என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • இவர்களது மருமகள் மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளிட்ட 6 பேர் தங்குவதற்கு இடம் இல்லாமல் இருந்தனர்.
    • மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே பூசப்பாடி கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி (வயது 65). இவருடைய மனைவி ராசாத்தி. இவர்களது மருமகள் மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளிட்ட 6 பேர் தங்குவதற்கு இடம் இல்லாமல் இருந்தனர். அதே ஊரில் அரசு தொலைக்காட்சி வைக்க ஒதுக்கப்பட்ட அறையில் 6 பேரும் குடியேறி 15 ஆண்டுகளாக வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • செல்வம் கிராம நிர்வாக உதவியாளராக பணி செய்கிறார்.
    • செல்வத்தின் மகன், மகள் உள்ளிட்ட 73 பேருக்கு அரசு வேலை வாங்கித் தராமல் சிவா காலங்கடத்தியுள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த எலவனாசூர்கோட்டையை சேர்ந்தவர் செல்வம் (வயது 52). கிராம நிர்வாக உதவியாளராக பணி செய்கிறார். இவர் கடந்த அரசு பணிக்கு வருவதற்கு முன்பாக சென்னையை தலைமையிடமாக கொண்ட பி.எம்.எஸ். தொண்டு நிறுவனத்தில் பணி செய்தார். அங்கு எழுத்தராக பணியாற்றிய சென்னை தண்டையார்பேட்டை சிவா (40) என்பவருடன் செல்வத்திற்கு பழக்கம் ஏற்பட்டது. 

    கடந்த மார்ச் மாதம் செல்வத்தை தொடர்பு கொண்ட சிவா, தனக்கு அரசு உயர் அதிகாரிகள் பலரை தெரியும். யாருக்காவது அரசு வேலை வேண்டுமென்றால், பணம் கொடுத்தால் வாங்கித் தருகிறேன் என்று கூறியுள்ளார். இதனை நம்பிய செல்வம், தனது மகள், மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருமாறு ரூ.13 லட்சத்தை செல்வத்திடம் கொடுத்தார். இது தவிர உறவினர்கள் நண்பர்கள் என 71 பேரிடம் ரூ.79 லட்சத்து 54 ஆயிரத்து 600-ஐ வசூலித்து சிவாவிடம் கொடுத்துள்ளார். அப்போது சென்னை பாடியநல்லூரை சேர்ந்த ரமேஷ் (19) சிவாவுடன் இருந்து பணத்தை பெற்றுள்ளார். 

    செல்வத்தின் மகன், மகள் உள்ளிட்ட 73 பேருக்கு அரசு வேலை வாங்கித் தராமல் சிவா காலங்கடத்தியுள்ளார். இது தொடர்பாக அவரை தொடர்பு கொண்ட போது, சிவா கூறிய பதில் செல்வத்திற்கு சந்தேகங்களை எழுப்பியது. இதையடுத்து கொடுத்த பணத்தை திருப்பித் தருமாறு சிவாவிடம் செல்வம் கேட்டுள்ளார். அவர் பணத்தையும் கொடுக்காமல், அரசு வேலையும் வாங்கித் தராமல், சரியான பதிலும் கூறாமல் செல்வத்தை அலைக்கழித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த செல்வம், அரசு வேலை வாங்கித் தருவதாக சிவா செய்த பண மோசடி குறித்து எலவனாசூர்கோட்டை போலீசாரிடம் புகார் அளித்தார். 

    இது குறித்து வழக்கு பதிவு செய்த எலவனாசூர்கோட்டை போலீசார், வழக்கை கள்ளக்குறிச்சி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றினர். குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் சென்னை விரைந்தனர். அங்கு சிவா, ரமேஷ் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இதில் 2 பேரும் அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் வாங்கியது உண்மை என்பது போலீசாருக்கு தெரியவந்தது. தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோ கன்ராஜ் உத்தரவின்பேரில் பண மோசடியில் ஈடுபட்ட சிவா, ரமேஷ் ஆகிய 2 பேரையும் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி நீதிமன்ற த்தில் ஆஜர்படுத்தில் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் தடையினை செயல்படுத்தி வருகின்றது.
    • எந்த நிலையிலும் பயன்படுத்துவதைத் தடுக்க மக்களின் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்

