என் மலர்
செய்திகள்

ஈரோடு மாவட்டம் முழுவதும் இடி-மின்னலுடன் கொட்டி தீர்த்த மழை
ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழை தண்ணீர் தேங்கி நின்றது. ரோட்டோரம் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
ஈரோடு:
தென்மேற்கு பருவமழை இரண்டொரு நாளில் தொடங்கும் நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தினமும் இரவில் மழை பெய்து வருகிறது.
இதேபோல் நேற்று இரவும் ஈரோடு மாவட்டம் முழுவதும் இடி- மின்னலுடன் பலத்த மழை கொட்டியது.
நேற்று வழக்கம்போல் பகலில் வெயில் வாட்டி எடுத்தாலும் இரவு 8 மணிக்கு மேல் திடீரென குளிர்காற்று வீச தொடங்கியது. இதை தொடர்ந்து பலத்த இடி- மின்னல் மற்றும் காற்றுடன் மழை கொட்டியது.
ஈரோடு மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இரவு 8.15 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை சுமார் 1 மணி வரை கொட்டி தீர்த்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழை தண்ணீர் தேங்கி நின்றது. ரோட்டோரம் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
இடி-மின்னல் காரணமாக ஈரோடு நகர் மட்டுமல்லாமல் சுற்று வட்டார பகுதிகளான மூலப்பாளையம், ஆணைக்கல்பாளையம், 46 புதூர், சோலார், முள்ளாம்பரப்பு, கஸ்பாபேட்டை உள்பட பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டது. பல இடங்களில் நள்ளிரவு வரை மின்சாரம் இல்லாததால் மக்கள் தூக்கமின்றி அவதிப்பட்டனர். சில இடங்களில் அதிகாலை 2 மணிக்கு பிறகே மின்சாரம் வந்தது.
இதேபோல் கவுந்தப்பாடி பகுதிகளிலும் இடி-மின்னலுடன் மழை கொட்டியது. இந்த மழையால் மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும் அம்மாபேட்டை, பவானி, பெருந்துறை, சத்தியமங்கலம், உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை பெய்தது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-
கவுந்தப்பாடி -47.2
ஈரோடு -44
அம்மாபேட்டை -37.2
பவானி- 20
பெருந்துறை-13
எலந்தகுட்டைமேடு -12.4
கொடுமுடி-10
சத்தியமங்கலம்-74
கோபி-7
சென்னிமலை-3
கொடிவேரி -3

Next Story