என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலக கோப்பையை வெல்ல நடந்த வழிபாட்டில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் ஜோதி ஏற்றினார்
    X
    உலக கோப்பையை வெல்ல நடந்த வழிபாட்டில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் ஜோதி ஏற்றினார்

    உலக கோப்பை கிரிக்கெட் கோப்பையை இந்தியா வெல்ல கோவிலில் சிறப்பு வழிபாடு

    இந்திய அணி உலக கோப்பையை வெல்ல வேண்டும் என வேண்டி ஈரோட்டில் உள்ள புகழ்மிக்க கோட்டை பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
    ஈரோடு:

    இங்கிலாந்தில் 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பரபரப்பாக நடந்து வருகிறது. கேப்டன் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இதுவரை நடந்த 2 போட்டியிலும் அபார வெற்றி பெற்று உள்ளது.

    இந்திய அணி தொடர்ந்து சிறப்பாக விளையாடி வெற்றிகளை குவித்து உலக கோப்பையை வெல்ல வேண்டும் என வேண்டி ஈரோட்டில் உள்ள புகழ்மிக்க கோட்டை பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

    இந்த நிகழ்ச்சியல் ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வெற்றி ஜோதியை ஏற்றினார்.

    இந்த சிறப்பு வழிபாட்டில் பொதுமக்களும் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டு கோப்பையை இந்தியா கைப்பற்ற வேண்டி கொண்டனர்.
    Next Story
    ×