என் மலர்
காஞ்சிபுரம்
பரங்கிமலை அருகே ஆலந்தூர் ஆசர்காபா தெருவை சேர்ந்தவர் கோகுல்ராஜ் (31). கொரியர் நிறுவன ஊழியர்.
இவரது தாய் சரஸ்வதியின் அண்ணன் எத்திராஜ் என்ற அப்புன் (60). தொழிலாளி. அதே பகுதியில் வசித்து வரும் இவர் அடிக்கடி குடி போதையில் கோகுல்ராஜ் வீட்டுக்கு சென்று தகராறு செய்து வந்தார்.
நேற்று நள்ளிரவு வழக்கம் போல் குடிபோதையில் சென்ற எத்திராஜ், சரஸ்வதியை ஆபாச வார்த்தைகளால் திட்டி உள்ளார். இதனை ஆத்திரம் அடைந்த கோகுல்ராஜ் கல்லால் எத்திராஜின் முகத்தில் தாக்கினார்.
காயம் அடைந்த எத்திராஜ் தொடர்ந்து திட்டியவாறே அங்கிருந்து சென்றார். அவரை பின் தொடர்ந்து சென்ற கோகுல்ராஜ் மீண்டும் கல்லால் எத்திராஜின் தலை, முகத்தில் சரமாரியாக தாக்கினார்.
இதில் எத்திராஜ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார். கொலை குறித்து தகவல் அறிந்ததும் பரங்கிமலை போலீசார் அங்கு விரைந்து சென்று கோகுல்ராஜை கைது செய்தனர்.
சோழிங்கநல்லூரை அடுத்த பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர்கள் டில்லி (வயது19), மோகனா (15).
நேற்று இரவு அவர்கள் மேலும் 2 வாலிபர்களுடன் ஒரே மோட்டார் சைக்கிளில் மாமல்லபுரம் அடுத்த தேவநேரி பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையில் சென்றனர்.
அப்போது அங்குள்ள பெட்ரோல் பங்க்கில் கேனில் பெட்ரோல் வாங்கினர். பின்னர் 4 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் சாலையை கடக்க திரும்பினர்.
அந்த நேரத்தில் சென்னையில் இருந்து மாமல்லபுரம் நோக்கி சென்ற டெம்போ வேன் திடீரென மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் டில்லி, மோகனா உள்பட 4 பேரும் பல அடி தூரம் தூக்கி வீசப்பட்டனர். சம்பவ இடத்திலேயே டில்லி, மோகனா மற்றும் ஒரு வாலிபர் பரிதாபமாக இறந்தனர்.
உடன் வந்த மேலும் ஒருவர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். இது குறித்து மாமல்லபுரம் போலீசுக்கு தகவல்தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விரைந்து வந்து பலியான 3 பேரின் உடல்களை மீட்டு பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த வாலிபருக்கு சென்னை அரச ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
விபத்தில் பலியான மற்றொருவர் மற்றும் படுகாயம் அடைந்தவர்கள் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்று தெரியவில்லை. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விபத்தில் பலியானவர்கள் கேனில் பெட்ரோல் வாங்கி சென்றதால் அவர்களது மற்றொரு மோட்டார் சைக்கிள் பெட்ரோல் இல்லாமல் எங்கேனும் நிறுத்தப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இதையடுத்து கிழக்கு கடற்கரை சாலையில் எங்கேனும் கேட்பாரற்று மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டு உள்ளதா? என்று விசாரித்து வருகின்றனர்.
இந்த விபத்து தொடர்பாக டெம்போ வேன் டிரைவர் பாபுவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில் இருந்து திருச்சி, மதுரை, கோவை ஆகிய நகரங்களுக்கு தினந்தோறும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானங்கள் சென்று வருகின்றன.
இந்த நகரங்களுக்கு செல்லும் இந்தியன் ஏர்லைன் விமான பயணிகளுக்கு கட்டண சலுகை வழங்கப்படுகிறது. கடந்த 2 வருடங்களாக இந்த உள்ளூர் விமான சேவை நடந்து வருகிறது.
