search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Flower prices rise"

    • பல மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து பூக்களை போட்டி போட்டு வாங்கி செல்கிறார்கள்.
    • மற்றும் மற்ற பூக்களின் தேவையும் அதிகரித்து வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், பவானிசாகர் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் பல ஏக்கர்களில் மல்லிகைப்பூ உள்பட பல்வேறு பூக்களை சாகுபடி செய்து வருகிறார்கள்.

    தினமும் சுமார் 4 டன் முதல் 5 டன் மல்லிகை உள்பட பல பூக்கள் அறுவடை செய்யப்பட்டு சத்தியமங்கலம் பகுதியில் செயல்படும் பூ மார்க்கெ ட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார்கள்.

    சத்தியமங்கலம் பூ மார்க் கெட்டில் இருந்து ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகள், கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் பல மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து பூக்களை போட்டி போட்டு வாங்கி செல்கிறார்கள்.

    மேலும் விஷேசம், திருவிழா நாட்கள் மற்றும் முகூர்த்த நாட்களில் பூக்களின் விற்பனை அதிகரித்து காணப்படும். அதே போல் வெளி மாநில திருவிழா காலங்களிலும் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை அதிகளவில் நடக்கும்.

    இதனால் விஷேசம் மற்றும் முகூர்த்த நாட்களில் 1 கிலோ மல்லிகைப்பூ ரூ.5 ஆயிரத்துக்கு மேல் விற்பனையாகும். இதே போல் சாதாரண நாட்களில் மல்லிகைப்பூ 1 கிலோ ரூ.500-க்கும் ஏலம் விற்பனையாகும்.

    இந்த நிலையில் தற்போது தை மாதம் பிறந்ததால் முகூர்த்த நாட்கள் தொட ர்ந்து வருகிறது. மேலும் ஒரு சில இடங்களில் கோவில் விழாக்களும் நடந்து வருகிறது. இதனால் மல்லிகை மற்றும் மற்ற பூக்களின் தேவையும் அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் ஈரோடு உள்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் கடும் பனி பொழிவு நிலவி வருகிறது. இதனால் சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டாரத்தில் மல்லிகை உள்பட பூக்களின் அறுவடை குறைந்து வருகிறது. இதனால் தற்போது குறைந்த அளவே மல்லிப்பூக்கள் அறுவடை செய்யப்பட்டு சத்தியமங்கலம் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    இதனால் மல்லிகைப்பூ மற்றும் மற்ற பூக்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

    கடந்த 10 நாட்களுக்கு முன்பு மல்லிகைப்பூ 1160-க்கும், முல்லை 600-க்கும் காக்காடா ரூ.550-க்கும் சாதிமல்லி ரூ.600-க்கும், கனகாம்பரம் ரூ.500-க்கும், அரளி ரூ.120-க்கும், செவ்வந்தி ரூ.120-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்த நிலையில் பனி பொழிவு மற்றும் வரத்து குறைவு காரணமாகவும் தொடர்ந்து முகூர்த்த நாட்கள் வருவதாலும் மல்லி கைபூக்களின் தேவை அதிகரித்தது. இதனால் மல்லிகைப்பூ விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. ஒரே நாளில் மல்லிகை ரூ.1900 உயர்ந்து ரூ.4,620-க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் கடந்த 10 நாட்களில் மட்டும் சுமார் மல்லிகை பூக்களின் விலை ரூ.3,460 வரை உயர்ந்து உள்ளது.

    இதே போல் நேற்று முன்தினம் மல்லிகைப்பூ ரூ.2,160-க்கும், முல்லை ரூ.1,445-க்கும், கனகாம்பரம் ரூ.500-க்கும் ஏலம் போனது. ஆனால் நேற்றும் பூக்கள் விலை உயர்ந்து மல்லிகை ரூ.4,620-க்கும், கனகாம்பரம், ரூ.850-க்கும், முல்லை ரூ.2 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.

    சத்தியமங்கலம் மார்க்கெட்டுக்கு வரத்து குறைவு காரணமாக வியாபாரிகள் முன் கூட்டியே வந்து மல்லிகை பூக்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர். இதனால் உடனடியாக மல்லிகை பூக்கள் விற்பனை செய்யப்பட்டது.

