என் மலர்
ஈரோடு
தொழிற்சாலைகளில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை இணை இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை இணை இயக்குனர் வேல்முருகன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும், கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்ள அரசு வெளியிட்ட மற்றும் அவ்வப்போது தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை மூலம் தங்களுக்கு தெரியப்படுத்திய வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்றும்படி நிர்வாகங்கள் கேட்டு கொள்ளப்படுகின்றனர்.
அதன்படி தொழிற்சாலைகளுக்குள் வரும் அனைத்து வாகனங்களிலும் தவறாமல் கிருமி நாசினி தெளிக்க வேண்டும். மேலும் உள்ளே வரும் மற்றும் வெளியே செல்லும் அனைத்து தொழிலாளர்கள், இதர நபர்கள் அனைவருக்கும் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு பதிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
தகுந்த எண்ணிக்கையில் சானிடைசர் தொழிலாளர்கள் பயன்பாட்டிற்கு அளிக்கப்பட வேண்டும். அவ்வப்போது தொழிலாளர்கள் கைகளை கழுவி சுத்தம் செய்ய ஏதுவாக தண்ணீர் குழாய்கள் அமைக்கப்பட்டு இருக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு முக கவசம் அளிக்கப்பட்டு அதை அவர்கள் அணிந்து பணிபுரிவதை உறுதி செய்ய வேண்டும்.
தனிமனித இடைவெளி தொழிற்சாலைகளில் தவறாது கடைபிடிக்க வேண்டும். கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்கென ஒரு அலுவலரை நியமித்து கண்காணிக்கப்பட வேண்டும். திடீர் ஆய்வுகளின்போது, முரண்பாடுகள் அறியப்பட்டாலோ, மேற்கண்ட செயல்முறைகள் நடைமுறையில் இல்லாமல் இருந்தாலோ கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் ஈரோடு மாவட்ட தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை இணை இயக்குனர் வேல்முருகன் தெரிவித்து உள்ளார்.
ஈரோடு அருகே மது விற்பனை செய்த 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 7 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் பி.பி.அக்ரஹாரம் பகுதியில் நேற்று ரோந்து சென்றனர்.
அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டு மது விற்ற, பி.பி.அக்ரஹாரம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த அருள் (வயது 29) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 7 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல் ஈரோடு சென்னிமலை ரோடு பகுதியில் நின்று கொண்டு மது விற்ற ஈரோடு பெரியவலசு பகுதியை சேர்ந்த சரவணன் (26) என்பவரை ஈரோடு சூரம்பட்டி போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 5 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஈரோடு அருகே கணவரை எரித்து கொன்று தற்கொலைக்கு முயன்ற பெண்ணுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஈரோடு:
ஈரோடு வில்லரசம்பட்டி மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சுதாகர் (வயது 40). தறிப்பட்டறை தொழிலாளி. இவருடைய மனைவி லட்சுமி (34). இவருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து திவ்யா (11) என்கிற மகள் உள்ளாள். கணவரை பிரிந்த லட்சுமி சுதாகரை 2-வதாக திருமணம் செய்துள்ளார். இந்தநிலையில் சுதாகருக்கும், லட்சுமிக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 19-ந் தேதி நள்ளிரவில் கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. அதன்பிறகு தூங்கி கொண்டிருந்த சுதாகரின் மீது லட்சுமி பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். இதில் அங்கேயே உடல் கருகி சுதாகர் பரிதாபமாக இறந்தார். மேலும், லட்சுமியும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதைத்தொடர்ந்து அவர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு லட்சுமிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
சுதாகரை எரித்து கொன்றதாக லட்சுமியின் மீது வீரப்பன்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 303 பேருக்கு விரைவில் மருத்துவ படிப்பு கிடைக்கும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு:
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 303 பேருக்கு விரைவில் மருத்துவ படிப்பு கிடைக்கும்.
7.5 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் தமிழக அரசின் எண்ணம் நிச்சயம் நிறைவேறும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

ஆயுதபூஜை விழா வருகிற 25-ந் தேதி முதல் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு ஈரோட்டில் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளை பூசணிகள் கொண்டு வந்து குவிக்கப்பட்டு உள்ளன.
ஈரோடு:
ஆயுதபூஜை விழா வருகிற 25-ந் தேதி முதல் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு கோவில்களில் கொலுக்கள் அமைத்தும், துர்காதேவியின் அவதாரங்களை வைத்தும் பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.