இதற்கு அலையன் ஏர் விமானங்கள் பயன் படுத்தப்படுகின்றன. இந்த மாத தொடக்கத்தில் இருந்தே சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, கோவை செல்லும் விமானங்களிலும், அங்கிருந்து சென்னை வரும் விமானங்களிலும் பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது.
இதையடுத்து, இந்த நகரங்களுக்கு வருகிற 30-ந்தேதிவரை விமான சேவையை ரத்து செய்வதாக இந்தியன் ஏர்லைன்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் 12 விமான சேவை ரத்தாகிறது.
இதுகுறித்து இந்தியன் ஏர்லைன்ஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, கோவை செல்லும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.
எனவே வருகிற 30-ந்தேதிவரை இந்த உள்ளூர் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. வெளியூர் வெளிநாடு செல்லும் விமானங்களுக்கு தட்டுப்பாடு இருக்கிறது.
எனவே இங்கு நிறுத்தப்பட்ட விமானங்கள் வெளியூர் சேவைக்கு பயன்படுத்தப்படும். தற்போது சென்னையில் இருந்து வாரம் 3 நாட்கள் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் யாழ்ப்பாணம் செல்கிறது. இந்த சேவை தொடர்ந்து நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
படப்பை அருகே உள்ள வந்தவாஞ்சேரியை சேர்ந்தவர் ஹரிமுத்து. இவர் தாம்பரம் பஸ் டெப்போவில் டிரைவராக பணியாற்றி வருகிறார். வழக்கமாக தாம்பரம் - வல்லக்கோட்டை செல்லும் பஸ்சை ஓட்டி வந்தார்.
சம்பத்தன்று காலை டிரைவர் ஹரிமுத்து பணிக்கு 10 நிமிடம் தாமதமாக வந்ததாக தெரிகிறது. இதையடுத்து டெப்போ அதிகாரி அவருக்கு வருகை பதிவேட்டில் ‘ஆப்சென்ட்’ என்று குறிப்பிட்டார். மேலும் ஹரிமுத்து ஓட்டி வந்த பஸ்சை வேறு ஒரு டிரைவர் மூலம் இயக்கியதாகவும் தெரிகிறது.
இது தொடர்பாக ஹரி முத்து டெப்போ அதிகாரியிடம் வாக்குவாதம் செய்தார். திடீரென அவர் பாட்டிலில் இருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற ஊழியர்கள் ஹரிமுத்துவை மீட்டு சாமாதானப்படுத்தினர். இச்சம்பவத்தால் தாம்பரம் பஸ் டெப்போவில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்தியாவில் உள்ள புராதன நினைவு சின்னங்களை பராமரித்து பாதுகாத்து வரும் தொல்லியல் துறை ஆண்டுதோறும் நவம்பர் 19-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை உலக பாரம்பரிய வாரமாக இந்தியா முழுவதும் கொண்டாடி வருகிறது.

விழாவை முன்னிட்டு மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணெய் உருண்டை பாறை உள்ளிட்ட புராதன சின்னங்களை இன்று (செவ்வாய்க்கிழமை) ஒரு நாள் மட்டும் கட்டணமின்றி இலவசமாக கண்டுகளிக்கலாம் என்று மாமல்லபுரம் தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
கல்பாக்கத்தை அடுத்த கடலூர் கிராமத்தை சேர்ந்தவர் நந்தினி என்ற சத்தியவாணி (வயது 25). இவருக்கும், கல்பாக்கம் அடுத்த நத்தமேடு கிராமத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பாளையம் என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது.
இந்நிலையில் நேற்று மாலை நந்தினிக்கு உடல்நிலை சரியில்லை என்று அவரது கணவர் பாளையம் சதுரங்கப்பட்டினம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு நந்தினியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இதனையடுத்து நந்தினியின் உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையில் நந்தினியின் கழுத்தில் காயம் இருந்ததாகவும் அவரது சாவில் மர்மம் உள்ளதாகவும் நந்தினியின் உறவினர்கள் சதுரங்கப்பட்டினம் அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர்,
தகவலறிந்த மாமல்லபுரம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவரதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்துச் சென்றனர். இது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கூவத்தூர் அருகே உள்ள கடலூர் கிராமத்தை சேர்ந்தவர் நந்தினி என்கிற சத்தியவாணி (வயது 25). இவருக்கும் நத்தம்மேடு பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பாலையன் என்பவருக்கும் கடந்த 6 மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. பாலையன் மாமியார் வீட்டில் தங்கி இருந்தார்.