    மேலும் ஈரோட்டில் உள்ள பூ மார்க்கெட்டுகளிலும் வரத்து குறைவு காரணமாக மல்லிகை மற்றும் மற்ற பூக்களின் விலை அதிகரித்தது.

    மேலும் வரும் நாட்களில் கோவில் விழாக்கள் மற்றும் முகூர்த்த நாட்கள் வருவதால் பூக்களின் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    இதனால் பூக்களை விற்பனைக்கு கொண்டு வரும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது.
    • வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனர்.

    வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லிகை ரூ.400-க்கும், சம்பங்கி கிலோ ரூ.20-க்கும், அரளி கிலோ ரூ.80-க்கும், ரோஜா கிலோ ரூ.160-க்கும், முல்லைப் பூ ரூ.500-க்கும், செவ்வந்திப்பூ ரூ.80-க்கும், கனகாம்பரம் ரூ.400-க்கும் ஏலம் போனது.

    இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லிகை கிலோ ரூ.800-க்கும், சம்பங்கி கிலோ ரூ.70-க்கும், அரளி கிலோ ரூ.200-க்கும், ரோஜா கிலோ ரூ.250-க்கும், முல்லைப் பூ கிலோ ரூ.1000-க்கும், செவ்வந்திப்பூ ரூ.140-க்கும், கனகாம்பரம் ரூ.800-க்கும் ஏலம் போனது. பூக்கள் விலை உயர்வடைந்ததால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டுபூக்களின் விலை கிடுகிடு உயர்வு

    வேலாயுதம்பாளையம் 

    கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம் ,சேமங்கி, முத்தனூர், கோம்புப்பாளையம், திருக்காடுதுறை, பேச்சிப்பாறை , வேட்டமங்க லம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குண்டுமல்லி, முல்லைப்பூ, சம்பங்கி, சாமந்திப்பூ, அரளி, ரோஜா, செவ்வந்தி உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது.

    பூக்கள் பறிக்கும் தருவாய்க்கு வரும்போது விவசாயிகள் கூலி ஆட்கள் மூலம் பூக்களை பறிக்கின்ற னர். பின்னர் கோணிப்பை களில் போட்டு உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபா ரிகளுக்கும், அருகில் செயல்பட்டு வரும் பூ ஏல மார்க்கெட்டிற்கும் தினமும் கொண்டு வந்து ஏலத்தில் விற்பனை செய்கின்றனர் . கடந்த சில வாரங்களாக பூக்களின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.

    மேலும் தீபாவளி, கோவில் மற்றும் திருவிழா விசேஷங்கள் போன்ற காரணங்களால் பூ தேவை அதிகரித்து விலை உயர்ந்துள்ளது.

    கடந்த வாரம் 300 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ குண்டு மல்லி தற்போது 500 ரூபாய்க்கும், கடந்த வாரம் 70 ரூபாய்க்கு விற்பனையான சம்பங்கி 160 ரூபாய்க்கும், 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட அரளி தற்போது 120 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

    இதே போல் ஒரு கிலோ 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சாம்பந்தி பூ 150 ரூபாய்க்கும், 350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட முல்லைப்பூ கிலோ 600 ரூபாய்க்கும் விற்பனையானது.

     தீபாவளியை முன்னிட்டு பூக்களின் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • சேலம் பூ மார்க்கெட்டுக்கு சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
    • ஆயுத பூஜை மற்றும் விஜய தசமியையொட்டி கடந்த 22-ந் தேதி சேலம் மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை பூ 700 ரூபாய்க்கு விற்பனையானது.

    சேலம்:

    சேலம் பூ மார்க்கெட்டுக்கு சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இந்த பூக்களை சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வாங்கி செல்கிறார்கள்.

