என் மலர்
ஈரோடு
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் தாளவாடி வனப்பகுதி இக்கலூரை சேர்ந்தவர் சிக்கு வீரப்பா இவரது மகன் மது (வயது 19). பெங்களூரில் கால்டாக்சி டிரைவராக மது வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் காரில் மது தனது சொந்த ஊரான தாளவாடி அடுத்த இக்கலூர் வந்தார்.
இன்று காலை அவர் தனது நண்பர்களான மனோஜ்குமார் (18), மல்லு (18), வீரபட்சா (17), சித்தராஜ் ஆகிய 5 பேர் இக்கலூரில் இருந்து தாளவாடிக்கு காரில் வந்து கொண்டிருந்தனர்.
தாளவாடியில் உள்ள ஏ.டி.எம்.மில் பணம் எடுப்பதற்காக அவர்கள் வந்தனர். மது காரை ஓட்டி வந்தார். காலை 9.15 மணி அளவில் இக்கலூர் அருகே ஒரு வளைவில் கார் திரும்பிய போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோர பள்ளத்தில் தலை குப்புற கவிழ்ந்தது.
இதில் 5 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை தாளவாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
இதில் காரை ஓட்டி வந்த மது வரும் வழியிலேயே பரிதாபமாக இறந்து விட்டார். மற்ற 4 பேரும் தாளவாடி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு பிறகு மேல் சிகிச்சைக்காக கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
இது குறித்து ஆசனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இங்கிலாந்தில் 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பரபரப்பாக நடந்து வருகிறது. கேப்டன் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இதுவரை நடந்த 2 போட்டியிலும் அபார வெற்றி பெற்று உள்ளது.
இந்திய அணி தொடர்ந்து சிறப்பாக விளையாடி வெற்றிகளை குவித்து உலக கோப்பையை வெல்ல வேண்டும் என வேண்டி ஈரோட்டில் உள்ள புகழ்மிக்க கோட்டை பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
இந்த நிகழ்ச்சியல் ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வெற்றி ஜோதியை ஏற்றினார்.
இந்த சிறப்பு வழிபாட்டில் பொதுமக்களும் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டு கோப்பையை இந்தியா கைப்பற்ற வேண்டி கொண்டனர்.
ஈரோடு:
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 22). ஏ.சி மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் கார்த்திக் கோவை கோவில்மேட்டைச் சேர்ந்த சவுமியா என்ற பெண்ணை காதலித்து வந்தார். சவுமியா அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.சி.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இவர்களின் காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவந்தது. பெண் வீட்டில் காதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. எனினும் தங்கள் காதலில் உறுதியாக இருந்த கார்த்திக் - சவுமியா வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி வீட்டை விட்டு வெளியேறி கோவை காந்திபுரத்தில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் கோவையில் இருந்து தப்பி வந்த காதல் ஜோடி ஈரோடு மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.
இதுகுறித்து இரு வீட்டு பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இரு வீட்டு பெற்றோர்களும் வந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதில் கார்த்திக் பெற்றோர் தனது மகனின் காதல் திருமணத்தை ஏற்றுக் கொண்டனர்.
ஆனால் சவுமியா பெற்றோர் தங்களது மகளின் காதல் திருமணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. பின்னர் இறுதியில் சவுமியா தனது காதல் கணவர் கார்த்திக்குடன் புறப்பட்டு சென்றார்.
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 22). ஏ.சி மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் கார்த்திக் கோவை கோவில்மேட்டைச் சேர்ந்த சவுமியா என்ற பெண்ணை காதலித்து வந்தார். சவுமியா அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.சி.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இவர்களின் காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வந்தது. பெண் வீட்டில் காதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. எனினும் தங்கள் காதலில் உறுதியாக இருந்த கார்த்திக் - சவுமியா வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி வீட்டை விட்டு வெளியேறி கோவை காந்திபுரத்தில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் கோவையில் இருந்து தப்பி வந்த காதல் ஜோடி ஈரோடு மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.
