என் மலர்
நீங்கள் தேடியது "real estate owner"
- 14 பத்திரங்களை வைத்துக்கொண்டு கடன் தருமாறும் கேட்டுள்ளார்.
- ரூ.26 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் பெருந்தொழுவு பகுதியை சேர்ந்த ராசு என்பவரது மகன் சந்திரன் (வயது 47). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரை கரட்டுப்பாளையம் புதூரை சேர்ந்த சேகர் என்பவரது மனைவி கலாராணி என்கிற கலாவதி (45) அணுகினார். அவர் தனக்கு ரூ. 10 லட்ச ரூபாய் அவசர தேவை இருப்பதாகவும், அதற்கு ஈடாக தன்னிடம் உள்ள 14 பத்திரங்களை வைத்துக்கொண்டு கடன் தருமாறும் கேட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து சந்திரன் சம்பவத்தன்று காலை கலாராணி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கே மேலும் 4 நபர்கள் இருந்துள்ளனர். அவர்கள் சந்திரனை வீட்டிற்குள் அழைத்துச் சென்று மிரட்டி அவர் அணிந்திருந்த ஐந்தரைப்பவுன் தங்கச்செயின் மற்றும் சட்டை பையில் வைத்திருந்த ரூ.26 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். பின்னர் வங்கியில் இருந்த ரூ.40 ஆயிரம் பணத்தை கூகுள் பே மூலம் மாற்றி கொண்டனர். மேலும் அவரிடம் 6 பத்திர தாள்களில் கைரேகையை பதித்துக் கொண்ட அந்த கும்பல் அவரிடமிருந்து 3 வங்கி காசோலைகளையும் கையெழுத்திட்டு பெற்று கொண்டுள்ளனர். பின்னர் அங்கிருந்த சுமதி என்ற பெண்ணுடன் சந்திரனை அருகே அமர வைத்து போட்டோவும் எடுத்துள்ளனர்.
அதன் பின்னர் அவரை விட்டுவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர். இதுகுறித்து சந்திரன் அவரது மனைவி மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.அதன்பின்னர் போலீஸ் நிலையம் வந்து புகார் தெரிவித்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.இதனைத் தொடர்ந்து கலாராணி மற்றும் ஐயப்பன் என்பவரது மனைவி சுமதி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்ற 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெருந்தொழுவு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- ராஜேஷ் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தொண்டாமுத்தூரில் உள்ள பண்ணை வீட்டுக்கு சென்றார்.
- வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.
கோவை
பொள்ளாச்சி நேரு வீதியை சேர்ந்தவர் மணிகன்ட ராஜேஷ் (வயது 38). ரியல் எஸ்டேட் அதிபர். இவரது அலுவலகம் வீட்டின் அருகேயே உள்ளது.
அங்கு உமா என்பவர் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று மணிகன்ட ராஜேஷ் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தொண்டாமுத்தூரில் உள்ள பண்ணை வீட்டுக்கு சென்றார். அலுவலகத்தில் இருந்த உமா வேலைகளை முடித்து அலுவலகத்தை பூட்டி விட்டு சென்றார்.
மறுநாள் காலை வழக்கம்போல உமா வேலைக்கு வந்தார். அப்போது மணிகன்ட ராஜேசின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் மணிகன்ட ராஜேசுக்கு தகவல் தெரிவித்தார்.
உடனே அவர் வீடு திரும்பினார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த தங்க செயின், ேமாதிரம், தங்க கடிகாரம் உள்பட 18 பவுனை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து மணிகன்ட ராஜேஷ் மகாலிங்கபுரம் போலீசில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.
மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் உருவதை வைத்து ரியல் எஸ்டேட் அதிபரின் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற திருடர்களை தேடி வருகின்றனர்.
பெரம்பலூரை சேர்ந்தவர் பிரகாஷ் (38). என்ஜினீயர். இவர் கோவை துடியலூரை அடுத்த என்.ஜி.ஜி.ஓ காலனியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் துடியலூரில் உள்ள வனிக வளாகத்துக்கு சென்றனர்.
அப்போது அவரது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அறையில் இருந்த நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். வீடு திரும்பிய பிரகாஷ் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது அறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 12 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பிரகாஷ் துடியலூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
இதேபோன்று துடியலூரை அடுத்த பாரதி நகரை சேர்ந்தவர் ஷாஜகான் (36). தொழிலாளி. சம்பவத்தன்று அவர் வீட்டை பூட்டி விட்டு செல்வபுரத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றார்.
அப்போது வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் வீட்டில் இருந்த ஒரு பவுன் தங்க நகை மற்றும் லேப்டாப் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.
வீடு திரும்பிய அவர் கொள்ளை போயி–ருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஷாஜகான் துடியலூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
- அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், கம்மல், டாலர், மோதிரம் உள்பட 44½ பவுன் நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
- கண்காணிப்பு காமிராக்களில் கொள்ளையர்கள் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளதா? என போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
பொள்ளாச்சி:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நான்சிகவுண்டன் புதூரை சேர்ந்தவர் சரவணகுமார். இவரது மனைவி சந்திரா (வயது 40). ரியல் எஸ்டேட் அதிபர்.
கடந்த 10-ந் தேதி இவர் தனது வீட்டை பூட்டி விட்டு தனது சொந்த ஊரான பழனிக்கு சென்றார். அங்கு வைத்து சந்திரா அவரது மகளுக்கு புனித நீராட்டு விழா நிகழ்ச்சி நடத்தினார்.