    விலை உயர்வு

    ஆயுத பூஜை மற்றும் விஜய தசமியையொட்டி கடந்த 22-ந் தேதி சேலம் மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை பூ 700 ரூபாய்க்கு விற்பனையானது. பின்னர் 23-ந் தேதி விலை குறைந்த நிலையில் நேற்று ஒரு கிலோ மல்லிகை பூ 500 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

    இன்று விலை மீண்டும் அதிகரித்து 600 ரூபாயாக உயர்ந்தது. இதேபோல நேற்று 280 ரூபாய்க்கு விற்கப்பட்ட முல்லைப்பூ இன்று 400 ரூபாய்க்கும், ஜாதி மல்லிகை பூ நேற்று 260 விற்கப்பட்ட நிலையில் இன்று 280 ஆகவும் உயர்ந்தது.

    இதே போல காக்கட்டான் 60 ரூபாயிலிருந்து 100 ரூபாயாகவும், அரளிப்பூ 120 ரூபாயிலிருந்து 160 ஆகவும் உயர்ந்தது. ஆனாலும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிக அளவில் பூக்களை வாங்கிச் சென்றனர்.

    முகூர்த்த நாள்

    வருகிற நாட்களில் முகூர்த்த நாள் மற்றும் கோவில் திருவிழாக்கள் இருப்பதாலும் இந்த பூக்கள் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக வியா பாரிகள் தெரிவித்தனர்.

    • புரட்டாசி மாதம் மற்றும் விஷேச தினங்கள் இல்லாதது எதிரொலியாக பூக்கள் விற்பனை மந்தமாக இருந்து வந்தது.
    • மகாளய அமாவாசையை முன்னிட்டு பூக்களின் விலை அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அண்ணா வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் பூ மார்க்கெட்டிற்கு நிலக்கோட்டை, செம்பட்டி, வெள்ளோடு, மைலாப்பூர், ரெட்டியார் சத்திரம், ஜம்புலியம்பட்டி, ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் அதிகளவு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    இங்கிருந்து கேரளா, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. திண்டுக்கல் பூ மார்க்கெட்டிற்கு குறைந்தது 10 டன் பூக்களும் விஷேச தினங்களில் 40 டன் பூக்கள் வரையும் வரத்து உள்ளது. தற்போது புரட்டாசி மாதம் மற்றும் விஷேச தினங்கள் இல்லாதது எதிரொலியாக பூக்கள் விற்பனை மந்தமாக இருந்து வந்தது. இதனால் பூக்கள் விலை கடுமையாக சரிந்து காணப்பட்டது. பூ மார்க்கெட் வெறிச்சோடி யது. மாலைக்கு பயன்ப டுத்தும் பூக்கள் ரூ. 10 முதல் 20 வரை மட்டுமே விலைபோனது.

    இந்நிலையில் நாளை மகாளய அமாவாசையை முன்னிட்டு பூக்களின் விலை கிடுகிடு என உயர்ந்துள்ளது. திண்டுக்கல் மார்க்கெட்டிற்கு 40 டன் பூக்கள் வந்துள்ளது. ஒரு கிலோ சாமந்தி மற்றும் சம்மங்கி ரூ.60க்கும், கோழிக்கொண்டை ரூ. 30, அரளி ரூ. 200, ரோஸ் ரூ. 50, கனகாம்பரம் ரூ. 200, ஜாதி பூ ரூ.300, முல்லை ரூ. 300க்கும் விற்கப்படுகிறது.

    திண்டுக்கல் மாவட்ட த்தில் பரவலாக பருவமழை கடந்து சில நாட்களாக பெய்து வருகிறது. இதனால் மல்லிகை பூக்கள் வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு ள்ளது. பூ மார்க்கெட்டிற்கு 1½டன் பூக்கள் மட்டுமே வரத்து வந்துள்ளது.

    இதனையடுத்து கிலோ ரூ. 800 முதல் 1000 வரை விற்கப்பட்டது.கடந்த சில தினங்களாக பூக்கள் விற்பனை மந்தமாக இருந்தது. இந்நிலையில் மகாளய அமாவாசையை முன்னிட்டு பூக்களின் விலை அதிகரித்துள்ளது. இதனால் வியாபாரிகள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • சராசரியாக நாள் ஒன்றுக்கு 20டன் பூக்கள் விற்பனைக்கு வரும். ஆனால் இன்று 25டன் பூக்கள் விற்பனைக்கு வந்துள்ளது.
    • கடந்த வாரம் ரூ.500க்கு விற்பனையான மல்லிகை பூ இன்று கிலோ ரூ.3,500க்கு விற்பனை ஆகிறது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பஸ் நிலை யம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான அறிஞர் அண்ணா பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் திண்டுக்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள வெள்ளோடு, சிறுநாயக்கன்பட்டி, கள்ளிப்பட்டி, கலிக்க ம்பட்டி, பெருமாள் கோவி ல்பட்டி, சின்னாளபட்டி, செம்பட்டி, சிலுவத்தூர், அதிகாரிப்பட்டி உட்பட பல ஊர்களில் விவசாயிகள் விளைவிக்க கூடிய பூக்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

