search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உளுந்தூர்பேட்டை அருகே லாரியை திருடி கூழாங்கற்கள் கடத்த முயன்ற 3 பேர் கைது:   12 பேர் மீது வழக்கு
    X

    உளுந்தூர்பேட்டை அருகே லாரியை திருடி கூழாங்கற்கள் கடத்த முயன்ற 3 பேர் கைது: 12 பேர் மீது வழக்கு

    • கூழாங்கற்களை கடத்தும் லாரிகளை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து வருகின்றனர்
    • புகாரின் பேரில், செல்போன் நம்பரின் டவரை வைத்து லாரியை தேடிச் சென்றனர்

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள பச்சைவெளி, நைனார்குப்பம், பள்ளமேடு பகுதிகளில் உள்ள ஒரு சிலர் கூழாங்கற்களை லாரியில் கடத்தி வெளிமாநிலங் களுக்கும், வெளிநாடு களுக்கும் சட்ட விரோதமாக விற்பனை செய்து வருகின்றனர். இது தொடர்பாக புவியி யல் துறை அதிகாரிகள், கூழாங்கற்களை கடத்தும் லாரிகளை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து வருகின்றனர். அதன்படி கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்பாக கூழாங்கற்களை கடத்தி சென்ற 4 லாரிகளை விழுப்புரத்தில் புவியியல் துறை லாரிகளை பறிமுதல் செய்தனர். இதில் பாதிக்கப்பட்ட லாரி உரிமை யாளர்கள், இதற்கு உளுந்தூர்பேட்டை யில் கந்த சாமி புரத்தில் வசிக்கும் சதீஷ் என்ப வர்தான் காரணம் என்று கருதினர். இதையடுத்து


    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூபேட்டை சுங்கச் சாவடி அருகே நிறுத்தப்பட் டிருந்த சதீஷ்-க்கு சொந்தமான 3 லாரிகளை பள்ளமேடு பகுதியைச் சேர்ந்த குழந்தைவேல், வீரமணி உள்ளிட்டவர்கள் கடத்தி சென்றனர். இந்த லாரியை கொளுத்தப் போவதாக சதீஷ்-க்கு போன் செய்து கூறினர். இதனால் பதறிப்போன சதீஷ், உளுந்தூர்பேட்டை போலீசாரிடம் புகார் கொடுத்தார். புகாரின் பேரில், செல்போன் நம்பரின் டவரை வைத்து லாரியை தேடிச் சென்றனர். அப்போது அங்கிருந்த ஏரிக்கரை அருகில் 3 லாரிகளிலும் கூழாங்கற்கள் ஏற்றப்படுவதை போலீசார் கண்டனர். உடனடியாக அங்கு விரைந்து சென்ற போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து லாரியை திருடியது, அதில் சட்ட விரோதமாக கூழாங்கற்களை கடத்த முயற்சி செய்தது போன்ற பிரிவுகளில் குழந்தைவேல், வீரமணி, ரஞ்சித்குமார், ஆறுமுகம், ராஜசேகர், சத்தியராஜ், அணில்குமார் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். அதில் சத்தியராஜ், ஆறுமுகம், ரஞ்சித்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், பறிமுதல் செய்த லாரிகளை அதன் உரிமையாளர் சதீஷ்-ம் போலீசார் ஓப்படைத்தனர்.

    உளுந்தூர்பேட்டையில் அதிகளவில் உள்ள கனிமமான கூழாங்கற்களை கடத்துவதும், அதில் தொழில் போட்டி ஏற்பட்டு இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதும் வாடிக்கையாக உள்ளது. எனவே, இது தொடர்பான வழக்கில் கைது செய்யப்படுபவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும். வாகனத்தின் உரிமம் ரத்து செய்ய வேண்டும் என்பன போன்ற கடுமையான நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வரவேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    Next Story
    ×