ஆயுத பூஜையின்போது திருஷ்டியை நீக்கும் வகையில் அனைவரும் வெள்ளை பூசணி எனப்படும் திருஷ்டி பூசணிக்காய்களை பூஜைக்கு வைத்து உடைப்பது வழக்கம். எனவே ஈரோட்டில் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளை பூசணிகள் கொண்டு வந்து குவிக்கப்பட்டு உள்ளன. வியாபாரி ஒருவர் கூறும்போது, வெள்ளை பூசணி ஒரு கிலோ ரூ.20 என்ற விலையில் விற்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டத்தில் தக்காளி விலை திடீரென குறைந்தது. ஒரு கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் காய்கறிகள் விலை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஒரு காய் விலை உயர்ந்தால் இன்னொரு காய் விலை குறைந்து வருகிறது. இதனால் விவசாயிகளும், வியாபாரிகளும் சிரமம் அடைந்து வருகிறார்கள். காய்கள் வாங்கும் பொதுமக்களும் நிலையான விலையில் பொருட்களை வாங்க முடியாமல் சிரமம் அடைகிறார்கள்.
கடந்த சில நாட்களாக வெங்காயம் விலை உயர்ந்து வந்தது. பெரிய வெங்காயம் கிலோ ரூ.100, சின்ன வெங்காயம் கிலோ ரூ.120 என்ற விலையில் விற்கப்பட்டன.
இந்த நிலையில் நேற்று தக்காளி விலை திடீர் என குறைந்தது. நேற்று ஈரோடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.10-க்கு விற்பனையானது.
ஆசனூர் அருகே சாலையோரம் மரத்தில் சிறுத்தை அமர்ந்து இருப்பதுபோன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, மான், காட்டெருமை, சிறுத்தை, புலி உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இங்குள்ள வனப்பகுதி வழியாக திண்டுக்கல்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் யானை, புலி, சிறுத்தை, மான் போன்ற வன விலங்குகள் ஆசனூர், திம்பம் வனப்பகுதி சாலையை அடிக்கடி கடந்து செல்கிறது.
இதனால் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்கள் அந்த வழியாக செல்ல வனத்துறையினர் தடை விதித்து உள்ளனர். கார், பஸ், லாரி, வேன் போன்ற வாகனங்கள் தொடர்ந்து அந்த வழியாக சென்று வருகின்றன. அப்போது சிறுத்தை, புலி போன்ற விலங்குகள் ரோட்டை கடந்து செல்வதை நேரில் பார்க்கும் பலர் அதை செல்போனில் படம் எடுப்பது வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் ஆசனூர் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலை வழியாக நேற்று முன்தினம் மாலை ஒரு வாகனம் சென்று கொண்டிருந்தது அப்போது சாலையோரத்தில் உள்ள ஒரு மரத்தில் சிறுத்தை ஹாயாக அமர்ந்து கொண்டிருப்பதை பார்த்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்து தங்கள் வாகனத்தை சற்று தூரத்திலேயே நிறுத்திக்கொண்டனர்.
பின்னர் வாகனத்தில் இருந்தபடியே ஒருவர் செல்போனில் சிறுத்தையை வீடியோ எடுத்தார். உடனே சிறுத்தை மரத்தில் இருந்து கீழே குதித்து வனப்பகுதிக்குள் ஓடிவிட்டது. அதன்பின்னர் வாகன ஓட்டிகள் அங்கிருந்து சென்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ஈரோட்டில் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
ஈரோடு:
ஈரோடு நொச்சிக்காட்டுவலசு வெள்ளப்பாறை பகுதியில் பிரசித்தி பெற்ற முனியப்பன்சாமி கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் இந்த கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக 2 உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன.
இந்தநிலையில் கோவிலின் பூசாரி நேற்று அதிகாலை 4 மணிஅளவில் நடையை திறந்து கோவிலுக்கு சென்றார். அப்போது கோவிலில் வைக்கப்பட்டு உள்ள உண்டியல்களின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும், உண்டியலில் இருந்த பணம் திருட்டு போய் இருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பூசாரி, ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும், கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர்.
இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலில் பணத்தை திருடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

அந்தியூர் அருகே முதியவரை கழுத்தை இறுக்கி கொலை செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தார்கள்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் போலீசார் நேற்று அதிகாலை பவானி ரோட்டில் ரோந்து சென்றுகொண்டு இருந்தார்கள். அப்போது மொபட்டுடன் சந்தேகப்படும் வகையில் ஒருவர் நின்றுகொண்டு இருந்தார்.
உடனே போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அவர் சில கேள்விகளுக்கு சரியாகவும், சில கேள்விகளுக்கு முன்னுக்கு பின் முரணாகவும் பதில் கூறினார். இந்த விசாரணையில் அவர் அந்தியூர் அருகே உள்ள பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த தங்கவேல் (வயது 47). என்பது தெரிந்தது. மேலும் அவரே தான் ஒருவரை கொலை செய்து நீரோடையில் பிணத்தை போட்டுவிட்டதாகவும் கூறினார்.
