என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோடு மாவட்டத்தில் மே தின விழா நேற்று கொண்டாடப்பட்டது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் மே தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. அதன்படி ஈரோடு மாநகரில் பல்வேறு பகுதிகளில் தொழிலாளர்கள் மே தின விழாவை சிறப்பாக கொண்டாடினார்கள். ஈரோடு மாநகராட்சி அனைத்து அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் மே தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கூட்டமைப்பு செயலாளர் முகமது இஸ்மாயில் தலைமை தாங்கினார்.

    தலைவர் ராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மே தின கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் மாநகராட்சி உதவி ஆணையாளர்கள் விஜயகுமார், அசோக்குமார், சண்முகவடிவு, விஜயா மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டார்கள். முடிவில் அமைப்பு செயலாளர் லட்சுமணன் நன்றி கூறினார்.

    இதேபோல் உழவன் மகன் விவசாயிகள் சங்கம் சார்பில் ஈரோடு-சத்தி ரோடு வாய்க்கால்கரை பகுதியில் மே தினம் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு சங்க தலைவர் மாதேஷ்வரன் தலைமை தாங்கினார். செயலாளர் மணிகண்டன், பொருளாளர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

    தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஈரோடு மாவட்ட தலைவர் ஏ.செல்வராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சங்க கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் சங்க உறுப்பினர்கள் ஈஸ்வரன், செந்தில், சதீஷ், துரைசாமி உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
    பவானி அடுத்த சித்தோடு அருகே மின்சாரம் தாக்கியதில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பவானி:

    பவானி அடுத்த சித்தோடு நசியனூர் பள்ளி பாளையத்தில் ஈரோடு வில்லரசம்பட்டி நால்ரோடு பகுதியை சேர்ந்த சரவணன் (44) என்பவருக்கு சொந்தமான இடத்தில் புதிய கட்டிடம் கட்டும் கட்டுமான பணி நடைபெறுகிறது.

    இந்த நிலையில் தர்மபுரி போயர்தெரு தளவாய் அள்ளி பகுதியை சேர்ந்த கிருஷ்ணப்பா (32) வேலை செய்யும் போது மின்சார மோட்டார் ஓடிக்கொண்டிருந்தது. இதில் கிருஷ்ணப்பாவின் கை தவறுதலாக பட்டு மின்சாரம் தாக்கி கீழே விழுந்து தலையில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டது.

    இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். அவரது உடல் ஈரோடு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கவுந்தப்பாடி அருகே மழைக்கு ஒதுங்கியபோது பனைமரம் முறிந்து விழுந்து தனியார் கல்லூரி பேராசிரியர் பலியானார்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை கொட்டியது.

    கவுந்தப்பாடி அடுத்த பெருந்தலையூரை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 29). இவர் தனியார் கல்லூரி ஒன்றில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வந்தார்.

    நேற்று இரவு 9.30 மணியளவில் பேராசிரியர் கோவிந்தன் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்களின் பின்புறம் உட்கார்ந்து சென்று கொண்டிருந்தார். அவரது நண்பர் சுரேஷ் வண்டியை ஓட்டி சென்றார்.

    பெருந்தலையூர் அருகே உள்ள ஒரு ஏரி பக்கம் சென்றபோது பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் வண்டியை நிறுத்தி ஏரிக்கரையோரம் உள்ள ஒரு பனைமரம் அருகே நின்று கொண்டிருந்தனர்.

    அப்போது திடீரென பலத்த காற்றில் பனைமரம் முறிந்து பேராசிரியர் கோவிந்தன் மீது விழுந்தது. இதில் அவரது தலையில் பலத்த அடிபட்டது.

    மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சுரேஷ் மற்றும் அக்கம்-பக்கத்தினர் அவரை உடனடியாக ஆப்பக்கூடலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பிறகு மேல் சிகிச்சைக்காக பவானியில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பேராசிரியர் கோவிந்தன் பரிதாபமாக இறந்தார்.
    ஈரோட்டில் மாணவியை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த ரியல் எஸ்டேட் அதிபரின் செல்போனை போலீசார் கைப்பற்றி ஆராய்து வருகிறார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் சேர்ந்த 21 வயது பெண் கடந்த 2015-ம் ஆண்டில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். கல்லூரி அருகே உள்ள கடைக்கு அடிக்கடி அவர் சென்று வந்தார்.

    அப்போது ஈரோடு வில்லரசம்பட்டியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ராதாகிருஷ்ணன் (37) என்பவர் அந்த மாணவிக்கு அறிமுகமானார்.

    பின்னர் ஒரு நாள் ராதாகிருஷ்ணன் அந்த மாணவியிடம் எனக்கு பிறந்தநாள் அதற்காக உனக்கு நான் விருந்து கொடுக்கிறேன் என்று கூறி மாணவியை சேலம் மாவட்டம் ஏற்காடுக்கு காரில் அழைத்துச் சென்றார். காரில் போகும்போது அந்த மாணவியிடம ஆபாச வீடியோவை காட்டி சில்மி‌ஷத்தில் ஈடுபட்டார். அதை அவர் விரிவாக எடுத்துக் கொண்டார். பின்னர் அந்த மாணவியிடம் உனது வீடியோவை இணையதளத்தில் வெளியிடுவேன் என்று கூறி மிரட்டி அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து வந்தார்.

    இவ்வாறாக 4 வருடமாக அந்த மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்து வந்தார். இதனால் அந்த மாணவி இரண்டு முறை கர்ப்பம் அடைந்தார். ஈரோடு பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் லாட்ஜில் அறை எடுத்து அந்த மாணவியை அவர் பலாத்காரம் செய்தார்.

    மேலும் தனது நண்பர்களுடன் நீ அனுசரித்து செல்ல வேண்டும் என்று அந்த மாணவியை ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார். இதனால் பயந்து போன மாணவி இதுகுறித்து தனது தந்தையிடம் தெரிவித்தார். பின்னர் மாணவியின் தந்தை இதுகுறித்து ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ரியல் எஸ்டேட் அதிபர் ராதாகிருஷ்ணன் பற்றி பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. அவர் இதே போன்று பல பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்து இருக்கக்கூடும் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இந்த நிலையில் ராதாகிருஷ்ணன் மீது 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது செல்போனை பறிமுதல் செய்த போலீசார் அதில் வேறு பெண்களின் ஆபாச வீடியோக்கள் உள்ளதா? ஆபாச படங்கள் உள்ளதா? என்று தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். ராதாகிருஷ்ணன் அந்த மாணவியிடம் உன்னைப் போன்று பல பெண்களை நான் சீரழித்து உள்ளேன் என்று கூறியுள்ளார் அதன் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெருந்துறையில் பால் பண்ணைக்கு சொந்தமான வேனை திருடிச்சென்ற வாலிபரை துரத்தி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
    பெருந்துறை:

    காங்கயம், கீரனூர், ரங்கையன் வலசு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி என்பவரது மகன் ரவி(38). இவர் பெருந்துறை பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள பழனிச்சாமி என்பவருக்கு சொந்தமான பால்பண்ணையில் வேன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று 4 மணியளவில் வேனில் தூங்கி கொண்டிருந்த ரவி எழுந்து பழனிச்சாமியின் வீட்டிற்குள் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த ஒரு நபர் சாவியுடன் நின்ற வேனை ஸ்டார்ட் செய்து அங்கிருந்து வேனை திருடிச்செல்ல முயன்றுள்ளார். வேன் ஸ்டார்ட் ஆகும் சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்த ரவி தனது பைக்கில் வேனை துரத்தி கொண்டு சென்றுள்ளார். இந்த வேனை பெருந்துறை பழைய பஸ் நிலையம் பகுதியில் தடுத்து நிறுத்தி பிடித்து வேனை ஓட்டி வந்த நபரை பிடித்து பெருந்துறை போலீசில் ஒப்படைத்தார்.

