க.பரமத்தி ஒன்றிய பகுதியில் ரூ.1.36 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகள்

மொத்தம் ரூ.1 கோடியே 36 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி பணிகளை அரவக்குறிச்சிஎம்.எல்.ஏ. மொஞ்சனூர் பி.ஆர். இளங்கோ தொடங்கி வைத்தார்.துணைத்தலைவர்கள், மேற் வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர்கள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
க.பரமத்தி ஒன்றிய பகுதியில் ரூ.1.36 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகள்
Published on

கரூர்

க.பரமத்தி ஒன்றிய பகுதியில் நபார்டு திட்டத்தின் கீழ் தென்னிலை மேற்கு ஊராட்சி சின்ன வாங்கலாம்பாளையம் முதல் சின்னதோட்டம்புதூர் வரை ரூ.46 லட்சத்திலும், கோடந்தூர் ஊராட்சி கோடந்தூரில் இருந்து சின்ன குமாரவலசு வரை ரூ.46 லட்சத்திலும், ஆனந்தகுட்டை முதல் வடகரை வரை ரூ. 39 லட்சத்து 61 ஆயிரத்தில் தார் சாலைகள், துக்காச்சி ஊராட்சியில் ரூ.25 லட்சத்தில் சமுதாய கூடம், மொஞ்சனூர் ஊராட்சி வைரமடையில், ரூ.16 லட்சத்தில் பவர் பிளாக் அமைக்கும் பணிகளுக்கு பூஜை நடைபெற்றது. மொத்தம் ரூ.1 கோடியே 36 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி பணிகளை அரவக்குறிச்சிஎம்.எல்.ஏ. மொஞ்சனூர் பி.ஆர். இளங்கோ தொடங்கி வைத்தார்.

இதில் மாவட்ட கவுன்சிலர் நெடுங்கூர் கார்த்தி, வட் டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி (ஊராட்சிகள்), தென்னிலை மேற்கு ஊராட்சி மன்றத்த லைவர் சொர்ணலதா கார்த்திகேயன், கோடந்தூர் ஊராட்சி பிளாக் மன்றத்த லைவர் உமாமகேஸ்வரி, துணைத்தலைவர்கள், மேற் வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர்கள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com