என் மலர்
கள்ளக்குறிச்சி
- மணிகண்டன். இவரது மகள் விக்னேஷ்வரி (வயது 6) இவர் மூளைமுடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி .
- இவரது தாய் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமாரிடம் மனு அளித்தார்
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலை அடுத்துள்ள மேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகள் விக்னேஷ்வரி (வயது 6) இவர் மூளைமுடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி .
இவருக்கு சிறப்பு சக்கர நாற்காலி வழங்க வேண்டும் என இவரது தாய் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமாரிடம் மனு அளித்தார். மனுவை பெற்று மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறையின் மூலமாக ரூ.11 ஆயிரம் மதிப்பிலான சிறப்பு சக்கர நாற்காலியினை மாவட்ட கலெக்டர் மாற்றுத்திறனாளி சிறுமிக்கு வழங்கினார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணி மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
- 100 நாள் வேலை செய்யும் பொதுமக்களுக்கு கூலி தொகை கடந்த 3 மாத காலமாக சரிவர வங்கி கணக்கில் வரவு வைக்கவில்லை
- திருக்கோவிலூர் வேட்டவலம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி:
திருக்கோவிலூர் அருகே உள்ள கண்டாச்சிபுரம் தாலுக்கா வீரபாண்டி கிராமத்தில் 100 நாள் வேலை செய்யும் பொது மக்களுக்கு கூலி தொகை கடந்த 3 மாத காலமாக சரி வர வங்கி கணக்கில் வரவு வைக்காததை கண்டித்தும், இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டும் ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்தும், வங்கி கணக்கில் பணம் எடுக்கும் போது பொதுமக்களிடம் ஆயிரம் ரூபாய்க்கு ரூ. 20 கமிஷன் கேட்கும் வங்கி ஊழியரை கண்டித்தும் 300-க்கும் மேற்பட்டோர் திருக்கோவிலூர் வேட்டவலம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருந்த ஊராட்சி மன்ற தலைவரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கண்டாச்சிபுரம் தாசில்தார் கற்பகம், முகையூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சண்முகம் மற்றும் நாராயணன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அரிகரசுதன் ஆகியோர் பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதில் பொதுமக்கள் தரப்பில் ஊராட்சி நிர்வாகத்தை கடுமையாக குற்றம் சாட்டியதுடன், பொது மக்களின் வங்கி கணக்குகளில் ஆதார் அட்டை முறையாக இணைக்கப் படவில்லை எனக் கூறும் தனியார் வங்கியின் அலட்சிய போக்கை கடுமையாக கண்டித்து பேசினார்கள். மேலும் வீரபாண்டி கிராமத்தில் உள்ள தனியார் வங்கியின் சேவை மிகவும் குறைவாக இருப்பதாகவும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் கிளையை வீர பாண்டி கிராமத்தில் தொடங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். பொதுமக்கள் கூறிய அனைத்து கோரிக்கைகளையும் கேட்டறிந்த அதிகாரிகள் குழுவினர் வருகின்ற 24-ந்தேதி முதல் வீரபாண்டி புலிக்கல், ஒட்டம்பட்டு, அருணாபுரம் கல்லந்தல் மற்றும் தண்டரை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொது மக்களுக்கு வங்கி கணக்கில் ஆதார் அட்டை இணைக்கும் சிறப்பு முகாம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. பொதுமக்கள் தங்கள் கூலித் தொகையை வங்கிக் கணக்கில் இருந்து எடுக்கும் பொழுது கமிஷன் கேட்கும் வங்கி ஊழியரை கண்டிக்க வேண்டும் என்றும் தனியார் வங்கி நிர்வாகத்திடம் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். ஷஇந்த சாலை மறியல் போராட்டம் மற்றும் முற்றுகை போராட்டத்தால் வீரபாண்டி கிராமத்தில் 2 மணி நேரம் பதட்டமான நிலை காணப்பட்டது. தகவல் அறிந்த அரகண்டநல்லூர் போலீசார் விரைந்து வந்து அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- ஏரி பகுதியில் உள்ள மரத்தில் ஒருவர் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்ததாக தகவல் வந்தது,
- இவர் ராமச்சந்திரன்( )இவர் கம்பிகட்டும் வேலை பார்ததுவந்தார்,
கள்ளக்குறிச்சி,:
கள்ளக்குறிச்சி ராஜா நகர் ஏரி பகுதியில் உள்ள மரத்தில் ஒருவர் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்ததாக கள்ளக்குறிச்சி போலீசருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், தூக்கில் தொங்கியவர் சின்னசேலம் அருகே நமச்சிவாயபுரத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 45) என்பதும், இவர் கம்பி கட்டும் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து குடும்ப சூழ்நிலை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் கொலை செய்தனரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தாய், இருமகன்கள் கொலையில் 6 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வளர்மதி மற்றும் அவரது இரு குழந்தைகள் மர்ம நபர்களால் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி:
தாய், இருமகன்கள் கொலையில் 6 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கடலூர் மாவடடம் விருத்தாசலம் அருகே உள்ள ஆலடி பாலக்கொல்லை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி வளர்மதி (35). இவர்கள் கள்ளக்குறிச்சி ஏமப்பேரி நரிமேடு காட்டுக் கொட்டாய் பகுதியில் வசித்து வந்தனர். சாலை விபத்தில் மணிகண்டன் இறந்து விட்டார். இதனை தொடர்ந்து வளர்மதி தனது மகன்கள் தமிழரசன் (11), 8 மாத ஆண் குழந்தை கேசவன் ஆகியோருடன் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் வளர்மதி மற்றும் அவரது இரு குழந்தைகள் மர்ம நபர்களால் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டனர். வீட்டின் வெளியில் கன்று குட்டி மற்றும் கோழிகள் இறந்து கிடந்தது. 2 நாட்களுக்கு முன் தாய், மகன்கள் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. இக் கொலை குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது. கொலை செய்யப்பட்ட வளர்மதிக்கு இது வரை 4 திருமணங்கள் நடைபெற்றுள்ளது. முதல் திருமணம் உளுந்தூர் பேட்டையை அடுத்துள்ள சேந்தநாடு கிராமத்தில் முருகவேல் என்பவருடன் நடந்துள்ளது. அவரை பிரிந்து வாழ்ந்த வளர்மதி சென்னையை சேர்ந்த செல்வம் என்பவரை 2-வது திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருந்தது செல்வம் மற்றும் அவரது மகள் சாலை விபத்தில் இறந்தனர். இதனை தொடர்ந்து சென்னையை சேர்ந்த குப்பு சாமியை வளர்மதி 3-வதாக திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு தமிழரசன் என்ற மகன் உள்ளார். பின்னர் குப்புசாமியையும் பிரிந்து 4-வதாக மணிகண்டனை திருமணம் செய்துள்ளார். வளர்மதி 8 மாத கர்ப்பிணியாக இருந்த போது மணிகண்டனும் சாலை விபத்தில் இறந்து விட்டார். வளர்மதியின் இரு கணவர்களும் இறந்து விட்ட நிலையில் மற்ற 2 பேர் வேறு பெண்களை திருமணம் செய்து வாழ்ந்து வருகின்றனர்.
கொலை நடைபெற்ற இடத்தில் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி (பொறுப்பு) பகலவன் ஆய்வு நடத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:-
3 பேர் கொலை கொலை வழக்கில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. 2 நாட்களுக்கு முன் கொலை நடந்திருக்க வாய்ப்பு உள்ளது. கொலை தொ டர்பாக முக்கியஆதாரங்கள் கிடைத்துள்ளது. கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு மோகன் ராஜ் மேற்பார்வையில் 7 தனி ப்ப டை அமைக்கப்பட்டுள்ளன. ஐ.ஜி. உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கண்காணித்து வருகின்றனர். குடும்ப பிரச்சினையால் முன்விரோதம் ஏற்பட்டு கொலை நடந்திருக்க கூடும் என தெரிகிறது. ஆனாலும் அனைத்து கோணங்களிலும் விசாரித்து வருகிறோம். வளர்மதி குடும்பத்தினர், உறவினர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் விசாரிக்கப்பட்டு வருகிறது. இது கொடூரமான கொலை. விரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம். இவ்வாறு அவர் கூறினார் .அப்போது போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ், டி.எஸ்.பி. ரமேஷ், இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர். வளர்மதி மற்றும் அவரது குழந்தைகள் கொலை தொடர்பாக அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள், மணிகண்டனின முதல் மனைவி குடும்பத்தினர் மற்றும் வளர்மதியின் வீட்டின் அருகே உள்ள 2 பேர் என ெமாத்தம் 6 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.
