பரமத்தி வேலூர் பகுதிகளில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு

பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம், வேலாயு–தம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது.பூக்கள் விலை‌ உயர்வடைந்துள்ளதால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பரமத்தி வேலூர்  பகுதிகளில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம், வேலாயு–தம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்குவிளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனர்.

வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயு–தம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியா–பாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லி ரூ.800- க்கும்,சம்பங்கி கிலோ ரூ.100- க்கும், அரளி கிலோ ரூ.180- க்கும், ரோஜா கிலோ ரூ.200- க்கும், முல்லைப் பூ ரூ.500- க்கும், செவ்வந்திப்பூ ரூ.160- க்கும், கனகாம்பரம் ரூ.700-க்கும் ஏலம் போனது.

நேற்று நடைபெற்ற ஏல‌த்தில் குண்டு மல்லி கிலோ ரூ.2000-க்கும், சம்பங்கி கிலோ ரூ280- க்கும், அரளி கிலோ ரூ.280- க்கும், ரோஜா கிலோ ரூ.290- முல்லைப் பூ கிலோ ரூ.1800-க்கும், செவ்வந்திப்பூ ரூ.290- க்கும், கனகாம்பரம் ரூ.1800-க்கும் ஏலம் போனது.பூக்கள் விலை‌ உயர்வடைந்துள்ளதால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com