    இங்கிருந்து தமிழகம் முழுவதும் மற்றும் கேரளா பாண்டிச்சேரி போன்ற வெளி மாநிலங்களுக்கும் வியாபாரிகள் பூக்களை வாங்கி செல்கிறார்கள்.

    தமிழகத்தில் நாளை ஆவணி மாத கடைசி மூகூர்த்தம் என்பதாலும் நாளை மறுநாள் விநாயகர் சதுர்த்தி என்பதாலும் பூக்களின் விலை அதிரடி யாக உயர்ந்துள்ளது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 20டன் பூக்கள் விற்பனைக்கு வரும். ஆனால் இன்று 25டன் பூக்கள் விற்பனைக்கு வந்துள்ளது.

    கடந்த வாரம் ரூ.500க்கு விற்பனையான மல்லிகை பூ இன்று கிலோ ரூ.3,500க்கு விற்பனை ஆகிறது. அதேபோல் கடந்த வாரம் ரூ.150 க்கு விற்பனையான கனகாம்ப ரம் தற்பொழுது ரூ.800க்கு விற்பனையாகிறது. ரூ.200க்கு விற்பனையான முல்லை பூ தற்பொழுது ரூ.800க்கு விற்பனை ஆகிறது. ரூ.250 க்கு விற்பனையான ஜாதிப்பூ தற்பொழுது ரூ.700க்கு விற்பனையாகிறது. அதேபோல் ரூ.80க்கு விற்பனையான அரளிப்பூ தற்பொழுது ரூ.200 க்கு விற்பனை ஆகிறது. ரூ.120க்கு விற்பனையான சம்பங்கி ரூ.400க்கும் விற்பனையாகிறது. ரூ.50 விற்பனையான பன்னீர் ரோஸ் தற்பொழுது ரூ.200 க்கு விற்பனை ஆகிறது. ரூ.30க்கு விற்பனையான செவ்வந்தி ரூ.100க்கு விற்பனையாகிறது. செண்டுமல்லி கிலோ ரூ.30 க்கும் வாடாமல்லி கிலோ ரூ.35க்கும் விற்பனை ஆகிறது.

    • கடந்த வாரம் குண்டுமல்லி கிலோ ரூ.400-க்கும், சம்பங்கி ரூ.50-க்கும், அரளி ரூ.120-க்கும், ரோஜா ரூ.150-க்கும், விற்பனையானது.
    • பூக்களின் வரத்து குறைந்ததாலும், ஐப்பசி மாத வளர்பிறையையொட்டி கோவில் மற்றும் திருமண விசேஷங்கள் இருப்பதால் பூக்களின் விலை‌ கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

    கரூர் :

    கரூர் நொய்யல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மலர் சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கடந்த வாரம் குண்டுமல்லி கிலோ ரூ.400-க்கும், சம்பங்கி ரூ.50-க்கும், அரளி ரூ.120-க்கும், ரோஜா ரூ.150-க்கும், முல்லை ரூ.400-க்கும், செவ்வந்தி ரூ.150-க்கும் விற்பனையானது.

