நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு

இவர் மேட்டு மருதூரில் துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மருதூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் லோகாம்பாள் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை அறுத்து தப்பி சென்று விட்டார்.
நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு
Published on

கரூர்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேல தண்ணீர் பள்ளியைச் சேர்ந்தவர் துரைராஜ். இவரது மனைவி லோகாம்பாள் (வயது 60). விவசாயி. இவர் மேட்டு மருதூரில் துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மருதூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அவ்வழியே பைக்கில் பின் தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் லோகாம்பாள் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை அறுத்து தப்பி சென்று விட்டார். இதுகுறித்து லோகாம்பாள் கொடுத்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com