    கள்ளக்குறிச்சி:

    தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் தடையினை செயல்படுத்தி வருகின்றது. தடையாணையில் குறிப்பிட்டுள்ளபடி பாலி எதிலீன் டெரிப்தாலேட், உயர் அடர்த்தி பாலிஎதிலீன், வினைல், குறைந்த அடர்த்தி பாலிஎதிலீன், பாலிப்ரோப்பிலீன், பாலிஸ்டைரீன் ரெசின்கள் போன்ற அதிக மூலக்கூறு எடைகொண்ட பாலிமரில் இருந்து தயாரிக்கப்பட்டு சுயமாக எடுத்துச் செல்லும் தன்மை கொண்ட பிளாஸ்டிக் கைப்பைகள், உபயோகிப்பதற்கும், கையாளுவதற்கும் கடுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. 

    தற்போது நெய்யப்பட்ட பைகள் அல்லது ரபியன் பைகள் என்ற பெயரில் பிளாஸ்டிக் கைப்பைகள், விற்பனையாளர்களிடமும், கடைக்காரர்களிடமும் பூ, உணவு, காய்கறிகள், மளிகைப் பொருட்கள், ஜவுளி, முதலியவைகளை விநியோகிக்க உபயோகப்படுகின்றது. இதுபோன்ற பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு பிறகு தூக்கி எறியப்பட்டு குப்பையாக மாறிவிடுகிறது. இவ்வாறு குப்பையாக வீசப்பட்ட பிளாஸ்டிக்குகள் ஏரிகள், ஆறுகள், கடல் போன்ற நீர்நிலைகள் மற்றும் நிலத்தில் வாழும் உயிரினங்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்து கின்றன. தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை தயாரிப்ப தோ, விற்பனை செய்வதோ மற்றும் விநியோகிப்பதோ தமிழக அரசின் தடை அறிவிப்பை மீறும் குற்ற செயலாகும். 

    ஒருமுறை பயன்படும் பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்று வதற்கு, தமிழக அரசால் அமல்படுத்தப்பட்ட தடை யை செயல்படுத்துவதோடு மட்டுமல்லாமல் பிளாஸ்டிக் பொருட்களை குறிப்பாக பிளாஸ்டிக் கைப்பைகளை எந்த நிலையிலும் பயன்படுத்துவதைத் தடுக்க மக்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் தேவை என்பதனை தமிழக அரசு லியுறுத்துகிறது. எனவே உலகம் எதிர்கொ ள்ளும் பெரும் அச்சுறுத்தலை அகற்று வதற்கு பிளாஸ்டிக்கை தவிர்ப்போம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளை பயன்படுத்துவோம் என உறுதிமொழி மேற்கொ ள்வதோடு, அதை உறுதியுடன் பின்பற்றுவோம். இவ்வாறு கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.

