search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதான குட்டி வீரப்பன்.
    X
    கைதான குட்டி வீரப்பன்.

    குண்டர் சட்டத்தில் குட்டி வீரப்பன் கைது

    தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டதால் ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன் உத்தரவின் பேரில் குண்டர் சட்டத்தில் குட்டி வீரப்பன் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
    அந்தியூர்:

    சேலம் மாவட்டம் கோவிந்தம்பாடி அருகே உள்ள ஊஞ்சக்கரை பகுதியை சேர்ந்தவர் குட்டி வீரப்பன் (வயது 42).

    இவர் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் வனப்பகுதியில் போதை மலை வனப்பகுதியில் 4 மான்களை கள்ளத்துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விட்டு தப்பினார். பிறகு குட்டி வீரப்பனை பிடித்து பர்கூர் வனத்துறையினர் நீதிமன்ற காவலில் வைத்தனர்.

    தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் குட்டி வீரப்பனின் மீது பல குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளதும் மேலும் கர்நாடகா மாநில வனப்பகுதியில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு சிறையில் இருந்ததும் தொரிய வந்தது.

    மீண்டும் கள்ளத்துப்பாக்கி வைத்திருந்ததாக தமிழக போலீசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேட்டூர் வனப்பகுதிக்குட்பட்ட பகுதியில் யானை தந்தம் கடத்திய வழக்கில் வனத்துறையினர் கட்டுப்பாட்டில் இருந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன் உத்தரவின் பேரில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த குட்டி வீரப்பனை ஈரோடு மாவட்ட வனத்துறையினரால் மீண்டும் கைது செய்யப்பட்டு வனக்குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.

    இதையடுத்து குண்டர் சட்டத்தின் மூலம், அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×