- 10-ம் வகுப்பு தேர்வு முடிந்த மாணவிகளுக்கு தேர்வு வெற்றி தோல்விகள் குறித்தும் விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
- 1098 மற்றும் 181 எண்கள் குறிக்கும் விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி:
திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டை போலீஸ் நிலையம் சார்பில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையில் தலைமை போலீசார்கள் தாமோதரன், கோகிலா மற்றும் போலீசார் கலந்து கொண்டு மணலூர்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவிகளுக்கு குழந்தைகள் பாதுகாப்பு கருதியும், குழந்தை திருமணம் மற்றும் குழந்தை தொழிலாளர் குறித்தும் மேலும் சாலை விதிகள் பயன்படுத்துவது குறித்தும் 10-ம் வகுப்பு தேர்வு முடிந்த மாணவிகளுக்கு தேர்வு வெற்றி தோல்விகள் குறித்தும் விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
முன்னதாக மணலூர்பேட்டை காவல் துறையினர் சார்பில் செல்லங்குப்பம் கிராமத்தில் பொதுமக்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு கருதியும் குழந்தை திருமணம் மற்றும் குழந்தை தொழிலாளர் குறித்து போதை பொருள் தடுப்பு மற்றும் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்தும் காவல் உதவி செயலி பயன்படுத்துவது குறித்தும் சாலை விதிகள் குறித்தும் மேலும் 1098 மற்றும் 181 எண்கள் குறிக்கும் விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
- சசிகலா (வயது 35). இவருடைய மகள் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 தேர்வு எழுதியுள்ளார்.
- இவரை கடந்த 10-ந்தேதி முதல் காணவில்லை.
கள்ளக்குறச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பெரிய சிறுவத்தூர் கிராமத்தை சேர்ந்த சசிகலா (வயது 35). இவருடைய மகள் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 தேர்வு எழுதியுள்ளார். நீட் தேர்வு பயிற்சி வகுப்புக்கு தினமும் ஆத்தூர் சென்று வந்த நிலையில், இவரை கடந்த 10-ந்தேதி முதல் காணவில்லை. இது குறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதில் அதே கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் இளவரசன் (19) என்பவர் மாணவியை கடத்திச் சென்றது போலீசாருக்கு தெரியவந்தது. இந்நிலையில் மாணவியை கடத்தி சென்று தலைமறைவாக இருந்த கல்லூரி மாணவன் இளவரசனை போலீசார் கண்டுபிடித்தனர். அவர்களை சின்னசேலம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் இளவரசன் மீது கடத்தல் வழக்கு பதிவு செய்து கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். அந்த மா ணவியை கள்ளக்குறிச்சி யில் உள்ள காப்பகத்தில் சேர்த்தனர்.
- தியாகதுருகத்தில் நகர அ.தி.மு.க. சார்பில் உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
- மாவட்ட மாணவரணி இணை செயலாளர் சதாசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
கள்ளக்குறிச்சி:
:தியாகதுருகத்தில் நகர அ.தி.மு.க. சார்பில் உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர அவைத் தலைவர் அய்யம்பெருமாள், துணை செயலாளர் கிருஷ்ணராஜ் மாவட்ட மாணவரணி இணை செயலாளர் சதாசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜெயலலிதா பேரவை நகர செயலாளர் வேல் நம்பி வரவேற்றார். நகர செயலாளர் ஷியாம் சுந்தர் தலைமை தாங்கி தியாக துருகம் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளிலும் அதிகப்படியான உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.
குறிப்பாக இளை ஞர்கள், இளம்பெண்கள் மற்றும் புதிய வாக்காளர்களையும் சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு ஆலோசனை வழங்கினார். தொடர்ந்து வார்டு செயலாளர்களிடம் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை படிவத்தை வழங்கினார். இதில் நகர பொருளாளர் பாண்டு, மாவட்ட பிரதிநிதி வேலுமணி, ரமேஷ், இளைஞரணி செயலாளர் ஏழுமலை உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில் நகர இணை செயலாளர் ஜெயபிரகாஷ் நன்றி கூறினார்.
- சின்னசேலத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று சந்தை நடைபெறுவது வழக்கம்.
- காலை 5 மணி முதலே சந்தை தொடங்கி இரவு 11 மணி வரை நடைபெறும்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவ ட்டம் சின்னசேலத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று சந்தை நடைபெறுவது வழக்கம். இதில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகளும் பொதுமக்களும் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்கள் வாங்கி செல்வது வழக்கம். காலை 5 மணி முதலே சந்தை தொடங்கி இரவு 11 மணி வரை நடைபெறும்.