இதுகுறித்து இரு வீட்டு பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இரு வீட்டு பெற்றோர்களும் வந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதில் கார்த்திக் பெற்றோர் தனது மகனின் காதல் திருமணத்தை ஏற்றுக் கொண்டனர்.
ஆனால் சவுமியா பெற்றோர் தங்களது மகளின் காதல் திருமணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. பின்னர் இறுதியில் சவுமியா தனது காதல் கணவர் கார்த்திக்குடன் புறப்பட்டு சென்றார்.
ஈரோடு மாவட்டத்தின் கனிராவூத்தர்குளம் சிஎஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் பாட்ஷா-அப்ரூஸ் பேகம் தம்பதி. இவர்களின் இளைய மகன் முகமது யாசின். இவர் அங்குள்ள அரசுப்பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறார்.

இதனை சிறுவன் திறந்துபார்த்தபோது கட்டுக்கட்டாக பணம் இருந்துள்ளது. உடனடியாக அந்த பையை வகுப்பு ஆசிரியையிடம் கொடுத்தார். ஆசிரியை பையை பார்த்து ஆச்சரியம் அடைந்தார். சிறுவனின் நேர்மையைக் கண்டு வியந்தார்.
பின்னர் ஆசிரியை, முகமதையும் அவருடன் அழைத்துச் சென்று தலைமை ஆசிரியரிடம் நடந்ததை சொல்லவே, மூவரும் ஈரோடு எஸ்பி சக்திகணேசனை காணச் சென்றனர். முகமதின் செயலைச் சொல்லி அந்த பையை எஸ்பியிடம் அவனையே கொடுக்கச் செய்தனர்.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான 2ம் வகுப்பு பாடபுத்தகத்தில் ஆத்திச்சூடியில் 'நேர்பட ஒழுகு' என்ற வாக்கியத்திற்கு சான்றாக முகமது செய்த செயல் அவனது புகைப்படத்துடன் வெளியாகியுள்ளது. இது அந்த சிறுவனின் நேர்மைக்கு கிடைத்த பரிசு என்றுதான் சொல்ல வேண்டும்.
கோபி:
கோபியை அருகே உள்ள நாகப்ப கவுண்டன் புதூரை சேர்ந்தவர் சுரேஷ் விவசாயி. இரவது மனைவி மனிஷா (வயது 25).
இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. 4 வயதில் ஒரு மகள் உள்ளார்.
இந்நிலையில் கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று தகராறு ஏற்பட வேதனை அடைந்த மனிஷா விஷம் குடித்து விட்டார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்,
ஆனால் செல்லும் வழியிலேயே மனிஷா பரிதாபமாக இறந்து விட்டார். கோபி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் காராப்பாடியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-
தமிழகத்தில் இரு ஆசிரியர் உள்ள 2 ஆயிரத்து 142 பள்ளிக்கூடங்களில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை குறைந்த மாணவர்களே இருப்பதால் முதல்-அமைச்சர் தலைமையில் கல்வியாளர்கள், அமைச்சர்கள் கூட்டம் நடத்தப்பட்டு கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும்.
தமிழகத்தில் 412 மையங்களில் 5 ஆயிரம் பேருக்கு நீட் தேர்வு பயிற்சி வகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. கேரளா போன்ற மாநிலங்களில் நீட் தேர்வு பயிற்சிக்கு ரூ.2 லட்சம் வரை மாணவர்கள் செலவிட வேண்டிய நிலை உள்ளது. தமிழகத்தில் மாணவர்கள் மத்திய அரசு தேர்வுகளை எளிதாக சந்திக்கும் வகையில் படிப்படியாக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
மத்திய அரசு சி.பி.எஸ்.இ. பாடத்திடங்களை மாற்ற 2 ஆண்டுகாலம் அவகாசம் தேவைப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் 8 மாதங்களில் பாடத்திட்டத்தை மாற்றியமைத்து சாதனை படைத்துள்ளோம். புதிய பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் அனைத்து போட்டித்தேர்வுகளையும் எளிதாக எதிர்கொள்ள ஏதுவாக இருக்கும்.