    இது தொடர்பாக ரவி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த பெருந்துறை சப்-இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் மேற்கொண்ட விசாரணையில் வேனை திருடிச்சென்ற நபர் கேரளமாநிலம், கொச்சின், கோந்துருத்தி பகுதியை சேர்ந்த பென்னி என்பவரது மகன் ஆல்வின்(20) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து ஆல்வின் கைது செய்யப்பட்டார்.
    தாளவாடி அருகே திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த நர்சை கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தாளவாடி:

    தாளவாடி அருகே உள்ள எரக்க நல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமன். இவரது மகள் ரத்தினம்மாள் (வயது 25) நர்சிங் படிப்பு முடித்து கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தங்கி பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில் ரத்தினம்மாளுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தன.

    தாளவாடி அடுத்த அருள்வாடி கிராமத்தைச் சேர்ந்த தேவராஜ் (29) என்பவருக்கு ரத்தினம்மாளை இரு வீட்டு பெற்றோரும் பேசி முடிவு செய்தனர். இதையடுத்து ரத்தினம்மாள் தனது வேலையை விட்டு வீட்டில் இருந்துள்ளார். ரத்தினம்மாள் செல்போனில் நண்பருடன் அடிக்கடி பேசி வந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த தேவராஜ் ரத்தினம்மாளிடம் யாருடன் செல்போனில் பேசிக் கொண்டிருக்கிறாய் என்று கேட்டு உள்ளார்.

    இது தொடர்பாக அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபம் அடைந்த ரத்தினம்மாள் திருமணத்தை நிறுத்தி விடுமாறு பெற்றோரிடம் கூறியுள்ளார்.

    இதுகுறித்து தேவராஜ் பெற்றோர்களுக்கும் ரத்தினம்மாள் பெற்றோர்கள் திருமணத்தை நிறுத்தி விடலாம் தகவல் தெரிவித்து விட்டனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் தேவராஜ் ரத்தினம்மாள் வீட்டிற்கு வந்தார். இந்த நேரத்தில் இங்கே ஏன் வந்தீர்கள் என்று ரத்தினம்மாள் பெற்றோர் கேட்டனர். அதற்கு தேவராஜ் நான் ரத்தினம்மாளிடம் தனியாக பேச வேண்டும் என்றார். அதற்கு அவரது பெற்றோர் மறுப்பு தெரிவித்தனர். இதனால் கோபமடைந்த தேவராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரத்தினம்மாள் முதுகுப் பகுதியில் குத்தினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தேவராஜை மடக்கி பிடித்தனர்.

    ரத்தினம்மாள் 108 ஆம்புலன்ஸ் மூலம் கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    இதுகுறித்து ரத்தினம்மாள் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து தேவராஜை கைது செய்தனர்.

    ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 8½ பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆப்பக்கூடல்:

    ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே உள்ள முன்னம் அடுத்த செங்கோடம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 64) விவசாயி.

    மாரிமுத்து சம்பவத்தன்று வேலை வி‌ஷயமாக வெளியே சென்றுவிட்டார். பின்னர் மீண்டும் மாரிமுத்து வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைந்து கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறிக்கிடந்தன. வீட்டு அறையில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு திறந்து இருந்தன. பீரோவில் இருந்த தங்க கொடி செயின், மோதிரம் என மொத்தம் 8 ½ பவுன் நகை திருட்டு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் .

    இதுகுறித்து மாரிமுத்து ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையை மேற்கொண்டனர்.

    மாரிமுத்து மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் இல்லாததை தெரிந்து கொண்டு மர்ம நபர் நோட்டமிட்டு கைவரிசை காட்டி உள்ளது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    மனைவியை சேர்க்க கோரி மாமியார் வீட்டு முன்பு தீக்குளிக்க முயன்ற டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மோசிக்கீரனார் வீதியைச் சேர்ந்தவர் முனிராஜ். இவரது மனைவி விஜயலட்சுமி. நிர்மலா என்ற மகளும் சிவகுமார் என்ற மகனும் உள்ளனர்.