நேற்று மாலை வீட்டில் இருந்த சத்தியவாணி தூக்கில் தொங்கிய நிலையில் உயிருக்கு போராடியபடி கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு சதுரங்கபட்டினம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சத்தியவாணி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதற்கிடையே சத்தியவாணி இறந்தது பற்றி அறிந்ததும் பாலையன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனால் சத்தியவாணி உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுபற்றி அவர்கள் சதுரங்கபட்டின போலீசில் புகார் தெரிவித்தனர். அதில், சத்தியவாணி சாவில் மர்மம் இருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சத்தியவாணி கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் தங்கம் கடத்தப்பட்டு வருவது அதிகரித்து உள்ளது. சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டு தங்கம் கடத்தல்காரர்களை கைது செய்தும், தங்கத்தை பறிமுதல் செய்தும் வருகிறார்கள்.
எனினும் தங்கம் கடத்தல் தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கு விமான நிலைய ஊழியர்கள் உடந்தையாக இருப்பதாக குற்றச்சாட்டும் எழுந்து உள்ளது.
நேற்று சென்னை விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட 1 கிலோ தங்கம் மற்றும் ரூ.45½ லட்சம் வெளிநாட்டு பணம் சிக்கி இருந்தது. இந்த நிலையில் தற்போது 3 கிலோ கடத்தல் தங்கம் சிக்கி இருப்பது அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை விமான நிலையத்துக்கு நேற்று இரவு மஸ்கட்டில் இருந்து ஓமன் ஏர்வேஸ் விமானம் வந்தது. பின்னர் நள்ளிரவு அந்த விமானம் மீண்டும் மஸ்கட்டிற்கு புறப்பட இருந்தது.
இதையடுத்து ஊழியர்கள் அந்த விமானத்தை சுத்தம் செய்தனர். அப்போது ஒரு இருக்கையின் கீழ் கேட்பாரற்று பை கிடந்தது.
இதனை பார்த்து சந்தேகம் அடைந்த ஊழியர்கள் இது பற்றி விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் பாதுகாப்பு அதிகாரிகளுடன் வந்து பையை சோதனை செய்தனர்.
அல் 3.3 கிலோ எடையுள்ள 3 தங்க கட்டிகள் இருந்தன. அதனை மர்ம நபர்கள் கடத்தி வந்திருப்பது தெரிந்தது. தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1 கோடியே 33 லட்சம் ஆகும்.
சுங்க அதிகாரிகளின் கெடுபிடி காரணமாக கடத்தலில் ஈடுபட்டவர்கள் தங்க கட்டி இருந்த பையை விமான இருக்கையின் கீழே விட்டு சென்று உள்ளனர்.
இதையடுத்து அந்த விமானத்தில் பயணம் செய்தவர்களின் பட்டியலை வைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். கண்காணிப்பு கேமிரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் தொடர்ந்து கடத்தல் தங்கம் சிக்கி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலக ஆணழகன் போட்டி தென்கொரியாவில் நடந்தது. 37 நாடுகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தங்களது உடல் கட்டமைப்பை வெளிப்படுத்தினர். இதில் 20 வயதுக்குட்பட்டோர் பிரிவில் தமிழக வீரர் பெஞ்சமின் ஜெரால்டு 2-வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இதே போட்டியில் சீனியர் பிரிவில் பங்கேற்ற இவரது தந்தை ராஜேந்திரன் மணி 3-வது இடத்தை பெற்று வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார்.