இந்தியாவிலேயே முதன்முறையாக கல்வி தொலைக்காட்சியை தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை தொடங்க உள்ளது.
வரும் கல்வி ஆண்டில் அனைத்து மாணவர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட உள்ளது. நீட் தேர்வில் இந்த ஆண்டு மாணவ-மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஜூலை மாதம் இறுதிக்குள் 7 ஆயிரம் பள்ளிக்கூடங்களில் வகுப்பறைகள் கணினிமயமாக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் பு.புளியம்பட்டி அருகே உள்ள உக்கரத்தை சேர்ந்தவர் கவின் (வயது 20). இவர் இன்று காலை தனது மோட்டார் சைக்கிளில் உக்கரத்திலிருந்து புளியம்பட்டிக்கு இன்று காலை 9 மணிக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே புளியம்பட்டி பகுதியிலிருந்து ஒரு வாலிபர் காவிலிபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
புளியம்பட்டி அருகே வடுகம்பாளையம் என்ற இடத்தில் வந்த போது 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் வேகமாக மோதிக் கொண்டது.
இதில் 2 பேருக்கும் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக இறந்தனர்.
இந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து பு.புளியம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு சூரம்பட்டி, காமராஜ் வீதியை சேர்ந்தவர் சங்கர். பெயிண்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி திலகவதி(39). ஓட்டு வீட்டில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் இவரது வீட்டில் மின்விசிறி ஒரு கம்பியில் தொங்க விடப்பட்டிருந்தது. இந்த கம்பியானது வீட்டின் வெளிபுறம் வரை நீட்டிவிடப்பட்டுள்ளது.
அந்தக் கம்பியின் மீது இன்று காலை சங்கர் துணியை காய போட்டு கொண்டிருந்தார்.
அப்போது அவரை எதிர்பாராத வகையில் மின்சாரம் தாக்கியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த திலகவதி கணவரை காப்பாற்ற ஓடி வந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக திலகவதியும் அந்த கம்பியை பிடித்து விட்டார். இதில் மின்சாரம் தாக்கி திலகவதி தூக்கி வீசப்பட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கணவன் மனைவி இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.
அவர்களை பரிசோதித்த டாக்டர் திலகவதி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தார். அவரது கணவர் லேசான காயத்துடன் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவனை காப்பாற்ற முயன்ற பெண் மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உறவினர்கள் கதறி அழுத காட்சி உருக்கமாக இருந்தது.
ஈரோடு சம்பத் நகரில் கல்யாணி கிட்னி கேர் ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக அந்த ஆஸ்பத்திரியில் தொடர்ந்து போன் கால்கள் வந்த வண்ணம் இருந்தன. அதில் பேசியவர்கள் நாங்கள் கிட்னி தானம் தர தயாராக இருக்கிறோம் நீங்கள் கூறியது போன்று எப்போது பணம் தருவீர்கள் என்று கேட்டுள்ளனர்.
இதனால் ஆஸ்பத்திரி தரப்பு நிர்வாகிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து விசாரித்தபோது அந்த ஆஸ்பத்திரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி அதில் ஒரு விளம்பரம் செய்திருந்தனர். அதில் கிட்னி தானம் கொடுக்க வருபவர்கள் முன் பதிவு செய்யலாம் அவர் வருவோருக்கு ரூ 3 கோடி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கு முன் பணமாக ரூ 10 ஆயிரத்திலிருந்து 15,000 தரவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை நம்பி 500க்கும் மேற்பட்டோர் பணம் கொடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து கல்யாணி கிட்னி கேர் நிர்வாக இயக்குநர் பிரபாகர் ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் புகார் செய்தார். அதன் பேரில் சைபர் கிரைம் போலீசார் மட்டும் வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் இந்த விளம்பரத்தை பார்த்து எத்தனை பேர் ஏமாந்து பணம் செலுத்தி உள்ளனர் என்று தெரியவில்லை. இவ்வாறு கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. சைபர் கிரைம் போலீசார் ஆஸ்பத்திரி பெயரில் உருவாக்கப்பட்ட போலி முகநூல் கணக்கை முடக்கி உள்ளனர்.