    நிர்மலாவுக்கும் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியைச் சேர்ந்த செல்லதுரைக்கும் இடையே முகநூல் (பேஸ்புக்) மூலம் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது. பின்னர் செல்ல துரையும் ,நிர்மலாவும் காதல் திருமணம் செய்து கொண்டனர். செல்லத்துரை லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் செல்லத்துரைக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகி விட்ட செய்தி நிர்மலாவுக்கு தெரியவந்தது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கணவருடன் கோபித்துக்கொண்டு நிர்மலா ஈரோட்டில் உள்ள தாய் வீட்டுக்கு வந்துவிட்டார்.

    இந்நிலையில் செல்லத்துரை நேற்று ஈரோட்டுக்கு வந்தார். மாமியார் வீட்டுக்கு சென்ற அவர் மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். ஆனால் நிர்மலா கணவருடன் செல்ல மறுத்துவிட்டார்.

    அதன் பின்னர் செல்லதுரை அங்கிருந்து சென்று விட்டார். பின்னர் மீண்டும் மாலை மாமியார் வீட்டுக்குச் செல்லத்துரை வந்தார். தனது மனைவியுடன் தண்ணீர் சேர்த்து வைக்குமாறு மீண்டும் கூறினார். அப்போது வீட்டில் விஜயலட்சுமியின் தாய் மல்லிகா மட்டும் இருந்தார்.

    திடீரென செல்லதுரை தான் கொண்டுவந்த பெட்ரோல் கேனை தன் உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இனி பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து செல்லத்துரையை தடுத்தனர். இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செல்லத்துரையை விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

    பின்னர் லாரி டிரைவர் செல்லத்துரை மீது ஈரோடு டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் செல்லத்துரை ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    சித்தோடு அருகே மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் கணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ஈரோடு:

    சித்தோடு அடுத்த பெருமாள் மலை, பெரிய மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் பிரபு (வயது 37). இவரது மனைவி சுதா. கணவன் மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் பிரபு கடந்த 23-ந் தேதி மனைவியுடன் கோபித்துக் கொண்டு தந்தை வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர் சாப்பிட்டு விட்டு தூங்க சென்று விட்டார். மறுநாள் காலை பிரபுவின் தந்தை அம்மாசை பிரபுவை எழுப்புவதற்காக அவரது அறைக்கு வந்தார்.

    அப்போது பிரபு அவரது அறையில் தூக்குபோட்டு தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பிரபுவை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.

    அங்கு பரிசோதனை செய்த டாக்டர் பிரபு வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். பிரபு எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்று தெரியவில்லை.

    இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு அருகே இன்று அதிகாலை 2 ஆம்னி பஸ்கள் எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் பயணிகள் காயத்துடன் உயிர் தப்பினர்.
    ஈரோடு:

    சென்னையில் இருந்து கோவை நோக்கி ஆம்னி பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் 15 பேர் பயணம் செய்தனர். பஸ்சை வேலூரை சேர்ந்த கன்னியப்பன் (வயது 48) என்பவர் ஓட்டி வந்தார்.

    இன்று அதிகாலை 4 மணியளவில் பவானி லட்சுமிபுரத்தில் 2 பயணிகளை இறக்கி விட்டு பஸ் மீண்டும் புறப்பட்டது.

    அப்போது பின்னால் பெங்களூரில் இருந்து கோவை நோக்கி மற்றொரு ஆம்னி பஸ் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சில் 25 பேர் இருந்தனர். அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த சென்னை ஆம்னி பஸ் மீது பெங்களூரில் இருந்து வந்த ஆம்னி பஸ் கண்ணிமைக்கும் நேரத்தில் எதிர்பாராதவிதமாக மோதியது.

