என் மலர்
ஈரோடு
விநாயகர் சதுர்த்தி விழா வரும் 2-ந் தேதி உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதே போல் ஈரோடு மாவட்டத்திலும் விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக நடத்த இந்து முன்னணி சார்பில் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
ஈரோடு, கோபி, பவானி, சத்தியமங்கலம், அந்தியூர், பெருந்துறை, கொடுமுடி, பு.புளியம்பட்டி, கவுந்தப்பாடி உள்பட ஈரோடு மாவட்டம் முழுவதும் இந்து முன்னணி சார்பில் 1008 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
வரும் 2-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 6 மணிக்கு ஈரோடு சம்பத் நகர் பிரிவில் கணபதி ஹோமத்துடன் வீர விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இதையொட்டி தினமும் பூஜைகள், கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது.
5-ந் தேதி மாலை 3 மணிக்கு ஈரோடு மாநகரில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளின் ஆன்மிக ஊர்வலம் சம்பத் நகர் பிரிவில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று காவிரி ஆற்றை சென்றடையும். ஊர்வலத்துக்கு இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் பூசப்பன், மாநில செயலாளர் கிஷோர்குமார் ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள். மாநில பொருளாளர் சண்முகநாதன், மாவட்ட தலைவர் ஜெகதீசன், பொதுச் செயலாளர் சக்தி முருகேஷ், பொருளாளர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.
அற விழிப்புணர்வு இயக்க தென் பாரத அமைப்பாளர் சண்முகநாதன் சிறப்புரையாற்றுகிறார். ஊர்வலத்தை வாசுகி சின்னுசாமி, டாக்டர் ரகுநாத் ஆகியோர் தொடங்கி வைக்கிறார்கள்.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று மீண்டும் பரவலாக மழை பெய்தது. ஈரோடு நகரில் சாரல் மழை மட்டும் தான் பெய்தது. அதே சமயம் மாவட்டத்தின் வெளிப்புற பகுதிகளில் மழை கொட்டியது.
சத்தியமங்கலம் அருகே உள்ள பெரும்பள்ளம் அணை பகுதியில் கனமழை பெய்தது. அங்கு 60 மி.மீ. மழை கொட்டியது.
இந்த மழையால் பெரும்பள்ளம் அணைக்கு தண்ணீர் வருகிறது. மேலும் சத்தியமங்கலம் கொடிவேரி அணை பவானிசாகர், குண்டேரிபள்ளம் அணை, கவுந்தப்பாடி கோபி உள்பட மாவட்டம் முழுவதும் மிதமான மழை பெய்தது. இந்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-
கொடிவேரி அணை-20.2
பவானி சாகர்-19.8
சத்தியமங்கலம்-6
கவுந்தப்பாடி-3.8
விநாயகர் சதுர்த்தி விழா வரும் செப்டம்பர் 2-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது.ஈரோடு மாவட்டத்திலும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்படவுள்ளது. இந்து அமைப்புகள் சார்பில் நூற்றுக்கணக்கான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட உள்ளது.
இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி அமைதியான முறையில் நடத்திட மாவட்ட போலீஸ் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த 5 நாட்களாக போலீசார் இரவு பகல் என்று பாராமல் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பழைய குற்றவாளிகளின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். முன்னெச்சரிக்கையாக பழைய குற்றவாளிகள் 152 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் கூறியதாவது:-
விநாயகர் சதுர்த்தியின் போது மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 5 நாட்களாக நடத்தப்பட்ட வாகன சோதனையில் மொத்தம் 5 ஆயிரத்து 492 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன. 2,674 பேர் மீது வழக்கு செய்யபட்டுள்ளது.
152 பழைய குற்றவாளிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர். விநாயகர் சதுர்த்தி அன்று அமைதியை சீர்குலைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோடு அடுத்த காவிரி ரெயில் நிலையத்திற்கும் ஆனங்கூர் ரெயில் நிலையத்திற்கும் இடையே உள்ள தண்டவாளத்தில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்த நபர் யார் ?எந்த ஊரைச் சேர்ந்தவர் ? என்ற விவரம் தெரியவில்லை.
அந்தியூர் அருகே உள்ள வெள்ளி திருப்பூரில் அண்ணா நகர் பகுதியில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் வரவில்லை.
இதை கண்டித்தும் உடனடியாக குடிநீர் வழங்க கோரியும் அப்பகுதி மக்கள் இன்று காலை 4 ரோடு சென்னம்பட்டி ரோட்டில் குடிநீர் கேட்டு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்த வெள்ளி திருப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மற்றும் அம்மா பேட்டை வட்டார துணை அலுவலர் சரவணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
பொதுமக்களிடம் குடிநீர் குழாயில் ஏற்பட்ட பகுதியை விரைவில் சரிசெய்து விடுவார்கள். உங்களுக்கு டிராக்டர் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்படும் என்று கூறினார். அதன் பிறகு பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.
பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கம், தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் பி.எஸ்.என்.எல் ஒப்பந்த ஊழியர்களுக்கு 7 மாத சம்பள பாக்கி வழங்கக்கோரி குடும்பத்துடன் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.
அதன்படி இன்று ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களது குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்ணா போராட்டத்திற்கு பி.எஸ்.என்.எல். ஊழியர்சங்கத்தின் மாவட்டத் தலைவர் கண்ணுச்சாமி, தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சையத் இத்ரீஸ் ஆகியோர் தலைமை வகித்தனர்.
பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் மணி முன்னிலை வகித்தார். பழனிச்சாமி வரவேற்றார். இதில் 100-க்கும் தொழிலாளர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
பவானி திருவள்ளுவர் நகர் பகுதியில் வசிப்பவர் மாது. இவர் நேற்று மாலை 5 மணி அளவில் பவானி ஆற்றங்கரை ஓரம் நடந்து சென்று கொண்டு இருந்துள்ளார்.
அப்போது அவ்வழியாக வந்த ஒரு நபர் மாதுவை வழிமறித்து தகாத வார்த்தைகள் பேசி அப்பகுதி பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கு இடையூறு செய்ததாக பவானி போலீஸ் நிலையத்தில் மாது புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து பவானி சப்-இன்ஸ்பெக்டர் வடிவேல் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு பவானி, மேற்கு தெரு பகுதியில் வசிக்கும் பிரபு என்கிற பிரபாகரன் வயது (27) என்ற நபரை நேற்று இரவு கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு அடுத்த திண்டல் வள்ளிபுரத்தான் பாளையம் அழகாபுரத்தை சேர்ந்தவர் சவுந்திரராஜன். இவரது மனைவி மல்லிகா (வயது 58). இவர் அவரது மகன் கார்த்தியுடன் (38) வசித்து வருகிறார்.
மல்லிகாவின் கணவர் சவுந்திரராஜன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் மல்லிகா கணவன் இறந்த துக்கத்தால் மன வேதனையுடன் மூச்சு திணறல் நோயினால் அவதிப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் வீட்டில் மல்லிகா திடீரென விஷம் குடித்து விட்டார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மகன் மல்லிகாவை மீட்டு ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த மல்லிகா மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து வெள்ளோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் கோவிந்தம்பாடி அருகே உள்ள ஊஞ்சக்கரை பகுதியை சேர்ந்தவர் குட்டி வீரப்பன் (வயது 42).
இவர் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் வனப்பகுதியில் போதை மலை வனப்பகுதியில் 4 மான்களை கள்ளத்துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விட்டு தப்பினார். பிறகு குட்டி வீரப்பனை பிடித்து பர்கூர் வனத்துறையினர் நீதிமன்ற காவலில் வைத்தனர்.
தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் குட்டி வீரப்பனின் மீது பல குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளதும் மேலும் கர்நாடகா மாநில வனப்பகுதியில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு சிறையில் இருந்ததும் தொரிய வந்தது.
மீண்டும் கள்ளத்துப்பாக்கி வைத்திருந்ததாக தமிழக போலீசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேட்டூர் வனப்பகுதிக்குட்பட்ட பகுதியில் யானை தந்தம் கடத்திய வழக்கில் வனத்துறையினர் கட்டுப்பாட்டில் இருந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன் உத்தரவின் பேரில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த குட்டி வீரப்பனை ஈரோடு மாவட்ட வனத்துறையினரால் மீண்டும் கைது செய்யப்பட்டு வனக்குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.
இதையடுத்து குண்டர் சட்டத்தின் மூலம், அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
ஈரோடு:
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டது. இச்சம்பவத்தை கண்டித்தும் அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய கோரியும் ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சிறுத்தை வள்ளுவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மேற்கு சட்டமன்ற தொகுதி செயலாளர் சண்முகம், மேற்கு மாவட்ட பொறுப்பாளர் விஜயபாலன், கிழக்கு சட்டமன்ற தொகுதி செயலாளர் அரங்கம் முதல்வன் மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி செயலாளர் மதிவாணன் மாவட்ட துணை செயலாளர் அக்பர் அலி, ஜாபர்அலி , பெருந்துறை சட்டமன்ற தொகுதி துனை செயலாளர் இளஞ்சுடர் ஓவியர் அணி மாநிலத் துணைச் செயலாளர் பொன்னையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வணிக அணி மாவட்ட அமைப்பாளர் சக்தி வேந்தன், நில உரிமை மீட்பு இயக்க மாநில துணைச்செயலாளர் குருநாதன், மாவட்ட பொறுப்பாளர்கள் ஷாம், டாஸ்மாக் மாரிமுத்து, பவானி ஒன்றிய செயலாளர் பவுல்ராஜ், மொடக்குறிச்சி தொகுதி துனை செயலாளர் கமல் நாதன், ஆவண காப்பக மாவட்ட அமைப்பாளர் நக்கீரன் பால்ராஜ் உட்பட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பல்வேறு பிரிவின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆர்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என கோஷமிட்டனர்.