தென்மேற்கு பருவமழை இரண்டொரு நாளில் தொடங்கும் நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தினமும் இரவில் மழை பெய்து வருகிறது.
இதேபோல் நேற்று இரவும் ஈரோடு மாவட்டம் முழுவதும் இடி- மின்னலுடன் பலத்த மழை கொட்டியது.
நேற்று வழக்கம்போல் பகலில் வெயில் வாட்டி எடுத்தாலும் இரவு 8 மணிக்கு மேல் திடீரென குளிர்காற்று வீச தொடங்கியது. இதை தொடர்ந்து பலத்த இடி- மின்னல் மற்றும் காற்றுடன் மழை கொட்டியது.
ஈரோடு மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இரவு 8.15 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை சுமார் 1 மணி வரை கொட்டி தீர்த்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழை தண்ணீர் தேங்கி நின்றது. ரோட்டோரம் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
இடி-மின்னல் காரணமாக ஈரோடு நகர் மட்டுமல்லாமல் சுற்று வட்டார பகுதிகளான மூலப்பாளையம், ஆணைக்கல்பாளையம், 46 புதூர், சோலார், முள்ளாம்பரப்பு, கஸ்பாபேட்டை உள்பட பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டது. பல இடங்களில் நள்ளிரவு வரை மின்சாரம் இல்லாததால் மக்கள் தூக்கமின்றி அவதிப்பட்டனர். சில இடங்களில் அதிகாலை 2 மணிக்கு பிறகே மின்சாரம் வந்தது.
இதேபோல் கவுந்தப்பாடி பகுதிகளிலும் இடி-மின்னலுடன் மழை கொட்டியது. இந்த மழையால் மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும் அம்மாபேட்டை, பவானி, பெருந்துறை, சத்தியமங்கலம், உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை பெய்தது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-
கவுந்தப்பாடி -47.2
ஈரோடு -44
அம்மாபேட்டை -37.2
பவானி- 20
பெருந்துறை-13
எலந்தகுட்டைமேடு -12.4
கொடுமுடி-10
சத்தியமங்கலம்-74
கோபி-7
சென்னிமலை-3
கொடிவேரி -3
பு.புளியம்பட்டி:
கேரளா மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்தவர் பாபு என்ற பூவாஸ் (வயது 32). இவர் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள புங்கம்பள்ளி பகுதியில் பேக்கரி கடை வைத்து நடத்தி வந்தார்.
இந்த கடையில் கேரளா மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த அப்துல் ரஹீம் (30), ஜாபர் (39) ஆகியோர் பணி புரிந்து வந்தனர். இவர்கள் 3 பேரும் இரவில் கடையை பூட்டி விட்டு புஞ்சை புளியம்பட்டியில் உள்ள அறைக்கு சென்று தங்குவது வழக்கம்.
நேற்று இரவு 3 பேரும் கடையை பூட்டி விட்டு புங்கம்பள்ளியில் இருந்து புஞ்சை புளியம்பட்டி செல்வதற்காக இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் புங்கம் பள்ளி துணை மின்நிலையம் அருகே சென்றனர்.
அப்போது சத்தியமங்கலத்தில் இருந்து கோவைக்கு ஒரு அரசு பஸ் சென்றது. அப்போது அந்த பஸ் அவர்கள் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது எதிர் பாராதவிதமாக மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஜாபர் சத்தியமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.
சத்தியமங்கலத்தில் இருந்து பூவாஸ் மேல் சிகிச்சைக்காக கோவை கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். அப்துல்ரஹீம் கோவையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து குறித்து புஞ்சை புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