    • போலீசார் சேஷசமுத்திரம் பகுதியில் ரோந்துப்பணி மேற்கொண்டனர்.
    • வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 8 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரன் தலைமையிலான போலீசார் சேஷசமுத்திரம் பகுதியில் ரோந்துப்பணி மேற்கொண்டனர். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த ராமர் (வயது 57) என்பவர் அவரது காட்டுகொட்டாயில் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். இதையடுத்து போலீசார் ராமர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 8 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்தனர். இதேபோன்று அ.பாண்டலம் பகுதியில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது மாரியம்மன் கோவில் அருகே சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த தேவபாண்டலம் கிராமத்தை சேர்ந்த ராஜவேல் (30) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்த 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    • கள்ளக்குறிச்சி அருகே இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
    • இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி - சின்னசேலம் இடையே 2 கி.மீ. தொலைவுக்கு ரெயில்வே பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக ஏமப்பேர் விவசாயிகளிடம் நில ஆர்ஜிதம் செய்யப்பட்டது. இதற்கு இது நாள் வரை பணம் தரவில்லை. இருந்தபோதும் ரெயில்வே பாதை அமைக்கும் பணிகள் நடந்தது வந்தது. இங்குள்ள இடங்களின் சந்தை மதிப்பு மற்றும் அரசின் மதிப்பு உயர்ந்தது. எனவே, உயர்த்தப்பட்ட மதிப்பிற்கு ஏற்ற வகையில் இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் ஏமப்பேரை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி - சேலம் ரவுண்டானவில் திரண்டனர். சந்தை மதிப்பிற்கு ஏற்ற வகையில் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டுமென வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜவகர்லால், உதவி போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதனையேற்ற ஏமப்பேர் மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலைமறியலால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • முனியன் வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்.
    • விபத்து ஏற்படுத்திய வாகனத்தை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா தியாகை கிராமத்தைச் சேர்ந்தவர் பூசாரி முனியன் (வயது 43). வெளிநாட்டில் இருந்து திரும்பிய இவர் அனைத்து உறவினர் வீட்டுக்கும் சென்று விட்டு பின்னர், ஆசனூர் அருகே உள்ள வலசை என்ற கிராமத்தில் உள்ள அவரது மாமியார் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் புத்தமங்கலம் கோழி பண்ணை அருகே சென்று கொண்டிருந்தார்.அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த எலவனாசூர்கோட்டை சப் இன்ஸ்பெக்டர் திருமால் தனிப்பிரிவு தலைமை போலீஸ் சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு பொதுமருத்துவ மனைக்குஅனுப்பி வைத்து விபத்து ஏற்படுத்திய வாகனத்தை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள். 

    • போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.
    • மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தவரை நிறுத்தி விசாரணை நடத்தினர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே தேவபாண்டலம் கிராமத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயமணி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் படியாக மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தவரை நிறுத்தி விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் பெருக்கஞ்செடி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம்(வயது44) என்பதும், மோட்டார் சைக்கிளை திருடி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ஆறுமுகத்தை கைது செய்து போலீசார், அவர் மீது வழக்கு பதிந்து அவரிடமிருந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    • அரியலூர் துணைமின் நிலையத்தில் வருகின்ற 17-ந்தேதி (சனிக்கிழமை)பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என சங்கராபுரம் உதவி செயற்பொறியாளர் தெரிவித்தார்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் வட்டம் அரியலூர் துணைமின் நிலையத்தில் வருகின்ற 17-ந்தேதி (சனிக்கிழமை)பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இந்த பராமரிப்பு பணிகளால் சங்கராபுரம் வட்டத்திலுள்ள அரியலூர், அத்தியூர், சின்னக்கொள்ளியூர், பெரியக்கொள்ளியூர், வடகீரனூர், மையனூர், சீர்பனந்தல், எடுத்தனூர், அருளம்பாடி, செளரியார்பாளையம், வடமாமந்தூர், கடுவனூர், இளையனார்குப்பம், ஜம்படை, திருவரங்கம், கள்ளிப்பாடி, ஓடியந்தல், வானாபுரம், பகண்டை, கூட்ரோடு, மரூர், கடம்பூர், ரெட்டியார்பாளையம், கரையாம்பாளையம், எகால், மற்றும் ஏந்தல் பகுதியை சுற்றியுள்ள கிராமங்களுக்கு காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என சங்கராபுரம் உதவி செயற்பொறியாளர் தெரிவித்தார்.

    • கடந்த 15 நாட்களாக விவசாயிகள் கொண்டு வந்த நெல்லை எடைபோட்டு கொள்முதல் செய்யப்படாமல் உள்ளது.
    • கூத்தக்குடி - கள்ளக்குறிச்சி சாலையில் நெல் மூட்டைகளை சாலையில் அடுக்கி மறியலில் ஈடுபட்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 33 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்குகின்றன. இந்த நிலையங்கள் கடந்த 31-ந் தேதி முதல் மூடப்பட்டன. இதனால் கடந்த 15 நாட்களாக விவசாயிகள் கொண்டு வந்த நெல்லை எடைபோட்டு கொள்முதல் செய்யப்படாமல் உள்ளது. இதற்கு உயரதிகாரிகளின் அனுமதி கிடைக்காததால் கொள்முதல் நடக்கவில்லை எனத் தெரிகிறது. இதில் தியாகதுருகம் அருகே கூத்தக்குடியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கடந்த 15 நாட்களாக விவசாயி கள் மூட்டைகளில் கொண்டு வந்த நெல், கொள்முதல் செய்ய ப்படாமல் தேங்கி இருக்கிறது.