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமையில் சிலைகள் அமைப்பது மற்றும் கரைப்பது தொடர்பாக துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் இந்து சமய பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கதிரவன் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா மிகச்சிறப்பாக பாதுகாப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவில் சிலை வைப்பதற்கு திட்டமிட்டப்பட்டுள்ள பொறுப்பாளர்கள் சிலை வைக்கும் இடத்திற்குரிய அனுமதி, ஒலி அமைப்பதற்குரிய அலுவலரிடமிருந்தும் மற்றும் தீயணைப்புத்துறை போன்ற துறைகளின் தடையின்மை சான்றுகள் பெற்றபின் அரசால் பரிந்துரைக்கப்பட்ட படிவத்தினை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட காவல் துணை கண்காணிப்பாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட காவல் கண்காணிப்பாளரால் சிலை அமைக்கப்படவுள்ள இடம் தணிக்கை செய்யப்பட்டு பரிந்துரை செய்து, சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்பி பரிசீலனை செய்தபின், சிலை வைப்பதற்கான அனுமதி வழங்கப்படும். நிறுவப்படவுள்ள சிலைகள் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பற்ற பொருட்களான, ரசாயன அல்லது தடைசெய்யப்பட்ட வர்ணங்களை உபயோகப்படுத்தாமல் சுத்தமான களிமண் மற்றும் இயற்கை வர்ண பொருட்களால் செய்யப்பட்டிருக்க வேண்டும். மேலும் கரைக்கப்படவுள்ள சிலைகள் அனுமதி வழங்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே கரைக்கப்பட வேண்டும், விவசாயத்திற்காக பயன்படுத்தப்படும் வாய்க்கால்களில் கரைக்கக்கூடாது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி தடைசெய்யப்பட்ட பொருட்களால் ஆன விநாயகர் சிலைகள் தணிக்கையின்போது கண்டறியப்பட்டாலும், ஈரோடு மாவட்டத்தில் விவசாயத்திற்காக பயன்படுத்தப்படும் வாய்க்கால்களில் கரைக்கப்படுவது கண்டறியப்பட்டாலும் அல்லது உரிய அனுமதியின்றி விநாயகர் சிலை நிறுவப்பட்டாலும், அச்சிலையின் உரிமையாளர் அல்லது பொறுப்பாளர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விநாயகர் சிலை அமைக்கப்படும் போது மேற்கூரைகள் தகடுகளாலும், போதிய அளவு தண்ணீரும் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு அமைக்கப்பட வேண்டும். விழாவின்போது பட்டாசு வெடிப்பது தவிர்க்கப்பட வேண்டும்.
மேலும் ஈரோடு மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி தொடர்பான அனைத்து நிகழ்வுகளையும் மிக அமைதியான முறையில் நடத்திட அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதா, வருவாய் கோட்டாட்சியர் (ஈரோடு) முருகேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தினேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சென்னிமலை, ஆக.27-
சென்னிமலை அருகே கொத்தம்பாளையத்தை சேர்ந்தவர் மணி. இவருடைய மகன் பிரகாஷ் (வயது 25). 10-ம் வகுப்பு வரை படித்த இவர் எலக்ட்ரீசியன் ஆக வேலை பார்த்து வருகிறார்.
சென்னிமலை அருகே கோவில்பாளையத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன் இவருடைய மகள் சவிதா (19). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.பார்ம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இருவரும் பக்கத்து ஊர் என்பதால் கடந்த ஒரு வருடமாக பிரகாசிக்கும் கவிதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியது.
இவர்களுடைய காதலுக்கு இருவரின் பெற்றோர் வீட்டி லும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் வீட்டை விட்டு கிளம்பிய காதல்ஜோடி நேற்று முன்தினம் மேட்டூர் அணை அருகே உள்ள கொளத்தூரில் ஒரு விநாயகர் கோவிலில் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு இருவரும் சென்னிமலை போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
பின்னர் இருவரின் பெற்றோரையும் போலீசார் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது சவீதா வீட்டில் இவர்களது திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால் பிரகாஷின் பெற் றோர் இந்த திருமணத்தை ஏற்று கொண்டதால் பிர காஷின் பெற்றோர் இரு வரை யும் வீட்டுக்கு அழைத்து சென்றனர்.






