நல்ல நிலைக்கு கொண்டு மரத்தை சுற்றி ஆறு அடி அளவில் வட்டத்தில் சணப்பை தக்கை பூண்டு கொள்ளு அல்லது கொழுஞ்சி இவற்றில் ஏதாவது ஒன்றை மரத்திற்கு 50 கிராம் வீதம் வட்டப்பாத்தியில் விதைத்து பூக்கும் தருவாயில் மடித்து உழுதிட வேண்டும்.

    பரிந்துரைக்கப்பட்டுள்ள அணைத்து தொழில்நுட்பங்களையும் கருந்தலை புழுக்களால் பாதிக்கப்பட்ட தென்ணை விவசாயிகள் அனைவரும் ஒருங்கிணைந்து கடை பிடிக்க அறிவுறுத்ப்பட்டது.

    விவசாயிகள் ,விஞ்ஞானிகள் கலந்துரையாடலுக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் சதீஷ்குமார் செய்திருந்தார். நடமாடும் மண் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர்கள் ஸ்ரீபிரியா, காஞ்சனா மற்றும் மணிமேகலை ஆகியோரால் விவசாயிகளிடம் மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டது.

    Next Story
    ×