என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாய்- இரு மகன்கள் கொலை:  6 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை:    திடுக்கிடும் தகவல்கள்
    X

    தாய்- இரு மகன்கள் கொலை: 6 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை: திடுக்கிடும் தகவல்கள்

    • தாய், இருமகன்கள் கொலையில் 6 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • வளர்மதி மற்றும் அவரது இரு குழந்தைகள் மர்ம நபர்களால் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    தாய், இருமகன்கள் கொலையில் 6 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கடலூர் மாவடடம் விருத்தாசலம் அருகே உள்ள ஆலடி பாலக்கொல்லை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி வளர்மதி (35). இவர்கள் கள்ளக்குறிச்சி ஏமப்பேரி நரிமேடு காட்டுக் கொட்டாய் பகுதியில் வசித்து வந்தனர். சாலை விபத்தில் மணிகண்டன் இறந்து விட்டார். இதனை தொடர்ந்து வளர்மதி தனது மகன்கள் தமிழரசன் (11), 8 மாத ஆண் குழந்தை கேசவன் ஆகியோருடன் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் வளர்மதி மற்றும் அவரது இரு குழந்தைகள் மர்ம நபர்களால் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டனர். வீட்டின் வெளியில் கன்று குட்டி மற்றும் கோழிகள் இறந்து கிடந்தது. 2 நாட்களுக்கு முன் தாய், மகன்கள் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. இக் கொலை குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது. கொலை செய்யப்பட்ட வளர்மதிக்கு இது வரை 4 திருமணங்கள் நடைபெற்றுள்ளது. முதல் திருமணம் உளுந்தூர் பேட்டையை அடுத்துள்ள சேந்தநாடு கிராமத்தில் முருகவேல் என்பவருடன் நடந்துள்ளது. அவரை பிரிந்து வாழ்ந்த வளர்மதி சென்னையை சேர்ந்த செல்வம் என்பவரை 2-வது திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருந்தது செல்வம் மற்றும் அவரது மகள் சாலை விபத்தில் இறந்தனர். இதனை தொடர்ந்து சென்னையை சேர்ந்த குப்பு சாமியை வளர்மதி 3-வதாக திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு தமிழரசன் என்ற மகன் உள்ளார். பின்னர் குப்புசாமியையும் பிரிந்து 4-வதாக மணிகண்டனை திருமணம் செய்துள்ளார். வளர்மதி 8 மாத கர்ப்பிணியாக இருந்த போது மணிகண்டனும் சாலை விபத்தில் இறந்து விட்டார். வளர்மதியின் இரு கணவர்களும் இறந்து விட்ட நிலையில் மற்ற 2 பேர் வேறு பெண்களை திருமணம் செய்து வாழ்ந்து வருகின்றனர்.

    கொலை நடைபெற்ற இடத்தில் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி (பொறுப்பு) பகலவன் ஆய்வு நடத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:-

    3 பேர் கொலை கொலை வழக்கில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. 2 நாட்களுக்கு முன் கொலை நடந்திருக்க வாய்ப்பு உள்ளது. கொலை தொ டர்பாக முக்கியஆதாரங்கள் கிடைத்துள்ளது. கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு மோகன் ராஜ் மேற்பார்வையில் 7 தனி ப்ப டை அமைக்கப்பட்டுள்ளன. ஐ.ஜி. உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கண்காணித்து வருகின்றனர். குடும்ப பிரச்சினையால் முன்விரோதம் ஏற்பட்டு கொலை நடந்திருக்க கூடும் என தெரிகிறது. ஆனாலும் அனைத்து கோணங்களிலும் விசாரித்து வருகிறோம். வளர்மதி குடும்பத்தினர், உறவினர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் விசாரிக்கப்பட்டு வருகிறது. இது கொடூரமான கொலை. விரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம். இவ்வாறு அவர் கூறினார் .அப்போது போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ், டி.எஸ்.பி. ரமேஷ், இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர். வளர்மதி மற்றும் அவரது குழந்தைகள் கொலை தொடர்பாக அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள், மணிகண்டனின முதல் மனைவி குடும்பத்தினர் மற்றும் வளர்மதியின் வீட்டின் அருகே உள்ள 2 பேர் என ெமாத்தம் 6 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×