ரியல் எஸ்டேட் அதிபரிடம் நகை-பணம் கொள்ளை - 2 பெண்கள் கைது, 3 பேருக்கு வலைவீச்சு

14 பத்திரங்களை வைத்துக்கொண்டு கடன் தருமாறும் கேட்டுள்ளார். ரூ.26 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

பல்லடம் :

பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் பெருந்தொழுவு பகுதியை சேர்ந்த ராசு என்பவரது மகன் சந்திரன் (வயது 47). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரை கரட்டுப்பாளையம் புதூரை சேர்ந்த சேகர் என்பவரது மனைவி கலாராணி என்கிற கலாவதி (45) அணுகினார். அவர் தனக்கு ரூ. 10 லட்ச ரூபாய் அவசர தேவை இருப்பதாகவும், அதற்கு ஈடாக தன்னிடம் உள்ள 14 பத்திரங்களை வைத்துக்கொண்டு கடன் தருமாறும் கேட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து சந்திரன் சம்பவத்தன்று காலை கலாராணி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கே மேலும் 4 நபர்கள் இருந்துள்ளனர். அவர்கள் சந்திரனை வீட்டிற்குள் அழைத்துச் சென்று மிரட்டி அவர் அணிந்திருந்த ஐந்தரைப்பவுன் தங்கச்செயின் மற்றும் சட்டை பையில் வைத்திருந்த ரூ.26 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். பின்னர் வங்கியில் இருந்த ரூ.40 ஆயிரம் பணத்தை கூகுள் பே மூலம் மாற்றி கொண்டனர். மேலும் அவரிடம் 6 பத்திர தாள்களில் கைரேகையை பதித்துக் கொண்ட அந்த கும்பல் அவரிடமிருந்து 3 வங்கி காசோலைகளையும் கையெழுத்திட்டு பெற்று கொண்டுள்ளனர். பின்னர் அங்கிருந்த சுமதி என்ற பெண்ணுடன் சந்திரனை அருகே அமர வைத்து போட்டோவும் எடுத்துள்ளனர்.

அதன் பின்னர் அவரை விட்டுவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர். இதுகுறித்து சந்திரன் அவரது மனைவி மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.அதன்பின்னர் போலீஸ் நிலையம் வந்து புகார் தெரிவித்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.இதனைத் தொடர்ந்து கலாராணி மற்றும் ஐயப்பன் என்பவரது மனைவி சுமதி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்ற 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெருந்தொழுவு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com