சென்னையை அடுத்த கிழக்கு தாம்பரம் ஆனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மணி (வயது 46 ) கூறுகையில், ‘உலக ஆணழகன் போட்டியில் தந்தை, மகன் கலந்து கொண்டு பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும். இளம் தலைமுறையினர் இந்த போட்டிக்கு அதிக அளவில் வருவதற்கு அரசாங்கம் உதவி செய்ய வேண்டும். பள்ளிகளில், மாணவ, மாணவிகள் உடல்கட்டுக்கோப்புடன் இருக்கும் வகையில் அது தொடர்பான வகுப்புகளை நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார். ஆணழகன் போட்டியில் ஏராளமான பட்டங்களை வென்றுள்ள ராஜேந்திரன் மணி உடற்பயிற்சி கூடம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு அருகே உள்ள வெண்பாக்கத்தில் வித்யாசாகர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இங்கு விழுப்புரம் மாவட்டம் மலையம்பட்டி கிராமத்தை சேர்ந்த பலராமன் என்பவரது மகள் கிருஷ்ண பிரியா (வயது 19) இயற்பியல் 3-ம் ஆண்டு படித்து வந்தார். அவர் கல்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி தினமும் கல்லூரிக்கு சென்று வந்தார்.
கல்லூரியில் தற்போது செமஸ்டர் தேர்வு நடந்து வருகிறது. மாணவி கிருஷ்ண பிரியா நேற்று காலை கடைசி தேர்வை எழுதினார்.
பின்னர் மாலையில் வகைப்பு அறையில் இருந்து வெளியே வந்த அவர் திடீரென கல்லூரியின் 2-வது மாடிக்கு சென்றார். உடன் வந்த தோழிகள் கேட்டபோது எதுவும் கூறவில்லை.
இந்த நிலையில் திடீரென அவர் கல்லூரியின் 2-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் கிருஷ்ண பிரியாவின் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். இதனை கண்டு மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக கிருஷ்ண பிரியாவை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
நேற்று இரவு கிருஷ்ண பிரியா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். அவரது தற்கொலை முடிவுக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை.
கிருஷ்ண பிரியாவுக்கு கல்லூரியில் ஏதேனும் பிரச்சினை இருந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் செங்கல்பட்டு தாலுக்கா போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது தொடர்பாக கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் கிருஷ்ண பிரியாவின் தோழிகளிடம் விசாரணை நடத்தவும் திட்டமிட்டு உள்ளனர்.
கல்லூரி மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை செய்த சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லபுரம் முதல் சென்னை வரை உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் அடிக்கடி பல்வேறு குற்றச்செயல்கள் நடக்கின்றன. குறிப்பாக சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் அங்கிருந்து தப்பித்து கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீடுகள், விடுதிகளில் தஞ்சம் அடைந்து விடுகின்றனர். மேலும் சென்னையில் கொலை சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் கொலை செய்யப்பட்டவர்களின் உடலை இ.சி.ஆர். சாலையில் உள்ள சவுக்கு தோப்புகளில் போட்டு விட்டு செல்கின்றனர். இ.சி.ஆர். சாலையில் வரும் காதல் ஜோடிகளை மிரட்டி வழிப்பறி செய்வது, காதலனை அடித்து விரட்டி விட்டு இளம்பெண்ணிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபடும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கின்றன.
இந்த நிலையில் கிழக்கு கடற்கரை சாலையில் தஞ்சம் அடையும் குற்றவாளிகளை அடையாளம் காணும் வகையிலும் முதல் கட்டமாக மாமல்லபுரம் முதல் கோவளம் வரை உள்ள இ.சி.ஆர். சாலையில் சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் 20 அடிக்கு ஒரு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
இதில் பதிவாகும் காட்சிகளை கண்காணிக்கும் வகையில் கணினியுடன் கூடிய கட்டுப்பாட்டு அறையும் மாமல்லபுரம் போலீஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பதிவாகும் காட்சிகளை 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் போலீசார் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.
தற்போது 200 கண்காணிப்பு கேமராக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. மீதமுள்ள 50 கண்காணிப்பு கேமராக்கள் இணைப்பு இன்னும் ஒரு சில தினங்களில் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளது.
படப்பை:
படப்பை அரிகோண் நடுவீரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (45). தொழிலாளி. இன்று காலை தனது மோட்டார் சைக்கிளில் காஞ்சிபுரம் புறப்பட்டார்.
வண்டலூர்- வாலாஜாபாத் சாலையில் சென்ற போது இவருடைய மோட்டார் சைக்ளிள் மீது லாரி மோதியது. இதில், வெங்கடேசன், அதே இடத்தில் பரிதாபமாக உயிர் இழந்தார். ஒடகரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