இதில் சின்னசேலம் சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் தங்களுடைய ஆடுகளை விற்பனைக்காக காலையிலே சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்தனர். பண்டிகை இல்லாத நாட்களில் குறைந்த அளவே ஆடுகள் விற்பனையாகும். ரம்ஜான் பண்டிகை நெருங்கியுள்ள நிலையில் இன்று நடைபெற்ற சின்னசேலம் வாரசந்தையில் பல ஊர்களில் இருந்து விவசாயிகள் கொண்டுவந்த ஆடுகள் 75 லட்சத்திற்கும் மேல் விற்பனையானது. இதில் வியாபாரிகள் ஆடுகளை அதிகளவில் வாங்கி செல்கின்றனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- கூவாகத்தில் கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இக்கோவில் சித்திரை திருவிழா நேற்று தொடங்கியது.
- கொரட்டூர், சிவலியாங்குளம் உள்ளிட்ட 7 கிராம மக்கள் கூழ் குடங்களுடன் ஊர்வலமாக வந்து கோவிலில் படையலிட்டனர்.
திருநாவலூர்:
கூத்தாண்டவர் கோவில் திருவிழா சாகை வார்த்தலுடன் தொடங்கியது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகத்தில் கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இக்கோவில் சித்திரை திருவிழா நேற்று தொடங்கியது.
இதையொட்டி நேற்று மாலை 4 மணிக்கு சாகை வார்த்தல் விழா நடைபெற்றது.இதில் கூவாகம், தொட்டி, நத்தம், வேலூர், அண்ணா நகர், கொரட்டூர், சிவலியாங்குளம் உள்ளிட்ட 7 கிராம மக்கள் கூழ் குடங்களுடன் ஊர்வலமாக வந்து கோவிலில் படையலிட்டனர்.
இன்று (19-ந் தேதி) பந்தலடியில் தாலி கட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை சாந்தனு சரிதம், 21-ந் தேதி பீஷ்மர் பிறப்பு, 22-ந் தேதி தர்மர் பிறப்பு, 23-ந் தேதி பாஞ்சாலி பிறப்பு, 24-ந் தேதி பகாசூரன் வதம், 25-ந் தேதி பாஞ்சாலி திருமணம், 26-ந் தேதி கூத்தாண்டவர் பிறப்பு, 27-ந் தேதி ராஜசுய யாகம், 28-ந் தேதி விராட பருவம், வெள்ளிக்கால் நடும் நிகழ்ச்சி நடக்கிறது.
29-ந் தேதி கிருஷ்ணன் தூது, 30-ந் தேதி காலை அரவாண் பலி, கூத்தாண்டவர் சுவாமிக்கு பாலாலயம் நடக்கிறது.
1-ந் தேதி மாலை கம்பம் நிறுத்துதல்,2-ந் தேதி இரவு சுவாமி திருக்கண் திறத்தல், திருநங்கைகள், பக்தர்கள் திருமாங்கல்யம் ஏற்றுக் கொள்ளும் நிகழ்ச்சி நடக்கிறது.
3-ந் தேதி காலை தேரோட்டம் நடக்கிறது. மாலை பந்தலடி பாரதம் படைத்தல், இரவு காளி கோவிலில் உயிர் பெறுதல், 4-ந் தேதி விடையாற்றி உற்சவம், 5-ந் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
- உ.ளுந்தூர் பேட்டை அருகே ஆம்னி பஸ் தடுப்பு கட்டையில் மோதி 8 பேர் காயம் அடைந்தனர்.
- இந்தப் பஸ்சை கோவையை சேர்ந்த ராஜ்குமார் ஓட்டி வந்தார்.
கள்ளக்குறிச்சி:
உளுந்தூர் பேட்டை அருகே ஆம்னி பஸ் தடுப்பு கட்டையில் மோதி 8 பேர் காயம் அடைந்தனர். கோவையில் இருந்து தனியார் ஆம்னி பஸ் 30-க்கும் மேற்பட்ட பயணி களுடன் சென்னைக்குச் புறப்பட்டு வந்தது. இந்தப் பஸ்சை கோவையை சேர்ந்த ராஜ்குமார் ஓட்டி வந்தார். இந்த பஸ் உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையம் எதிரே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி சாலைநடுவே உள்ள தடுப்புக் கட்டையில் மோதியது. இதில் பஸ்சில் பயணம் செய்த 8-க்கும் மேற்பட்ட பணிகள் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டசமாக உயிர்த்தப்பினர். போலீஸ் நிலையம் எதிரே நடந்த இந்த விபத்தை பார்த்த பொதுமக்கள் மற்றும் போலீசார் விபத்தில் காயம் அடைந்தவர்களை விட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் சிக்கிய பஸ்கிசை கிரேன் மூலம் அப்புற ப்படு த்தும் பணியில்ஈடுபட்டனர். போலீஸ் நிலையம் எதிரே ஏற்பட்ட இந்த விபத்து அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படு த்தியது.