    அதில் முன்னால் சென்ற ஆம்னி பஸ் தடுமாறியது. ரோட்டோரம் ஒரு வீடு இருந்தது. அந்த வீட்டின்மீது மோதாமல் இருக்க டிரைவர் வண்டியை ஒடித்து ஓட்டினார். இதில் பஸ் அருகில் உள்ள பள்ளத்தில் இறங்கி நின்றது. இதில் அதிர்ஷ்டவசமாக யாரும் காயம் அடையவில்லை.

    அதே சமயம் அந்த பஸ் மீது மோதிய பெங்களூர் ஆம்னி பஸ்சில் வந்த கோவையை சேர்ந்த விஷ்ணு (27) மற்றும் சோனா (23) கலையரசு (28) லட்சுமணன் (60) உள்பட 15 பேர் காயம் அடைந்தனர்.

    இவர்கள் ஈரோடு மற்றும் பவானி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    அதிர்ஷ்டவசமாக பெரிய விபத்திலிருந்து 2 ஆம்னி பஸ்களின் பயணிகள் தப்பினர்.

    விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு சித்தோடு போலீசார் விரைந்து சென்றனர்.

    இடிபாட்டுக்குள் சிக்கியவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஈரோடு அருகே ஓடும் ரெயிலில் சென்னை பெண்ணிடம் இருந்து 4 பவுன் நகை பறித்து சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    சென்னை திருவேல்லிகேனி பகுதியை சேர்ந்தவர் முகமது சாகிர் பாஷா(42). இவரது மனைவி காதர்பீவி(40). கணவன்-மனைவி இருவரும் சென்னையில் இருந்து கோவை செல்வதற்காக சுவேதா எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு பெட்டியில் பயணித்தனர்.

    நள்ளிரவில் காதர்பீவி ஜன்னல் ஓரமாக தூங்கி கொண்டிருந்தார். ரெயில் ஈரோடு ஜங்‌ஷன் அருகே வந்தபோது, மர்மநபர் ஒருவர் வெளியே நின்று கொண்டு காதர்பீவி கழுத்தில் இருந்த 4 பவுன் செயினை பறிக்க முயன்றான்.

    இதில் உஷார் ஆன அவர், செயினை இருக்கமாக பிடித்து கொண்டதால் பாதி செயினை மட்டும் அறுந்து மர்மநபரிடம் சிக்கியது. இதில் 4 பவுன் செயினில், 2 பவுன் மட்டுமே தப்பியது.

    இதுகுறித்து முகமது சாகீர் பாஷா இமெயில் மூலம் நேற்று ஈரோடு ரெயில்வே போலீசில் புகார் செய்தார்.

    புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, மர்மநபரை தேடி வருகின்றனர்.
    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடைமழை பெய்து வருகிறது. நேற்று இரவு மற்றும் இன்று அதிகாலை வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டியது. #Rain

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடைமழை பெய்து வருகிறது. நேற்று இரவு மற்றும் இன்று அதிகாலை வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டியது.

    ஈரோடு, மொடக்குறிச்சி, அரச்சலூர், பவானி, கவுந்தப்பாடி, சென்னிமலை ஆகிய பகுதிகளில் இடி- மின்னலுடன் கோடை மழை கொட்டி தீர்த்தது.

    மாவட்டத்தில் மொடக்குறிச்சி, முள்ளாம்பரப்பு, அரச்சலூர், ஆனைக்கால் பாளையம், லக்காபுரம், பூந்துறை, பூந்துறை வாய்க் கால்மேடு, 46 புதூர், சோலார் ஆகிய பகுதிகயில் அதிக பட்சமாக 51 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல் சத்தியமங்கலம், பவானிசாகர், வனப்பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் காய்ந்து கிடந்த வனப்பகுதி புத்துணர்ச்சி பெற்று வருகிறது. இன்று அதிகாலை வரை பெய்த மழையால் மொடக்குறிச்சி ஈரோடு பகுதிகளில் உள்ள ரோடுகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது.

    கோடைமழையால் ஈரோடு மாவட்ட மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். #Rain

    ×