என் மலர்
உள்ளூர் செய்திகள்

சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்ட 11 பேர் கைது
- கரூரில் சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்ட 11 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்
- கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 85 மது பாட்டில்கள் பறிமுதல்
கரூர்,
கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஷியா சுரேஷ் உள்ளிட்ட, போலீசார் குளித்தலை, வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சட்ட விரோதமாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த, 85 மது பாட்டில்களை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும், மதுபாட்டில்களை விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்ததாக பொன்னன் (வயது 56), ராஜ்குமார்(69), ரத்தினவேல் (65), கதிர்வேல் (52), பாஸ்கர் (26), தங்கராசு (60) உள்பட, 11 பேரை மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர்.
Next Story