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி விவசாயிகள், கூத்தக்குடி - கள்ளக்குறிச்சி சாலையில் நெல் மூட்டைகளை சாலையில் அடுக்கி மறியலில் ஈடுபட்டனர். அங்கு விரைந்து சென்ற கள்ளக்குறிச்சி, வரஞ்சரம் போலீசார் மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.பேச்சுவார்த்தையில், உயர் அதிகாரிகளிடம் இருந்து அனுமதி கிடைத்தவுடன், நெல்லை எடைபோட்டு விரைவில் கொள்முதல் செய்யப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து மறியலை கைவிட்ட விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்நிலையில் நெல்லை கொள்முதல் செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட கூத்தக்குடி மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த பழனியப்பன் (வயது 49), ராமதாஸ் (50), சுப்பிரமணி (62), ரவிச்சந்திரன் (54) மற்றும் 5 விவசாயிகள் மீது மீது வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நெல்லை கொள்முதல் செய்யக்கோரி மறியலில் ஈடுபட்ட விவசாயி கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பது அப்பகுதி விவசாயிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • 2023-2024 ஆம் ஆண்டிற்கான விடுதி சேர்க்கை நடைபெறுகிறது.
    • மாணவர்கள் நேரடியாகவோ அல்லது காப்பாளர் உதவியுடனோ 30-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் சங்கராபுரம் மாணவர் விடுதி, புதுப்பட்டு மாணவர் விடுதி மற்றும் சங்கராபுரம் தொழிற்பயிற்சி மாணவர் விடுதி ஆகியவற்றில் 2023-2024 ஆம் ஆண்டிற்கான விடுதி சேர்க்கை நடைபெறுகிறது. மேலும், இந்த விடுதிகளில் மாணவர்கள் தங்கி பயில்வதற்கு விடுதி மேலாண்மை செயலியின் மூலம் மாணவர்கள் நேரடியாகவோ அல்லது காப்பாளர் உதவியுடனோ 30-ந்தேதி வரை விண்ண ப்பித்து மாணவர்கள் விடுதியில் தங்கி பயின்று பயன்பெறலாம் இவ்வாறு அவர் கூறினார்.

    • கேமராவை சில நாட்களுக்கு முன்பு மர்மநபர்கள் யாரோ உடைத்து சேதப்படுத்திச் சென்றனர்.
    • வட பொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்த ரங்கப்பனூர் பஸ் நிறுத்தத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மநபர்கள் யாரோ உடைத்து சேதப்படுத்திச் சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் வட பொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசார ணையில், ரங்கப்பனூர் வடக்கு தெருவை சேர்ந்த கணபதி (வயது 25) என்பவர் கண்கா ணிப்பு கேமராவை உடைத்து சேதப்ப டுத்தியது தெ ரிய வந்தது. இதனை யடுத்து கணபதியை போலீசார் கைது செய்தனர்.

    • 800-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கி பயன் அடைந்து வருகிறார்கள்.
    • ரேஷன் கடை முன்பு அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    மூங்கில்துறைப்பட்டு அருகே பொரசப்பட்டு மேலப்பாக்கம் புதூர் கிராமத்தில் ரேஷன் கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த கடையில் 800-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் அத்தியா வசிய பொருட்களை வாங்கி பயன் அடைந்து வருகிறார்கள். இந்நிலையில் பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் பொருட்கள் வாங்க ரேஷன் கடைக்கு வந்தனர். அப்போது கடை விற்பனையாளர், பொதுமக்களிடம் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் வாங்கும் போது கூடுதலாக சோப்பு உள்ளிட்ட சில பொருட்களை வாங்க கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், விற்பனையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், ரேஷன் கடை முன்பு அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் மூங்கில்துறைப்பட்டு காவல் உதவி ஆய்வாளர் இளங்கோவன், தனிப்பிரிவு காவலர் சுந்தர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். பின் இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர். இதனை ஏற்று பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

    ×