    நேற்று குண்டு மல்லி கிலோ ரூ.1,000-க்கும், சம்பங்கி ரூ150-க்கும், அரளி ரூ.180-க்கும், ரோஜா ரூ.250-க்கும், முல்லை ரூ.1,000-க்கும், செவ்வந்தி ரூ.250-க்கும் விற்பனையானது. பூக்களின் வரத்து குறைந்ததாலும், ஐப்பசி மாத வளர்பிறையையொட்டி கோவில் மற்றும் திருமண விசேஷங்கள் இருப்பதால் பூக்களின் விலை‌ கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

    • பூக்க ளின் விலை பல மடங்கு அதிகரித்து விற்பனையானது.
    • இருந்தபோதும் பொதுமக்கள் ஆர்வமாக பொரி உள்ளிட்ட பூஜை பொருட்களை வாங்கச்சென்றனர்

    நிலக்கோட்ைட:

    ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி பண்டி கையை முன்னிட்டு நில க்கோட்ைட பூ மார்க்கெட்டில் இன்று அனைத்து பூக்களும் விலை கடுமையாக உயர்ந்தது. குறிப்பாக பூஜைக்கு பயன்படுத்தப்படும் அரளி, செண்டுமல்லி, செவ்வந்தி, வாடாமல்லி, கோழி க்கொண்டை ஆகிய பூக்க ளின் விலை பல மடங்கு அதிகரித்து விற்பனையானது.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு பை ரூ.50க்கு விற்பனையான அரளிப்பூ இன்று ரூ.400 முதல் ரூ.450 வரை விற்கப்பட்டது. செண்டுமல்லி ரூ.100, கோழிக்கொண்டை ரூ.130, செவ்வந்தி ரூ.350, வாடாமல்லி ரூ.100, துளசி ரூ.350, பன்னீர்ரோஸ் ரூ.300, பட்டன்ரோஸ் ரூ.300, சம்பங்கி ரூ.320 என விற்பனையானது.

    கடந்த வருடம் அரளி, செண்டுமல்லி உள்ளிட்ட பூக்களுக்கு சரியான விலை கிடைக்காத நிலையில் தற்போது அதற்கு நல்ல விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இேதபோல மல்லிகை ரூ.850, முல்லை ரூ.550, கலர் பிச்சி ரூ.400, வெள்ைள பிச்சி ரூ.600, கனகாம்பரம் ரூ.500 என விற்பனையானது.

    ஆயுத பூஜை என்பதால் நறுமணபூக்கள் சற்று விலை குறைவாகவும், பூஜைக்கான பூக்கள் சற்று விலை அதிகமாகவும் விற்பனை யானது.

    • பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம், வேலாயு–தம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது.
    • பூக்கள் விலை‌ உயர்வடைந்துள்ளதால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம், வேலாயு–தம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்குவிளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனர்.

    வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயு–தம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியா–பாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லி ரூ.800- க்கும்,சம்பங்கி கிலோ ரூ.100- க்கும், அரளி கிலோ ரூ.180- க்கும், ரோஜா கிலோ ரூ.200- க்கும், முல்லைப் பூ ரூ.500- க்கும், செவ்வந்திப்பூ ரூ.160- க்கும், கனகாம்பரம் ரூ.700-க்கும் ஏலம் போனது.

    நேற்று நடைபெற்ற ஏல‌த்தில் குண்டு மல்லி கிலோ ரூ.2000-க்கும், சம்பங்கி கிலோ ரூ280- க்கும், அரளி கிலோ ரூ.280- க்கும், ரோஜா கிலோ ரூ.290- முல்லைப் பூ கிலோ ரூ.1800-க்கும், செவ்வந்திப்பூ ரூ.290- க்கும், கனகாம்பரம் ரூ.1800-க்கும் ஏலம் போனது.பூக்கள் விலை‌ உயர்வடைந்துள்ளதால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • திண்டுக்கல்லில் தொடர்ந்து பூக்களின் விலை அதிகரித்துள்ளது
    • பூக்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்களின் தேவை அதிகரித்துள்ளதாலும் கோவில் திருவிழாக்கள் மற்றும் பண்டிகைகள் காரணமாக பெரும்பாலான பூக்கள் விலை அதிகரித்துள்ளது.

    மல்லிகை கிலோ ரூ.1200, முல்லை ரூ.600, கனகாம்பரம் ரூ.300, ஜாதிப்பூ ரூ.500, செவ்வந்தி ரூ.150, சம்பங்கி ரூ.250, அரளி ரூ.250, கோழிக்கொண்டை ரூ.30, செண்டுமல்லி ரூ.35, ரோஜா ரூ.100 முதல் ரூ.130 வரை விற்பனையானது.

    இதனால் மலர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    ×