என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலாயுதம்பாளையம் பகுதிகளில் வாக்காளர் பட்டியலில் சுருக்க முறை திருத்த முகாம்
    X

    வேலாயுதம்பாளையம் பகுதிகளில் வாக்காளர் பட்டியலில் சுருக்க முறை திருத்த முகாம்

    • கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் சிறப்புவாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் முகாம் நடைபெற்றது.
    • சிறப்பு சுருக்க முறை திருத்தம் முகாம் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்றது.

    வேலாயுதம்பாளையம்

    கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் சிறப்புவாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் முகாம் நடைபெற்றது.

    சேமங்கி அரசு தொடக்கப்பள்ளி, குளத்துப்பாளையம் அரசு தொடக்கப்பள்ளி, வேட்டமங்கலம் அரசு தொடக்கப்பள்ளி, குந்தாணி பாளையம் அரசு தொடக்கப்பள்ளி, குறுக்குச்சாலை அண்ணாநகர் அரசு தொடக்கப்பள்ளி, நொய்யல் ஈவேரா பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி, ஓலப்பாளையம் அரசு தொடக்கப்பள்ளி, நடையனூர் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப்பள்ளி, கரைப்பாளையம் அரசு தொடக்கப்பள்ளி, இளங்கோ நகர்

    அரசு உதவி பெறும் ஆரம்பப் பள்ளி, தவுட்டுப்பாளையம் அரசு நடுப்பள்ளி, கூலக்கவுண்டனூர் அரசு தொடக்கப்பள்ளி, நன்செய் புகளூர் அரசு தொடக்கப்பள்ளி, வேளாண்மை அலுவலகம், காந்தியார் நடுநிலைப்பள்ளி, புகளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, புகளூர் சர்க்கரைஆலை பள்ளி, புன்னம் சத்திரம் அரசு ஆரம்பப்பள்ளி மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் 2-வது நாளாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் முகாம் நடைபெற்றது.

    முகாமில் பெயர் சேர்த்தல் ,பெயர் நீக்குதல், முகவரி திருத்தம் மற்றும் பல்வேறு திருத்தம் செய்தல் போன்றவை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல் ,முகவரி மாற்றம் மற்றும் பல்வேறு திருத்தங்கள் தொடர்பான படிவங்களை பூர்த்தி செய்து அதனுடன் முகவரி, வயது போன்ற அடையாளத்திற்கான படிப்பு சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், ஆதார் ஆகிய நகல்கள் அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களிடம் வழங்கினார்கள். சிறப்பு சுருக்க முறை திருத்தம் முகாம் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்றது.

    Next Story
    ×