என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "young man arrest. வேன் திருட்டு"

    பெருந்துறையில் பால் பண்ணைக்கு சொந்தமான வேனை திருடிச்சென்ற வாலிபரை துரத்தி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
    பெருந்துறை:

    காங்கயம், கீரனூர், ரங்கையன் வலசு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி என்பவரது மகன் ரவி(38). இவர் பெருந்துறை பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள பழனிச்சாமி என்பவருக்கு சொந்தமான பால்பண்ணையில் வேன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று 4 மணியளவில் வேனில் தூங்கி கொண்டிருந்த ரவி எழுந்து பழனிச்சாமியின் வீட்டிற்குள் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த ஒரு நபர் சாவியுடன் நின்ற வேனை ஸ்டார்ட் செய்து அங்கிருந்து வேனை திருடிச்செல்ல முயன்றுள்ளார். வேன் ஸ்டார்ட் ஆகும் சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்த ரவி தனது பைக்கில் வேனை துரத்தி கொண்டு சென்றுள்ளார். இந்த வேனை பெருந்துறை பழைய பஸ் நிலையம் பகுதியில் தடுத்து நிறுத்தி பிடித்து வேனை ஓட்டி வந்த நபரை பிடித்து பெருந்துறை போலீசில் ஒப்படைத்தார்.

    இது தொடர்பாக ரவி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த பெருந்துறை சப்-இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் மேற்கொண்ட விசாரணையில் வேனை திருடிச்சென்ற நபர் கேரளமாநிலம், கொச்சின், கோந்துருத்தி பகுதியை சேர்ந்த பென்னி என்பவரது மகன் ஆல்வின்(20) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து ஆல்வின் கைது செய்யப்பட்டார்.
    ×