இந்தநிலையில் 11-ந் தேதி இரவு இவரது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். பின்னர் அவர் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், கம்மல், டாலர், மோதிரம் உள்பட 44½ பவுன் நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து சந்திராவுக்கு தகவல் தெரி வித்தார். அவர் உடனடியாக தனது வீட்டிற்கு விரைந்து வந்தார். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது நகைகள் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இதுகுறித்து வடக்கிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சம்பவஇடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.
இதனை வைத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 44½ பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
மேலும் போலீசார் அந்த பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் வீதிகளில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு காமிராக்களில் கொள்ளையர்கள் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்து வருகிறார்கள்.
ஈரோடு:
ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் சேர்ந்த 21 வயது பெண் கடந்த 2015-ம் ஆண்டில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். கல்லூரி அருகே உள்ள கடைக்கு அடிக்கடி அவர் சென்று வந்தார்.
அப்போது ஈரோடு வில்லரசம்பட்டியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ராதாகிருஷ்ணன் (37) என்பவர் அந்த மாணவிக்கு அறிமுகமானார்.
பின்னர் ஒரு நாள் ராதாகிருஷ்ணன் அந்த மாணவியிடம் எனக்கு பிறந்தநாள் அதற்காக உனக்கு நான் விருந்து கொடுக்கிறேன் என்று கூறி மாணவியை சேலம் மாவட்டம் ஏற்காடுக்கு காரில் அழைத்துச் சென்றார். காரில் போகும்போது அந்த மாணவியிடம ஆபாச வீடியோவை காட்டி சில்மிஷத்தில் ஈடுபட்டார். அதை அவர் விரிவாக எடுத்துக் கொண்டார். பின்னர் அந்த மாணவியிடம் உனது வீடியோவை இணையதளத்தில் வெளியிடுவேன் என்று கூறி மிரட்டி அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து வந்தார்.
இவ்வாறாக 4 வருடமாக அந்த மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்து வந்தார். இதனால் அந்த மாணவி இரண்டு முறை கர்ப்பம் அடைந்தார். ஈரோடு பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் லாட்ஜில் அறை எடுத்து அந்த மாணவியை அவர் பலாத்காரம் செய்தார்.
மேலும் தனது நண்பர்களுடன் நீ அனுசரித்து செல்ல வேண்டும் என்று அந்த மாணவியை ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார். இதனால் பயந்து போன மாணவி இதுகுறித்து தனது தந்தையிடம் தெரிவித்தார். பின்னர் மாணவியின் தந்தை இதுகுறித்து ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ரியல் எஸ்டேட் அதிபர் ராதாகிருஷ்ணன் பற்றி பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. அவர் இதே போன்று பல பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்து இருக்கக்கூடும் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இந்த நிலையில் ராதாகிருஷ்ணன் மீது 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது செல்போனை பறிமுதல் செய்த போலீசார் அதில் வேறு பெண்களின் ஆபாச வீடியோக்கள் உள்ளதா? ஆபாச படங்கள் உள்ளதா? என்று தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். ராதாகிருஷ்ணன் அந்த மாணவியிடம் உன்னைப் போன்று பல பெண்களை நான் சீரழித்து உள்ளேன் என்று கூறியுள்ளார் அதன் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் சொக்கநாதபுரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (வயது 62). ரியஸ் எஸ்டேட் அதிபர். இவரது மகள் சுதா (36), மருமகன் பழனிமுருன் (41) ஆகியோருடன் நேற்று மாலை திருப்பூர் மண்ணரை சத்யா காலனியில் உள்ள உறவினர் வீட்டுக்கு காரில் புறப்பட்டனர். காரை பழனிமுருகன் ஓட்டினார். கார் ஊத்துக்குளி- திருப்பூர் இடையே உள்ள கொடியம்பாளையம் நால்ரோடு வந்தபோது அங்கு நின்ற லாரி மீது மோதியது. இதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.
அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியிலேயே ரியஸ் எஸ்டேட் அதிபர் சுப்பிரமணியம் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த பழனிமுருகன், சுதா ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நேற்று ஆஸ்பத்திரி வளாகத்திற்குள் கத்தியுடன் நுழைந்த ஒருவர் அறையில் சிகிச்சை பெற்று வந்த ரவிராஜாவின் கழுத்தை அறுத்தார். அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து அவரை தடுக்க முயன்றனர்.
ஆனால் அவர்களையும் கத்தியை காட்டி மிரட்டியதால் அவர்கள் அச்சம் அடைந்து அங்கிருந்து சென்று விட்டனர். அதன் பிறகு அந்த நபர் ரவிராஜாவின் மார்பு, கால் என பல இடங்களில் கத்தியால் குத்தி விட்டு ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடிவிட்டார்.
இது குறித்து பழனி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஆஸ்பத்திரி சி.சி.டி.வி. கேமராவில் பதிவான அவரது படங்களை ஆய்வு செய்தனர். விசாரணையில் அவர் சென்னையை சேர்ந்த சந்துரு என தெரிய வந்தது.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவர் ரவிராஜாவிடம் டிரைவராக வேலை பார்த்துள்ளார். அவரது நடவடிக்கை சரியில்லாததால் சந்துருவை வேலையில் இருந்து நிறுத்தி விட்டார். இதில் ஏற்பட்ட பகை காரணமாகவே இச்சம்பவம் நடந்துள்ளது.
இதனிடையே படுகாயம் அடைந்த ரவிராஜா மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு அங்கு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பழனி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
தப்பி ஓடிய சந்துருவை தாராபுரம் சோதனைச் சாவடியில் காருடன் போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை பழனி போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