- உதயசூரியன். இவருக்கு சவுந்தர்யா என்ற மனைவியும், 2 பெண் பிள்ளைகளும் உள்ளனர்.
- காலையில் கூலி வேலைக்குச் சென்ற மனைவி சவுந்தர்யா மாலை வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டம் பரிகம் கிராமத்தைச் சேர்ந்தவர் உதயசூரியன். இவருக்கு சவுந்தர்யா என்ற மனைவியும், 2 பெண் பிள்ளைகளும் உள்ளனர்.
இந்த நிலையில் வழக்கம் போல் காலையில் கூலி வேலைக்குச் சென்ற மனைவி சவுந்தர்யா மாலை வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உதயசூரியன், மனைவியை தேடினார். எங்கேயும் கிடைக்காததால் கச்சிராயபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன சவுந்தர்யாவை தேடி வருகின்றனர்.
- கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டதி.மு.க. செயலாளரும் ரிஷிவந்தியம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
- திகழ்ந்துவரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமை யில் விடியல் ஆட்சி நடைபெற்று வருகிறது.
கள்ளக்குறச்சி:
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டதி.மு.க. செயலாளரும் ரிஷிவந்தியம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்திய துணைக்கண்டத்தின் சிறப்புமிகு மாநிலமாக தமிழகத்தை தலை நிமிர்த்தி மற்ற முதல்வர்களுக்கு எல்லாம் உதாரணமாக திகழ்ந்துவரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமை யில் விடியல் ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் வளர்ச்சி சம சீராக இருக்க வேண்டும் என்ற தொலைநோக்கு சிந்தனையுடன் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு முக்கியத்துவம் என்ற அடிப்படையில் ஆட்சி நடத்தி வரும் முதல மைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் ஓரணியில் நின்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதன் காரணமாகவே தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் மேம்பாடு ஆகியவை சொல்லிக் கொள்ளும் அளவுக்கு உயர்ந்து வருகிறது. இதனை நடுநிலையாளர்களும் ஒத்துக்கொள்வார்கள். அதேசமயம் தமிழ்நாடு முதலமைச்சருக்கு தமிழ்நாட்டு மக்கள் கொடுத்து வரும் ஆதரவு அவர் செல்லும் இடங்களில் எல்லாம் காணப்படும் வரவேற்பு குறிப்பாக இளைஞர்களிடையே காணப்படும் எழுச்சி இவற்றைக் கண்டு எதிர்க்கட்சியினர் பொறாமை கொண்டு சேர்க்கை வாரி தூற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் எதிர்க்கட்சியினரின் பொய் பிரச்சாரம் தமிழக மக்களிடையே எடுபடவில்லை. மாறாக எள்ளி நகையாடும் அளவிற்கு எதிர்க்கட்சி களின் செயல்பாடு களை விமர்சித்து வருகின்றனர். ஒவ்வொரு துறையிலும் தீட்டப்படும் திட்டமானது மாநிலத்தின் வளர்ச்சி அதன் மூலம் தமிழக மக்களின் பொருளாதார மேம்பாடு என்ற ஒரே நோக்குடன் செயல்படுத்தி வருவதால் இன்னும்2 ஆண்டுகளில் தமிழகம் அபரீத வளர்ச்சி பெறும். அந்த அடிப்படையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் வளர்ச்சி பணிகளுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தீவிர கவனம் செலுத்தி மாவட்டத்தின் வளர்ச்சிக்கும் மாவட்ட மக்களின் நல வாழ்வு மேம்பாட்டுக்கும் கேட்கும் அனைத்து திட்டங்களையும் மற்றும் நிதி உதவிகளையும் வழங்கி வருவதுடன் மாவட்டத்தின் வளர்ச்சிக்கான தமிழக நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக நியமித்து வளர்ச்சி பணியை துரிதப்படுத்தி வருகிறார். மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரான எ.வ.வேலு தனது சொந்த மாவட்டமான திருவண்ணாமலை விட கள்ளக்குறிச்சி மாவட்ட த்தின் வளர்ச்சிக்கு அல்லும் பகலும் அயராது பாடுபட்டு வருகிறார். கொள்கிறேன்.இவ்வாறு வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ.கூறினார்.






