என் மலர்
உள்ளூர் செய்திகள்

புகழூர் நகராட்சி பகுதியில் புதிதாக குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்கான பூமி பூஜை
- புதிதாக குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.
- பூமி பூஜைக்கு புகழூர் நகர்மன்ற தலைவரும் புகழூர் நகர செயலாளருமான சேகர் என்கிற குணசேகரன் தலைமை தாங்கி புதிதாக குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்கான பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார்.
வேலாயுதம்பாளையம்
கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சி 11-வது வார்டு மற்றும் 20-வது வார்டுக்கு உட்பட்ட அலைமகள் நகர் மற்றும் அண்ணா நகர் பகுதி பொதுமக்களின் குடிநீர் பயன்பாட்டிற்காக, புதிதாக குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.
பூமி பூஜைக்கு புகழூர் நகர்மன்ற தலைவரும் புகழூர் நகர செயலாளருமான சேகர் என்கிற குணசேகரன் தலைமை தாங்கி புதிதாக குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்கான பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார்.
பூமி பூஜை விழாவிற்கு நகராட்சி துணைத் தலைவர் பிரதாபன் முன்னிலை வகித்தார். பூமி பூஜை விழாவில் நகர்மன்ற உறுப்பினர்கள் நந்தினி ராஜேஸ் , சுரேஷ் , வார்டு செயலாளர் விஜயகாந்த் ,நகர துணை செயலாளர் இம்ரான்கான் ,11-வது வார்டு அவைத் தலைவர் மணிவேல் , கட்சி நிர்வாகிகள் மனோகரன் , கலைச்செல்வி, நகராட்சி நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.