தங்கவேல் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், அருகே உள்ள கந்தாம்பாளையம் நீரோடைக்கு அவரை அழைத்து சென்று பார்த்தார்கள். அப்போது அங்கு முதியவர் ஒருவர் வேட்டியால் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரிந்தது. மேலும் அவரின் உடலில் பல காயங்கள் இருந்தன.
இதனால் தங்கவேலிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, ‘அவர் அந்த பகுதியில் நடந்து வந்துகொண்டு இருந்ததாகவும், அப்போது முன்னால் சென்றுகொண்டு இருந்த முதியவருடன் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அதனால் ஆத்திரமடைந்து வேட்டியால் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டதாகவும்‘ கூறினார்.
ஆனால் தங்கவேல் ஏன் அதிகாலை நேரம் அங்கு வந்தார். கொலை செய்யப்பட்ட முதியவர் யார்? அவர் ஏன் அங்கு வந்தார்? தங்கவேல் ஆத்திரப்படும் வகையில் அவர் என்ன சொன்னார்? என்று தெரியவில்லை. இதைத்தொடர்ந்து முதியவரின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தார்கள்.
பின்னர் தங்கவேலின் மனைவி சுதா (40) என்பவரிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது போலீசாரிடம் சுதா, என் கணவர் கோவிலில் நடைபெறும் யாக பூஜைகளுக்கு தேவையான பொருட்களை வனப்பகுதியில் இருந்து சேகரித்து வந்து விற்பனை செய்து வந்தார். கூலி வேலைக்கும் செல்வார்.
இந்தநிலையில் அவருக்கு மனநல பாதிப்பு ஏற்பட்டது. இதனால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இருந்தார். பின்னர் 10 நாட்கள் கழித்து வீட்டுக்கு வந்துவிட்டார். ஆனால் நான் கணவரின் நடவடிக்கை பிடிக்காமல் என் மகனை அழைத்துக்கொண்டு காட்டுப்பாளையத்தில் உள்ள தாய் வீட்டுக்கு வந்துவிட்டேன். வேறு எதுவும் எனக்கு தெரியாது என்று கூறிவிட்டார்.
இதைத்தொடர்ந்து போலீசார் தங்கவேலை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஈரோட்டில் குடும்பத்தகராறில் கணவரை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை செய்த மனைவியும் தற்கொலைக்கு முயன்றார்.
ஈரோடு:
ஈரோடு ராசாம்பாளையம் வில்லரசம்பட்டி மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சுதாகர் (வயது 40). தறிப்பட்டறை தொழிலாளி. இவர் 3 ஆண்டுகளுக்கு முன்பு லட்சுமி (34) என்பவரை திருமணம் செய்து கொண்டார். லட்சுமிக்கு ஏற்கனவே திருமணமாகி திவ்யா (11) என்ற மகள் உள்ளாள். கணவரை விட்டு பிரிந்த லட்சுமி, சுதாகரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். சுதாகருக்கும், லட்சுமிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் அவர்கள் வாக்குவாதம் செய்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் சுதாகர் வீட்டில் இருந்து கரும்புகை வெளிவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து கதவை உடைத்து தீயணைப்பு படை வீரர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அங்கு சுதாகர் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். மேலும், வீட்டிற்குள் லட்சுமி மயங்கிய நிலையில் கிடந்தார்.
இதற்கிடையே தகவல் கிடைத்து அங்கு சென்றிருந்த வீரப்பன்சத்திரம் போலீசார், லட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும், சுதாகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் சுதாகர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்றும், அப்போது வெளியான புகையில் லட்சுமி மயக்கமடைந்து இருக்கலாம் என்றும் கூறப்பட்டது. மேலும், லட்சுமி மயக்க நிலையில் இருந்ததால் உடனடியாக விசாரணை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று காலை லட்சுமிக்கு சுயநினைவு திரும்பியது. இதைத்தொடர்ந்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் தனது கணவரை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்த விவரம் வருமாறு:-
சுதாகருக்கு மதுகுடிக்கும் பழக்கம் உண்டு. நேற்று முன்தினம் நள்ளிரவில் சுதாகர் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் கணவரின் தொந்தரவை தாங்க முடியாமல் தவித்து வந்த லட்சுமி, அவரை கொலை செய்ய திட்டமிட்டு உள்ளார். இதைத்தொடர்ந்து மகள் திவ்யாவை வீட்டில் இருந்து வெளியே அனுப்பினார்.
வீட்டின் கதவை உள்தாழ்ப்பாள் போட்டுவிட்டு சுதாகரின் மீது லட்சுமி பெட்ரோலை ஊற்றினார். பிறகு ஒரு துணியில் தீயை பற்ற வைத்து அவர் மீது வீசினார். இதில் அவரது உடலில் தீப்பற்றி எரிந்தது. உடல் கருகிய சுதாகர் அங்கேயே கருகி பிணமானார். மேலும், லட்சுமியும் விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்து உள்ளது.
இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோட்டில் குடும்பத்தகராறில் கணவரை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்று மனைவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஈரோட்டில் பூட்டிய வீட்டுக்குள் கிடந்த கார் டிரைவரின் உடலில் துர்நாற்றம் வீசியதால் 20 நாட்களாக பிணமாக கிடந்தது தெரிய வந்தது.
ஈரோடு:
இதற்கிடையே அக்கம்பக்கத்தினரும் தகவல் தெரிந்து பூபதி தங்கி இருந்த வீட்டுக்கு வந்தனர். அங்கு கடுமையான துர்நாற்றம் வீசியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் வீட்டு கதவை உடைத்து பார்த்தனர். அப்போது டிரைவர் பூபதி படுத்த நிலையில் பிணமாக கிடந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. அதைத்தொடர்ந்து பூபதியின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பூபதி ஈரோடு மாணிக்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. டிரைவரான இவருக்கு ராதா என்ற மனைவியும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கணவன் -மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் பூபதி மனைவி மற்றும் மகன்களை பிரிந்து மாருதிநகரில் தனியாக வசித்து வந்தார்.
இதற்கிடையே பூபதிக்கு இருதய கோளாறும் இருந்ததாக தெரிகிறது. 20 நாட்களுக்கு முன்பு உடல் பரிசோதனைக்கு சென்று வந்தவர், பின்னர் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. படுத்த நிலையிலேயே அவர் உயிர் பிரிந்து உள்ளது என்ற விவரங்கள் தெரிய வந்தன. இதுபற்றி வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
ஈரோடு திண்டல் மாருதி நகர் பகுதியை சேர்ந்தவர் கணேஷ். இவருக்கு சொந்தமான வீட்டை வாடகைக்கு விட்டு உள்ளார். அந்த வீட்டின் மேல் மாடியில் ஒரு வீட்டில் பூபதி (வயது 53) என்பவர் தங்கி இருந்தார். வாடகை கார் டிரைவரான இவர் தனியாக தங்கி இருந்தார்.
கடந்த 20 நாட்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் ஆஸ்பத்திரிக்கு சென்று வந்த அவர், பின்னர் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இந்தநிலையில் நேற்று காலை அவர் குடியிருந்த கட்டிடத்தில் உள்ள கீழ் வீட்டில் வேலை செய்து வரும் பெண் ஒருவர் துணிகளை காய வைக்க மொட்டை மாடிக்கு சென்றார். அப்போது மாடியில் பூபதி தங்கி இருந்த வீட்டின் உள்ளே இருந்து கடுமையான துர்நாற்றம் வீசியது. கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த வேலைக்கார பெண், வீட்டு உரிமையாளரிடம் தகவல் தெரிவித்து உள்ளார்.
இதற்கிடையே அக்கம்பக்கத்தினரும் தகவல் தெரிந்து பூபதி தங்கி இருந்த வீட்டுக்கு வந்தனர். அங்கு கடுமையான துர்நாற்றம் வீசியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் வீட்டு கதவை உடைத்து பார்த்தனர். அப்போது டிரைவர் பூபதி படுத்த நிலையில் பிணமாக கிடந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. அதைத்தொடர்ந்து பூபதியின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பூபதி ஈரோடு மாணிக்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. டிரைவரான இவருக்கு ராதா என்ற மனைவியும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கணவன் -மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் பூபதி மனைவி மற்றும் மகன்களை பிரிந்து மாருதிநகரில் தனியாக வசித்து வந்தார்.
இதற்கிடையே பூபதிக்கு இருதய கோளாறும் இருந்ததாக தெரிகிறது. 20 நாட்களுக்கு முன்பு உடல் பரிசோதனைக்கு சென்று வந்தவர், பின்னர் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. படுத்த நிலையிலேயே அவர் உயிர் பிரிந்து உள்ளது என்ற விவரங்கள் தெரிய வந்தன. இதுபற்றி வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
ஈரோட்டில் மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
ஈரோடு வைராபாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் மணிவேல். இவருடைய மகன் சசிக்குமார் (வயது 29). கூலித்தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. அடிக்கடி மது அருந்தி வந்தார். இதனால் சரியாக வேலைக்கு செல்லாமலும் இருந்தார்.
இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி சசிக்குமார் தற்கொலை செய்து கொள்வதற்காக மதுவில் விஷம் கலந்து குடித்து உள்ளார். பின்னர் வீட்டுக்கு சென்ற சசிக்குமார், அவரது தாய் கலைசெல்வியிடம் தான் விஷம் குடித்துவிட்டதாக கூறி உள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சசிக்குமாரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும், பலனளிக்காமல் நேற்று முன்தினம் இறந்தார்.
இதுகுறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.